Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடல் எடையை குறைக்க பழங்களை மட்டுமே உண்ணும் 'ஃப்ருடேரியன் டயட்' சிறந்ததா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடல் எடையை குறைக்க பழங்களை மட்டுமே உண்ணும் 'ஃப்ருடேரியன் டயட்' சிறந்ததா?

ஃப்ருடேரியன் டயட்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • ஷண்முகப்ரியா செல்வராஜ்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 மார்ச் 2026, 02:36 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உலகளாவிய மக்கள் தொகையில் எட்டு பேரில் ஒருவர் உடல் பருமனுடன் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

கடந்த 2025ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கைப்படி, 1990ஆம் ஆண்டு முதல் உலகளவில் பெரியவர்களிடையே உடல் பருமன் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

அதுவே இளம் பருவத்தினர் மத்தியில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டில், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 890 மில்லியன் பேர் உடல் பருமனுடன் வாழ்கின்றனர். அதோடு, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 43% பேர் அதிக எடை கொண்டவர்களாகவும், 16% பேர் உடல் பருமனுடனும் வாழ்வதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

அளவுக்கு மீறிய எடையுடன் இருப்பது அல்லது உடல் பருமனுடன் இருப்பது என்பது உணவுமுறை, உடல் செயல்பாடு ஆகியவற்றின் சமநிலையின்மையால் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உடல் பருமன் என்பது சுற்றுச்சூழல், உளவியல்-சமூக காரணிகள், மரபணு மாறுபாடுகள் ஆகியவற்றின் காரணமாக ஏற்படக்கூடிய ஒரு பன்முக நோய் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

இதன்படி பார்க்கும்போது, கடந்த முப்பது ஆண்டுகளில் உடல் பருமன் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மக்கள் அதற்கான மாற்றைத் தேடி சில உணவு முறைகளை முயல்வது வழக்கமாகியுள்ளது.

அதில் ஃப்ருடேரியன் (fruitarian) என்றழைக்கப்படும் ஓர் உணவுமுறையும் அடங்கும். அதாவது, பச்சைப் பழங்கள், நட்ஸ், விதைகள் ஆகியவற்றை மட்டுமே உணவாக உட்கொள்ளும் உணவுமுறை.

பழங்களை மட்டும் உண்ணும் உணவு முறை உடலுக்கு நல்லதா?

இந்த உணவுமுறை உடல் எடையைக் குறைப்பதில் பங்கு வகிப்பதாகப் பலரால் கருதப்பட்டாலும், அது உண்மையில் ஆரோக்கியமானதா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த உணவுமுறையைப் பின்பற்றுவதால் உடல் எடை குறையும் என்பது உண்மைதான் என்றாலும் அது ஆரோக்கியமற்றது என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

ஃப்ருடேரியன் டயட்

பட மூலாதாரம்,Getty Images

அதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், "பழங்களை மட்டுமே உண்ணும் ஃப்ருடேரியன் டயட்டை பின்பற்றுவோருக்கு ஒரு நாளைக்கு 80 முதல் 90 சதவிகித கலோரி பழங்களில் இருந்தே கிடைத்துவிடுகிறது. பொதுவாகவே பழங்களில் கலோரி அளவு குறைவு என்பதால் ஒரு நாளைக்கு மொத்தமாகவே 1500 கலோரிகளை தான் உட்கொள்ள முடியும்.

இதன் விளைவாக கலோரி தட்டுப்பாடு ஏற்பட்டு எடை குறைய வாய்ப்புள்ளது. ஆனால் பழங்களை மட்டுமே உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும் வாய்ப்பு தடைபடுகிறது. இதனால், தசை இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது," என்று எச்சரித்தார்.

மேற்கொண்டு பேசிய மருத்துவர் அருண்குமார், "உடலுக்குத் தேவையான முக்கிய சத்துகளான இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா 3 போன்ற சத்துகள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகளும் இந்த உணவுமுறையைப் பின்பற்றுவதால் அதிகரிக்கிறது.

அதேபோல, பழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலில் ஃபிரக்டோஸ் சர்க்கரை அளவு அதிகமாகி டிரை கிளிசரைடு கொழுப்பையும் கல்லீரல் கொழுப்பையும் அதிகரிக்கச் செய்து, உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கும்" என்று விளக்கினார்.

