Jump to content

ஊருக்குப் போனோன் - வாசுதேவன்.


Recommended Posts

பதியப்பட்டது

நண்பர்களே,

வருடங்கள் பல தாண்டி வீடு வருதல் என்பது ஒரு துன்பகரமான அனுபவம். பிறந்த வீடு மட்டுமே வீடு என எண்ணும் ஒரு உணர்வு என்னுடன் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது. பல வீடுகளைக் கடந்து போக வாழ்க்கை எம்மைத் தண்டிக்கிறது என்பது உண்மைதான். இருப்பினும் இளமையும், பெற்றார் அரவணைப்பும் சகோதரர்துவ வாழ்க்கையும் கனவுகளும் எனச் செறிந்த குழந்தை பருவம் எமது வாழ்வின் தலைநகரம். நாம் எங்கு சென்ற போதும் எம்மைத் தொடருவதும் அதுதான்.

"நான் பயணிப்பதற்கு ஏறி அமர்ந்த எல்லாத் தொடரூந்து வண்டியுடனுடம் சமாந்தரமாக யாழ்தேவியும் ஓடிக்கொண்டிருக்கிறது" என ஒரு கவிதையில் நான் எழுதியிருக்கிறேன்.

இவ்வகையில் மிகப்பிந்திய காலங்கடந்து நான் எனது நாட்டுக்கும் வீட்டுக்கும் செல்ல நேர்ந்த அனுபவத்தை தங்களுடன் பகிரப்போகிறேன். (தொடர்ச்சியான முறையில்).

-------------------------------------------------------------------------------

பனைமரக் காடே... பறவைகள் கூடே...

********

உறவுகளைத் தேடி என் ஊருக்குள் சென்றேன்.

முற்றத்தில் வைத்த முல்லை

என் கொல்லைக்குள் இன்று இல்லை.

வேலியில் பூத்திருந்த பூவரசும் முள்முருக்கும்

சாலைக் குயில்களின் சங்கீதச் சோலைகளும்

இன்று பாலைப்பெருவெளியாய்...

-மகாகவி.-

*********

இருபத்தி நான்கு மணிநேரம் கூடக் கடப்பதற்குள் என் கனவைச் சென்றடைவேன் என்று நான் அங்கு சென்றடையும் இறுதிக்கணம் வரையும் நம்பவில்லை.

பலாலி விமான நிலையத்தை நோக்கி விமானம் தரையிறங்க முற்படுகையில் ஏதோவொன்று என்னில் இறுகிவருவது தெரிந்தது. சிறிய சிந்தனைப் பரப்பிற்குள் அல்லோலமாக மடையுடைத்த உணர்ச்சிக் குழம்புகள் கணப்பொழுதில் மூளையின் அனைத்து அடுக்குகளிலும் ஆவேசப் பிரவாகம் செய்து உடலெங்கும் இறுக்கத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது. தசைநார்கள் இறுக்கம் கண்டு அசையாமையைத் தேடின.

பிரக்ஞையின் ஏதோ ஒரு நுண்துண்டம் நடப்பதன்மீது சுயவிளக்கம் ஒன்றிற்கான எத்தனங்கள் செய்து தோல்விகண்டு கொண்டிருந்தது.

பலாலி விமானத் தளத்தின் மத்தியில் உள்ள ஓடுபாதையில் தரையிறங்கிய விமானத்தை விட்டு வெளியேறியவுடன் இராணுவத் தோற்றங்கள் அச்சமூட்டின. ஆக்கிரமிக்கப்பட்ட தேசமொன்றினுள் தவறுதலாக வந்திறங்கி விட்டேனோ எனவும் ஒருகணம் உணர்வலையோடியது.

விமானத்திலிருந்த பொதிகளையெல்லாம் இராணுவ வாகனமொன்றிலும், பயணிகளை பஸ் வண்டியொன்றிலும் ஏற்றிக்கொண்டு இராணுவப் பரிசோதனைச் சாவடிக்கு எல்லோரும் கொண்டு செல்லப்பட்டார்கள்.

அவரவர் தமது பொதிகளைத் தூக்கிக்கொண்டு இன்னொரு பஸ்வண்டியொன்றினுள் ஏறவும், பஸ் யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்பட்டது. போரின் தழும்புகள் நிறைந்த பிரதேசமொன்றின் மௌன அலறலினால் செவிடாகிப் போனவர்கள் போல் பஸ்வண்டிக்குள்இருந்தோர் உறைந்து போயிருந்தனர். அவர்களில் பலர் என் போன்றே வெளிநாடுகளில் இருந்து வந்ததை அவர்களின் பொதிகளின் தோற்றங்கள் உறுதி செய்தன. செப்பனிடப்படாத தெருக்களினால் வாகனம் மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே காணப்படும் இராணுவச் சோதனைதச் சாவடிகளும், காவலரண்களும் அச்சமூட்டுவதாயிருந்தன. காய்ந்து போன தெருக்களில் இருந்து புழுதி கிளர்ந்து வாகன யன்னல்க@டாக நாசியை வந்தடைந்த போது, மண்ணின் மணம் மீண்டும் ஞாபகத்தில் கிளர்ந்தெழுந்தது.

பிற்பகல் நான்கு மணியிருக்கும். இயற்கை எழுந்தமானமாக மதமதத்திருந்தது. பசுமை மாசிமாத வெய்யிலையும் மீறித் தன்பாட்டில் மிளிர்ந்து கொண்டிருந்தது. எனக்குள் ஆழ்ந்து உறைந்து இக்கணம் வரையும் காத்துக்கொண்டிருந்த இந்தத் தேசத்தின் இருபத்தியிரண்டு மாசிமாதங்கள் உருகிக் கரைந்து என் உயிரை நனைத்துக் கொண்டிருந்தன. நாசியை வந்தடைந்த புழுதிகளுக்குப் புனிதப் பரிமாணம் கிடைத்தது. "நான்" புழுதியிலிருந்து மீண்டும் பிறந்து கொண்டிருந்தேன். "தேசமற்றவன்" என ஐரோப்பியத் தெருக்களிலே கூறிய எனக்குத் தேசமும் பிறந்துகொண்டிருந்தது. எதிர்பாராத கணமொன்றில் இன்னொரு பிறப்பிற்குள் தூக்கியெறியப்பட்டவன் போலவும், உலகம் தோன்றிய நாள் முதல் இப்பிறப்புத்தான் உண்மையானதாகவும் மற்றவையனைத்தும் கனவுகளாக இருக்குமோ எனவும் எண்ணத் தோன்றியது.

உயர்பாதுகாப்பு வலய எல்லையைத் தாண்டியபோது மனித நடமாட்டங்கள் அதிகரித்தன. சைக்கிள் போக்குவரத்துகள் சரளமாகின. கைவிடப்பட்ட இயற்கையின் சுயம் மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட விவசாய நிலங்களாக காட்சியளித்தன. அதே சந்திகள், சஞ்சலமெதுவுமின்றித்தெருவைக

Posted

ஊருக்குப்போன ஞாபகத்தொடர் நன்றாகப்போகின்றது... அடுத்த தொடர் காணும் ஆவலில் உள்ளேன் தொடருங்கள்

Posted

வாசு நான் ஏற்கனவே இதனை படித்திருந்தேன் ஆனாலும் யாழ் கள வாசகர்களிற்காக இதனை தொடர்து எழுதவும் ஏனெனில் நான் இருபது வருடங்களிற்கு மேலாக எதிர்பார்த்திருக்கும் ஒரு நாள்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.