இன்று, ஈரான் மக்களின் சுதந்திரத்திற்காக போர் புரியும் இஸ்ரேல், அமெரிக்கா அன்று, எம்மினம் அழியும் போது தடுக்க வேண்டாம் குரலாவது கொடுத்ததா? எங்களை அழிப்பதற்கு ஆயுதம், ஆலோசனை, கடன் அளித்து, இலங்கை புலனாய்வுப்பிரிவினருடன் ஒத்துழைத்து, தகவல்களை அளித்து, நம் விடுதலை இயக்கம் அழிக்கப்படும்வரை உதவியது எவ்வாறு? ஏன் எமது சுதந்திரத்தை தடுத்தார்கள்? அப்போ அவர்களுக்கு தேவையான வளங்கள் நம்மண்ணில் இல்லை, இனிவருங்காலத்தில் இந்துசமுத்திரத்தில் தமது போர்கப்பல்களை நிறுத்த வேண்டுமெனில் அதற்கு இலங்கையரசு அனுமதி மறுத்தால் நமது ஜனநாயகம் பற்றியும் பேசுவார்கள்.
கடந்த காலங்களில் அரேபிய நாடுகளோடு கூடிக்குலாவும்போது அமெரிக்காவுக்கு இது தெரியவில்லையோ? இப்போ திடீரென்று என்ன கரிசனை வந்தது? அமெரிக்காவின் உண்மை நோக்கம் கண்டு, அவர்கள் விலகிக்கொள்வதால் இல்லாத பொய்களை பரப்புகிறார்கள். லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கிய அமெரிக்கா பின் கடாபிக்கு என்ன செய்தது? ஒசாமா பின்லேடனை வளர்த்ததே அமெரிக்கா, பின் எப்படி மாறியது? ஏன், அமெரிக்கா, இஸ்ரேலிடம் அணுஆயுதம் இல்லையா? அதையும் அழிக்கவேண்டியதுதானே. வெனிசுலாவை ஏன் இரண்டாக்கியது அமெரிக்கா? அவர்கள் தங்கள் புற்றுக்குள் இருந்தார்கள், அவர்களை வெளியே இழுத்து விட்டதே அமெரிக்காதான். இப்போ ட்ரம்ப் சொல்கிறார், ஈரானில் மத ஆட்சி நடந்தாலென்ன, ஜனநாயக ஆட்சி நடந்தாலென்ன அதுபற்றி கவலையில்லை, ஈரான் எங்களோடு இணைந்து செயற்படவேண்டும், முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிறார். இங்கே எங்கேயும் அவர் ஜனநாயத்தை பற்றியோ அணு ஆலை பற்றியோ குறிப்பிடவில்லை.
By
satan ·