Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் கடிதம்-விமர்சனம்

Featured Replies

அன்புள்ள யாழ்கள உறவுகளுக்கு வணக்கம், அண்மையில் தமிழகத்தில் ஐம்பதற்கும் மேற்பட்ட பத்திரிகை நிருபர்களுக்காக காண்பிக்கப்பட்ட காதல் கடிதம் திரைப்பட காட்சியின் பின்பு இன்று தமிழ்சினிமா இணையத்தளம் இப்படி ஒரு விமர்சனத்தை எங்களுக்காக வழங்கியிருக்கின்றது. நீங்களும் வாசித்து பின் திரையரங்கத்திற்கு வரத் தயாராகுங்கள். நோர்வேயில் 02.02.2008 அன்று வெளிவரும். தமிழகத்தில் தைப்பொங்கல் திருநாளின் பின்பும். இலங்கையில் இந்த மாத இறுதியிலும் வெளிவரும். திரையரங்குகள் கிடைப்பதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

காதல் கடிதம்-விமர்சனம்

குட்டிப்பூனையை பட்டுத்துணியால் போர்த்திய மாதிரி மென்மையான கதை. சற்று மேன்மையான கதையும் கூட! படம் முடிந்து வெளியே வந்தபின்பும், 'மரணத்தை பார்த்து பார்த்து எங்களுக்கு பழகிப்போச்சு' என்கிற அந்த அப்பாவின் குரல், அடி வயிற்றை பிசைந்து கொண்டேயிருக்கிறது. காதலின் வலியையும், வாழ்க்கையின் உத்தரவாதமின்மையையும் இதை விட அழுத்தமாக யாரால் சொல்லிவிட முடியும்?

இலங்கையிலிருந்து சென்னைக்கு இசை கற்றுக் கொள்ள வரும் அனிஷா, இங்கே ஸ்ரீபாலாஜியை சந்திக்கிறார். முதலில் பிணக்கமும், இரண்டு மூன்று ரீல்களுக்குள்ளாகவே இணக்கமும் ஏற்படுகிறது இருவருக்கும். காதல் என்ற வார்த்தைக்கு இருவருமே கொண்டிருக்கும் ஒரே அர்த்தம் 'நம்பிக்கையில்லை' என்பதுதான். ஆனால், மனசு 'ஒன்வே'யில் பயணிக்க ஆசைப்படுகிற சாத்தான் ஆயிற்றே? கொஞ்சம் கொஞ்சமாக அனிஷாவின் மேல் காதல் கொள்ளும் பாலாஜி, அதை வெளிப்படுத்துகிற நாளில் இலங்கைக்கு பறந்து விடுகிறார் அனிஷா. 'யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேண்டும். ஊருக்கு போய் கடிதம் எழுதுகிறேன' இதுதான் அனிஷா பாலாஜியிடம் பேசிய கடைசி வார்த்தை! ஊருக்கு போன அனிஷா காதல் கடிதம் எழுதினாரா? அது பாலாஜியின் கைகளுக்கு வந்து சேர்ந்ததா? இதுதான் முடிவு.

ஹீரோ, ஹீரோயின் இருவருமே புதுமுகங்கள். நடிப்பும் அத்தனை கச்சிதம். வழக்கமாக ஹீரோயின் அறிமுகங்கள் தமிழ்சினிமாவில் எப்படியிருக்கும்? இதில் வேறு மாதிரி. இவரை சிக்னலில் சந்திக்கும் ஹீரோவும் கண்டவுடன் காதல் கொள்ளாமல் மரபை உடைத்திருப்பது ஆறுதல். சங்கீத குருவே சந்தேக குருவான பின்பு, மேற்கொண்டு படிப்பை எப்படி தொடர்வது? தவிக்கும் அனிஷாவுக்கு அற்புதமான ஒரு ஐடியாவின் மூலம் அவரை மீட்கும் ஸ்ரீபாலாஜி பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். காதலில் விழுந்தபின் இவரிடம் தொற்றிக் கொள்ளும் தயக்கத்தையும் அநாயசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். எஸ்.எம்.எஸ் மூலம் பாடல் கேட்கும் அனிஷாவுக்கு, வேறொரு நேயரின் விருப்பமாக அதே பாடலை ஒலிக்க செய்வது அழகு.

