Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புற்றுநோயால் போராடும் குழந்தைகளுக்கு 1996 உலகக்கிண்ண வீரர்கள் இணைந்து நம்பிக்கையை விதைத்த சிறப்பு நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோயால் போராடும் குழந்தைகளுக்கு 1996 உலகக்கிண்ண வீரர்கள் இணைந்து நம்பிக்கையை விதைத்த சிறப்பு நிகழ்வு

18 Mar, 2026 | 10:35 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு )

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்ட 1996 உலகக்கிண்ண வெற்றியின் 30ஆம் ஆண்டு நினைவாக, சிறப்பு நினைவுவிழா ஒன்று செவ்வாய்க்கிழமை (17) மஹரகமவில் அமைந்துள்ள Indira Cancer Trust வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு Sri Lanka Cricket Foundation மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் இணைப்பில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

1996 உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்ட அணியின் முக்கிய வீரர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, சமிந்தவாஸ், ரொஷான் மஹாநாம, உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டதுடன் நவீன் திஸாநாயக்க தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, 1996 உலகக்கிண்ணத்தை (World Cup Trophy) பொதுமக்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டது.

இதன் மூலம் குழந்தைகளும், அவர்களின் குடும்பத்தினரும் அந்த வரலாற்றுச் சாதனையின் சின்னத்தை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றதுடன், அவர்களின் மன உறுதியும் உற்சாகமும் உயர்ந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் போது, 1996 உலகக்கிண்ண அணியின் வீரர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நினைவுவிழாவுடன் இணைந்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் Sri Lanka Cricket Foundation மற்றும் Indira Cancer Trust ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது.

2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை, புற்றுநோய் மற்றும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மருத்துவ உதவி, மனநலம் சார்ந்த ஆதரவு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கி வருகிறது.

அதேபோல், 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அறக்கட்டளை, விளையாட்டு வளர்ச்சியுடன் சமூக நலத்திட்டங்களிலும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

இந்த நிகழ்வு, 1996 உலகக்கிண்ண வெற்றியின் பெருமையை நினைவுகூருவதோடு, மனிதநேயப் பணிகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியதாக கருதப்படுகிறது.

f467a5da-fbd0-440b-b013-07b63381ad21.jpg

0509acac-b293-457e-9425-898c98f062c3.jpg

1afca561-2289-4a0c-bf1b-c273a54812be.jpg

06783d84-aa41-4975-873c-3fa49298b3c0.jpgda698c1c-0db8-4afc-a01b-b32b1249eaa2.jpg

https://www.virakesari.lk/article/241260

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.