Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறை: 'அதிகார வர்க்கத்தின் மதம் மீதான அணுகுமுறை' - ஊடக விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறை: 'அதிகார வர்க்கத்தின் மதம் மீதான அணுகுமுறை' - ஊடக விமர்சனம்

சிறை, திரைப்பட விமர்சனம், ஊடக விமர்சனம்

பட மூலாதாரம்,X/Vikram Prabhu

29 டிசம்பர் 2025

விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரியின் இயக்கத்தில் 'சிறை' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. போலீஸ் டிராமா படங்களின் வரிசையில் அடுத்த படமாக சிறை வெளிவந்துள்ளது.

திரைப்படம் வெளியான சில நாட்களிலே சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. படத்தின் சில காட்சிகளைப் பற்றி சமூக ஊடகங்களில் விமர்சனப்பூர்வமாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

வேலூர் சிறையிலிருந்து ஒரு இஸ்லாமியக் கைதியை காவலர்கள் சிவகங்கை நீதிமன்றதுக்கு பேருந்தில் அழைத்துச் செல்கின்றனர். வழியில் கைதி காவலரின் துப்பாக்கியுடன் தப்பித்துவிடுகிறார்.

தப்பித்த கைதி பிடிபட்டரா, அவரின் பின்னணி என்ன, காவலர்களுக்கு என்ன நடந்தது ஆகியவை சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் திரில்லராக கூறப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு, கதிரவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ஆனந்த தம்பிராஜா 'மரியம்' என்கிற சக காவலர் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

எல்.கே அக்‌ஷய் குமார், அப்துல் ரௌஃப் என்கிற கைதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கைதியின் காதலியான கலையரசி வேடத்தில் அனிஷ்மா நடித்திருக்கிறார். காதர் பாஷா என்கிற ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மூணார் ரமேஷ் நடித்துள்ளார்.

டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளார். அவரும் இயக்குநரும் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.

இந்தப் படம் தொடர்பான விமர்சனங்கள் ஊடகங்களில் வந்திருக்கின்றன. முதன்மை கதாபாத்திரங்களைத் தாண்டி துணை கதாபாத்திரங்களும் படத்தின் தொழில்நுட்ப பங்களிப்பும் விமர்சனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி தனது முதல் திரைப்படத்திலேயே அழுத்தமான கதையுடனே வந்திருக்கிறார் என தினமணி திரை விமர்சனம் தெரிவிக்கிறது.

"அளவான நடிப்பில் அசத்தும் விக்ரம் பிரபு"

சிறை, திரைப்பட விமர்சனம், ஊடக விமர்சனம்

பட மூலாதாரம்,X/Vikram Prabhu

மேலும் தினமணி விமர்சனத்தில்,"இடைவேளை மற்றும் காதல் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன. வசனங்களிலும் மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டதால் சில வசனங்களும் தனித்தனியான கதைகளைச் சொல்கின்றன. முக்கியமாக, ஒரு குற்றவாளி இஸ்லாமியராக இருந்தால் அதிகார அமைப்பு அவரை எப்படி கையாள்கிறது என்பதை அழுத்தமாக ஒரே காட்சியில் சொல்லப்பட்டது மனதை தொந்தரவு செய்ய வைக்கிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பை பாராட்டியுள்ள தினத்தந்தி விமர்சனத்தில், "விக்ரம் பிரபு, நிஜமான போலீஸ்காரராகவே நெஞ்சில் பதிகிறார். மனசாட்சிக்கும், மனிதாபிமானத்துக்கும் இடையே சிக்கும் இடங்களில் இயல்பான நடிப்பாலும் அலங்கரிக்கிறார். இந்த புதிய விக்ரம் பிரபு இனியும் தொடரவேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை போன்ற திரைப்படங்களின் வெற்றி, அதில் சிக்கியுள்ள மக்களைப் பற்றி நம்மை கவலைப்பட வைக்கிறதா என்பதைப் பொருத்து அமைகிறது எனக் கூறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம், சிறை திரைப்படம் அதை விக்ரம் பிரபுவின் அளவான நடிப்பின் மூலம் செய்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

