Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கப்படும் - ஈரான்

18 Mar, 2026 | 04:42 PM

image

ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (18) ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானும் அந்த தகவலை உறுதிப்படுத்தியது.

அத்துடன் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் துணை அமைப்பான பசிஜ் படைத் தலைவர் கோலம்ரேசா சுலைமானியும் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

முன்னதாக ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதில் கடுங்கோபத்தை வெளிப்படுத்திய அந்நாடு, இஸ்ரேலின் தாக்குதலில் அலி லாரிஜானியும் கொல்லப்பட்டதில் பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதோடு, தீவிரமாக தனது எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறது.

இது தொடர்பாக ஈரான் இராணுவ தளபதி அமீர் ஹதாமி கூறுகையில், “அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரானின் பதில் எதிரிகளுக்கு தீர்க்கமானதாகவும் வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். இந்த உயரிய தியாகியின் ரத்தத்துக்கும் பிற மதிப்புக்குரிய தியாகிகளின் ரத்தத்துக்கும் பழிவாங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு இராணுவ தளபதியான அலி அப்துல்லாஹி, “ஆயுதப்படைகளின் பதில் நடவடிக்கை எதிரியின் செயற்பாடுகளையம் கற்பனையையும் விடப் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும். இதற்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காத்திருக்கவேண்டும். எதிரி சரணடையும் வரை இந்தப் பாதை தொடரும்” என்றார்.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஈரான் அரசு என்பது நன்கு நிறுவப்பட்ட அரசியல், பொருளாதார, சமூக நிறுவனங்களைக் கொண்ட ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. தாக்குதல்களில் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும் எங்களது அரசியல் அமைப்பை சீர்குலைக்க முடியாது. நாட்டின் ஆட்சி முறை தனிநபர்களை சார்ந்திருக்காமல், வலுவான நிறுவனங்களை சார்ந்தே இயங்குகிறது...” என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு ஈரான் தரப்பு கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

https://www.virakesari.lk/article/241305

  • Replies 51
  • Views 2.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    கடஞ்சா, நீங்கள் எல்லா தரப்புகளையும் பார்ப்பதாக கூறுகின்றீர்கள். ஆனால், ஒரு தரப்பையும், மறு தரப்பையும் நீங்கள் ஒரே மாதிரி விளிப்பதில்லையே. நீங்கள் ஆதரிக்கும் தரப்பை மிகவும் மரியாதையுடனும், மறு தரப்பை ம

  • goshan_che
    goshan_che

    இங்கே யாராவது எப்போதாவது கொமெய்னி ஒரு சர்வாதிகாரி என எழுதினார்களா? யாரும் எழுதவில்லை. அவர் ஒரு மத எதேச்சாதிகாரத்தின், தியோகிரசியின் தலைவர். இந்த முல்லாக்களின் ஈரான் மீதான பிடியை விளங்கி கொள்ள கொஞ்சம்

  • ரசோதரன்
    ரசோதரன்

    🤣............... பிரளயக் கிருமி, விவிலியக் கிருமி போன்ற சொற்பதங்களை இனி வாழ்நாளில் மறக்க முடியாது............... கடஞ்சா சொந்தமாக எழுதுவது மட்டும் இல்லாமல், சொந்தமாக சொற்களையே உருவாக்குகின்றாரே, அதற்கா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

Mar 18, 2026 - 02:54 PM

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலின் 'channel 12' செய்திச் சேவை முன்னதாக செய்தி வௌியிட்டிருந்தது. 

இந்தத் தகவல்களின்படி, முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் முடிவுகள் குறித்து அதிகாரிகள் தற்போது மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.  

இந்த விவகாரம் குறித்து ஈரான் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmmvu325c000g356p3ct40hzq

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.