Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்து கும்பலிடம் இருந்து சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மீட்பு - ஒருவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்து கும்பலிடம் இருந்து சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மீட்பு - ஒருவர் கைது

Published By: Vishnu

27 Mar, 2026 | 04:52 AM

image

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த கும்பலுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரான 37 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை வியாழக்கிழமை (26) இரவு மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரே யருடன் கைது செய்ததுடன் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்த சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மற்றும் ஸ்பிரே,மாத்திரைகள்  என்பவற்றை  மீட்டுள்ளதாக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.

IMG_1116.JPG

கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு  பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்தும். மற்றும் இளம்தாயின் 3 வயதும் 4 மாதம் கொண்ட சிறுமி வயல் பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.

WhatsApp_Image_2026-03-27_at_00.08.48__1

இச் சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி விசாரணை முன்னெடுத்தனர்.

WhatsApp_Image_2026-03-27_at_00.08.49.jp

இதன்போது வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய  பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பியார் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி, திருகோணமலை, வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் உட்பட 5 பேரை  24 மணித்தியாலத்தில் பொலிசார் கைது செய்தவுடன் இரு ஆட்டோக்கள் கார் ஒன்று மற்றும் கோடாரி, கூரிய ஆயுதங்களை மீட்டனர்.

IMG_1118.JPG

இதில் கைது செய்யப்பட்ட இவர்களை கடந்த 22 ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது  தங்க ஆபரண கடைகளின்  உரிமையாளர் இருவரையும் 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொலை கொள்ளையில் ஈடுபட்டிருந்த  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரையும்  72 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு செய்வதற்கு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் நேரடி வழிகாட்டலில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களிடம்  தொடர் விசாரணைகளின் போது   கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டின் பகுதியில் நிலத்தில் மயக்க மருந்துக்களை புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரேயர் வழங்கி வைத்துள்ளதாகவும் வெளி மாவட்டத்தில் உள்ள ஒருவரிடம் இருந்து இந்த மயக்க மருந்தை  பல ஆயிரம் ரூபா பணம் செலுத்தி பெற்றுக் கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

IMG_1111.JPG

இதையடுத்து நேற்று வியாழக்கிழமை இரவு கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டை முற்றுகையிட்டு நிலத்தில் இரண்டு அடி ஆழத்தில் பாதுகாப்பாக பொலித்தீன் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த  வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சையின் போது  பாவிக்கப்படும் 6 மயக்க மருந்துகளை கொண்ட போத்தல் மற்றும் மயக்க மாத்திரைகள், மருந்துகள் மீட்டனர்.

அதனை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்டு 37 வயதுடைய ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை கைது செய்ததுடன் அவரது வீட்டின் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த  கொள்ளையர்கள் வழங்கிய மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரேயர் போத்தல் ஒன்றையும் குற்ற செயலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஒன்றையும் மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்தக் கொடூரச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிப்பதுடன் இக்கொலைகளின் பின்னணியில் உள்ள முழுமையான வலையமைப்பை கண்டறியும் நோக்கில் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றதுடன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் வெள்ளிக்கிழமை (27) மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/242030

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் கடத்தல், கொள்ளை : மயக்க மருந்து தெளிப்புக் கருவியுடன் முச்சக்கரவண்டி சாரதி கைது!

27 Mar, 2026 | 04:07 PM

image

மட்டக்களப்பு பகுதியில் பெண்களைக் கடத்தி, அவர்களின் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டு பாழடைந்த கிணற்றுக்குள் வீசிய சம்பவம் தொடர்பில் மயக்க மருந்து தெளிப்புக் கருவியுடன் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர்கள் உட்பட அறுவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களைக் கடத்தி, அவர்களுக்குச் சத்திர சிகிச்சைகளின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளைத் தெளித்து மயக்கமடையச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தக் கொள்ளைக் கும்பலுடன் தொடர்புடைய 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து மயக்க மருந்தைத் தெளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மயக்க மருந்து தெளிக்கும் கருவி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு நகருக்குச் சென்ற இளம் தாய் ஒருவரும் அவரது இரண்டரை வயது குழந்தையும் காணாமல் போயிருந்தனர்.

மறுநாள் குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார். அவரது குழந்தை அருகிலுள்ள வயல்வெளி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதுடன், இதன்போது, அதே கிணற்றுக்குள் இருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

இந்த கொலை, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டதன் பின்னர், சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய இரண்டு நகைக்கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 முச்சக்கரவண்டிகள், 1 கார், கோடரி மற்றும் கூர்மையான ஆயுதங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, ஆறாவதாக மேற்குறிப்பிட்ட முச்சக்கரவண்டி சாரதியும் கைதாகியிருக்கிறார்.

இந்நிலையில், மட்டக்களப்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/242093

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு கடத்தல் விவகாரம்: மயக்க மருந்து விநியோகித்தவருக்கு தடுப்புக்காவல்

மட்டக்களப்பு கடத்தல் விவகாரம்: மயக்க மருந்து விநியோகித்தவருக்கு தடுப்புக்காவல்

மட்டக்களப்பில் பெண்களைக் கடத்தி, மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையிட்ட பின் கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழாவது சந்தேக நபரை, எதிர்வரும் 02ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், கொழும்பு - வத்தளைப் பகுதியில் வைத்து இந்த 7ஆவது சந்தேக நபரை கைது செய்தனர். குறித்த நபர் இந்த கடத்தல் கும்பலுக்கு மயக்க மருந்துகளை விநியோகித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

விசாரணைகளின் பின்னர், கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் சந்தேக நபர்கள் நேற்று மாலை (30) மட்டக்களப்பு நீதிவான் நீதமன்ற நீதிபதி அ.தர்சினியின் அறையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது முதலாவது மற்றும் ஏழாவது சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். 

பொலிஸாரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஏழாவது சந்தேக நபரை ஏப்ரல் 02ஆம் திகதி வரை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். 

கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடனும், காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர். 

அத்துடன் அந்த இளம் தாயின் 3 வயது சிறுமி வயல் பகுதியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் கண்காணிப்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதன் விளைவாக, காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், அவர்களின் உறவினர், கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய இரு நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். 

தற்போது 7ஆவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

https://adaderanatamil.lk/news/cmne27vza0007356p5d6v6mnr

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் ; உயிர் தப்பிய பெண் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்.

Published By: Digital Desk 3

31 Mar, 2026 | 05:04 PM

image

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்டு, நகைகள் கொள்ளை இட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்ட பெண் தனக்கு நடந்த அவலத்தை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது,

சம்பவ தினத்தன்று காலை 10.30 மணியளவில் மட்டக்களப்புக்கு செல்வதற்காக வவுணதீவு சந்தியில் என் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தேன். அப்போது அங்கு வயோதிபப் பெண்ணொருவரும் காத்திருந்தார். அந்த நேரத்தில் ஒரு முச்சக்கரவண்டி வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டனர். நான் நகரத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறியபோது, 100 ரூபாய் என்ற கட்டணத்தில் ஏறுமாறு கூறினர். நான் குழந்தையுடன் ஏறினேன்; அங்கு இருந்த வயோதிபப் பெண்ணும் ஏறினார்.

முச்சக்கரவண்டி நகரை நோக்கி சென்றபோது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அருகில் அந்த வயோதிபப் பெண் இறங்கினார். பின்னர், “நீங்கள் எங்கு செல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டபோது, நான் புடவைக்கடை வீதியில் இறக்குமாறு கூறினேன். அங்கு சென்றபின், முச்சக்கரவண்டியில் இருந்த பெண் தானும் சாறி வாங்கச் செல்ல இருப்பதாகவும், தனது வேலை முடிந்ததும் மீண்டும் அதே வண்டியில் சேர்ந்து செல்லலாம் என்றும் கூறினார். மேலும், “சத்தர் கடையடியில் காத்திருப்பேன்” என்றும் தெரிவித்தார்.

அதன்படி, நான் குழந்தையுடன் நகைக்கடைக்கு சென்று ஈடு வைத்திருந்த தங்க மோதிரத்தை 24,000 ரூபாய் செலுத்தி மீட்டுக்கொண்டேன். பின்னர் அந்த பெண் கூறிய இடத்திற்கு சென்றபோது, அவர் முச்சக்கரவண்டி சாரதியை தொலைபேசியில் அழைத்து, மணிக்கூட்டு கோபுரம் பகுதியில் வருமாறு கூறினார்.

நானும் அந்த பெண்ணும் அங்கு சென்று மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏறினோம். அதன் பின்னர் பொதுசந்தை வீதியில் சென்று வண்டியை நிறுத்திய சாரதி, சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து வவுணதீவு நோக்கி பயணித்தார்.

வலையிறவு பாலம் அருகே சென்றபோது, அந்த பெண் மூன்று ஜூஸ் பாட்டில்களை எடுத்தார். எனக்கும் என் குழந்தைக்கும் பச்சை நிற ஜூஸ் கொடுத்து, எனக்கு விளாம்பழ ஜூஸ் வழங்கினார். அதை நான் குடித்தேன். அதன் பின்னர் வவுணதீவு சந்தியில் அந்த பெண் இறங்கினார்.

அதன்பின், தாள் கத்தியுடன் ஒரு இளைஞன் முச்சக்கரவண்டியில் ஏறினார். நான் இதைப் பற்றி கேட்டபோது, “மாட்டுக்கு புல் வெட்டச் செல்கிறார்” என்று கூறினர். நான் என்னை தாண்டியடியில் இறக்குமாறு தெரிவித்தேன். ஆனால், முச்சக்கரவண்டி வேறு பாதையில் பாவற்கொடிச்சேனை நோக்கி சென்றது. நான் காரணம் கேட்டபோது, அந்த இளைஞனை இறக்கிவிட்டு என்னை விடுவதாக கூறினர். அடுத்த சில நிமிடங்களில் நான் மயக்கமடைந்தேன்.

நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, நான் நீரில் மூழ்கியிருந்தேன். மேலே பார்த்தபோது வானம் தெரிந்தது. "வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டதா? ஏன் வானம் தெரிகிறது?" என்று குழப்பமடைந்த நிலையில், தப்பிப்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தேன்.

இரண்டு மூன்று முறை நீரில் மூழ்கி எழுந்த பின், "அம்மா, அம்மா" என்றும் எனது கணவரைப் பெயரிட்டும் சத்தமிட்டேன். "மீன்பிடிக்கச் சென்றவர் இவ்வளவு நேரமாக என்ன செய்கிறீர்கள்?" என்று கத்தினேன். அதன் பின்னரே எனது பிள்ளையைத் தேடி அலறினேன்.

அப்போது யாரோ ஒரு சிலர் வந்து எனது கையில் கயிற்றைக் கொடுத்து என்னைக் காப்பாற்றினார்கள் என தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் ; உயிர் தப்பிய பெண் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.