Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச ஆயுதத் தடையை இலங்கை மீது விதியுங்கள் - ஆஸி.மனித உரிமைகள் அமைப்பு

Featured Replies

ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பேரழிவு நாசங்களை விளைவித்து வரும் இலங்கை மீது சர்வதேச ஆயுதத்தடையை விதிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகைளை எடுக்குமாறு ஆஸ்திரேலிய அரசை வற்புறுத்திக் கேட்டிருக்கிறது அந் நாட்டின் மனித உரிiமைகள் அமைப்பு ஒன்று.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தும் மகஜர் ஒன்றைத் தாயாரித்து, அதில் ஆஸி. மக்களின் கையொப்பத்தைச் சேகரித்துப் பெற்று அந்நாட்டு நாடாளுமன்றுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அந்த அமைப்பு தீவிரமாக ஈடுபட்டிருகின்றது.

'குரலற்றவர்களின் மனித உரிமைகளுக்கான அஸ்திரேலியர்களின் அமைப்பு'(Australian For human Rights Of Voiceless) என்ற நிறுவனமே மனித உரிமைகளில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியப் பிரஜைகள் மத்தியில் இத்தகைய மகஜரில் கையொப்பம் திரட்டி வருகின்றது.

இலங்கையில் அப்பாவி மக்களின் துயர் துடைப்பதற்காகவும் கௌரவமான சமாதானத்தை எட்டும் நோக்கிலும் தங்களால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிக்கு, மேற்படி மனுவில் ஒப்பமிட்டு ஆதரவு தரும்படி அந்த மனுவில் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த அமைப்பு, சக ஆஸ்திரேலியப் பிரஜைகளை கோரியிருக்கின்றது.

இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதரத் தடை விதிக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகைள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றுக்குச் சமர்ப்பிக்கப்படும் இந்த மனுவில் இடம் பெற்றிருக்கின்றன.

அந்த மனுவில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளவை வருமாறு :

இலங்கையின் வடக்குகிழக்கு மக்களின் நிலைமை குறித்து ஆஸ்திரேலியப் பிரஜைகளான நாங்கள் கவலையடைந்துள்ளோம்.

ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய விழுமியங்களில் நம்பிக்கை கொண்டுள்ள சட்டம், ஒழுங்கிற்குக் கட்டுப்படும் ஆஸ்திரேலியர்கள் நாங்கள். எனவே இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இனப்படுகொலை மற்றும் இராணுவ ஆயுதக் குழுக்களின் பயங்கரம் குறித்து நாங்கள் மௌனமாக இருக்க முடியாது.

இலங்கை அரசின் முகவர்களால் மேற்கொள்ளப்படும் யுத்தக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் ஐக்கிய நாடடுகளின் அமைப்புகள் பல கண்டித்துள்ளன. சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் கவலை வெளியிட்;டுள்ன.

இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் இத்தகைய நிலைமை அங்கு நிலவுகின்றமையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்களின் குரலை அடக்கும் நோக்குடன் கொலைகள், ஆட்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் என்பன இடம் பெறுகின்றன.

மக்களின் வாழ்விடங்கள் மீது விமானக் குண்டு வீச்சுகள் மேற்கொள்ளப்டுகின்றன. பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

'ஏ-9' வீதி மூடபட்படதால் யாழ். மக்கள் சிறைக் கைதிகளாக்கப்ட்டுள்னர். பட்டினி நிலைக்குத் தள்ளப்படடுள்ளனர். மேலும் உணவு, மருந்துப் பொருட்கள் தாராளமாக எடுத்துச் செல்லப்படுவதும் தடுக்கபட்டுள்ளது.

இலங்கை அரசின் முகவர்களால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகள், யுத்தக் குற்றச் செயல்கள் போன்றவை சர்வதேச சட்டங்களுக்கு முரணானவை. ஆஸ்திரேலியாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவை குற்றச் செயலகளாகக் கருதப்படுகின்றன. தனது பிரதேசத்துக்கு உட்பட்ட சகல மக்களையும் இன, நிற, மத வேறுபாடின்றிப் பிரதிநிதித்துவப் படுத்தி, சமவுரிமை மற்றும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளை மதித்து ஆட்சி புரியும் அரசு ஒன்றை நாடு கொண்டிருக்கும் வரையிலேயே அந்த நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டையோ அரசியல் ஐக்கியத்தையோ பாதிதுக் குழப்பும் வகையில் எந்த நடவடிக்கையையும் பிற நாடுகள் மேற்கொள்ளக் கூடாது என நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் இணக்கச் செயற்பாடு தொடர்பான சர்வதேச கோட்பாட்டைப் பிரகடனப் படுத்தும் ஐ.நாவின் 2-625 ஆவது தீர்மானம் தெளிவாகத் தெரிவிக்கின்றது .

