Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்தின் குரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரல் அன்சன்பாலசிங்கம் விடுதலை என்ற கட்டுரை தொகுதியின் முன்னுரையில் இவ்வாறு கூறியுள்ளார் இத்தொகுதியில் உள்ள கட்டுரைகள் பல்துறை சார்ந்தவை.அரசியல்,சமூகவியல்,

  • கருத்துக்கள உறவுகள்

அன்டன் பாலசிங்கம் விடுதலையின் வழிகாட்டி!

[saturday December 15 2007 07:42:46 AM GMT] [uthayan.com]

விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கத்தின் முதலாவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். பிரான்ஸிலிருக்கும் எழுத்தாளர் ஒருவர் மதியுரைஞர் பாலாவை நினைவு கூர்கின்றார்.

அன்ரன் பாலசிங்கம் மறைந்து ஓராண்டு; பூர்த்தியாகின்றது. எமது தற்போதைய அரசியற் சூழலில் இந்த இடைவெளியை நீ எப்படிப் பார்க்கிறாய்? என்று ஒரு தொலைபேசி உரையாடலின் இடையே அமெரிக்காவிலிருந்து ஒரு பேராசிரியர் நண்பர் கேட்டபோதுதான் எனக்கு அவரது மறைவு குறித்த ஞாபகப் பதிவுகள் மீண்டும் நீண்ட நாட்களின் பின் என் மனத்தின் ஆழத்தில் வந்து விழுந்தன...

பொது வாழ்விலும் சரி,தனி வாழ்விலும் சரி மனித வாழ்வில் சில முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்து நீண்ட காலங்கள் நகர்ந்த போதும் நேற்று நடந்தது போல இருக்கிறது என்று நாம் ஒவ்வொரு வரும் உணர்ந்து கொள்வதும் அதை வெளியாகக் கூறிக்கொள்வதும் வழமை. அந்த நண்பரும் மேற்கண்ட வாசகத்தை உதிர்த்து விட்டே ஆரம்பத்திலுள்ள கேள்வியைக் கேட்டிருந்தார்.

ஆனால், என்னளவில் அந்த உணர்வு முரண்பட்ட இரு வேறு தளங்களில் மனதில் இருப்புக்கொண்டுள்ளது. ஒன்று அவர் மறைந்து விட்டார் என்ற படிமம் என் மனதில் இல்லை. இரண்டு அவர் இறந்து நீண்டகாலங்களானது போன்ற ஒரு பிரமை. இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணானவை என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், என்னளவில் அதுதான் நிஜம்.

மனித ஆழ்மனத்தின் அவிழ்த்துப் பார்க்க முடியாத புதிர்களில் இதுவும் ஒன்றுபோல்தான் படுகிறது. இருந்தபோதிலும் என் மனதில் விழுந்திருக்கும் இம் முரண் சித் திரத்திற்கு ஒரு காரணம் இருக் கத்தான் செய்கிறது. எனக்குத் தெரிந்த வரையில் திருமதி அடேல் பாலசிங்கம் தவிர்ந்து இன்றுவரை அவருடன் தினமும் உரை யாடிக்கொண்டிருக்கிற ஒரு நபர் நானாகத்தான் இருப்பேன் என எண்ணுகிறேன். இந்தக் கூற்று எந் தளவு தூரம் சரி என்று எனக்குத் தெரியாது. ஆனால் மேற்படி முரண் சித்திரத்திற்கு இதுதான் காரணம் என நினைக்கிறேன்.

ஏனெனில் அவரை மையப் ;படுத்தி கடந்த ஒரு வருடங்களாக சுமார் 2500 பக்கங்களில் ஒரு பிரதியை உருவாக்கி முடித்;திருக் கிறேன். இந்த உறவுதான் தின மும் அவருடன் என்னை ஊடாட வைத்திருக்கிறது. அப்பிரதியாக் கத்தின் போது என்மனதில் மாறி மாறி விழுந்த சித்திரங்கள்தான் என் அகவுலகத்தில் மேற்படி முரண் படிமாக விழுந்தது

போலும்... ஒரு தடவை தொலைக் காட்சிப் பேட்டி ஒன்றில் உதயன; - சுடர் ஒளி ஆசிரியர் வித்தியா தரன் அன்டன் பாலசிங்கம் அவர் ;களின் மறைவு குறித்துப் பேசும் போது அவருக்கும் எனக்குமான உறவு தந்தை - மகன் உறவாக இருந்தது என்று குறிப்பிட்டிருந் தார்.

