Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ரசித்த கவிதை - வாசுதேவன்.

Featured Replies

இலக்கிய நண்பர்களே, கவித்துவ ரசிகர்களே,

தமிழ்கவிதையுலகம் ஓரு அடர் வனம். அதனூடே பயணிக்கும்கோது ஏற்படும் பரவசம் அற்புதமானது. 1970 ம் ஆண்டில் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் எழுதிய ஒரு சிறு கவிதை என் கவனத்தையீர்த்தது. இக்கவிதையை நான் எழுதியிருந்தால்... என ஒரு நப்பாசையும் உள்ளெழுந்தது. "அற்பங்கள்" எனும் தலைப்பையுடைய இக்கவிதையை மொழிபெயர்த்து என் பிரஞ்சு நண்பனிடம் கொடுத்தேன். வாசித்துவிட்டு அற்புதம் என்றான். ஆனந்தமாகவிருந்தது. வாசியுங்கள். வளமடைவோம்.

அன்புடன் வாசு.

-----------------------------------------------------

அற்பங்கள்.

அற்ப நிகழ்வும்

அர்த்தம் அற்றதும்

என்னுடன் வருக.

உதிரும் மணலும்

உருவழியும் நீர்வரையும்

எனது உவப்புகள்.

மங்கல் நிலவும்

மாலைக் கருக்கலும்:

விடியற் கலங்கலும்

எனது விருந்துகள்.

ஒன்றுமிலா வெளியும்

உதிர்ந்து விழும் இலையும்

நெஞ்சை முழுதும் நிரப்பும்

பாiதியின் ஓரம் படரும் சிறுபுல்லும்

கானகத்தில் எங்கோ கண்மலரும் ஓர்பூவும்

போதும் எனக்கு.

(மற்றதெலாம் போக)

அற்ப நிகழ்வும்

அர்த்தமற்றதும்

என்னுடன் வருக.

1970.

---------------------------------------------------------------------------------------

Les Choses futiles:

Que l'evenement futile

et l'absurde m'accompagnent !

J'aime le sable meuble

et les vagues qui s'effacent.

Mon festin est un spectacle

de la terne lune, de l'obscurite vesperale,

et de la brume matinale.

La feuille morte qui tombe

et l'espace vide rempliraient mon ame.

L'herbe qui pousse au bord de la route

et une fleur qui s'epanouit dans la solitide

d'une foret me suffisent.

(Que le reste s'en aille !)

Que l'evenement futile

et l'absurde m'accompagnent !

( NB:Je ne sais pas taper les accents sur cet editeur )

Edited by vasudevan

  • கருத்துக்கள உறவுகள்

வாசுதேவன் உதைபடிக்கேக்கை எனக்கும் ஒண்டு எழுதவேணும்போலை இருந்தது ஆனால் கவிதையெண்டு சொல்லமாட்டன் படிச்சிட்டு நீங்களாய் பாத்து ஏதாவது பேர் வையுங்கோ

அற்ப கவிஞர்களும்

அர்த்மற்ற கவிதைகளும்

என்னுடன் வருக

உதிரும் உளறல்களும்

உதிரும் வீணீரும்

எனது உவப்புக்களே

மப்படித்த நிலவும்

மங்கலாய் தெரியும்

மந்திகளும்

விருதிற்கு

அலையும்

ஒன்றுமில்லா

கேவணமும்

ஒன்றுமில்லா

நிலையிலும்

ஒன்றைத்தேடும்

மற்றதெல்லாம் போக

அற்ப கவிஞர்களும்

அர்த்மற்ற கவிதைகளும்

என்னுடன் வருக

  • தொடங்கியவர்

சாத்திரி,

நீங்கள்தான் இதை எழுதினீர்கள் என்று உலகத்தை வேண்டுமானால் நீங்கள் நம்பவைக்கலாம். ஆனால் எனக்கு நன்றே தெரியும் இதை எழுதியவன் நான்தான் என்று.

நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரியும் என எண்ணுகிறேன்.

கவிதை எழுதுவதற்கு நாம் என்ன உயிரையா கொடுத்தோம் ?

