Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசந்தம் வருகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_0017.jpeg.2d39f262174da1b25981

காய்ந்து, ஆடையின்றி நின்ற மரங்களின் கிளைகளில் மெல்லிய பச்சைத் தளிர்கள் தலை தூக்குகின்றன. குளிர்காலத்தின்சோர்வு விலகி, வெயில் மெதுவாக பூமியைச் சூடேற்றத் தொடங்குகிறது. அதிகாலை நிசப்தத்தை பறவைகளின்கீச்சொலிகள் கிழித்து, அவற்றின் குளிர்காலப் பயணம் முடிந்ததையும் வசந்தம் பிறந்ததையும் அறிவிக்கின்றன. வசந்தம்என்பது வெறும் காலநிலை மாற்றமல்ல, அது மெதுவான, ஆனால் தெளிவான புத்துணர்ச்சியின் தொடக்கம்.

ஆனால் என்னால் வசந்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்க முடியவில்லை.

இளம் சூரியஒளியில் சில நிமிடங்கள் நின்று காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால்முடியவில்லை. கொஞ்சம் நடைப்பயிற்சி செய்யலாமென்றாலே தயக்கம்

காரணம், ஒவ்வாமை

கண்ணுக்குத் தெரியாத சிறு துகள்கள் என்னை ஆட்டிப்படைக்கின்றன. மகரந்தத் தூள்களின் வீச்சை நினைத்தாலேவெளியே செல்லத் தயங்குகிறேன். வீட்டுக்குள் ஒளிந்திருப்பதே எனக்குப் பாதுகாப்பாகத் தோன்றுகிறது.

 நான் மட்டும்தானா இவ்வாறு அல்லல்படுகிறேன்? யேர்மனியில் சுமார் 15% மக்களுக்கு மகரந்த ஒவ்வாமை இருப்பதாகக்கூறப்படுகிறது

இப்போது காற்றில் Hazel மகரந்தம் அதிகமாக உள்ளது.  Alder மகரந்தமும் தோன்றத் தொடங்கியுள்ளது. இன்னும் சிலவாரங்களில் Birch மகரந்தம் பரவவிருக்கிறது. இந்த மூன்றும் எனக்கு ஒவ்வாதவை.

மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறேன். “மருந்து எடுத்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், சோம்பல்தோன்றலாம். நடைப்பயிற்சி என்றால் அதிகாலையில் செல். வெளியே சென்றுவிட்டு வந்தால் தலைக்குக் குளி, உடைகளைமாற்று…” என்று ஏராளமான ஆலோசனைகள். அவற்றை எல்லாம் கடைப்பிடிக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு வசந்தமும்ஒரு சோதனையாகவே மாறுகிறது.

காலநிலை மாற்றமும் மகரந்தங்களின் அளவுகளில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வெப்பநிலையின் திடீர் ஏற்றஇறக்கங்கள் அதிக வீரியமுள்ள மகரந்தங்களை உருவாக்குகின்றன. வறட்சி மற்றும் சுற்றுச்சூழல், மாசு காரணமாகமரங்கள் மனஅழுத்தத்தில் இருப்பதால், அவை அதிக அளவு மகரந்தத்தை உற்பத்தி செய்கின்றன என ஆராய்ச்சிகள்கூறுகின்றன. இருந்தும், “சுற்றுச்சூழல் பிரச்சினை என்று ஏதாவது உண்டா?” என்று கேட்பவர்கள் இன்னும்இருக்கிறார்கள்.

ஏற்கனவே Cetirizine குளிசை ஒன்றை ப்  போட்டுவிட்டேன். கொஞ்சம் அசதியாக இருக்கிறது. இப்போது கொஞ்சம்நித்திரை கொண்டு பார்க்கலாம், வசந்தத்தின் மணத்தை அனுபவிக்க முடியாவிட்டாலும், அதன் தாக்கத்திலிருந்து ஓரளவு தப்பிக்கவாவது.

  • கருத்துக்கள உறவுகள்

சூழல் மாசு பற்றி உங்களின் அனுபவங்கள் ........எழுதுங்கள் . .....!

