Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன!

Feb 11, 2026 - 09:36 AM

பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன!

மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (10) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஒருங்கமைப்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சத்தியலிங்கம், ரவிகரன், ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். 

இதன்போது மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட பல்வேறு விடைங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. 

குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் வீதிகள் புனர் நிர்மாண வேலைகள், போக்குவரத்து, நகர அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடுகள் தொடர்பான விடயங்கள் உரிய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன. 

மேலும் மன்னாரில் இருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறந்து மக்களின் பாவனைக்கு விடுமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 

மன்னார் மாவட்டத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்புடைய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. 

எதிர்வரும் காலத்தில், இந்த போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் குறைந்தது ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறையாவது தொடர்ந்து கூடும் என நாங்கள் பெரும் நம்பிக்கை கொள்கிறோம். 

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைத் தலைவர்கள், நகர சபைத் தலைவர் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். எமது அமைச்சரவை சார்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

இதன்மூலம், ஒரு அளவிற்கு தீர்வுகளைப் பெற முடிந்ததாக நாங்கள் கருதுகிறோம். 

இந்த அரசியல் தலைவர்களும், நிர்வாக தலைவர்களும் திட்டமிட்டுள்ள வகையில் இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 

அத்துடன் மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம். 

சில பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுவரை திறக்கப்படாமல் இருப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன. இந்தப் பாதைகள் திறக்கப்படாததால் மன்னார் மாவட்ட மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம். 

அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் தொல்லியல் சட்ட வரம்புகள் காரணமாக சில பாதைகள் திறக்க முடியாத நிலைமை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் மக்களின் கவலைகளை அறிந்துள்ளனர். எனினும் அதற்கான சட்டம் மற்றும் நிர்வாக வரம்புகள் உள்ளன. 

இந்நிலைமை காரணமாக, வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பாதைக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதே எமது தற்போதைய நோக்கமாக உள்ளது. 

இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம். 

இவ்விடயத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை. இருப்பினும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது. 

எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பான முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும். 

அத்துடன் நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து, அதற்கிணங்க எமது நடவடிக்கைகள் அமையும். 

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் பொது மக்களின் கவலைகளை அறிந்துள்ளதுடன், அதற்கான சட்ட மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் உள்ளன என்பதும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம். 

இதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு, சம்பந்தப்பட்ட அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அவர் கூறினார். 

சுற்றுச்சூழல் செயற் பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை என அவர் சுட்டிக்காட்டினார். 

எனினும், பொதுமக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார். 

இந்த விவகாரம் தொடர்பான எதிர்கால முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து அதற்கிணங்க அரசின் நடவடிக்கைகள் அமையும் என தெரிவித்தார்.

-மன்னார் நிருபர் லெம்பட்-

https://adaderanatamil.lk/news/cmlhic48c0001356nml5v2w2k

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் சில பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுவரை திறக்கப்படாமல் இருப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு காரணங்களாக  உள்ளன - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

Published By: Vishnu

11 Feb, 2026 | 05:13 AM

image

மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

DSC_0461.JPG

மன்னாரில் செவ்வாய்க்கிழமை (10) மாலை நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மன்னாரில் இருந்து   இலவன் குளம் ஊடாக புத்தளம் செல்லும் பாதை தொடர்பாக சர்ச்சை  குறித்து ஊடகவியலாளர்கள்  எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும்  தெரிவிக்கையில்,

சில பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுவரை திறக்கப்படாமல் இருப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல்  பாதுகாப்பு காரணங்கள் உள்ளன.இந்தப் பாதைகள் திறக்கப்படாததால் மன்னார் மாவட்ட மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம் .

அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,மற்றும் தொல்லியல் சட்ட வரம்புகள் காரணமாக சில பாதைகள் திறக்க முடியாத நிலைமை இருக்கிறது.இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் மக்களின் கவலைகளை அறிந்துள்ளனர். எனினும்  அதற்கான சட்டம்  மற்றும் நிர்வாக வரம்புகள் உள்ளன.

இந்த நிலைமை காரணமாக, வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பாதைக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதே எமது தற்போதைய நோக்கமாக உள்ளது.

இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம்.

இவ்விடயத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை. இருப்பினும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது.

எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பான முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும்.

அத்துடன் நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து, அதற்கிணங்க எமது நடவடிக்கைகள் அமையும்.

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் பொது மக்களின் கவலைகளை அறிந்துள்ளதுடன், அதற்கான சட்ட மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் உள்ளன என்பதும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம் .

இதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு, சம்பந்தப்பட்ட அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் செயற் பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை என அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், பொதுமக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பான எதிர்கால முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து அதற்கிணங்க அரசின் நடவடிக்கைகள் அமையும் என அமைச்சர் விமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/238359

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.