இந்த ஒரு வருட இடைவெளியை அடுத்து அவர் தமிழீழ தேசத்தின் குரல் என்பதையும் தாண்டி தனிப் ;பட்ட முறையில் அன்டன் பாலசிங் கம் அவர்களிற்கும் எனக்குமான உறவு எத்தகையது என்று யோசித் துப் பார்க்கிறேன். அது ஒரு வகை யில் குரு - சிஷ்யன் உறவு என்று இப்போது தோன்றுகிறது.

ஏகலைவன் என்ற ஒரு புரா ணப்பாத்திரம் துரோணரை மன தளவில் குருவாக வரித்துக் ;கொண்டு வில்வித்தையைக் கற்றுத் தேர்ந்தது போல் அன்டன் பாலசிங்கம் அவர்களை நான் குருவாக வரித்துக் கொண்டு யாரும் பயணிக்கத் தயங்கும் அச்சமுறும் ஒரு விதமான தத்துவ உலகத் துக்குள் சஞ்சரித்துக் கொண்டிருக் கிறேன்.

அந்த உலக்கத்தினுள் மூழ்கி எழுந்து என்னை நானே தேடிக்கொண்டிருக்கிறேன். ஒரு வழிகாட்டியைப்போல் விடு தலையின் வழி வெளிப்பட்ட அன்டன் பாலசிங்கம் அவர்கள் அந்த உலகத்தில் என்னுடன் சேர்ந்து என் கைகோர்த்து என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார். முடிவற்ற தேடலாக அது நீண்டு செல்கிறது.

அன்டன் பாலசிங்கம் அவர்கள் இறப்பதற்கு முன்னான கடந்த ஐந்து வருடங்களும் இந்த ஒரு வருட காலப் பகுதியும் தமிழீழ வரலாற்றின் பெறுமதி வாய்ந்த நினைவுப்பகுதிகளுக்குரியவை. சமாதானத்தின் மூலம் ஐந்து வருடங்களை வீணடித்து விட் டோம், விடுதலைப்போர் பின் ;னோக்கிப் போய் விட்டது போன்ற ஒற்றைச் சொல்லாடல்களின் மூலம் இந்தக் காலப்பகுதியை எதிர் கொள்பவர்களுக்கு இது அதிர்ச்சி pயாகத்தான் இருக்கும்.

தற்போதைய அரசியல,; கள நிலவரங்களை வைத்து தமிழ்ப் ;பொதுப் புத்தியில் உறைந்து போயி ருக்கும் இந்தப் படிமத்தை எதிர் கொள்வதிலுள்ள சவால் நமக்குப் புரிகிறது. ஆனால் இந்;தக் காலப் ;பகுதியின் கனதியையும், கனபரி மாணத்தையும் சிறிது கால நகர்வில் வைத்துத்தான் புரிந்துகொள்ள நேரிடும்.

அன்டன் பாலசிங்கம் அவர் கள் பிரித்தானியாவிலிருந்து தமி ழகம் சென்று தேசியத்தலைவர் பிரபாகரனுடன் இணைந்து கொண் டதிலிருந்து தான் மரணிக்கும் வரை படைத்துறை மயப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட் ;டத்திற்கு ஓர் அரசியல் முகத்தை தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

இந்த அடிப்படைப் புரிதலின் அடிப்படையிலேயே அவரது விடுதலைப்பணியையும் மேற்படி காலப்பகுதியின் முக்கியத்துவத் தையும் உணர்ந்து கொள்ளலாம்.

ஏனெனில் 2001 இல் சர்வதேச அனுசரணையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தான நிகழ்வானது, நாம் இப்போது சந் தித்திருக்கும் சிக்கல்களையும், தலையீடுகளையும், தடைகளை யும் தாண்டி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சர்வதேசத் தளத்தில் ஒரு பன்முக அடையா ளத்தை கொடுத்ததென்றால் அது மிகையல்ல. அதை தன்னளவில் முடிந்தவரை சாத்தியப்படுத்திய வர் அன்டன் பாலசிங்கம் அவர்கள்.