மேலும் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, யுத்தக் குற்றம் என்பன மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் போது அவற்றால் பாதிக்கப்படும் மக்கள் கூட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் ஐக்கிய நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உண்டு.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியும் அரச கட்டமைப்புகள் ஊடாகவும் :-

1. இலங்கை அரசுக்கான சகல உதவிகளைளும் நிறுத்துதல், ஏனைய சக நாடுகளைளுயும் இவ்வாறு செயற்படுமாறு தூண்டுதல்.

2. இனப்படுகொலை, யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல் போன்றவற்றை இழைத்த - தூண்டிய - அவற்றுக்கு உதவிய - அவற்றை அசட்டை செய்த - இலங்கை அரசினதும், அதன் படைகளினதும் உறுப்பினர்களுக்கு எதிராக சர்வதேச பயணத்தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்

3. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைளை எடுத்தல்.

4. தமிழ் மக்களின் சமவுரிமை மற்றும சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுக்கான கொள்கைகளை அங்கீகரித்தல்

போன்றவற்றை மேற்கொள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

நன்றி சுடர் ஒளி

ஆஸிவாழ் தமிழ் உறவுகளே இந்த சந்தர்ப்பத்தை எமக்குச் சாதகாமக்கிக் கொள்ள முயலுங்கள். சுவிஸில் இளையோர்களினால் சில தினங்களுக்க முன் எடுக்கபட்ட அந் நாட்டு மக்களுடனான கவன ஈர்ப்பு போன்றதொரு செயலை உவ்விடமும் ஆரம்பிக்கலாம் அல்லவா. ஆஸி. மக்களுக்கு எம் உறவுகள் ஈழத்தில் படும் வேதனை, துன்பங்கள் என்பனவற்றை பல வழிகளிலும் தெரியப்படுத்தி இம் மனுவிற்கு பலம் சேர்க்கலாம் அல்லவா?

ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பேரழிவு நாசங்களை விளைவித்து வரும் இலங்கைமீது சர்வதேச ஆயுதத் தடையை விதிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆஸ்திரேலிய அரசை வற்புறுத்திக் கேட்டிருக்கிறது அந்நாட்டின் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தும் மகஜர் ஒன்றைத் தயாரித்து, அதில் ஆஸி. மக்களின் ஒப்பத்தைச் சேகரித்துப் பெற்று அந்நாட்டு நாடாளுமன்றுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அந்த அமைப்பு தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. "குரலற்றவர்களின் மனித உரிமைகளுக்கான ஆஸ்திரேலியர்களின் அமைப்பு" (Aus tralian For Human Rights Of Voiceless) என்ற நிறுவனமே மனித உரிமைகளில் ஈடுபாடுள்ள ஆஸ்திரேலியப் பிரஜைகள் மத்தியில் இத்தகைய மகஜரில் கையொப்பம் திரட்டி வருகின்றது.

இலங்கையில் அப்பாவி மக்களின் துயர் துடைப்பதற்காகவும் கௌரவமான சமாதானத்தை எட்டும் நோக்கிலும் தங்களால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிக்கு, மேற்படி மனுவில் ஒப்பமிட்டு ஆதரவு தரும்படி அந்த மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் அந்த அமைப்பு, சக ஆஸ்திரேலியப் பிரஜைகளைக் கோரியிருக்கின்றது.

இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றுக்குச் சமர்ப்பிக்கப்படும் இந்த மனுவின் இடம்பெற்றிருக்கின்றன.

அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

இலங்கையின் வடக்கு,கிழக்கு மக்களின் நிலைமை குறித்து ஆஸ்திரேலியப் பிரஜைகளான நாங்கள் கவலையடைந்துள்ளோம்.

ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய விழுமியங்களில் நம்பிக்கை கொண்டுள்ள சட்டம், ஒழுங்கிற்குக் கட்டுப்படும் ஆஸ்திரேலியர்கள் நாங்கள். நாங்கள் மௌனமாக இருக்கமுடியாது. எனவே, இலங்கையில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இனப்படுகொலை மற்றும் இராணுவ ஆயுதக் குழுக்களின் பயங்கரம் குறித்து நாங்கள் மௌனமாக இருக்க முடியாது.

இலங்கை அரசின் முகவர்களால் மேற்கொள்ளப்படும் யுத்தக் குற்றங்களையும் மனித உரிமைமீறல்களையும் ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் பல கண்டித்துள்ளன. சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் கவலை வெளியிட்டுள்ளன.

இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் இத்தகைய நிலைமை அங்கு நிலவுகின்றமையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்களின் குரலை ஒடுக்கும் நோக்குடன் கொலைகள், ஆட்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் என்பன இடம்பெறுகின்றன. மக்களின் வாழ்விடங்கள் மீது விமானக் குண்டு வீச்சுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். யாழ். மக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

"ஏ 9" வீதி மூடப்பட்டதால் யாழ்ப்பாண மக்கள் சிறைக் கைதிகளாக்கப்பட்டுள்ளனர்; பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் உணவு, மருந்துப் பொருட்கள் தாராளமாக எடுத்துச் செல்லப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசின் முகவர்களால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் போன்றவை சர்வதேச சட்டங்களுக்கு முரணானவை. ஆஸ்திரேலியாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவை குற்றச் செயல்களாகக் கருதப்படுகின்றன.

தனது பிரதேசத்துக்கு உட்பட்ட சகல மக்களையும் இன, நிற, மத வேறுபாடின்றிப் பிரதிநிதித்துவப்படுத்தி, சமவுரிமை மற்றும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளை மதித்து ஆட்சி புரியும் அரசு ஒன்றை நாடு கொண்டிருக்கும் வரையிலேயே அந்த நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டையோ அரசியல் ஐக்கியத்தையோ பாதித்துக் குழப்பும் வகையில் எந்த நடவடிக்கையையும் பிறநாடுகள் மேற்கொள்ளக் கூடாது என நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் இணக்கச் செயற்பாடு தொடர்பான சர்வதேச சட்டக் கோட்பாட்டைப் பிரகடனப்படுத்தும் ஐ.நாவின் 2,625ஆவது தீர்மானம் தெளிவாகத் தெரிவிக்கின்றது.மேலும் இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு, யுத்தக் குற்றம் என்பன மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும்போது அவற்றால் பாதிக்கப்படும் மக்கள் கூட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் ஐக்கிய நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உண்டு.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியும் அரச கட்டமைப்புகள் ஊடாகவும்

* இலங்கை அரசுக்கான சகல உதவிகளையும் நிறுத்துதல். ஏனைய சக நாடுகளையும் இவ்வாறு செயற்படுமாறு தூண்டுதல்.

* இலங்கைக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதைத் தடைசெய்யும் வகையில் சர்வதேச ஆயுதத் தடை விதிப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தல்.

* இனப்படுகொலை, யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல் போன்றவற்றை இழைத்த தூண்டிய அவற்றுக்கு உதவிய அவற்றை அசட்டை செய்த இலங்கை அரசினதும், அதன் படைகளினதும் உறுப்பினர்களுக்கு எதிராக சர்வதேச பயணத்தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.

* இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தல்.

* தமிழ் மக்களின் சமவுரிமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுக்கான கொள்கைகளை அங்கீகரித்தல்.

போன்றவற்றை மேற்கொள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

tamilwin.com

இது அமெரிக்க அடியொற்றும் நிகழ்வுகளின் ஆரம்பம் .

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகத்துடன் பார்க்க கூடியதாவே தென்படுகிறது. என்றாலும் எமக்கு சாதகமான எவற்றையும் தட்டிக்களிக்காமல் தீவிரமாக பரிசீலித்தல் என்றவொரு முன்னோக்கிய சிந்தனையை தமிழ் மக்களாகிய நாம் எடுக்க வேண்டும். எவ்வளவுக்கு நண்பர்களை உருவாக்குகிறோம் என்பதில் தான் எமது போராட்டம் வெற்றியை நோக்கி நாம் நகர்கிறோம் என்பது அர்த்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.