Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிபொருள் நெருக்கடி: நான்கு நாள் வேலை வாரம் குறித்து அரசின் ஆலோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் நெருக்கடி: நான்கு நாள் வேலை வாரம் குறித்து அரசின் ஆலோசனை

Published By: Vishnu

16 Mar, 2026 | 04:49 AM

image

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மாற்று தீர்வாக வாரத்தில் நான்கு நாள் வேலை முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை (16) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசுத் துறைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படக்கூடியதால், அதற்கான பொருத்தமான பரிந்துரைகளையும் முன்வைக்குமாறு துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/241061

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறைக்கப்படும் வேலை நாட்கள்?

Mar 16, 2026 - 11:22 AM

குறைக்கப்படும் வேலை நாட்கள்?

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையிலான நேற்று (15) இரவு 8 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் எரிபொருள் தொடர்பில் சிக்கல் நிலைமைகள் எழுந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள்களை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்கி, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறை (QR Code) தீவகப்பகுதி மக்கள் பயன்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகள், நீண்ட தூரங்களுக்கு பயணிக்கும் பாரஊர்திகளுக்கான எரிபொருள் விநியோக பொறிமுறைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம், கடற்றொழில் போன்ற துறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்தத் துறைகளில் தற்போதைய எரிபொருள் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதனைவிட டிஜிட்டல் குறியீட்டு முறை(QR Code) அறிமுகத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவதுடன், எரிபொருளுக்காக நீண்ட வரிசை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை அந்தந்த பிரதேச செயலாளர்கள் மட்டத்தில் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாறப்பண, பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய முகாமையாளர் எஸ்.சிவகரன், பிரதேச செயலாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கியமையால் , எரிபொருள் களஞ்சிய வசதிகள் கூட நாட்டில் இல்லை. அதனால் இருக்கிற எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவே QR மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகத்தில் தற்போது அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. மத்திய கிழக்கின் போர் நிலைமை காரணமாக தற்போது ஈரான் வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் குதங்கள் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன,

இதனால் உலகில் எண்ணெய் விலை கடுகதி வேகத்தில் உயர்ந்து செல்கிறது. 68 டொலராக இருந்த எண்ணெய் விலை தற்போது 100 டொலருக்கும் அதிகமாகி உள்ளது. இதனால், சுவிஸ், அமெரிக்கா, கனடா பிரான்ஸ் என எல்லா நாடுகளிலும் எரிபொருள் விலையேற்றம் காணப்படுகிறது.

இலங்கையை பொறுத்த வரைக்கும், மே மாதம் வரைக்கும் தேவையான எரிபொருளே உள்ளது. எரிவாயும் அப்படித்தான்.

எமது நாட்டை பொறுத்த வரைக்கும் எரிபொருளை களஞ்சியபடுத்த போதிய அளவு களஞ்சிய வசதிகள். இல்லை. 38 நாட்களுக்கு மேல் களஞ்சியப்படுத்தி வைக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது,

கடத்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கி உள்ளனர். அவர்களால் எரிபொருள் உள்ளிட்டவற்றை களஞ்சிய படுத்தி வைக்க கூடிய பெரியளவிலான களஞ்சிய சாலைகளை கூட அமைக்க முடியவில்லை. அவர்களின் தோல்வியே இன்று நாட்டு மக்களை வாட்டுகின்றது.

தற்போது மே மாதம் வரைக்குமான எரிபொருள் கையிருப்பில் உள்ளமையால் அவற்றை சிக்கனமாக பயன்படுத்தவே QR பொறிமுறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்.

கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு, அவர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்களுக்கும் தேவையான எரிபொருளை விநியோகிக்க விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmmsrnbrg0003356pvrf83mgv

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.