Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2026-03-19-at-18.07.42-1.

உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி.

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி’ எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து இன்று (19) காலை கீழே விழுந்து ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த போது பல மணிநேர தேடுதல் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அவர் பாதுகாக்க மீட்கப்பட்டார் என ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குழு இன்று நுவரெலியா ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் பிரதான பாறையைப் பார்வையிட வந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி செல்பி’ எடுக்கச் முயன்ற போது தவறி கீழே விழுந்து ,ஒரு கிளையில் தொங்கிக்கொண்டிருந்தபோது ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவைச் சேர்ந்த ஒரு சாரதி ஒருவர் பார்த்தவுடன் ஆபத்தைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி தொங்கிக்கொண்டிருந்த கிளையிலிருந்து அந்தப் பல்கலைக்கழக மாணவியை இழுத்து சரிவில் இருந்த ஒரு பாறையின் மீது அமர வைத்து, அம் மாணவியை மீட்க பட்டிப்பொல பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியைக் கோரினார்.

WhatsApp-Image-2026-03-19-at-18.07.41.jpeg?resize=600%2C338&ssl=1

அதன்படி, நுவரெலியாவில் உள்ள இலங்கை 3வது சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த பல இராணுவ வீரர்கள், நுவரெலியா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பட்டிப்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கைக்குப் பின்னர் ஹோட்டன் சமவெளியில் கீழ் சரிவில் இருந்த ஒரு பாறையில் இருந்த பல்கலைக்கழக மாணவியை பாதுகாக்க மீட்டு, சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுத்ததாக ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார்.

https://athavannews.com/2026/1469276

  • கருத்துக்கள உறவுகள்

உலக முடிவு மலைத் தொடரில் 'செல்பி' எடுக்கச்சென்று தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவி பாதுகாக்க  மீட்பு

Published By: Digital Desk 3

20 Mar, 2026 | 10:56 AM

image

நுவரெலியாவில் அமைந்துள்ள ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் ‘செல்பி’ எடுக்க முயன்ற போது சுமார் 50 அடி உயரமுள்ள பாறையிலிருந்து தவறி விழுந்தார்.

வியாழக்கிழமை (19) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கீழே விழுந்த மாணவி மரக் கிளை ஒன்றில் தொங்கிய நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை கண்டு கொண்ட ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் சாரதி ஒருவர், தனது உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் கீழிறங்கி, கிளையில் தொங்கிக் கொண்டிருந்த மாணவியை மீட்டு அருகிலிருந்த பாறையில் அமர்த்தியுள்ளார். பின்னர் பட்டிப்பொல பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, இலங்கை 3வது சிங்கப் படைப்பிரிவு இராணுவத்தினர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பட்டிப்பொல பொலிஸார் இணைந்து மேற்கொண்ட பல மணி நேர மீட்பு நடவடிக்கையின் மூலம் மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

பின்னர் அவர் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்கா முகாமையாளர் மஞ்சுள மொனரதென்ன தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/241437

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.