Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகா சங்க மாநாடு இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகா சங்க மாநாடு இன்று!

Feb 20, 2026 - 07:58 AM

மகா சங்க மாநாடு இன்று!

தற்காலத்தில் பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் எதிராக விடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் 'மகா சங்க மாநாடு' இன்று (20) நடத்தப்படவுள்ளது.

இந்த மாநாடு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சங்க மாநாடு எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பிக்குகளுக்கு எதிராக விடுக்கப்படும் பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த மாநாட்டின் பிரதான நோக்கம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், பிரிவினைவாதத்திற்கும் பிரிவினைவாத சக்திகளுக்கும் எதிராகச் செயற்படுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து, மக்கள் மனு ஒன்றில் கையெழுத்திடும் வேலைத்திட்டம் நேற்று (19) ஆரம்பமானது.

பெப்லியான சுனேத்ராதேவி மகா பிரிவெனா வளாகத்தில் இந்த மக்கள் மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கை ஆரம்பமானதாக 'அட தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர்களான மேதகொட அபயதிஸ்ஸ தேரர், இந்துராகாரே தம்மரதன தேரர் மற்றும் மல்வானே சந்தரதன தேரர் ஆகியோரின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குணதாச அமரசேகர மற்றும் கல்யாணந்த திராணகம உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தேசிய அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் மனுவை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmlu9ryae0004356p79ibzupu

  • கருத்துக்கள உறவுகள்

“மொட்டைகள்” நாட்டில் குழப்பம் விளைவிக்க ஆயத்தப் படுத்துகின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'மகா சங்க மாநாடு' - 10 அம்சங்களைக் கொண்ட சங்கப் பிரகடனம் வௌியீடு

Feb 20, 2026 - 06:33 PM

'மகா சங்க மாநாடு' - 10 அம்சங்களைக் கொண்ட சங்கப் பிரகடனம் வௌியீடு

பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் தற்போது விடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மகா சங்க மாநாடு' இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டின் போது, பௌத்த சாசனம், பிக்குகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் சமூக நெருக்கடிகளைத் தணிப்பதற்காக நாட்டின் அனைத்து பிக்குகளும் பௌத்த தலைவர்களும் இணைந்து 'சங்கப் பிரகடனம்' ஒன்றை வெளியிட்டனர்.

அனைத்து பிக்குகளினதும் கையொப்பங்களுடன் கூடிய இந்தப் பிரகடனம் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வணக்கத்திற்குரிய அகலகட சிறி சுமன தேரர் தெரிவித்தார்.


10 அம்சங்களைக் கொண்ட அந்த சங்கப் பிரகடனம் வருமாறு: 

01. அர்ஹத் மஹா மஹிந்த தேரர் பௌத்த தர்மத்தை இலங்கைக்குக் கொண்டு வந்து நிறுவியது அன்றைய ஆட்சியாளர் தேவநம்பியதிஸ்ஸ மன்னரின் முழுமையான ஆதரவுடன் என்பதை நினைவூட்டுவதுடன், அன்று முதல் அரசும், பௌத்தமும் பின்னிப்பிணைந்துள்ளன. பௌத்த போதனைகளின் அடிப்படையில் ஒரு தார்மீக நாட்டை உருவாக்கும் பொறுப்பு ஆட்சியாளருக்கும் மதத்திற்கும் உண்டு. இந்த வரலாற்று ரீதியான உரிமையை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

02. பௌத்தத்தையும் அதனுடன் தொடர்புடைய அனைத்து கலாச்சாரங்களையும், முந்தைய மன்னர்களால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட புனிதத் தலங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு உடரட்ட ஒப்பந்தத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், புத்த சாசனம் 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நீதிமன்றங்களால் வரையறுக்கப்பட்டுள்ளதால், அரசாங்கம் இந்த அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். 

03. தேசத்தின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட சாதாரண-துறவி உறவைச் சார்ந்துள்ளது, மேலும் சோழர்கள், மேற்கத்திய சதிகாரர்களோ அல்லது விடுதலைப் புலிகளோ இந்த உறவை அழிக்க முடியாது என்பதுடன், சமூக ஊடகங்கள் உட்பட அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளால் எடுக்கப்பட்ட குறுகிய பார்வை கொண்ட நடவடிக்கைகளைத் தோற்கடிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும், அதை உடைத்து அந்நியப்படுத்தவும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். 

