Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஹிஸ்புல்லா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஹிஸ்புல்லா

17 Feb, 2026 | 07:56 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மத்ரசாக்கள், அரபுக் கல்லூரிகளின் பதிவை தொடர்ந்தும் இடைநிறுத்தி இருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதியாகும். அதனால் பதிவுக்காக காத்திருக்கும் 80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

2020ஆம் ஆண்டு புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சினுடைய செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன். ஆனால் புத்தசாசன திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற பிரிவெனாக்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற அறநெறி பாடசாலைகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மிஷனரி பாடசாலைகள் என்பவற்றை பதிவு செய்வதற்கான முறையான அனுமதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படுவதுடன் அது மிகவும் சுமூகமாகவும் இடம் பெற்று வருகின்றது. இலங்கையில் செயல்பட்டு வரும் அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரசாக்களை பதிவு செய்வது தற்போதைய நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு கல்வி, சமூக மற்றும் நிர்வாக ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அனுமதி வழங்காத காரணத்தினால் நாடு முழுவதிலுமிருந்து பதிவிற்காக விண்ணப்பித்த சுமார் 80 அரபுக் கல்லூரிகளுக்கும், மதரசாக்களுக்கும் பல ஆண்டுகளாக பதிவு செய்வதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை.

மேற்படி பதிவு இடைநிறுத்தத்தின் காரணமாக, குறித்த அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரசாக்கள் இயங்குவதில் அதன் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். குறிப்பாக அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அரச ரீதியாக அங்கீகாரம் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அவர்கள் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல வருடங்கள் கல்வி பயின்ற மாணவர்கள் தங்களது கல்வி முயற்சிக்கு உரிய சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாத நிலையில் தவிப்பதோடு, மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகள் இஸ்லாமிய மார்க்க கல்வி, ஒழுக்கப் பயிற்சி மற்றும் சமுக வழிகாட்டுதலில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பதிவு இடைநிறுத்தம் காரணமாக இந்த மார்க்கக் கல்வி தொடர்ச்சியில் இடைவெளி ஏற்பட்டு, சமூகத்தில் தவறான புரிதல்கள் மற்றும் நம்பிக்கை குறைபாடுகள் உருவாகும் அபாயமும் காணப்படுகிறது. அத்துடன், பதிவு இல்லாத கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுவதால், வங்கி கணக்குகள், நிதி உதவிகள், வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக சட்டம் மற்றும் நடைமுறை ரீதியான குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது.

நமது நாடும், முழு உலகமும் வேண்டி நிற்கின்ற நல்லொழுக்கங்களையும் உயரிய பண்புகளையும் கற்றுக் கொடுக்கின்ற இம் மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளின் பதிவை தொடர்ந்தும் இடைநிறுத்தி இருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதி .

எனவே, மேற்படி நிலைமைகளை கருத்திற்கொண்டு, மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வது தொடர்பான நடைமுறையை விரைவாக தெளிவுபடுத்தி, பதிவு செயல்முறையை மீண்டும் ஆரம்பிக்க அல்லது உரிய வழிகாட்டுதல்களை வழங்க தங்களது அமைச்சு மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும்.

அதனால் மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளினை பதிவு செய்வதற்கான அனுமதியினை வழங்குவதற்கு ஆவண செய்ய முடியுமா?மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளினை பதிவு செய்வதற்கான அனுமதியினை வழங்குவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என கேட்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/238910

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரபுக்கல்லூரி பதிவு தடைகளை நீக்க சட்டமூலம், பாடத்திட்டம் விரைவில் நிறைவு – அமைச்சர் சுனில் செனவி

17 Feb, 2026 | 03:19 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரபுக்கல்லூரிகளுக்கான சட்டமூலம் தயாரித்தல் மற்றும் பாடத்திட்டம் தயாரிக்கும் பணியை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து, அரபுக்கல்லூரிகளை பதிவு செய்ய இருக்கும் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என பெளத்த மற்றும் மத நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர்மேலும் குறிப்பிடுகையில்,

மத்ரசா மற்றும் அரபுக்கல்லூரிகளை பதிவுசெய்ய முடியும். தற்போது குர்ஆன் மத்ரசாக்களை பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. குர்ஆன் மத்ரசா என்பது பாடசாலை மாணவர்கள் அல் குர்ஆனை ஓதுவதற்கு கற்றுக்கொள்ள அமைக்கப்பட்டதாகும். அதில் எந்த பிரநச்சினையும் இல்லை. அரபுக்கல்லூரிகள் தொடர்பிலேயே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

2024,ஏப்ரல் 1ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மத்ரசா பாடசாலை தொடர்பான சட்டத்தை கோரி இருந்தார். அதன்போது அந்த நடவடிக்கை எடும்பெற்றிருந்தது.

