Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க முயற்சி - மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க முயற்சி - மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டு

Published By: Digital Desk 3

12 Feb, 2026 | 09:37 AM

image

பிரபல சமூக ஊடகங்களில் ஒன்றான வட்ஸ்அப் செயலியை ரஷ்யாவில் முற்றிலும் முடக்க அந்நாட்டு அராசாங்கம் முயற்சித்து வருவதாக மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.

ரஷ்யாவின் இணைய ஒழுங்குமுறை அமைப்பான 'ரோஸ்கோம்னாட்ஸோர்' வட்ஸ்அப் செயலியை அதன் உத்தியோகபூர்வ இணையக் கையேட்டில் இருந்து நீக்கியுள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்ள பயனர்கள் வட்ஸ்அப் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வட்ஸ்அப் செயலியின் 'மெட்டா' (Meta) நிறுவனம் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"ரஷ்ய அரசாங்கம் மக்களை 'MAX' என்ற செயலியை பயன்படுத்த ஊக்குவிப்பதற்காக வட்ஸ்அப்பை முடக்கியுள்ளது. இந்த 'மேக்ஸ்' செயலி என்பது பயனர்களைக் கண்காணிக்கவும் உளவு பார்க்கவும் உருவாக்கப்பட்ட அரசாங்க உளவு செயலி (State-owned surveillance app) ஆகும்." என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில்,

ரஷ்ய சட்டதிட்டங்களுக்கு மெட்டா நிறுவனம் கட்டுப்பட்டால் மட்டுமே, வட்ஸ்அப்பை மீண்டும் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.

பயங்கரவாதம் மற்றும் மோசடி தொடர்பான தகவல்களைப் பகிர மெட்டா மறுப்பதால், பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

உக்ரேன் மீதான போர் ஆரம்பித்த 2022-ஆம் ஆண்டு முதல், ரஷ்யாவில் பல மேற்கத்திய செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

ரஷ்யாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (Twitter) ஆகிய சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

அப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் (FaceTime) மற்றும் ஸ்னாப்சாட் (Snapchat) ஆகியவை கடந்த டிசம்பர் மாதம் முடக்கப்பட்டன.

ரஷ்யாவில் மிகவும் பிரபலமான டெலிகிராம் செயலியின் பயன்பாட்டுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்த அதன் நிறுவனர் பாவெல் துரோவ், "இது ஒரு சர்வாதிகார நடவடிக்கை" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்ய அரசாங்கம் ஊக்குவிக்கும் 'MAX' செயலி, சீனாவிலுள்ள 'வீசாட்' (WeChat) போன்ற ஒரு செயலி ஆகும்.

இது பயனர்களின் இருப்பிடம், தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் வங்கிப் பரிமாற்றங்களை அரசாங்கம் எளிதாகக் கண்காணிக்க வழிவகுக்கும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போதைய சூழலில், ரஷ்யாவில் உள்ள 10 கோடிக்கும் அதிகமான வட்ஸ்அப் பயனர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/238445

  • கருத்துக்கள உறவுகள்

மெட்டா வோ அல்லது வேறு எந்த நிறுவனமோ இப்படி சொல்வதத்திற்கு அருகதையற்றவர்கள்.

ஏனெனில் , சீன பீறுவனமான ஹுவாவேயை அமெரிக்கா அரசு கான் அசுரர் வளர்ச்சி காரணாமாக, அமெரிக்க நிறுவணங்களுக்கு போட்டியை அகற்றுவதத்திற்கு அழிக்க , முடக்க முனைந்தபோது எதிர்ப்பு காட்டாமல், ஆமோதித்த அமெரிக்கா நிருணங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவில் வட்ஸ்அப் செயலிக்கு தடை 

Published By: Digital Desk 3

15 Feb, 2026 | 11:17 AM

image

ரஷ்யாவில் வட்ஸ்அப் மீதான தடை உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் ஊடகப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,

இந்த தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டு தற்போது முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தேசிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்ற வட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

பயங்கரவாதம் மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்க, அரசு கோரும் தகவல்களை வழங்க 'மெட்டா' (Meta) நிறுவனம் மறுப்பு தெரிவிக்கிறது.

ரஷ்ய சட்டப்படி, ஒரு வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனம் அங்கு செயல்பட வேண்டுமெனில், உள்ளூரில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தைத் திறக்க வேண்டும். வட்ஸ்அப் இதனைச் செய்யத் தவறியுள்ளது.

வட்ஸ்அப்பிற்குப் பதிலாக ரஷ்யாவிலேயே உருவாக்கப்பட்ட 'MAX' என்ற தேசியச் செயலியைப் பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

"MAX செயலி ஒரு சிறந்த தேசிய மாற்றாகும். இது குடிமக்களின் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவில் சுமார் 10 கோடி பயனர்கள் வட்ஸ்அப்பை பயன்படுத்தி வந்தனர். தற்போது நேரடி அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதால், பயனர்கள் இதனைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பலர் 'விபிஎன்' (VPN) சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தத் தடை ரஷ்யாவின் "டிஜிட்டல் இறையாண்மையை" பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என்று அந்நாட்டு அரசாங்கம் கருதுகிறது.

https://www.virakesari.lk/article/238687

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.