ஸ்ரீபாலாஜி இலங்கைக்கு போய் இறங்கியதும், மொத்த தியேட்டரும் அமைதியாகிவிடுகிறது. என்னவோ நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு மட்டும் மனசை பிசைய ஆரம்பித்துவிடுகிறது. படத்தில் இந்த இலங்கை பகுதி முழுவதும் நமக்கு என்னென்னவோ உணர்வுகளை கொடுக்கிற நேரத்தில், அதை மேலும் கனமாக்குகிறது இலங்கை அறிவிப்பாளர் நடராஜசிவத்தின் நடிப்பு.

ஆரம்ப கூச்சல்களுக்கு (உபயம் காதல் சுகுமார்) நெளிகிற நம்மை, காதல் என்ற மெல்லிய இழையால் கட்டிப் போட்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். அதன்பின் இலங்கைக்கு பயணிக்கிற கதையை தன் வசம் இழுத்துக் கொள்கிறது கேமிராவும், இசையும், வசனங்களும்! யாழ்தேவி என்ற இரயிலையும், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத இலங்கையின் உள்ளடங்கிய தமிழர் பகுதிகளையும் பார்க்கும்போது மெய் சிலிர்த்துப் போகிறது. அதுவும் யாழ்தேவியில் என்ற பாடலும், அந்த மெட்டும், அந்த தாளமும் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல் வரிசையில் அமையும்! இசையமைப்பாளர் உதயா எதிர்கால தமிழ்சினிமாவின் நம்பிக்கை வரவு. ஒளிப்பதிவாளர் பி.ஆர்.ராஜனையும் அந்த வரிசையில் வைக்கலாம். பெயருக்கேற்றார் போல் வசீகர வரிகளை தந்திருக்கிறார் பாடலாசிரியர் வசீகரன்.

சென்சாரின் கத்தரிக்கு சின்ன வேலைகூட தராமல், ஈழத்தின் வேதனையை எடுத்து சொல்லிவிட முடியுமா? ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் முகேஷ்! மனசுக்குள் விதையாக விழுந்து, மரமாக முளைத்து நிற்கும் ஒரு சில பதிவுகளுக்கு மத்தியில், காதல் கடிதமும் ஒரு முக்கியமான பதிவு. சந்தேகமேயில்லை!

-ஆர்.எஸ்.அந்தணன்

www.tamilcinema.com

thanks to tamilcinema.

Edited by Tamizhvaanam

  • தொடங்கியவர்

காதல் கடிதம் திரைப்படத்தை ஏன் பார்க்க வேண்டும்? ஒவ்வொரு தமிழரும் கற்றுக் கொள்ள அப்படி என்ன தான் இருக்கின்றது? பல தரப்பட்ட பத்திரிகைக் கண்ணோட்டங்கள், இணையத்தளங்களின் விமர்சனங்களைப் படியுங்கள். ஒரு காதல் கடிதத்தை உணர்வுபூர்வமாகப் படிக்கின்ற கனத்தை உங்கள் மனங்களில் உணரமுடியும். உங்கள் செவிகளுக்கு விருந்தளித்தோம், இது உங்கள் விழிகளுக்கான விருந்து. வாருங்கள் திரைக்கு வாருங்கள்.

இங்கே இன்னோர் விமர்சனப் பதிவு.

காதல் கடிதம்

யுத்த பூமியில் நீண்டு வரும் இரத்தவெளியின் வேர்கள் எதிலெல்லாம் ஊடுருவி உயிர்குடிக்கிறது என்பதை உருக உருக எழுதியிருக்கும் கதையே இந்த கடிதம்.

வானொலியில் பணிபுரியும் ஸ்ரீபாலாஜி. இசை கற்பதற்காக சென்னை வந்திருக்கும் இலங்கை பெண் அனிஷா. ஆரம்பத்தில் தவறான புரிதல்களில் இருக்கும் இருவரையும் நேர்க்கோட்டில் இணைக்கிறது நட்பு. ஒரு கட்டத்தில் அனிஷா மேல் காதலாகிறது பாலாஜிக்கு. காதலை சொன்னால் நட்பு சிதறிவிடுமோ என்ற அச்சத்தில் மனசுக்குள்ளேயே போட்டு புழுங்குகிறார்.

ஆஹா... பல படங்களில் கடைசிவரை காதலை சொல்லாத நாயகன் மாதிரியா இவரும்? என்று நமக்குள் எழும் சந்தேகத்தை 'நங்' கென்று குட்டி வேறுமாதிரி நகர்த்தப்படுகிறது திரைக்கதை.