இராணுவமயப்பட்டிருந்த புலிகளுக்கு வெள்ளெயடித்து சர்வதேசம் எங்கும் அழைத்துச் சென்றார். சர்வதேச அரசியல் தளங் களின் இராஜதந்திர நகர்வுகளை, மதியூகங்களை அந்தத் தளத்தில் வைத்தே அவர்களுக்குக் கற் பித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைப் பொறுத்தவரை பாலசிங்கம் அவர்கள் தனது பணியை முழுமையாக செய்து விட்டார் என்றே கூறவேண்டும். ஏனெனில் தனது அரசியல் ஆளுமை முழுவதையும் போராளிகளுக் குள் இறக்கி வைத்து விட்டார் என்றே கூறலாம். எவ்வாறெனில் அவர் சுகவீனமுற்று கலந்து கொள் ளாத ஜெனிவாப் பேச்சுபோது மறைந்த அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் தனது குழுவை வழிநடத்திய விதமும் அங்கு அவர் ஆற்றிய உரையின் வீச்சும் மேற்படி சொல்லாடலுக்கு ஒரு சோற்றுப் பதம். இந்த இடத்தில்தான் பால சிங்கம் அவர்களின் பன்முக ஆளு மையை நாம் உய்ந்துணரமுடியும்.

கடந்த மாவீரர்நாள் உரையில் தேசியத்தலைவர் என்ன சொல் லப்போகிறார் என்று எல்லோரும் ஆருடம் கூறியிருந்த சமயம் எமக்கு மட்டும் அவரது உரையின் சாரம் எப்படி இருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தது. காரணம் நாம் தலைவரின் அடிமனத்தை அளந்து விட்டோம் என்ற பெருமை அல்ல. அன்டன் பாலசிங்கம் என்ற ஆளு மையைப் புரிந்ததால் வந்த தெளிவு அது.

ஏனெனில் அன்டன் பாலசிங் ;கம் அவர்கள் தமிழீழத் தேச நிர்மாணிகளில் ஒரு முன்னோடி. தேசத்தின் மதியுரைஞர் - கோட ;பாட்டாளர். எனவே அவரைப் புரிவ தென்பது தமிழீழ தேசத்தின் கோட் பாட்டை புரிதல் என்பதன் இன ;னொரு வடிவமாகும்.

கடந்த மாவீரர் நாள் உரை யின் சுருக்கத்தை ஒற்றைச் ;சொல்லாடலில் விவரிப்பதென்றால் அதை கோபம் எனலாம். நான் எனது நூலில் அன்ரன் பாலசிங் ;கம் அவர்களின் கோபம் குறித்து பின்வருமாறு எழுதியுள்ளேன்.

அன்டன் பாலசிங்கம் கல கலப்பானவர் அதே சமயம் கண் ;டிப்பானவர் - கடும் கோபக்காரர். அன்ரன் பாலசிங்கம் என்ற மனி தரின் பின்னாலுள்ள கோபம் ஒரு தேசத்தின் கோபம் - விடுதலைக் ;காகப் போராடும் ஒரு இனத்தின் கோபம் - தமது நியாயங்கள் மறுக் கப்பட்டதனாலும் தாம் அங்கீகரிக்கப்படாமல் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதனாலும் பிறக் கும் ஓர் இனத்தின் வலியிலிருந்து எழும் பெருங்கோபத்தை அவர் ஏதோ ஒரு வகையில் அடையாளப் ;படுத்திக்கொண்டேயிருந்தார்.

அதுதான் அவர் மறைந்த போது தேசத்தின் குரல் ஆகியி pருந்தார். என்று எழுதியிருக்கிறேன். தலைவரின் உரையிலுள்ள கோபம் அது தலைவரினுடைய தல்ல. அது தேசத்தின் கோபம் - தேசத்தின் குரல்.

கடந்த மாவீரர் நாள் உரை தேசத்தின் குரலை ஆழமாக உள் வாங்கியதன் வெளிப்பாடே ஆகும்.