04. பௌத்த அரசியல் தத்துவத்தின்படி ஆட்சி செய்ய வேண்டியதன் அவசியத்தையும், குறிப்பாக பௌத்தம் பரிந்துரைத்த தசராஜ தர்மத்தின் நான்கு கட்டளைகளை செயல்படுத்துவதன் மூலமும், நான்கு பாரபட்சங்கள் இல்லாமல் நாட்டை ஆள வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம். கடந்த கால ஆட்சியாளர்கள் பௌத்தத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் செயல்பட்டதால், இலங்கையின் அரசராக யாரும் இருக்கக்கூடாது என்று கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளது. 

05. பண்டைய காலங்களிலிருந்தே புத்தர் சிலை இலங்கையின் பக்தியுள்ள பௌத்த மக்களால் மிகவும் மதிக்கப்படும் ஒரு புனிதப் பொருளாக இருந்து வருகிறது என்பதையும், சமாதி, அவுகன மற்றும் கல் விகாரை போன்ற சிறந்த படைப்புகள் பண்டைய மன்னர்களால் மக்களின் தூய்மையை மேம்படுத்த மிகுந்த முயற்சியுடன் கட்டப்பட்டன என்பதையும், இந்த மத மற்றும் கலாச்சார பாரம்பரியங்கள் இன்றுவரை மிகவும் மதிக்கப்படுகின்றன என்பதையும் நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம். எனவே, புத்தர் சிலையை அவமதிக்கும் எந்தவொரு வடிவமோ அல்லது செயலோ அரசாங்கமோ அல்லது வேறு எந்த சமூக நிறுவனமோ எடுக்கக்கூடாது என்றும், தேவையான நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாக எடுக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம். 

06. பௌத்த கல்வியின் தலைமையகம் அனுராதபுரம் மகா விஹாரை என்பதையும், அன்றிலிருந்து பிக்குகள் நாட்டு மக்களின் முக்கிய ஆசிரியர்களாக இருந்து வருவதாகவும், அதிலிருந்து ஒரு ஒழுக்கமான மாணவர் தலைமுறை கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும, உயர் இலக்கியக் கலைகளை நாட்டிற்கு மரபுரிமையாகக் கொண்டு வருவதன் மூலம் பிக்குகளின் கல்விப் பணி பாராட்டப்பட வேண்டும் என்பதையும், வித்யலங்கார பிரிவேனாவிலிருந்து அதன் மூலம் பல்கலைக்கழகங்கள் வரை இலங்கையில் பௌத்த கல்வி எவ்வாறு வளர்ந்தது என்பதன் அடிப்படையில் நவீன பிரிவேனாக்கள் மற்றும் பாடசாலை கல்வி கட்டமைக்கப்பட வேண்டும் என்பதையும், பாடத்திட்ட உருவாக்கத்தில் பௌத்த கல்விக் கொள்கைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம். 

07. முந்தைய ஜனாதிபதிகள் அமைச்சர் பதவிகளை வகித்ததால் செயல்படுத்தப்பட்ட புத்த சாசன அமைச்சகம், தற்போது முறையான அமைச்சர் இல்லாததால் செயலற்று நீர்த்துப் போய்விட்டதால், புத்த சாசன அமைச்சகத்தையும் பௌத்த விவகாரத் துறையையும் ஒரு திறமையான நிறுவனமாக மாற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். 

08. "தேவோ வஸ்ஸது காலேன" என்ற பௌத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக வளர்ச்சியின் அடிப்படை அடித்தளமாகக் கருதப்படும் ஒரு நீதியான அரசு ஆட்சிக்கான மக்களின் வரலாற்று அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசை வழிநடத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். 