படிப்புமுடிந்து அனிஷா ஊருக்கு திரும்பும் வேளையில் காதலை சொல்கிறார் நாயகன். என்ன பதில் சொல்வார் நாயகி? ஸ்ரீபாலாஜியின் படபடப்பு படம் பார்ப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது.

தனது பதிலை ஊரிலிருந்து கடிதம் மூலம் தெரிவிப்பதாக விடைபெறுகிறார் அனிஷா. ம்...ஹூம். தபால்காரனின் முகம்பார்த்து வெறுத்தப்போன நாயகன், இலங்கைக்கே செல்கிறார். போன இடத்தில் ஸ்ரீபாலாஜியின் கையில் கிடைக்கும் அந்த காஸ்ட்லியான கடிதம் சொல்லும் விடை என்ன? படம் பாருங்களேன்!

குழந்தையின் பிஞ்சுவிரல் ஸ்பரிசம் போன்ற கதை. மனசை நைந்த துணியாய் மாற்றும் க்ளைமாக்ஸ். இயக்குனர் முகேஷ் எழுதியிருக்கும் இந்த கடிதம் மரணத்தின், இழப்பின் வலி அறியாதவர்களின் முகவரிகளுக்கும் அஞ்சல் செய்யப்படும் ஆழமான வரிகளாக மனசில் வேறூன்றுகிறது.

நாயகன் ஸ்ரீபாலாஜி அடிப்படையில் கிரிக்கெட் வீரராம். புதுமுகம் போலன்றி நடிப்பிலும் நல்ல ஸ்கோர் எடுத்துள்ளார். நடிப்பின் சாயல் தெரியாத அளவுக்கு இயல்பை வெளிப்படுத்தியுள்ளது சிறப்பம்சம். காதலியின் கடிதம் பார்த்து கதறும் இடத்தில் நம்மையும் கலங்கடிக்கிறார். பரத், சிம்பு போன்ற நடனத்திறமையிலும் அட போடவைக்கிறார்.

நாயகி அனிஷாவுக்கு அளவான வசனங்களே. எனினும் பேசாத இடங்களில்கூட இவரது விழிகளில் கொட்டுகிறது உரை அருவி.

இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருக்கும் நடராஜசிவம் நாயகியின் தந்தையாக வரும் காட்சிகளில் நம்மூர் கல்யாண்குமார்,ராஜேஷ் போல கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி மனசுக்குள் நங்கூரமிடுகிறார்.

கொழும்பு, வவுனியா, கிராமப்புற பகுதிகள் என பாஸ்போர்ட், விசா எதுவுமின்றி, தியேட்டர் டிக்கெட் கட்டணத்திலேயே இலங்கையை சுற்றி பார்த்த திருப்தி. ஒளிப்பதிவாளருக்கும் தரலாம் ஒரு பூங்கொத்து.

கதை, கதாநாயகன் தவிர படத்தில் இருக்கும் இன்னொரு ஹீரோ இசை. 'எழுது எழுது அன்பே ஒரு கடிதம்...' 'நதியின் பெயரில் பிறந்தவளே....' 'யாழ்தேவியில்....' போன்ற பாடல்கள் சுக ராகங்களாய் செவியினிக்க செய்கிறது.

சில இடங்களில் நிசப்தங்களை கடைபிடித்து பின்னணி இசையிலும் நேர்த்தியை நிறைத்துள்ள இசையமைப்பாளர் உதயாவுக்கு நல்ல எதிர்காலம் உதயமாக வாழ்த்துக்கள். இரயில் பயண காட்சிகளில் பின்னணிக்கு எடுத்துள்ள சிரமங்களும் புரிகிறது.

பாடலாசிரியர் வசிகரனின் வரிகளிலும் கலப்படமற்ற தூய்மை பாராட்டுக்குரியது.

'தமிழ்நாட்டுக்கு தங்கள் உடமைகளை விட்டுட்டு அகதியா வந்தவங்கபோலதான் என்னோட காதலியை இழந்து நானும் ஒரு அகதியா திரும்பிப் போறேன்' பேனாவில் கண்ணீர் ஊற்றி எழுதியதைபோல மசை கனக்கச் செய்யும் அந்த வசனம், தியேட்டரை வி்ட்டு வெளியே வந்தும் எதிரொலித்துக்கொண்டேயிருக்க

Edited by Tamizhvaanam

பாராட்டுகள் அண்ணா படத்தின் விமர்சனங்களை பார்கும் போது படக்குழுவினரின் உழைப்பு தெரிகின்றது காதல் கடிதம் படம் அவுஸ்திரேலியாவில் திரையிடப்படுமா

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.