வசந்தம் வரமுதலே இந்த ஒவ்வாமைக்கு ஒரு ஊசி இங்கு போடுவார்கள் இலவசமாக ........அதனால் அது அவர்களுக்கு கொஞ்சம் சுகமாய் இருக்கும் . ...... அங்கு அப்படி இல்லையா .........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

வசந்தம் வரமுதலே இந்த ஒவ்வாமைக்கு ஒரு ஊசி இங்கு போடுவார்கள் இலவசமாக ........அதனால் அது அவர்களுக்கு கொஞ்சம் சுகமாய் இருக்கும் . ...... அங்கு அப்படி இல்லையா .........!

suvy , ஊசி போட்டுக் கொள்வது பற்றி நீங்கள் குறிப்பிடுவது சரிதான்எனது குடும்ப வைத்தியரிடம் இதைப்பற்றி கதைத்திருக்கின்றேன். எனக்குள்ளது பருவகால மாற்றத்தினால் ஏற்படும் ஒவ்வாமை. ஒன்றில் இருந்து இரண்டு, மூன்று மாதங்களுக்குள் சரியாகிவிடும். ஊசி போட்டுக் கொள்வதால் ( மிகச் சிறிய அளவில் அந்த மகரந்தப் புரதம் (allergen) உடலுக்குள் ஊசி மூலம் செலுத்துதல்) உடல் மெதுவாக அதற்கு பழகி விடும். காலப்போக்கில் ஒவ்வாமைத் தாக்கம் குறையும். ஆனால் ஒரு தடவை ஊசி போடுவது போதும் என்றில்லை, 3-5 ஆண்டுகள் திட்டமிட்ட முறையில் போட வேண்டும் என்று வைத்தியர் சொன்னார். ஆரம்பத்தில் போட்டுக் கொண்டேன். வேலை நிமித்தம் தொடர்ந்து ஊசி வைத்தியத்தை செய்யவில்லை. தற்காலிக நிவாரணமாக குளிசை போட்டுக் கொண்டேன்மூக்கடைப்பு ஏற்படும் போது Nasal Steroid Spray யும் பாவித்துக் கொள்வேன். அதுவும் பழகிவிட்டது.

வீட்டில் ஒருதடவை தும்மினால், “ மனுசனுக்கு ஒவ்வாமை வந்து விட்டது. குளிசையைப் போட்டுட்டு படுக்கப் போய்விடுவான்என்று எண்ணம் வர வீட்டு வேலைகள் குறைய வாய்ப்பிருக்கின்றது. 😉

Edited by Kavi arunasalam
எழுத்துப் பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

On 28/2/2026 at 12:27, Kavi arunasalam said:

மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறேன். “மருந்து எடுத்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், சோம்பல்தோன்றலாம்.

ஏற்கனவே Cetirizine குளிசை ஒன்றை ப்  போட்டுவிட்டேன். கொஞ்சம் அசதியாக இருக்கிறது. இப்போது கொஞ்சம்நித்திரை கொண்டு பார்க்கலாம், வசந்தத்தின் மணத்தை அனுபவிக்க முடியாவிட்டாலும், அதன் தாக்கத்திலிருந்து ஓரளவு தப்பிக்கவாவது.

ஒவ்வாமை என்பது ஒரு அசௌகரியம் தான் என்றாலும் இக்காலத்தில் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் படியாக நாம் அனுமதிக்கக் கூடாது. நித்திரைத் தூக்கம் ஏற்படுத்தாத (non-drowsy) ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் பல வந்து விட்டன. கீழ் வரும் மருந்துகளில் எவையாவது உங்கள் நாட்டில் கிடைக்கின்றனவா என்று தேடிப் பாருங்கள், மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே இவை மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடும்.

fexofenadine

centrizine

levocentrizine

loratadine

desloratadine

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

fexofenadine

centrizine

levocentrizine

loratadine

desloratadine

பரிந்துரைக்கு நன்றி Dr.Justin.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதில் Fexofenadine யேர்மனியில் கிடைக்கிறது. விலை சற்று அதிகம் €32.90. நான் பாவிப்பது Cetirizine ADGC 10mg, விலை அதிகமில்லை €8.00. நீங்கள் குறிப்பிட்ட Centrizine உம் நான் பாவிக்கும் Cetirizineஉம் ஒன்றா எனத்தெரியவில்லை. மேலும் நாளுக்கு ஒரு தடவை MomeAllerg Nasal Spray பாவிக்கிறேன். இன்னும் ஓரிரு வாரங்கள்தான் சமாளித்துவிடுவேன்.

மீண்டும் உங்கள் தகவல்களுக்கு நன்றி!🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.