அன்டன் பாலசிங்கம் அவர்கள் தனது கல்விப்பின்புலமாக மார்க் ;சியத்தைக் கொண்டவர். அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மரணித்த போது அவருக்கான அஞ்சலிக் குறிப்பில் பின்வருமாறு எழுதி யிருந்தேன். அன்ரன் பாலசிங்கம் தமிழீழ தேசத்தை பிரபாகரன் தலைமை யில் கட்டி எழுப்புவதற்காக தனது மார்க்சிய கோட்பாட்டை கொஞ் ;சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டே வந்தார். இதன் உச்ச மாக 2004 ஆம் ஆண்டு லண் டனில் நடந்த மாவீரர் நாள் விளக்க உரையில் ஜே.வி.பி கட்சியை மார்க்சிய பூதங்கள் என்று வர்ணிக் கும் அளவிற்கு அது சிதைந்து போய் இருந்தது.

அதற்காக அவர் உண்மை யிலேயே முழுமையாக மார்க்சி யத்தை விட்டு விலகினார் எனப் பொருள் கொள்வது தவறானது. அவர் ஒரு சிற்பியின் நுட்பத்துடன் அதை அழகாகவே சிதைத்தார் என்பதுதான் உண்மை. அது தமிழீழ விடுதலைக்கான வடிவ மாகவும் இருக்கிறது. பிரபாகரனி யம் என்னும் வேறு ஒரு போராட்ட வடிவத்தை அடையாளப்படுத்த வும் செய்கிறது.

இது ஒரு வரலாற்றுப்பதிவு என் பதுடன் உலக விடுதலை தத் துவர்த்த முன்னோடிகளான சேகு வேரா- ப்ரான்ஸ் பனான்- அமில்கர் கப்ரால்- - ஜோன் போல் சார்த்ர் போன்றவர்களின் வரிசையில் கொண்டாடப்பட வேண்டியவர் களில் ஒருவராக அன்டன் பால சிங்கம் இருக்கிறார் என்பதையும் இது காட்டுகிறது. என்று எழுதியிருந்தேன்.

தொடர்ந்து, அன்டன் பாலசிங்கம் அவர்களை ஒரு சட்டகத்துக்குள் வைத்து நாம் மதிப்பிடக்கூடாது. அது நாம் அவருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகத்தான் இருக்கும். அவர் தமிழினத்திற்கு மட்டும் உரியவரல்லர். ஏனெனில் அவர் ஒரு விடுதலையின் வடிவம். அவர் தான் கற்ற தத்துவங்களையும் கோட் பாடுகளையும் வைத்து அடக் குமுறைகளுக்கு ஒடுக்குமுறை களுக்கெதிரான ஒரு வடிவத்தை தமிழீழ விடுதலையினூடாக முன் ;வைத்திருக்கிறார்.

எனவே இந்த விடுதலை வடி வம் உலகில் ஒடுக்கப்படும் அடக் கப்படும் வேறொரு இனத்திற்கும் பொருந்தும். ஆகவே இதை சரி யான முறையில் ஆய்வு செய்து எமது விடுதலையை வென்றெடுப் பதுடன் உலக பொது விதியா கவும் முன்வைக்க வேண்டும். அந்த ஆய்வு நிச்சயமாக உலகிற்கு ஒரு போராட்ட வடிவத்தை வழங் கும். அதுதான் எமது போராட் டத்தை விரைவுபடுத்துவதற்கான வழி. அது மட்டுமல்ல எமது விடு தலைக்கான வழியும் கூட அதுதான்.

என்று முடித்திருந்தேன். ஆனால் இந்த ஒரு வருட காலப்பகுதியில் எனக்குத் தெரிந்தவரை அன்ரன் பாலசிங்கம் குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. ஏன் இந்தத் தயக் கம் என்றும் புரியவில்லை. ஏற் கனவே எனது நூலில் இந்த இடை வெளி குறித்து நான் எழுப்பிய கேள்விகள் ஏராளம். அதை இங்கு பட்டியலிடமுடியாது. இது விடுதலை பற்றிய தெளிவான புரி தலின்மையைத்தான் காட்டுகிறது.

ஈழத்தமிழ்ச்சூழலில் அறிவு ஜீவிகளின் செயற்பாடு குறித்த மறுவிசாரணை கோரப்படும் இடம் இது. அன்டன் பாலசிங்கம் அவர் களைப் புரிதல் என்பது ஒரு தொடர் இயக்கம் என்பதுடன் எமது விடு தலையைத் தீவிரப்படுத்தலு மாகும். இனி வரும் காலங்களி லாவது பல்கலைக்கழக சமூகங் கள், மற்றும் அறிவுஜீவிகள், படைப் பாளிகள் அன்டன் பாலசிங்கம் குறித்த - அவரது தத்துவ அடை யாளம் குறித்த - அவரது அரசி யல் பன்முகம் குறித்த ஆய்வு களை திறந்த ஆரோக்கியமான உரை யாடலை தொடங்க வேண்டும் - அதை நீடித்துச் செல்லவேண்டும்.