நான் ஒரு தூசி என்பதை நீங்களும் அறிவீர்கள்தானே.

மிகுதி கோமாளித்தனங்களும் அற்பங்களும்தானே.

மீண்டும் சந்திப்போம்.

நம்மைத்தவிர மிகுதியனைத்தும் உயர்ந்ததும் உத்தமமானதும் என எண்ணுவோமாக.

ஈடேற்றத்திற்காக.

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரியும் என எண்ணுகிறேன்.

கவிதை எழுதுவதற்கு நாம் என்ன உயிரையா கொடுத்தோம் ?

புரிதலுக்கு நன்றிகள் வாசுதேவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசுதேவனுக்கும் சாத்திரியாருக்கும் விட்டகுறைதொட்டகுறையாய் ஏதோ தனிப்பட்ட பிரச்சனை இருக்கு போலை கிடக்கு :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாசுதேவனுக்கும் சாத்திரியாருக்கும் விட்டகுறைதொட்டகுறையாய் ஏதோ தனிப்பட்ட பிரச்சனை இருக்கு போலை கிடக்கு :icon_idea:

1988ல் தொட்டகுறை தொடர்கிறது அவ்வளவுதான் குமாரசாமி

  • தொடங்கியவர்

புரிந்துணர்வுகள் எப்படியுள்ளதென்பதைக் கண்டீர்களா சாத்தரி.

வாய்விட்டு ஓவென்று சிரிப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையெண்ணியேனும்

மகிழ்வோமாக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞரே

நீங்கள் இணைத்த கவிதை அருமை. அதற்கான சாத்திரியின் எதிர்வினையும் பொருத்தமானதே.

நீங்கள் கவிதையை பிரெஞ்சிலும் மொழிபெயர்க்கும் ஆற்றல் உள்ளவரா?

மகிழ்ச்சியாக இருக்கின்றது.

அப்படியானால் உங்களுக்கு ஒரு கவிஞரை அறிமுகப்படுத்துகிறேன். அவர் ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிய மொழிகளில் எழுதும் இலங்கைத் தமிழர். என்ன ஆச்சரியபடுகிறீாகளா? அவர் பெயர் இந்திரன் அமிர்தநாயகம். சிலவேளைகளில் அமெரிக்க உளவாளியாகவும் அவர் இருக்கலாம். அவரது தளத்திற்குள் பயணம் செய்து பாருங்கள். அவரது பிரெஞ்சு கவிதைகள் பற்றியும் எமக்கு அறியத்தாருங்கள். உளவு உண்டா என்றும் பாருங்கள்.

நன்றி.

http://indranamirthanayagam.blogspot.com.

  • தொடங்கியவர்

நன்றி ஆபிரகாம் அவர்களே,

நீங்கள் குறிப்பிட்ட அந்த தளத்தைப் பார்த்தேன். இரண்டு குட்டிக் கவிதைகள் பிரஞ்சு மொழியில் படிக்கக்கிடைத்தன. அவை சாதாரண (கவித்துவமற்ற) பனுவல்களாக எனக்குத் தோன்றுகிறது. இருப்பினும் தமிழர் ஒருவர் பிரஞ்சு மொழியில் நேரடியாக கவதை எழுதுவது பாரட்டப்படவேண்டிய ஒரு விடயமே.

யார் யாருக்கு உளவுபார்க்கிறார்கள் என்பதை உளவுபார்க்கும் வேலை எனக்குப் பிடிக்காத ஒரு விடயம். அதற்காக நான் உளவாளிகளின் மீது சாதகமான அல்லது பாதகமான முன்னனுமானங்கள் கொண்டுள்ளேனன் என எண்ணுவதும் பொருத்தமற்றது.

கவிதை எழுதுபவர்கள் கவிதை எழுதட்டும். உளவு பார்ப்பவர்கள் உழவு பார்க்கட்டும். மிகுதி அவரவர் சார்ந்தது.

தங்களின் அபிப்பிராய வெளிப்படுத்தலுக்கு எனது நன்றிகள்.

மீண்டும் தொடர்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.