Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!

23 February 2026

1771825265_4298220_hirunews.jpg

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, 'திட்ட வரைபு அறிக்கை' ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மஹேஷ் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரவில்லை என்பதை வனப் பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சமர்ப்பிக்கும் வரை பணிகளைத் தொடர முடியாது.

சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுவதற்கு முன்னரே அங்கு நிலத்தை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளதாகக் கிடைத்த புகார்களையடுத்து, யாழ்ப்பாண அலுவலக அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.

1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ், அனுமதி இன்றி இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பது சட்டவிரோதமாகும்.

இதன்படி, கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பணிகளை நிறுத்துமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம், இந்தத் திட்டம் கட்டாய சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதனை உடனடியாக நிறுத்துமாறு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hiru News
No image preview

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத...

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!. Most visited website in Sri Lanka.
  • கருத்துக்கள உறவுகள்

தொல்பொருள் திணைக்களம், சுற்றாடல் அதிகாரசபை, பொலிஸ், இராணுவம் போன்றவை...

தமிழர் பகுதிகளில்தான்... தமது அதிகாரங்களை பயன்படுத்தி,

தமிழனுக்கு ஆப்பு அடிக்கும் செயல்களை செவ்வனே செய்கின்றார்கள்.

வைக்கோல் பட்டடை 🐕‍🦺கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு ஒரு நல்லது நடக்க தமிழனே விடமாட்டான் ........ அவ்வளவும் கூடைக்குள் இருக்கும் நண்டுகள் .......!

ஒரு ஊர் கதை .......ஒரு அதிகாரியிடம் கையொப்பம் வாங்க ஒருத்தர் போனார். அந்த அதிகாரியும் அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தார். அப்போது தெருவில் போகிற ஒருத்தர் இவரிடம் ஒரு அரைபோத்தலோடு முடிகிற அலுவலுக்கு நீ நீதி நேர்மை என்று அல்லாடுகிறாய் என்று .......! 🙃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.