Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூபாய் ஒரு லட்சத்துக்கு கார் ரெடி! *அறிமுகம் செய்தது டாடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரூபாய் ஒரு லட்சத்துக்கு கார் ரெடி! *அறிமுகம் செய்தது டாடா

fpn01zi6.jpg

புதுடில்லி :உலகளவில் மிக விலை குறைந்த காரை, டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, டில்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார்;

ரூ. ஒரு லட்சம் விலையுள்ள. புதிய காருக்கு டாடா நானோ என பெயரிடப்பட்டுள்ளது.டில்லி பிரகதி மைதானத்தில் நடக்கும் 9வது வாகன கண்காட்சியில் ரூ. ஒரு லட்சம் காரை ரத்தன் டாடாவே ஓட்டி வந்து அறிமுகப்படுத்தினார். காரின் கதவை திறந்து அவர் வெளியே வந்ததும், ஏராளமான போட்டோகிராபர்கள் படங்களை எடுத்துத் தள்ளினர். கண்காட்சியில் பங்கேற்றவர்கள் பலத்த கரகோஷத்துடன் ரத்தன் டாடாவை வரவேற்றனர். மஞ்சள், சிவப்பு, சில்வர் என மூன்று வண்ணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு மற்றும் 2 டீலக்ஸ் ரகங்களில் இவ்வகை கார், வரும் செப்டம்பரில் விற்பனைக்கு வரும். ரூ. ஒரு லட்சம் கார் உருவான கதை! :உலகளவில் மிகவும் விலை குறைந்த காரை, டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, டில்லியில் அறிமுகப்படுத்தினார்; இதன் விலை ரூ. ஒரு லட்சம். இந்தியாவில் மாருதி 800 ரக காருக்கு, இந்த கார் கடும் போட்டியை ஏற்படுத்தும். புதிய காருக்கு டாடா நானோ என பெயரிடப்பட்டுள்ளது.இந்தியாவ

என் அண்ணர் சொன்னார், 3000 டாலர் கார் சரியான மலிவுதான். ஆனால் அதற்கு பிறகு செலவு வந்தால் திருத்துவதிலும் பார்க்க இன்னுமொரு 3000 டாலர்கள் கொடுத்து கார்வாங்கலாம் என்று. சொல்லியதில் உள் குத்து இருக்கிறது என்பது மட்டும் விளங்குது. வேண்டிவிட்டோம் என்று செலவுகளையும் கூட்டிக்கழித்தால் 15000 டாலர்கள் நாளை வரலாம். காரணம் சும்மா இப்படி சீப்பாக கார் செய்வதென்றால் எங்கேயோ பாவிக்கபடும் பொருள்கள் தரம் குறைந்த உற்பத்திபொருள்களால் செய்யப்பட்டிருக்கவேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கார் ஒன்றை சுயமாக உற்பத்தி செய்தமட்டில் டாடாவை போற்றவேண்டும்தான். எனினும் இவ்வாறான சிறிய கார்களை சிறிய எஞ்சினும் நான்கு சக்கரங்களும் பொருத்தப்பட்டு கூரையுடன் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு ஆட்டோ என்றுதான் சொல்ல முடியும்.

என் அண்ணர் சொன்னார், 3000 டாலர் கார் சரியான மலிவுதான். ஆனால் அதற்கு பிறகு செலவு வந்தால் திருத்துவதிலும் பார்க்க இன்னுமொரு 3000 டாலர்கள் கொடுத்து கார்வாங்கலாம் என்று. சொல்லியதில் உள் குத்து இருக்கிறது என்பது மட்டும் விளங்குது. வேண்டிவிட்டோம் என்று செலவுகளையும் கூட்டிக்கழித்தால் 15000 டாலர்கள் நாளை வரலாம். காரணம் சும்மா இப்படி சீப்பாக கார் செய்வதென்றால் எங்கேயோ பாவிக்கபடும் பொருள்கள் தரம் குறைந்த உற்பத்திபொருள்களால் செய்யப்பட்டிருக்கவேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

அட உங்களுக்கோ உங்கள் அண்ணருக்கோ இன்னும் வாகனங்கள் வாங்கிய அனுபவமில்லைப் போல!! புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட வருடங்கள் பாவனை உத்தரவாதமுண்டுங்க. அப்போது மேற்கொள்ளப்படும் திருத்தச் செலவுகளுக்கு விற்பனையாளர்கள் தான் பொறுப்புங்க. :lol::(