09. பௌத்த தொல்பொருட்கள், புனித இடங்கள், விகாரைகள் என்பன பிக்குகளின் தனிப்பட்ட சொத்துக்கள் அல்ல, அவை தேசத்தின் பாரம்பரிய சொத்துக்களாகும். அவற்றை எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

10. பிக்குகளை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுதல், சமூக ஊடகங்கள் ஊடாக அவதூறு பரப்புதல் போன்ற பிக்குகளின் கௌரவத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கீழ் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.

https://adaderanatamil.lk/news/cmluwga6w0009356par0jw9tn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த மகா சங்கத்தின் முன்மொழிவுகள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட மாட்டாது - அமைச்சர் சந்தன அபேரத்ன

22 Feb, 2026 | 05:00 PM

image

(எம்.மனோசித்ரா)

அகில இலங்கை பௌத்த மகா சங்கத்தினரால் நடத்தப்பட்ட சம்மேளனத்தில் நாம் எவ்வித தவறையும் காணவில்லை. அந்த வகையில் அந்த மாநாட்டையும் அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் எந்த வகையிலும் அரசாங்கம் குறைமதிப்பிற்கு உட்படுத்தாது என பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த மதகுருமார்கள் உட்பட நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் ஒன்று கூடுவதற்கான உரிமை காணப்படுகிறது. பௌத்த மத குருமார்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் அல்லது நெருக்கடிகள் காணப்படுமாயின் அவை குறித்து அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டால் எம்மால் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

எவ்வாறிருப்பினும் பௌத்த தேரர்களால் சம்மேளனம் நடத்தப்படுவதில் எவ்வித தவறையும் நாம் காணவில்லை. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சம்மேளனத்தில் முன்வைக்கப்பட்ட சாதகமான விடயங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம். ஆரம்ப கால கட்டத்திலிருந்தே பௌத்த மதகுமார் பிரஜைகளுக்கும் அரசாங்கத்துக்கும் நல்வழி காண்பித்துள்ளனர்.

எனவே இந்த சம்மேளனத்தையும் அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் நாம் ஒருபோதும் குறைமதிப்பிற்கு உட்படுத்த மாட்டோம். அவற்றிலுள்ள சாதகமான விடயங்களை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் கவனத்தில் கொள்வோம். பௌத்த மதகுமார் மாத்திரமின்றி எந்தவொரு பிரஜையாலும் நாட்டு நலனுக்காக முன்வைக்கப்படும் எந்தவொரு முன்மொழிவையும் எமது அரசாங்கம் நிராகரிக்காது என்றார்.

https://www.virakesari.lk/article/239317

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு சலாம்..

பெளத்த பிக்குகளுக்கும் சலாம்

இப்படிக்கு ஜெ.வி.பி அமைச்சர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த மகா சம்மேளனம் தோல்வி; ஒருசில தேரர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது - அமைச்சர் லால்காந்த

Published By: Vishnu

23 Feb, 2026 | 08:41 PM

image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்துக்கு பாடம் கற்பிப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு கொழும்பில் நடந்த பௌத்த சங்க சம்மேளனம் தோல்வியடைந்துள்ளது. ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடையாது என விவசாயம், நீர்பாசனத்துறை மற்றும் காணி அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்துக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என தேர்தல் காலத்தில் முரண்பட்டுக் கொண்டிருந்த சகல தரப்பினரும் இன்று நண்பர்களாக கைகோர்த்துள்ளார்கள்.

கடந்த கால ஊழல் மோசடிகள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போது அச்சமடைந்துள்ளவர்கள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக கைகோர்த்துள்ளார்கள்.

அரசாங்கத்துக்கு பாடம் கற்பிப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு கொழும்பில் நடந்த பௌத்த சங்க சம்மேளனம் தோல்வியடைந்துள்ளது. ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடையாது. எதற்காக இந்த மாநாட்டை அவர்கள் நடத்தினார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது, அதில் கலந்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவருக்கும் தெரியாது.

அரசாங்கத்தக்கு எதிராக எங்கு போராட்டம், மாநாடுகள் நடக்கிறது. அங்குச் சென்று அமர்ந்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளார். குறுகிய அரசியல் இலாபத்துக்காக தவறான செயற்பாடுகளுக்கு துணைசெல்ல வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/239403

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.