இதுதான் நாம் அவருக்குச் செய்யும் உண்மையான - நிஜ மான அஞ்சலியாகும்.

கடந்த ஒரு வருடமாக அன்டன் பாலசிங்கம் அவா ;களைப்பற்றி (குறிப்பாக அவரது விடுதலை நூல்) ஆராய்ந்தவன் - எழுதி யவன் என்ற அடிப்படையில் நான் அடைந்த உணர்வுகள் சொல்லில் வடிக்க முடியாதவை. ஒவ்வொரு முறையும் அவரை எழுத முற்பட்டு தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. பல சமயங்களில் அவ ரது பன்முக ஆளுமை என்னை தீயின் கங்கு களாய் தீண்டும். பொசுங்கிப் ;போய் விடுவேனோ என்று கூட அச்சம் கொண்டிருக்கிறேன். ஆனால் பல தருணங்களில் அந்த வெப ;பம் ஒரு தாயைப் போல் அணைப ;பதையும் உணர்ந்திருக்கிறேன். அந்த உணர்வினூடாகவே அவரையும் விடுதலையின் தொடர்ச்சி யையும் எழுதி முடித்தேன். சேயைப் பிரசவித்த தாயின் திருப்தியும் சந் தோசமும் எனக்கு...

நான் பல முறை கூறியிருக்கி றேன். நான் எழுத வந்ததற்குக் கார ணமே எனது மனைவி கிருஸ்ண ரஜனிதான். அவள் என்னை எனக்கே அடையாளங் காட்டியவள். என் னுள் நீக்கமற நிறைந்திருக்கும் அவளைப்பற்றி அண்மையில் ஒரு பிரதியை உருவாக்கியிருந்தேன். எனது எழுத்துக்கள், படைப்புக் கள் எல்லாம் அவளுக்கே அர்ப் ;பணிக்கப்படுபவை.

அவளைப் பற்றிய படைப்பை யாருக்கு அர்ப்பணிப்பதென்பதில் எனக்கு வேறு கருத்தே இருக்க வில்லை. அது அன்டன் பாலசிங் கம் அவர்களுக்குத்தான்...

ஏனெனில் நான் அவரிடமி ருந்து பெற்றுக்கொண்டது ஏரா ளம். அன்டன் பாலசிங்கம் அவர் களின் படத்துடன் அந்த நூலில் இடம்பெறவிருக்கும் அர்ப்பணிப்பு வாசகம் இதுதான்:

என்னை எனக்கே அடையா ளங் காட்டியவள் குறித்த இந்த நினைவுப் பதிவுகள் அதன் எல் லையை விரிவாக்கம் செய்தவருக் காக.....

இந்த தேசத்திற்காக தனது கனவுகளை தின்ற அந்த மகத ;தான மனிதருக்கு விளிம்புநிலை மனிதன் ஒருவனின் சிறு காணிக்கை அது. இந்த ஒரு வருட நினைவில் இதை தெரியப்படுத்துவதில் பெரு மையடைகிறேன்.....

பிரான்ஸிலிருந்து

பரணி கிருஷ்ணரஜனி

http://tamilwin.net/article.php?artiId=573...;token=dispNews

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் வெட்டிய குழிகள் எங்கணும் விடுதலை அரசியலை விதைத்த மதியுரைஞர் போராட்டத்தின் பரிமாணத்தின் கருத்து நிலையை உலகிற்கு எடுத்துரைத்த தேசத்தின் குரல் பாலா

[saturday December 15 2007 07:45:09 AM GMT] [uthayan.com]

சிங்களம் வெட்டிய குழிகள் எங்கணும் விடுதலை அரசியலை விதைத்த மதியுரைஞர் போராட்டத்தின் பரிமாணத்தின் கருத்து நிலையை உலகிற்கு எடுத்துரைத்த தேசத்தின் குரல் பாலா

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த அரசியல் போராளியாக, மதியுரைஞராக, தத்துவாசிரியராக விளங்கி, தமிழர் போராட்ட வரலாற்றில் உயர்ந்து நின்றவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்.