இன்றைய நிலையில் டாடா அறிமுகப்படுத்திய இக்கார் தான் உலகத்திலேயே குறைந்த விலைக்காராக இங்குள்ள (சுவிஸ்) பத்திரிகைகளிலேயே பாராட்டிச் செய்திகள் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் நம்மவர்களுக்கு இப்படி ஏதாவது சாதிக்க முடியாவிட்டாலும் ஏதாவது குறையாக எழுதினால்த்தான் ஆத்மதிருப்தி அல்லது புரண்டு புரண்டு படுத்தாலும் நித்தா வராதுங்க. :(:(

புபுபுபுபுபுபுபுபுபுபுபுபு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலிவான கார்தான் அடிபட்டால் காரும் சரி ஆளும் சரி.

அட கப்பி

அதற்குள்ளே காரை ஓடிப்பார்த்திவிட்டீர்கள் போல. கார் என்ன நெருப்புப்பெட்டியிலேயா செஞ்சிருக்காங்க. பாவிங்க சொல்லவேயில்லை. :lol::(

ஒரு செய்தியை இணைக்கும்போது அதனை நீங்கள் வாசித்துப் பார்ப்பதில்லையா?????????

நீங்கள் இணைத்த செய்தியில் தான் அக்காரின் பாதுகாப்புவிடயம் பற்றி இருக்கிறதே!!!!!!

இரண்டு சக்கர வாகனங்களில் இருந்து காருக்கு மாற துடிப்பவர் களுக்கு, டாடா நானோ கார் மிக பொருத்தமாக இருக்கும். அந்த கார்கள் வெளியிடும் புகையால் சுற்றுச் சூழலுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படும் என அச்சமூட்டினர். ஆனால், டாடா நானோ கார் அனைத்து வகையான மாசு கட்டுப்பாட்டு சோதனைகளையும் கடந்தே வந்துள்ளது. குறிப்பாக, பாரத் ஸ்டேஜ்-3 சோதனையைக் கண்டுள்ளது. விலை குறைந்த கார் பாதுகாப்பாக இருக்காது என்ற கவலை வேண்டாம். காரின் முன் பகுதியை வேகமாக மோதச் செய்யும் சோதனை மற்றும் பிற பாதுகாப்பு சோதனைகளை சூடாடா நானோ' கார் கடந்து வந்துள் ளது.மாருதி 800 ரக காரை விட இந்த கார் எட்டு சதவீதம் அளவே நீளம் குறைவானது. முன்பக்க பம்பரில் இருந்து பின்பக்க பம்பர் வரை இந்த நீளம் கணக்கிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காரின் உட்புற இடவசதியை பொறுத்தவரை, மாருதி 800 ரக காரை விட இந்த கார் 21 சதவீதம் அதிகம் கொண்டது. 624 சி.சி., திறன் கொண்டது. 33 குதிரை சக்தி கொண்ட பெட்ரோல் இன்ஜின் கொண்டது. காரின் பின் பகுதியில் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஒருமையில் எழுதியது திருத்தப்பட்டுள்ளது. யாழ்பிரியா

Edited by yarlpriya

வசம்பு அண்ணை உங்களை எதிர்த்து இந்த தங்கை கதைக்கிறாள் என்று நினைக்காதீங்கோ. என் அண்ணன் சொன்னார் நீங்கள் கார் ஓடாம இவ்வளவு காலமும் இருந்தபடியால உங்களுக்கு, இந்த இன்சூரன்ஸ் மட்டர் அறிவு மட்டமாம் என்று. ஒரு கார் 3000 டாலர்களுக்கு விற்கும் போது, அதன் பாவனை எப்படியிருக்கும் என்று தெரியாமல், எந்த இன்சூரன்ஸ்சும் ரிஸ்க் எடுக்காதாம். ஒரு லட்ச்சம் இந்தியாவில. எனி இம்போர்ட் ரக்ஸ் அல்லது உற்பத்திவரி, ரோர்ட் ரக்ஸ், சுமூத்தான் டோட்டிற்கும், பள்ளம் புட்டி உள்ள இந்திய ரோட்டிற்குள்ளாள ஓடுற கார்களுக்கு இன்சூரன்ஸ் கொடுக்கிறதில பல இடைஞ்சல்கள் இருக்குமாம்.

அதைவிட மரியாதை இல்லாம சனமும் பார்க்குமாம் வினோதமாக. இங்கே குசும்பு அண்ணை அந்த சீப்பான காரில போறார் என்றாம். ஸ்டேட்டஸ் பார்க்கிறவரா நீங்கள் இல்லை என்றா பேசாம சைக்கிளிலேயே போயிரலாம். சனத்திட லொல்ளு தாங்கமுடியாமல்.