கதாசிரியராக ஜொலிக்கும் இயக்குநர் தமிழ்

தமிழ் எழுதும் காவல்துறை சார்ந்த காட்சிகள் சில புதுமையான அனுபவங்களைத் தருகின்றன என தினமணி விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியிருக்கிறார். இவர் காவல்துறையில் பணியாற்றியதால் அதில் கிடைத்த அனுபவங்கள், கடைநிலை காவலர்களின் பணிச்சூழல், அதிகார அமைப்பு செயல்படும் விதங்கள் குறித்து அறிந்து வைத்திருக்கிறார். முக்கியமாக, இந்தப் படத்தில் எஸ்கார்ட் காவலர்களின் பணிச்சூழல் எப்படி என பதிவாகியிருக்கிறது." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதி மற்றும் பாதுகாப்புக்குச் சென்ற காவலரின் விதி சிறப்பான த்ரில்லராக உருவாக்கப்பட்டு, மத வெறிக்கு எதிராக தீவிரமான நிலைப்பாட்டை எடுக்கிறது என தி இந்து விமர்சனம் கூறுகிறது.

"இத்தகைய சிறிய கதை களத்திலும் கதாசிரியர் தமிழ் மற்றும் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி மதவெறிக்கு எதிராக ஆழமான கருத்துக்களைத் தெரிவிக்க பல தருணங்களை வைத்துள்ளனர்," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை, திரைப்பட விமர்சனம், ஊடக விமர்சனம்

பட மூலாதாரம்,Seven Screen Studios

காவல்துறை நடைமுறை எந்த விதமான பிரமாண்டமும் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்திற்கு உதவி செய்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம் தெரிவிக்கிறது.

"தண்டனை கைதிகளை அழைத்துச் செல்வது, நீதிமன்ற விசாரணை, சார்புடன் செயல்படும் அதிகாரிகள் என எதுவுமே புதியவை கிடையாது. ஆனால் இவை அனைத்தையுமே தேவையான நேர்மையுடன் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி படத்தில் வழங்கியுள்ளார்," என அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுமுகங்களின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக தி இந்து விமர்சனம் கூறுகிறது.

"படத்தில் ஆச்சரியமாக அமைந்தது புதுமுகங்களான அக்‌ஷய் மற்றும் அனிஷ்மாவின் நடிப்பு தான். இதில் அனிஷ்மா குறைவான காட்சிகளே கிடைத்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அக்‌ஷயும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்," என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஒளிப்பதிவு, படத்தொகுப்பு படத்தின் பலம்"

தொழில்நுட்ப ரீதியாகவும் அனைவரும் நல்ல பங்களிப்பைச் செய்திருக்கின்றனர் என தினமணியின் விமர்சனம் தெரிவிக்கிறது.

"இரவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. முக்கியமாக, அப்துலுக்கும் கலையரசிக்குமான காதல் பாடலை எடுத்த விதம் அழகு."

"எடிட்டர் பிலோமின் ராஜ் தேர்ந்த கலைஞர் என்பதால் கதையை எவ்வளவு பரபரப்பாக்க வேண்டுமோ அவ்வளவு கட்ஸை வைத்திருக்கிறார். கிளைமேக்ஸ் நெருங்க, நெருங்க ஒருவித பதற்றம் ஆட்கொள்கிறது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு சிறப்பான ஜஸ்டிஸ் வழங்கியிருக்கிறார். பின்னணி இசைகள் ஒவ்வொன்றும் கதைச்சூழலுக்கு ஏற்ப அமைக்கபட்டிருந்தது." என தினமணி விமர்சனம் கூறுகிறது.

சிறை, திரைப்பட விமர்சனம், ஊடக விமர்சனம்

பட மூலாதாரம்,X/Vikram Prabhu

"படத்தில் மேலோங்கும் டிராமாத்தனம்" - தடுமாறும் இடங்கள் எவை?

படத்தில் சில இடங்களில் டிராமாத்தனம் தெரிவதாகப் பரவலாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

"கலையரசி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை பின் தொடரும்போது படத்தில் டிராமாத்தனம் மேலோங்குகிறது. ஆனால் படம் குறைவான நேரமே ஓடுவதால் இந்தக் காட்சிகள் நிலைக்கவில்லை." என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராமா என்பதைத் தாண்டி யதார்த்தத்தின் மீது படம் கவனம் செலுத்தினாலும் தேவைக்கும் அதிகமான இடங்களில் டிராமாத்தனம் எட்டிப் பார்க்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.