ஈழத்தமிழர்களின் வன்முறைப் போராட்டத்திற்கு நியாயம் காட்டி அரசியல் வடிவம் கொடுக்கும் பணியைத் தமது தோள்மீது சுமந்தவர் பாலா.

அவரது முதலாவது நினைவு தினம் இன்று டிசெம்பர் பதினான்காம் திகதியாகும்.

அவர் குறித்த ஒரு பார்வை இக்கட்டுரை.

ஓராண்டுகாலம் நொடிப்பொழுதில் கரைந்து விட்டது.

இக்கால இடைவெளியில் எத்தனையோ மாற்றங்கள் கடுகதியில் நிகழ்ந்துவிட்டன.

இன்னொரு அரசியல் முகத்தையும் அண் மையில் இழந்து தவிக்கிறது தமிழர் தேசம்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தமிழின விடுதலைப் போராட்டப் பங்களிப்புக் குறித்து மீள் பார்வை கொள்வது அவரின் ஓராண்டு நினைவு நாளான இக்காலத்தில் பொருத்தப்பாடாக அமையும்.

விடுதலைப் பாதையில் தடையரண் களும் அழிவுக் கிருமிகளும் உட்புகுந்து வேரழிக்கச் சன்னதம் கொண்ட வேளையில், தனது மார்க்சிசப் பார்வை விரவிய அறிவாயு தத்தைக் கையிலெடுத்துச் சமராடிய பெரு மகன் இவர். எதிரியானவன், தலையைத் தட வியபடி முதுகிற்குப் பின்னால் வெட்டிய குழிகளுக்குள் விடுதலை விதைகளை விதைத்து தனது அறிவாற்றலை உரமாக்கி நீரிழிவு நோய் வாட்டிடும் போதும் அவ்விடு தலை விருட்சத்திற்கு நீர் பாய்ச்சிய அரசியல் சமராடி பாலா அண்ணர்.

பேச்சு மேடையில் விடுதலைப் புலி களுக்கு வீசப்பட்ட சர்வதேச வலையை இலாவகமாக கழற்றி எறிந்த சாணக்கியமே சர்வதேசத்தை நோக்கிய சுயநிர்ணய உரிமை அறைகூவலிற்கு அத்திவாரமிட்டது.

தனியரசுக்கு மாற்றீடான மறுபக்க இணைவுச் சாத்தியங்களை சமஷ்டி என்றும், உள்ளக சுயநிர்ணயம் என்றும் நடைமுறை யிலுள்ள கோட்பாடுகளை எடுத்துக் கூறியும் சிங்களத்திற்கு எதுவுமே புரியவில்லை.

இயல்பு வாழ்வு திரும்பவேண்டுமென மனித உரிமை பற்றிக் கூறியும் சர்வதேசத்திற்கு விளங்கவில்லை.

உலகத்து மக்களுக்கு ஏதோவொரு வகையில் தமிழர் தரப்பின் அரசியல் அபிலாஷைகள் பேச்சுத் தளத்தினூடாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்ற நம்பிக்கை உண்டு.

பயங்கரவாதமென்ற போர்வைக்குள் மூடி மறைக்கப்பட்டிருந்த விடுதலையின் ஒளியினை அவர்களுக்குப் புரிந்த அரசியல் கோட்பாட்டு மொழிமூலம் சர்வதேசப் பரப்பில் படரவிட்ட தேசத்தின் குரலின் ஆளுமை போற்றத்தக்கது.

உலகத்திற்கு எடுத்துரைத்த

பெரும் பணி

2002 பெப்ரவரி மாதம் வரை நிகழ்த்தப்பட்ட தமிழ்த் தேச விடுதலைப் போராட்ட பரிமாணத்தின் அரசியல் கருத்துநிலை வடிவத்தினை பேச்சுகள் ஊடாக உலகிற்கு எடுத் துரைக்கும் பெரும்பணி தமிழர் தலைமையில் தேசத்தின் குரலிற்கு வழங்கப்பட்டி ருந்தது.