அதன் பின்னர் 2025, ஒக்டோபர் 13ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் அழைத்து இதுதொடர்பில் கலந்துரையாடி இருந்தார்.அரபுக்கல்லூரி உள்ளிட்ட ஏனைய மத பாடசாலைகளை பதிவு செய்வதில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.

என்றாலும் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னரே அரபுக்கல்லூரிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டது. அரபுக்கல்லூரிகளை பதிவு செய்யும்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதேநேரம் இதுவரை 321 அரப்புக்கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதேநேரம் 82 அரபுக்கல்லூரிகள் பதிவுக்காக காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றன.

அதனால் இந்த நடவடிக்கையை விரைவு படுத்துவதற்கு ஜனாதிபதி மீண்டும் அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலாேசனை வழங்கி இருந்தார்.

அத்துடன் இந்த நடவடிக்கை தாமதிப்பதற்கு காரணம், அரபுக்கல்லூரிகளுக்கான பாட்த்திட்ட தயாரிப்பு இன்னும் முடிவுறுத்தப்படாமல் இருப்பதாலாகும். இதுதொடர்பில் கல்வி அமைச்சு குழுவொன்றின் ஊடாக நடவடிக்கை எடுத்து வருகிறது.மத்ரசா பாடசாலை சட்டமும் பாடத்திட்டமும ஒன்றுக்காென்று சம்பந்தமாகிறது. அதனால் இந்த சிக்கல்களை நீக்கிக்கொண்டு விரைவாக அரபுக்கல்லூரிகளை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க முடியுமாகும்.

அத்துடன் அரபுக்கல்லூரிகளை முறைப்படுத்தும் சட்டமூலம் தயாரிப்பதற்காக 9பேர்களை உள்ளடக்கிய 3 மீளாய்வு குழுக்கள் செயற்பட்டு வருக்கின்றன. அதனால் மத்ரசா பாடசாலை தொடர்பான சட்டமூலமும் பாடத்திட்டம் தயாரிப்பும் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு விடயங்களை ஒன்றாக ஆராய்ந்து பார்த்து விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றே பிரதமரும் ஆலாேசனை வழங்கி இருக்கிறார்.

அதேபோன்று அமைக்கப்பட்டிருக்கும் குழுக்களில் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த நடவடிக்கை பிற்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இந்த விடயம் தொடர்பில் எனது தனிப்பட்ட கவனத்தை செலுத்தி, இறுதிக்கட்டத்தில் இருக்கும் சட்டமூலம் தயாரித்தல் மற்றும் பாடத்திட்டம் தயாரிக்கும் பணியை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து, அரபுக்கல்லூரிகளை பதிவு செய்ய இருக்கும் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

https://www.virakesari.lk/article/238866

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன்…. விகாரை கட்டுறான்,

சோனகன்…. அரபு கல்லூரி கட்டுறான்,

தமிழன்… நண்டு மாதிரி, தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு இருக்கிறான்.

எப்பதான் திருந்தப் போகுதுகளோ….

  • கருத்துக்கள உறவுகள்

80 அரபு கல்லூரிகள்??? ஒரு அரபு நாட்டில் கூர் இவளவு மொழிக்கல்லூரிகள் இருக்குமா என்பது சந்தேகம்

உண்மையில், மதிய கிழக்கில், தொழில்நுட்பம், விஞ்ஞானம், மருத்துவம், தொழில்முன்னிலை கல்வி போன்றவற்றுக்கே கல்லூரிகள், நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்கபடுகிறது.

இதை கேட்டு கொன்டு சிங்கள, தமிழ் அரசியல் வாதிகள் வாய் மூடி இருப்பது ....

இந்த அரபு கடற்பிக்கும் நிலையங்களில், மற்றவர்கள் மீதான வெறுப்புணர்வை பட்டும் படாமல் ஊட்டுவது நடக்கிறது.

சிங்கள அரசு முஸ்லிகளை தமிழர் அல்ல என்ற வாதத்துக்கு கைகொடுக்கப்போய், ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறது.

அதி நேரத்தில் , கிராமப்புறத்தில் உள்ள பாடசாலைகளை மூட எத்தனிக்கிறது.

அரபு காலோரிகள் இருக்கமான ஒழுங்கின்கீழ் கொண்டுஅறப்படவேண்டும்,

அத்துடன் அப்ரோ கல்லூரிகளுக்கு யாரும் பணத்தில் ஒரு பிங் தேசிய கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.