அட அட உங்களுக்கோ, உங்க அண்ணருக்கோ புதுக்கார் வாங்கிய அனுபவம் தான் கிடையாது என்று நினைத்தேன். ஆனால் பொதுவான விடயங்களிலும் அனுபவம் கேள்விக்குறியாக இருப்பது கவலையளிக்கின்றது. ஒரு வாகனத்தைத் தயாரித்தவுடன் அதனை அவர்களால் விற்பனைக்கு விடமுடியாதுங்க. அதற்குரிய சோதனைகளில் வெற்றியீட்டிய பின்தான் அது விற்பனைக்கு வருமுங்க. தற்போது வந்துள்ள டாடாவின் இக்கார் பற்றி அந்தத்துறையில் அனுபவமுள்ள வெளிநாட்டவர்களே அதன் தொழில்நுட்பமுட்டபட அனைத்தையும் விளக்கி பாராட்டிச் செய்திகள் வெளியிட்டிருக்கின்றார்கள். அவற்றை நீங்கள் படிக்கவில்லைப் போலும். நேரம் கிடைக்கும் போது உங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பவற்றையும் அறிந்து கொள்ள முயலுங்கள். அப்போதுதான் கொஞ்சம் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம். ஒரு வாகனத்தின் விலையை வைத்து எந்த இன்சூரன்ஸ்சுங்க ரிஸ்க் எடுக்கத் தயங்கியது. (2008 ஆரம்பத்திலேயே பெரிதாக ஜோக் சொல்ல ஆசை போல) இதுவரை நாங்கள் அறியவில்லை. அப்படி ஏதாவது நீங்கள் வைத்திருந்தால் அதனை அறியத் தாருங்களேன். :rolleyes::rolleyes:

ஆரம்பத்தில் வாகனம் பழுதடையலாமென்றீர்கள். இப்போ இன்சூரன்ஸ் பிரைச்சனை வரும் என்கின்றீர்கள். பார்த்துங்க போறபோக்கில் உங்களுக்கே ஏதாவது பிரைச்சினை வந்துவிடப் போகின்றது. :lol::rolleyes:

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கார் ஐரோப்பா றோட்டுக்கு சரிவராதாம்.அப்புடி இஞ்சத்தைக்கு ஏத்தமாதிரி சரிப்படுத்தி எடுக்குறதேண்டால் பதினைஞ்சுக்கு மேலை தேவையாம்.இந்த விலைக்கு இஞ்சை எக்கச்சக்கமான கார் அந்தமாதிரி வாங்கலாமாம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த குட்டி கார் வட அமெரிக்கா பக்கம் இந்த விலைக்கு வந்தால் சராசரி 3 வருடங்களுக்கு பாவித்தாலே போதும். ஆனால் Snow காலத்தில் தள்ளிக் கொண்டு தான் போகனுமோ தெரியாது. if we use in summer time will be ok.

இந்த குட்டி கார் பற்றிய விபரங்களை அறிய

http://articles.moneycentral.msn.com/Inves....aspx?GT1=10827

http://www.tatapeoplescar.com/tatamotors/

http://www.tatapeoplescar.com/tatamotors/i...d&Itemid=95

கார் செய்வது இப்போது சைனாக்காரனின் ரோய்ஸ்மாதிரி ஒரு சதத்துக்கும் உதவாததுகளாகத்தான் இருக்கும். அதில் பாவிக்கும் பிளாஸ்டிக் பாவிச்ச பிளாஸ்டிக்கினை முதலில் அச்சுக்குள் ஊற்றி அதன் பின்பு, மேலால் கடினமான பிளாஸ்டிக்கினை ஊற்றி வார்த்து இப்போது சைனாவில் கார் செய்கிறார்கள். அது 5000 டாலர்களுக்கு. அது அசல் கையுண்டாய் போல இருக்குமாம். ஸ்போர்ட் லுக்குமாம். 2010 ஆம் ஆண்டில் இது உலகத்தில் கொடிகட்டிப்பறக்குமாம். ஆனால் இங்குள்ள கார்கொம்பனிகள், அரசுகள் கடும் சட்டங்கள் போட்டு, குவாலிட்டி இல்லாத கார்கள் பாவனைக்கு விடுவது ஆபத்து என்று சட்டம் இயற்றப்போகுது.