அரசியல் ஆளுமையும், தேச உருவாக்க சிந்தனையும் அற்ற வெறும் வன்முறைக் குழுவாக விடுதலைப் புலிகளைக் கணித்த அல்லது அவ்வாறு இருக்க வேண்டுமென் கிற கருத்தினைத் திணித்த சில பிராந்திய நலவாதிகளுக்கு அரசியல் ஆலோசகரின் முதிர்ச்சியான தேசிய விடுதலைக் கோட் பாட்டுக் கருத்துரைப்புகள் கசப்பாகவே இருந்திருக்கும்.

விடுதலைப் புலிகளை இராணுவ வழிமூலம் அழிப்பதே சரியானதென தற்போது கூறும் பேராசான் ஜீ.எல். பீரிஸ், தேசத்தின் குரலோடுதான் சர்வதேசம் அங்கீகரிக்கும் நாகரிக அரசியல் பற்றிப் பேசினார்.

சர்வதேசத்தின் ஏமாற்றும் தந்திரத்தை

உணர்ந்து கொண்டே பேச்சு

ஆழ்மனத்தில் இராணுவச் சிந்தனையும் நுனி நாக்கில் கற்றறிந்த ஏட்டுச் சுரக்காய்களும் ஊடாடுவதை அரசியல் வித்தகர் ஆறு சுற்றுப் பேச்சிலும் உணர்ந்திருப்பார்.

திம்புவிலிருந்து ஜெனிவாவரை திலகர், யோகி, பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் போன்ற அரசியல் தளபதிகளை சிங்களத்தோடு பேசுமாறு அனுப்பியும் எதுவுமே அசைவுறாத நிலையில் இனி எந்த சிங்களத் தலைவர்களையும் நம்ப முடியாதென்கிற நிலைப்பாட்டினை 2007 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர் முன் வைக்கிறார்.

பேசிப் பயனில்லை என்பதையும், பேசியே அம்பலமாக்க வேண்டுமென தேசத்தின் குரல் உணர்ந்தார்.

ஆயினும் பேச வலியுறுத்தும் சர்வதேச நாடுகளின் ஏமாற்றும் தந்திரத்தை உணர்ந்தவாறே பேசச் சென்றார்கள் விடுதலைப் புலிகள்.

35 வருடகாலப் போராட்ட வாழ்வில் ஐந்து வருடங்கள் சர்வதேச அரசியல் களத்திற்கு ஒதுக்கப்பட்டது.

திம்புவில் தமிழர் போராட்டத் தலைமைகளால் உறுதியாக முன்வைக்கப்பட்ட முதல் மூன்று கோட்பாடுகளும் தேச உருவாக்கத்தோடு பரிணாமமடைந்து தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற உச்ச கருத்து நிலையை வந்தடைந்துள்ளன.

நியாயபூர்வமான கற்பனைக் கருத்துருவமாகக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள், விடுதலைப்புலிகளின் போராட்ட முன்னெடுப்போடும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட தேச உட்கட்டுமானத்தோடும் யதார்த்த நிலையை எட்டியுள்ளது.

அரசியல் கோட்பாட்டு வடிவத்தை உருவாக்கியவர்

இந்த முழுமைப் பரிமாணத்திற்கான அரசியல் கோட்பாடு வடிவத்தை உருவாக்குவதில் தேசத்தின் குரல் ஆற்றிய பங்களிப்பு மிகவும் காத்திரமானதொன்றாக அமைகிறது.

சமஷ்டி என்றாலே பதற்றமடையும் சிங்களத் தரப்பிற்கு உள்ளக சுயநிர்ணயம் என்கிற மாற்றுப் பதத்தை முன்வைத்து தமிழர் தரப்பின் அபிலாஷைகளை விளக்க முயற்சித்தார்.

ஆனாலும் ஒற்றையாட்சி என்கிற குண் டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட விரும்பும் சிங் களத்திற்கு சமஷ்டி, உள்ளக சுயநிர்ணயம், கூட்டாட்சி யாவும் அகராதியிலிந்து அகற் றப்படவேண்டிய சொற்பதங்களே.

