Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முவாய் தாய் உலக சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர்களுக்கு 3 தங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முவாய் தாய் உலக சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர்களுக்கு 3 தங்கம்: நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

20 Mar, 2026 | 04:04 PM

image

தாய்லாந்தில் நடைபெற்ற 7ஆவது 'முவாய் தாய்' உலக சம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் உட்பட 5 வெற்றிக் கிண்ணங்களைச் (சம்பியன் பட்டிகள்) சுவீகரித்த இலங்கை வீரர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை நாடு திரும்பினர்.Geographic Reference

தாய்லாந்து முவாய் தாய் விளையாட்டுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி, அந்நாட்டின் பட்டாயா நகரில் கடந்த 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 11 வயதுடைய செஹாஸ் அகிசா, 10-11 வயதுப் பிரிவில் உலகச் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இவர் இந்தப் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகச் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையின் தேசியச் சம்பியனாகவும், கடந்த ஆண்டின் சிறந்த வீரராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், 14-15 வயதுப் பிரிவில் போட்டியிட்ட டில்லன் ஜூலியன் தனது பிரிவில் சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்தார். மேலும், தினெல் ஷமிக்க, இயன் அனுஹாஸ் மற்றும் இசுரு அமில ஆகியோரும் தமது திறமைகளை வெளிப்படுத்தித் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றிப் பதக்கங்களுடன் இன்று காலை நாடு திரும்பிய இந்த ஐவரையும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை முவாய் தாய் சங்க அதிகாரிகள், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

IMG-20260320-WA0039.jpg

IMG-20260320-WA0045.jpg

https://www.virakesari.lk/article/241464

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.