"அப்துலின் கதையைக் கூறும் ஃப்ளேஷ்பேக்கில் தான் படம் தடுமாறுகிறது. பெரும்பான்மை இந்து கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம் குடும்பம், வன்முறையாக மாறும் மத அடிப்படையிலான பாரபட்சம், மதுப்பழக்கம் கொண்ட வில்லன் கதாபாத்திரம் என அதிகமாக பழக்கப்பட்டதாகவே இருக்கிறது." என்றும் அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

"ஆனால் இந்த சறுக்கல்கள் அனைத்தும் விக்ரம் பிரபுவின் நடிப்பு மற்றும் படத்தில் நடைமுறை நேர்மறையால் மறைக்கப்படுகிறது"

"பரபரப்பான திரைக்கதை பலம். சில இடங்களில் காட்சிகளில் தொய்வு தென்படுகிறது, யூகிக்கவும் முடிகிறது. ஆங்காங்கே லாஜிக் மீறலை தவிர்த்திருக்கலாம்," என தினத்தந்தி விமர்சனம் தெரிவிக்கிறது.

கதையின் குறையைச் சுட்டிக்காட்டும் தினமணி விமர்சனத்தில், "அதேநேரம், சிறை தனித்துவமான கதையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருந்தாலும் பாதியில் ஆரம்பித்தது போல் முதல் காட்சிகள் இருந்தது சிறிய குறை. விக்ரம் பிரபுவுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகளை வழங்கியிருந்தால் சிறைத்துறை சார்ந்த சில விஷயங்களைப் பதிவு செய்திருக்கலாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cre3ev221ppo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறை திரைப்படமும் எதார்த்தமும் - ஒரு அலசல்

ஒவ்வொரு மனிதனுக்குள் உறைந்து கிடைக்கும் கருணையினால் இருவரின் வாழ்க்கை துவக்கி வைக்கப்படுகிறது என்பதன் ஒரு துளியை சிறைப்படத்தில் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் அப்பட்டமான அத்துமீறல் அயோக்கியத்தனங்களின் ஒரு சொட்டுவை இப்படத்தில் காணலாம். சிறுபான்மையாக இருப்பவர்களின் - அது எந்த ஒரு மதமாக இருந்தாலும் சரி  - அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை இப்படம் காட்டுகிறது.

அசாமில் மியா முஸ்லிம்களை விரட்டி அடியுங்கள் என்று சொன்னவர் மீது சூமோட்டோ வழக்கு போடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம் போல நாமும் இது நாள் வரை வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் இது பற்றிய தெளிவான பார்வையும் அதற்கான கல்வியும் பெரும்பான்மையோருக்கு கிடைப்பதில்லை. கல்வி மட்டுமே தெளிந்து அறியும் நுட்பத்தை ஒவ்வொருவருக்கும் அளிக்கும். அதை ஒவ்வொரு மனிதனும் அடைவதற்குள் அவன் அடையும் துன்பங்கள், துயரங்கள் கொஞ்சமல்ல.

நீதியும் சட்டமும் எப்போதும் வேறு வேறாக பயணிப்பவை. இதை சிறை திரைப்படம் தெளிவாக காட்டுகிறது.

பலர் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, மக்களிடம் கலவரத்தைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவருக்கும் மூளை நரம்பு வெடித்து சிதறி கையும் காலும் இழுத்துக் கொண்டு கிடக்கிறார். இவர்களுக்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை. 

இது இயற்கையின் நீதி. சட்டத்துக்கும், நீதிக்கும் மேலாக இயற்கையின் நீதி என்ற ஒன்று இருக்கிறது. அது எப்போதும் தூங்குவதில்லை என்பது உண்மை என இந்த நிகழ்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

யாரும், எவரும் தப்பவே முடியாது. இயற்கை நீதியை மீறி இந்தப் பூமியில் வாழும் எவரும் வாழ்ந்து விட முடியாது. 

அடாது செய்பவன் படாது போவான் சிறை படத்தின் ஹீரோயினின் தந்தை போல.

நானொரு லீகல் ஒப்பீனியன் கொடுத்த ஒரு வாடிக்கையாளரை பணபலத்தைக் காட்டி கைது செய்தார்கள். அவர்களை ஜாமீனில் எடுக்க முனைந்த போது நான் பெற்ற அனுபவங்கள் திகில் கிளப்புவை. சக மனிதனின் மீது நம்பிக்கையை சீர்குலைக்கும் வண்ணம் சட்டம் அயோக்கியர்களுக்கு துணை போகிறது.

கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீனுக்கு முயற்சிக்கிறேன். எதிர்வாதிகள் ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்ய, அவரை ஜெயிலுக்குள் முடக்கி, பயம் காட்டி தான் நினைத்ததை அடைந்து விட முயற்சித்தார்கள். 

என்ன செய்தார்கள் தெரியுமா?

பல வக்கீல்களை ஜெயிலுக்குள் அனுப்பி ஜாமீன் வக்காலத்தில் கையெழுத்து வாங்க முயற்சித்தார்கள். அப்படி அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தால், ஒருவருக்கு பல வக்கீல்கள் ஜாமீன் கோருவார்கள். 

முதலில் யார் உண்மையான வாதியின் வக்கீல் என கோர்ட்டில் கேள்வி எழுந்திருக்கும். கோர்ட்டில் ஜாமீன் வழக்கு தள்ளிப் போயிருக்கும். அவர் ஜெயிலுக்குள்ளே கிடப்பார். அதை வைத்து அவர்களை மிரட்டி காரியம் சாதித்துக் கொள்ளலாம். இப்படியெல்லாம் நடக்குமா? ஆமாம் நடந்தது.

இந்தக் காரியத்தை வக்கீல்களே செய்தார்கள். அவர்களுக்கு அது அயோக்கியத்தனம் என்று தெரியும். தெரிந்தும் செய்தார்கள். இதை சட்டம் அனுமதிக்கிறது. சட்டத்தின் ஓட்டை இது. எளிதில் தப்பி விடுவார்கள். 

ஒருவரின் வாழ்க்கை மீது வக்கீல்களுக்கு அவ்வளவு எளக்காரம். எல்லா வக்கீல்களும் இதைச் செய்வதில்லை. கொலைக்கும் அஞ்சாத படுபாதகர்கள் வாழும் பூமி அல்லவா இது? என் மீது புகார் தெரிவித்தார் எனது ஒப்பீனியனால் பாதிக்கப்பட்டவர். என்னை முடக்கி விட வழக்கு. பொய் வழக்கு என நிரூபித்தேன். அவர் மீது நான் அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கலாம். ஆனால் அந்த நிலையில் எனக்கிருந்த மனநிலை வேறு. பிரச்சினையை முடிக்கத்தான் நினைப்பேன். வளர்த்தால் அது எவருக்கும் நல்லதல்ல. 

ஒரே ஒரு நொடி யோசித்தேன். அவரை மன்னித்தேன். நான் வேறு மாதிரியான ஆள் என்றால் அவர் சாகும் வரை சிறைக்குள் கிடந்திருப்பார். எனக்கு அது தேவையில்லை. வாழ வைக்கணும் அது எவரானாலும் சரி. அதைச் செய்தேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகளை வழங்குகிறது. காகிதத்தில் குறிப்பிட்டபடி, நாம் அனைவரும் கண்ணியத்துடன் வாழவும், சுதந்திரமாகப் பேசவும் ஒரே அளவிலான உரிமைகளை பெற்றிருக்கிறோம் என்பது உண்மை.  நடைமுறையில் நிலைமை வேறு.

அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து பல தசாப்தங்கள் கடந்தும், அதில் கூறப்பட்ட வாக்குறுதிகளுக்கும் மக்கள் வாழ்ந்து அனுபவிக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது.

இதை வெளிப்படையாகச் சொல்ல நாம் தயங்கினாலும், அதன் பொருள் என்ன என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

சட்டமும் நீதியும் வேறு வேறு. சட்டம் என்பது எழுதப்பட்ட, கட்டமைக்கப்பட்ட மற்றும் நடைமுறையில் அமல்படுத்தப்படும் ஒரு அமைப்பு. நீதி என்பது ஒரு விளைவு — அது நெறிமுறையுடனும், நியாயத்துடனும்,  மனிதாபிமானத்துடனும் தொடர்புடையது.

சட்டம் செயல்படுத்தப்படுகிறது ஆனால் உண்மையான நீதி யாருக்கும் கிடைப்பதில்லை. சட்டம் உண்மையான நீதிக்கு தடையாக நிற்கிறது. இதற்காக பல உதாரணங்களைக் காட்டலாம். அதைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தால் - சட்டம் என்பது கொடூரங்களின் தொகுப்பு என்பதாய் நினைக்க வைத்து விடும். இந்தக் கொடூரங்களுக்கு இடையில் ஒரு துளி நீதி. அதைச் சிறை திரைப்படம் காட்டுகிறது.