ஓருலகக் கோட்பாட்டுச் சிந்தனையைக் கொண்ட நாடுகளில் நடைமுறையிலுள்ள ஆட்சியமைப்பு வடிவங்களான சமஷ்டி, உள் ளக நிர்ணயம், கூட்டாட்சி என்பனவற்றையே தேசத்தின் குரல் தனது பேச்சுகளில் தீர்விற்கான மாற்று வழிமுறைகளாக முன்வைத்தார். அது குறித்து பேசப்படலாமென்பதை முன்னிலைப்படுத்தவோ அல்லது தாம் கடைப்பிடிக்கும் அரசியல் முறைமைகளை நியாயப்படுத்தவோ அனுசரணை வகித்த எவரும் முயலவில்லை.

சிங்களம் விரும்பும் அரசியல் தீர்வோடு, சமரசம் கொள்ளும் நிர்ப்பந்தங்களையே தமிழர் தலைமை மீது திணிப்பதற்கு சர்வதேசம் விரும்பியது.

இதனடிப்படையிலேயே இந்தியா ஏமாற் றியது போன்று சர்வதேசமும் இன்று எம்மை ஏமாற்றி விட்டதென தேசியத் தலைவர் தனது விசனத்தை மாவீரர் தின உரையில் தெரிவிக் கிறார்.

கொசோவோவின் பிரகடனம்

அவதானிக்கப்படுகிறது

இன்றைய நிலையில் கொசோவாவின் சுயநிர்ணய உரிமைப் பிரகடனத்திற்கு சர்வ தேசம் மேற்கொள்ளப் போகும் இராஜதந்திர நகர்வுகளையும் அணுகுமுறைகளையும் அதே போன்று போராடும் சக்திகள் அனைத்தும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

அரசுகளிற்கிடையே ஏற்படும் யுத்தங்களும் அரசொன்றினை எதிர்த்து தமது சுயநிர்ணய உரிமைக்காக முன்னெடுக்கப்படும் மக்கள் யுத்தங்களும் சர்வதேச மட்டத்தில் பல பிராந்திய முரண்பாடுகளைத் தோற்று விக்கின்றன.

இம்முரண்நிலையைப் பகுப்பாய்வு செய்து சர்வதேச நகர்வுகளுக்கு ஏற்றவாறு எமது தேச விடுதலையை வென்றெடுக்கக்கூடிய இராஜதந்திர வழிமுறையினை வகுக்கக்கூடிய வல் லாண்மை தேசத்தின் குரலிற்கு உண்டு.

அவர் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் ஆளுமையில் அண்ணன் ஆற்றிய கனதியான பங்களிப்பும், தேசியத் தலைவனின் ஆழமான பிரபஞ்சம் பற்றிய புரிதலும், நேர்த்தியான பாதையில் எமது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தியே தீரும்.

தமிழின வரலாறு பாலாவின்

பெயரைச் சுமக்கும்

அப்பாதையை சீராகச் செப்பனிட்டு, விடுதலை வேள்வித் தீயில் தன்னை இணைத்து தேசத்தின் குரலாகவும் அரசியல் முகவரியாகவும் திகழ்ந்த அன்ரன் பாலசிங் கம் அவர்களைத் தமிழின வரலாறு நிச்சயம் சுமந்து செல்லும்.

வாழ்வதற்காகப் போராடினார்.

போராடக் கற்றுக்கொண்டார்.

கற்றவற்றைப் பிரயோகித்தார்.

பிரயோகித்ததை நிலைநாட்டினார்.

நிலைநிறுத்தியது விரிந்து செல்லும்.

விரிவனவெல்லாம் இலக்கை அடையும்.

சிங்களம் வெட்டிய குழிகளெங்கும் விடுதலை அரசியலை விதைத்த மதியுரைஞரை நெஞ்சில் இருத்துவோம்.

இதயச்சந்திரன்

http://tamilwin.net/article.php?artiId=573...;token=dispNews

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்.

வாழ்வதற்காகப் போராடினார்.

போராடக் கற்றுக்கொண்டார்.

கற்றவற்றைப் பிரயோகித்தார்.

பிரயோகித்ததை நிலைநாட்டினார்.

நிலைநிறுத்தியது விரிந்து செல்லும்.

விரிவனவெல்லாம் இலக்கை அடையும்.

சிங்களம் வெட்டிய குழிகளெங்கும் விடுதலை அரசியலை விதைத்த மதியுரைஞரை நெஞ்சில் இருத்துவோம்.

ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் பாலா அண்ணன் வாழ்வு ஒரு வழிகாட்டி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.