Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் - நாமல் ராஜபக்ஷ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் - நாமல் ராஜபக்ஷ!

Published By: Digital Desk 1

22 Mar, 2026 | 11:18 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தலா 20 மில்லியன் ரூபாய்களாகச் சேர்த்துக் கொண்டிருந்தால், அடுத்த ஜென்மத்திலும் அந்தத் தொகையை ஈடுகட்ட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகச் சந்தை விலையை விட 45 டொலர்கள் அதிக விலை கொடுத்து அரசாங்கம் தற்போது டீசலை இறக்குமதி செய்கிறது. நட்பு நாடுகளுடன் பேசி குறைந்த விலைக்கு எரிபொருள் பெறுவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மக்களின் தலையில் சுமையைத் திணித்துவிட்டு எம்மீது சேறு பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் தனது ஊழல்களை மறைக்க பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகளை அச்சுறுத்தி வாக்குமூலங்களைப் பெற்று வருகிறது. பொலிஸ் மா அதிபர் என்பவர் 'மாலிமாவ'வின் கட்டளைக்கு இணங்கச் செயல்படுகிறாரா அல்லது நாட்டின் சட்டத்தைப் பாதுகாக்கிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த காலத்தில் எமது அரசாங்கம் கொண்டு வந்த காற்றாலை மற்றும் எல்.என்.ஜி மின் திட்டங்களை இவர்கள் எதிர்த்தார்கள். அன்று அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று நாட்டு மக்களுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

அமெரிக்காவின் USAID போன்ற நிறுவனங்கள் பிராந்தியத்தில் ஆட்சி மாற்றங்களுக்கு நிதி வழங்கியதாக டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். இது ஒரு சர்வதேச இரகசியம். இவ்வாறான சக்திகளின் தேவையை நிறைவேற்றவே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றின் பயனை அரசாங்கம் உடனடியாகப் பெற வேண்டும். குறிப்பாக துபாய் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வங்கிச் சேவைகளுக்கான சிறந்த மாற்றாக கொழும்புத் துறைமுக நகரை மாற்ற இதுவே சரியான தருணம்.Travel Guides & Travelogues

அரசாங்கத்தின் இயலாமையை மறைக்க தொடர்ந்தும் ராஜபக்ஷக்கள் மீது பழி சுமத்துவதை நிறுத்திவிட்டு, விவசாயிகளின் உரப் பிரச்சினை மற்றும் மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான தீர்வுகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/241620

  • கருத்துக்கள உறவுகள்

19?

39 minutes ago, ஏராளன் said:

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் - நாமல் ராஜபக்ஷ!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் - நாமல்

2 hours ago, goshan_che said:

19?

ராஜபக்ஷ!

large.IMG_0063.jpeg.c0293ee597278517295b

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.