Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23-649a73eeaa0f3.jpg?resize=600%2C375&ss

பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்பவரை , மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2026/1470794

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcQVuU3jM_dd-zc9pAeh1ZS

659873839_1490929802488720_3421987104944

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக... ராஜ வாழ்க்கை, வாழ்ந்த நான்...

இப்போ பிச்சைக்காரன் மாதிரி இப்படியாயிட்டேன். 😂 🤣

நீண்ட நாட்களுக்குப் பின் வெளியில் வந்த பிள்ளையான் கைவிலங்குடன் அழைத்து வரப்பட்டு, மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக... ராஜ வாழ்க்கை, வாழ்ந்த நான்...

இப்போ பிச்சைக்காரன் மாதிரி இப்படியாயிட்டேன். 😂 🤣

என்னப்பா காதல் படத்தில வாற பரத் மாதிரி கிடக்கு..🤣

e28b7819-61b8-451e-bb7b-4e8f5f9dc667-dow

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் வழக்கு: நீதிமன்ற உத்தரவை சவாலிடுவேன் – கம்மன்பில

Published By: Vishnu

03 Apr, 2026 | 04:48 AM

image

(இராஜதுரை ஹஷான்)

பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன். விடுதலை புலிகள் அமைப்பு நடத்திச் சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்ப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் நேற்று வியாழக்கிழமை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்னையானை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்ட விடயம் பொய் என்பது ஒரு வருடத்துக்கு பின்னர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவருடகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் வியாழக்கிழமை (2) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் மீது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை.

பிள்ளையான் விடுதலை புலிகளுக்கு எதிராக செயற்பட்டமை தவறு. இராணுவத்தில் இணையாமல் அவர் ஆயுதமேந்தி விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டமை சட்டவிரோதமானது என்றே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்தார்கள்.

அதேபோல் அவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பான விடயங்களும் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.

காணாமலாக்கப்பட்ட உபவேந்தர் விவகாரத்தில் பிள்ளையானை கைது செய்ய முடியாது. ஆகவே அவரை விடுதலை செய்யுமாறு நாங்கள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தோம். பிள்ளையான் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோரும் வரையில் பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன். விடுதலை புலிகள் அமைப்பு நடத்திச் சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்ப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/242607

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்னப்பா காதல் படத்தில வாற பரத் மாதிரி கிடக்கு..🤣

e28b7819-61b8-451e-bb7b-4e8f5f9dc667-dow

660459753_970575872579452_37414687680536

659118296_1240170201432782_7973292167678

663230063_970575919246114_61138014488750

தலைமயிர் கறுப்பாகவும், தாடி வெள்ளையாகவும் உள்ளது.

மறியலில்... தலைக்கு "டை" அடியும் நடக்குது போலுள்ளது. 😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

661744163_26829239193355958_868908195028

மாலை மரியாதை கோர்ட்டு சூட்டு என என்ன ஜாலியா வாழ்ந்த மனிசன்யா அவர்😌
பாவம் குளிக்கும்போதுகூட காதுல இருந்து Earbuds 🎧 ஐ கழட்ட மாட்டாரு🥲
அவரைப்போய்... 😂 🤣

Rajakulasingam Chandrakumar

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.