ஒரு மசூதிக்குள் நுழைந்து அங்கிருக்கும் ஒரு தூணில் தீபமேற்ற உத்தரவிடுவது சட்டம். ஆனால் அதை நிறைவேற்றினால் கலவரம் ஏற்படும் என்பதால், தடை உத்தரவு போட்டு, கலவரம் ஏற்படாமல் தடுப்பத் நீதி. அரசு நீதி பரிபாலனம் செய்கிறது. சட்டம் அதை உடைக்கிறது.

இது அரசியலமைப்பை எதிர்க்கும் கருத்தல்ல; மாறாக, அதன் உயர்ந்த இலட்சியங்களை ஒரு வாழும் யதார்த்தமாக மாற்ற நாம் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதைக் குறித்து நேர்மையாக சிந்திக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிடுவது.

இந்த நடைமுறைகளை சிறைப்படம் தெளிவாக காட்டுகிறது. 

விசாரணைக் கைதிகள் - ஒன்றும் அறியாத அப்பாவிகள் இன்னும் சிறையில் இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை? பற்றி யாருக்கேனும் கவலை உண்டா? இது பற்றி கவலைப்பட வேண்டிய சிறை அதிகாரிகள், நீதிமன்றங்கள் அமைதியாக இருக்கின்றன. சட்டத்தின் நடைமுறைகள்  காலதாமத்துக்கு காரணம்.

இங்கே யாருக்கும் எவரைப் பற்றியும் கவலை இல்லை.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவருடன் சார்புடையவன். அவன் தனியாக வாழ்ந்து விட முடியாது. அதை ஒவ்வொருவரும் உணர மறுக்கிறார்கள். பசித்திருப்பவனுக்கு உணவிடுவது ஒவ்வொருவரின் கடமை. ஒவ்வொருவரின் துன்பத்திற்காக அவர்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவுவது வாழ்க்கை. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது. ஒரு உணவு டெலிவரி செய்பவரை - கீழ்மை செய்யும் நபர்கள் இங்கிருக்கிறார்கள். அவர்களால் யாருக்கும் எவருக்கும் நன்மை கிடைக்கவே கிடைக்காது.  இவர்களைப் போன்றவர்கள் மாற வேண்டும். 

மதமும், மொழியும் மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தி வாழ உருவானவை. இப்போது அவைகள் மனிதர்களின் அழிவுக்கான கருவியாக மாற்றப்பட்டிருக்கிறது. மாற்றியவர்கள் யார்? அவர்கள் ஏன் இங்கே? என்பது பற்றிய தெளிவான அறிவினை ஒவ்வொருவரும் பெற வேண்டியது அவ்சியம்.

அதற்கான ஒரு படி தான் கல்வி. கல்வி எல்லோருக்குமானவையாக எளிதில் கிடைப்பதாக செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. 

ஒரு படி முன்னேற வேண்டும். அதற்காக சக மனிதனின் துயரங்களில் பங்கெடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அது ஆறறிவு பெற்ற மனிதனாலும் சரி. ஐந்தறிவு கொண்ட விலங்கினமாக இருந்தாலும் சரி. சக உயிர்களின் துன்பத்தை நாம் சற்றே உணர வேண்டும்.

இங்கு வாழத்தான் பிறந்தோமே ஒழிய, பிறரை அழிக்க அல்ல என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு சிறு செயல் - ஒரு வாழ்க்கையின் விதை - சிறையின் கதா நாயகி, கதா நாயகன் இருவரும் நம்மிடையே வாழும் பல கோடிக்கணக்கானவர்கள் தான். அவர்கள் மீது நாம் அக்கறை கொள்வோம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கு நாமும் ஆதாரமாய் இருப்போம்.

சிறை திரைப்படத்தை அனைவரும் பாருங்கள். அது நம்மை செம்மைப் படுத்தும்.

https://thangavelmanickadevar.blogspot.com/2026/02/blog-post_10.html

@கலைஞன் அண்ணை, @தயா அண்ணையின் பழைய சொந்தக் கதைகளை சில நாட்களாக வாசித்தேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.