பாதுகாப்பு எங்கே இருந்து தொடங்குகிறது. ரயரில், ஸ்ரேங் வீலினை ரயருடன் இனைக்கும் இணைப்புக்களில் பாவிக்கப்படும் இரும்பு, அலுமினியம் போன்றவற்றின் உறுதியில் தங்கியிருக்கிறது. கியர் பொக்ஸ்ஸில் பாவிக்கப்படும் பாகங்கள் செய்யப்படும் பொருளில் அதன் தேய்வுத்தன்மை தங்கியுள்ளது. என் ஞினின் உறுதியில் தங்கியிருக்கிறது. போன கிழமை அவுஸ்திரேலியாவில் போன வருடம் சிறந்த காரென விற்க்கப்பட்ட 40 ஆயிரம் டாலர்கள் பெறுமதியான கொல்டன் கார்களின் எண்ணிக்கை 85,000. ஆனால் இந்தக்கிழமை இந்தக்காரினை வாங்கியவர்களை திருப்பி ஒப்படைக்கும் படி வேண்டுகோள்விடப்பட்டிருக்கி

என்ன தான் இருந்தாலு மாட்டு வண்டியில போற மாதிரி வராது என்ன கு.சா தாத்தா அதில போறது தனிசுகம்... :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு

கு.சாவிற்கு மட்டுமல்ல உமக்கு முதல் கருத்து எழுதிய தீபிகாவிற்கும் மாட்டுவண்டி தான் இலாயக்கு. கார் இடையில் பழுதுபட்டால் அம்போ தான். ஆனால் மாட்டுவண்டி இடையில் பழுதுபட்டால் கடைசி மாட்டின் மேல் ஏறியாவது வீடு போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால் என்ன மிருகவதையென்று பொலிஸார் பிடிச்சு உள்ளே போடாமலிருக்க வேண்டும். :D:lol::)

Edited by Vasampu

இந்த வாகனம் இந்தியாவில் பாவனைக்கு உகந்தது. மழை, வெயில், மற்றும் மாசுக்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். மோட்டார் சைக்கிள், ஓட்டோ போன்றவைக்குப் பதிலாக சின்னக்கார்.

தீபிகா: நீங்கள் மற்றவை என்ன நினைப்பினம் என்றதை கருத்தில் வைத்து தான் கார் வாங்குவியள் போல. அட.. சரிதான்.

ஜம்மு

கு.சாவிற்கு மட்டுமல்ல உமக்கு முதல் கருத்து எழுதிய தீபிகாவிற்கும் மாட்டுவண்டி தான் இலாயக்கு. கார் இடையில் பழுதுபட்டால் அம்போ தான். ஆனால் மாட்டுவண்டி இடையில் பழுதுபட்டால் கடைசி மாட்டின் மேல் ஏறியாவது வீடு போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால் என்ன மிருகவதையென்று பொலிஸார் பிடிச்சு உள்ளே போடாமலிருக்க வேண்டும்.

வசபண்ணா!!

எனக்கு முதல் கருத்து எழுதினவா தீபிகா இல்லை அவர் தான் புலிமாமா :( (எத்தனை கெட்டப்பில தான் அவரும் வாறார் ஆனா எல்லா கெட்டபிலையும் சொதப்பிவிடுறார் :( )..... அப்ப வசபண்ணா ஒரு வேளை மாட்டுவண்டி பழுதாகினவுடனே மாட்டில ஏறிபோகக்க மாடு செத்து போச்சு என்ன செய்யிறது நேக்கு டவுட்டா இருக்கு.... :D (பிறகு வந்து ஏசுறதில்லை சொல்லி போட்டேன் :( நான் பேபியாக்கும் உங்களிட்ட கேட்டு தான் அறிவை வளர்க்கிறேன் :( ).....பொலிசிற்கு சம்திங் கொடுத்து வந்திடலாம் வசபண்ணா நம்ம நாட்டிலே வெளிநாட்டிலே என்றா தான் கொஞ்சம் கஷ்டம்... :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு

உவ்விடயம் எனக்கு ஏற்கனவே தெரிந்து தான் தீபிகா என்ற பெயரில் அவர் வந்து குழைந்து குழைந்து எழுதியபோது அவரைச் சீண்டி அவர் நிஜத்தை வெளிக் கொணர்ந்தேன். இப்போ பாருங்கள் அவர் லோகோவும் மாறி எழுதும் முறையும் மாறி சொதப்பல் எல்லாம் தெரிந்து விட்டது. :unsure::wub::wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.