Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர; போதைப்பொருள் ஒழிப்புத் திட்டமும் இன்று ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர; போதைப்பொருள் ஒழிப்புத் திட்டமும் இன்று ஆரம்பம்!

11 Feb, 2026 | 01:43 PM

image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று புதன்கிழமை (11) காலை நானு ஓயா – ரதல்ல வீதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்துச் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது தொழிலாளர்கள் ஜனாதிபதியை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது நாளாந்தச் சம்பளத்தை அதிகரித்து வழங்கியமைக்காகத் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த தொழிலாளர்கள், " ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமன்றி, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தங்களை நேரில் சந்தித்த ஒரே அரச தலைவரும் ஆவார் ” எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நாட்டிலிருந்து சட்டவிரோத போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “ஒரே தேசமாக ஒன்றிணைவோம்” தேசியப் பிரசாரத்தின் மத்திய மாகாணத்திற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி இன்று நுவரெலியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

மலையகச் சமூகம் எதிர்கொள்ளும் பாரிய சமூகப் பிரச்சினையாகக் கருதப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து மக்களை விடுவிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவான விழிப்புணர்வு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் ஊடாக இந்த இலக்கை அடைய ஜனாதிபதி ஊடகப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியாவில் நடைபெறும் இந்த நிகழ்வின் போது, போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்காற்றிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக் கௌரவம் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

629479572_1474736024655673_9415172027934

631239899_1474735997989009_5535941705644

631501697_1474736091322333_1036760978331

633797485_1474736177988991_5710021188484

https://www.virakesari.lk/article/238378

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"எங்களைப் பார்க்க வந்த ஒரே ஜனாதிபதி நீங்கள்தான்" - பெருந்தோட்ட மக்கள் நெகிழ்ச்சி

Published By: Digital Desk 3

11 Feb, 2026 | 04:57 PM

image

எங்களைப் பார்க்க வந்த ஒரே ஜனாதிபதி நீங்கள்தான் என பெருந்தோட்ட மக்கள் தங்களது நெகிழ்ச்சியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று புதன்கிழமை (11) காலை நுவரெலியா - அட்டன் பிரதான வீதி நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் உள்ள தோட்டப்பகுதிக்கு சென்று அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஜனாதிபதி குறித்த தோட்டப்பகுதிக்கு வருகை தந்தபோது, அங்கு திரண்டிருந்த பெருந்திரளான தோட்டத் தொழிலாளர்கள் அவரை மிகவும் உற்சாகத்துடனும் நெகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

தமக்கான சம்பளத்தை அதிகரித்தமைக்காக இதன்போது தொழிலாளர்கள் ஜனாதிபதிக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய தொழிலாளர்கள், “எங்களது சம்பளத்தை உயர்த்தியது மட்டுமன்றி, எங்களது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி நீங்கள்தான்” எனத் தெரிவித்தனர். தங்களைச் சந்திக்க வந்த முதல் ஜனாதிபதி இவரே என அவர்கள் இதன்போது பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

https://www.virakesari.lk/article/238407

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திடீர் சந்திப்பு!

Feb 11, 2026 - 11:47 AM

திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) காலை நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து, அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். 

ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது, தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது சம்பளத்தை அதிகரித்தமைக்காக நன்றியையும் தெரிவித்தனர். 

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள், "எமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், எமது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள்தான்" எனத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

-மலையக நிருபர் சதீஸ்குமார்-

https://adaderanatamil.lk/top-picture/cmlhn0ioo0007356n34ryw0vp

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.