உடல் எடையைக் குறைக்க இது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்று எச்சரிக்கும் அவர், பழங்களை எடை குறைப்புக்குத் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றாலும் அவற்றை மட்டுமே முழுமையான உணவாகப் பின்பற்றுவது அபாயகரமானது என்கிறார் .

ஃப்ருடேரியன் டயட்

பட மூலாதாரம்,Getty Images

பச்சைப் பழங்கள், நட்ஸ், விதைகள் ஆகியவற்றையே பெரும்பான்மையாகக் கொண்ட இந்த உணவுமுறையை முழுமையாக பின்பற்றினால் குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என்று பல்வேறு ஆய்வுகளும் சுட்டிக் காட்டுகின்றன.

அமெரிக்காவை சேர்ந்த லாப நோக்கமற்ற மருத்துவ அமைப்பான மாயோ கிளினிக்கின் கூற்றுப்படி, பிரத்யேக பழ உணவுகளில் புரதம், அத்தியாவசிய கொழுப்புகள், கால்சியம், இரும்பு, வைட்டமின் பி12 ஆகியவை குறைவாக இருப்பதால், தசை இழப்பும், நோய் எதிர்ப்பாற்றல் பலவீனமாதல் மற்றும் ரத்த சோகை ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.

விளையாட்டு ஊட்டச்சத்துக்கான சர்வதேச சங்கத்தின் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், குறைந்த புரதம் உட்கொள்ளுதல் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை பாதிக்கும் எனக் கூறுகிறது. இந்தக் காரணிகள் நீண்டகால ஆரோக்கியத்திற்கு சமச்சீர் ஊட்டச்சத்து மூலங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன.

சிக்கன், மட்டன் சாப்பிட்டால் தொப்பை வருமா?

முற்றிலும் பழங்களே அடங்கிய உணவுமுறை மீதான ஆர்வத்தைப் போலவே இன்று பலரிடமும் இருக்கும் மற்றுமொரு நம்பிக்கை சிக்கன், மட்டன் சாப்பிடுவதால் தொப்பை வருகிறது என்பதாகும்.

அதுகுறித்துப் பேசிய மருத்துவர் அருண்குமார், "சிக்கன், மட்டனை சரியான அளவில் எடுத்துக்கொண்டால், அவை உடல் எடையைக் குறைக்க உதவும்" என்றார்.

"அதிகப்படியான கலோரிகள், மாவுச்சத்து ஆகியவை இன்சுலின் சுரப்பை அதிகமாகத் தூண்டுவதால், உடலில் அவை கொழுப்பாகச் சேர்கின்றன. அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை அளவுக்கு மீறி உட்கொள்ளும்போது அவை வயிற்றைச் சுற்றி கொழுப்பாக சேர்கின்றன. ஆகவே, தொப்பைக்குக் காரணம் அதிக மாவுச்சத்து, அதிக கலோரி அளவு மற்றும் இன்சுலினை தூண்டும் வகையிலான உணவுகளை உட்கொள்ளுதல்தான்" என்று தொப்பை வருவதன் அறிவியல் பின்னணியை விளக்கினார்.

அதோடு, தேவையான அளவில் சரியான விகிதத்தில் மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி உணவுகளை எடுத்துக்கொண்டால், அது உடல் எடையைக் குறைப்பதற்கான சரியான உணவாக இருக்கும் என்று கூறிய அவர், "அவற்றுடன் சேர்த்து நாம் எந்த உணவை எடுத்துக்கொள்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்" என்றும் எச்சரித்தார்.

இறைச்சி உணவுகளுடன் கலோரிகள் அதிகமில்லாத ஆரோக்கியமான உணவைத் தேவையான அளவில் எடுத்துக் கொள்வது சிறந்த தேர்வாக இருக்கும் எனவும் அவர் பரிந்துரைத்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

உடல் எடையை குறைக்க பழங்களை மட்டுமே உண்ணும் 'ஃப்ருடேரியன் டயட்' சிறந்ததா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.