Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சந்தையில் 10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

Mar 1, 2026 - 09:30 PM

10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 10% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாயின் விலை 80 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்தப் போர் பதற்றம் தொடரும் பட்சத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

Edited by ஏராளன்

  • ஏராளன் changed the title to சர்வதேச சந்தையில் 10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் : மசகு எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்வு

02 Mar, 2026 | 01:21 PM

image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களின் விளைவாக ஞாயிற்றுக்கிழமை (1) ‘ஓவர் தி கவுண்டர்’ (OTC) வர்த்தகத்தில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாயின் விலை சுமார் 80 அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக எண்ணெய் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர் நிலைமை தொடர்ந்தால் மசகு எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர் வரை உயரக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை (27) நிலைவரப்படி, உலகளாவிய மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73 அமெரிக்க டொலர்களாக பாதிவாகின. இது ஜூலை மாதத்துக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும்.

சனிக்கிழமை (28) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (1) ஆகிய தினங்கள் அதிகாரப்பூர்வ சந்தை விடுமுறை என்பதால் வார இறுதியில் இந்த விலை உயர்வு காணப்பட்டது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை, ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகின்றன.

கப்பல்கள் இந்த நீர்வழிப்பாதையை பயன்படுத்தவேண்டாம் என ஈரான் எச்சரித்ததையடுத்து, பெரும்பாலான எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கப்பல் உரிமையாளர்கள் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.

சவூதி அரேபியா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளின் மாற்றுப்பாதைகளை பயன்படுத்தினாலும், ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் ஒரு நாளைக்கு 8 மில்லியன் முதல் 10 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பான OPEC+, ஏப்ரல் மாதம் முதல் ஒரு நாளைக்கு 206,000 பீப்பாய்கள் உற்பத்தியை உயர்த்துவதற்கு ஞாயிற்றுக்கிழமை (01) ஒப்புக்கொண்டது. இருப்பினும், இது உலகளாவிய தேவையில் 0.2 சதவீதத்திற்கு குறைவான மிகச் சிறிய அளவே ஆகும்.

இந்த நெருக்கடியால் ஆசிய நாடுகள் மாற்று வழிகளையும் எண்ணெய் கையிருப்பையும் ஆய்வு செய்து வருகின்றன. மத்திய கிழக்கிலிருந்து விநியோகம் தடைப்பட்டால், இந்தியா தனது தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் அதிக எண்ணெய்யை வாங்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் : மசகு எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்வு

சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் கடும் உயர்வு!

Mar 2, 2026 - 06:22 PM

சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் கடும் உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன.

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நேற்று (1) நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனால் குறித்த வழியூடான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட தடங்கலாலும் ஏனைய பிற காரணிகளாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உலக இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கட்டார் கொண்டுள்ளது.

இதில் பெரும்பாலானவை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடல் மார்க்கமாகப் போக்குவரத்து செய்யப்படுகின்றன.

கத்தாரின் முக்கிய வாடிக்கையாளர்கள் ஆசியாவில் இருந்தபோதிலும், அங்கு ஏற்படும் விநியோகத் தடை உலக சந்தையில் பெரும் போட்டியை உருவாக்கி விலையை உயர்த்தியுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இஸ்ரேலில் சில எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டிருப்பது இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் குளிர்காலம் முடிவுக்கு வருவதால் எரிவாயு பயன்பாடு குறைந்தாலும், அங்குள்ள இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.

எதிர்வரும் கோடை காலத்தில் இந்த இருப்பை மீண்டும் நிரப்ப வேண்டியுள்ளதால், தற்போதைய விலை உயர்வு ஐரோப்பாவுக்கும் பெரும் சவாலாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் கடும் உயர்வு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக சந்தையில் இயற்கை எரிவாயு விலை கிடுகிடு உயர்வு!

Mar 3, 2026 - 05:50 PM

உலக சந்தையில் இயற்கை எரிவாயு விலை கிடுகிடு உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் இயற்கை எரிவாயு விலை பெருமளவில் அதிகரித்துள்ளது. 

இன்று மாத்திரம் ஐரோப்பாவில் எரிவாயு விலை 33 வீதத்தாலும், பிரிட்டனில் 30 வீதத்தாலும் அதிகரித்துள்ளது. 

இது 2023 ஜனவரி மாதத்தின் பின்னர் பதிவான அதிகபட்ச விலை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளரான கட்டார் எனர்ஜி நிறுவனத்தின் உற்பத்தி வசதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதால், நேற்றையதினம் எரிவாயு விலை சுமார் 50 வீதத்தால் அதிகரித்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பிரிட்டிஷ் நிறுவனமான 'Trading Economics' இன் தரவுகளின்படி, இந்த நிலைமை காரணமாக ஐக்கிய இராச்சியம் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. 

இதற்கு சில முக்கிய காரணங்கள் செல்வாக்கு செலுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்: 

எரிவாயு சேமிப்புத் திறன் குறைவாக இருத்தல். 

இறக்குமதியில் அதிகளவாக தங்கியிருக்க வேண்டிய நிலை. 

பெப்ரவரி இறுதிக்குள் நாட்டின் உள்ளூர் கையிருப்பு 30 வீதத்திற்கும் குறைவாகக் காணப்படுதல். 

இந்த விலை உயர்வு காரணமாக எதிர்வரும் மாதங்களில் ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் எரிசக்தி செலவுகள் அதிகரிப்பதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், ஓமானின் 'Duqm' துறைமுகத்திலுள்ள எரிபொருள் தாங்கிகளை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. 

அதிகாரப்பூர்வமற்ற பாதுகாப்புத் துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், உயிர்ச்சேதங்கள் ஏதும் பதிவாகவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

எனினும், கடந்த வார இறுதியிலும் இதே துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஊழியர் ஒருவர் காயமடைந்திருந்தார். 

இந்த தொடர்ச்சியான தாக்குதல்களால் பிராந்தியத்தின் எரிசக்தித் துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை வழங்கும் கட்டாரில் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

மேலும், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய உள்ளூர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகளும் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் இயற்கை எரிவாயு விலை கிடுகிடு உயர்வு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பெற்றோல் விலை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு!

03 Mar, 2026 | 10:16 AM

image

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உக்கிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை கடந்த நவம்பர் மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஒரு கலன் 03 டொலரை கடந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் நடத்திய பதில் தாக்குதல்கள் காரணமாக, சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான 'ஹோர்முஸ் நீரிணை' ஊடான கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நெருக்கடி நிலையினால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 05 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதன் நேரடித் தாக்கம் அமெரிக்க நுகர்வோரைப் பாதித்துள்ளதுடன், அங்கு பெற்றோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

தற்போதைய பதற்றமான சூழல் நீடித்தால், இந்த வார இறுதிக்குள் அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலனுக்கு 3.25 டொலர் வரை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் பெற்றோல் விலை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.