Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெடி கொழுத்த 10 ஆயிரம் கட்டணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20260220_1300382.jpg?resize=750%2C375&ss

மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெடி கொழுத்த 10 ஆயிரம் கட்டணம்.

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் இடம்பெறும் மரணச் சடங்கிற்கு வீதியில் வெடிகளை கொழுத்தவேண்டுமாக இருந்தால் சபைக்கு 10 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் க.ஜெசீதன் தலைமையில் இடம்பெற்ற நிலையில் இந்த பிரேரணையை தவிசாளர் கொண்டுவந்த நிலையில் , தீர்மானிக்கப்பட்டது.

மேலும், தவிசாளர் தனது பிரேரணையில் கருத்து தெரிவிக்கையில்,

மரணச் சடங்குகளின் போது வீதிகளில் வெடி வெடிப்பதால் வீதிகள் அசுத்தமடைகின்றன. அவற்றை பிரதேச சபையே சுத்தம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. எனவே அந்த குப்பைகளை சுத்தம் செய்வதற்காக நாங்கள் குறித்த வெடிகளை வெடிப்பவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபா கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

அவர்கள் எமது பிரதேச சபைக்கு 10 ஆயிரம் ரூபா செலுத்தி அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னரே வெடிகளை வெடிக்க வேண்டும் என்றார்.

இது குறித்து சபையில் நீண்ட விவாதம், கருத்து முரண்பாடுகள் என்பன இடம்பெற்றன.

இதன்போது கருத்துரைத்த இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் தயாபரன், வெடி வெடிப்பது என்பது எமது மரபு. எமது மரபுகளுடனும், மக்களின் உணர்வுகளுடனும் விளையாடாதீர்கள். இந்த விடயத்திற்கு நான் எதிர்ப்பு என்று கூறியதுடன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதன்பின்னர் குறித்த பிரேரணையானது சபையில் நிறைவேற்றப்பட்டது.

20260220_1300381.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2026/1465726

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுச்சூழல் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தவேளையில் வெடி வெடிப்பதை முற்றாக தடைசய்ய வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்தி - மரணச் சடங்கின் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க 10,000 கட்டணம் - மானிப்பாய் பிரதேச சபையில் தீர்மானம்!

############################################



Sundarampillai Jeyaratnam
உது நடக்கற காரியமோ வெடி கொளுத்தற காவாலிகளை உவையளாலை கட்டப்படுத்த முடியுமோ உவையும் தேர்தல்லை வெண்டா வெடியல்லே கொளுத்திகினம்.

########

Vinothan Kandasamy
வலி மேற்கு பிரதேச இடுகாடுகள்( சுடலை) திருத்தி அமைக்க இவ்வாறான வருவாய் பயன் படும்.

########

Sritharan Rajathurai
மிக வேகமாகச் செய்த வேண்டிய இரண்டு செயற்பாடுகள்: வெடி கொளுத்துவதை தடுத்தல், மற்றும் ஒலிபெருக்கி பாவனைகளை இல்லாது செய்தல். நிறையப் பேருக்கு நன்மை கிடைக்கும்.

########

பக்திப் பரவசம்.
இனி எங்க செத்த வீடு நடக்குது, வெடி கொழுத்திறிங்களா எண்டு கேட்டு பிரதேச உறுப்பினர் காசுக்கு போவினம் போல..😆😆😝காசைக்கட்டிப்போட்டுத்தான் வெடி கொடுத்த சொல்லுவினம்...Body எரிச்சாப்பிறகுதான் காசே குடுக்கிறது... இனி சாக முதலே வெடி கொழுத்த அனுமதி எடுத்து காசு கட்டணும் போல.

########

SK Handee
Babu Babugi இரண்டு இலட்சுத்துக்கு மேல் வெடி வெடிக்கிறவங்களுக்கு.. அந்த காசு எல்லாம் பிச்சைக்காசு.

#####################

Priyanthini Sasitharan
கல்யாண வீட்டுக்கும் வெடி
செத்த வீட்டுக்கும் வெடி
வெடி எதுக்கு என்றே தெரியவில்லை
என்ன நிகழ்வென்றே கண்டு பிடிக்க முடியவில்லை 😊

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.