Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவபெருமானின் சிறைச்சாலை!

Featured Replies

அது ஒரு சிறைச்சாலை. அங்குள்ள கைதிகளையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். இதில் விநோதம் என்னவென்றால் இது சிவபெருமானின் சிறைச்சாலையாகும்.

இங்கு நூற்றுக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் எல்லை மாவட்டமான நீமாக்கில் இந்த சிறைச்சாலை உள்ளது.

இப்படி ஒன்றை கேள்விப்பட்டதும், உடனடியாக அங்கு புறப்பட்டுச் சென்றோம். அங்கு ஏராளமான கைதிகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தனர். பல தடுப்புகளுக்கு இடையே ஏராளமான கைதிகள் இருந்தனர்.

அதில் இருந்த ஒரு கைதி எங்களிடம் பேசினார். தான் நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதில் இருந்து விடுபட இங்கு வந்துள்ளதாகக் கூறினார். நோய் தீர்ந்த உடன் சிவபெருமானின் முன் அனுமதியுடன் தான் இங்கிருந்து சென்று விடுவேன் என்றும் அவர் கூறினார்.

இப்படிப்பட்டவர்கள் தான் இங்கு கைதிகளாக உள்ளனர். எல்லா கைதிகளுமே சிவபக்தியில் மூழ்கி திளைத்தனர். தங்களுடைய உடலின் மீது சேற்றை பூசிக் கொண்டு சிவ நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

இங்குள்ள சிவலிங்கத்தை திரிசாவமஹாதேவ் என்று கூறுகின்றனர். இது சுயம்பு லிங்கமாகவும் கருதப்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது இந்த சிறைச்சாலை என்றழைக்கப்படும் கோயில். இங்குள்ள குளத்தில் இருந்துதான் கங்கை பிறந்ததாகவும் ஒரு நம்பிக்கை இங்குள்ள மக்களிடையே நிலவுகிறது.

இந்த குளத்தின் சேறு எந்த நோயையும் குணப்படுத்திவிடக் கூடிய சக்தி பெற்றது என்று கூறினார். இந்த சேற்றை எடுத்து பூசிக் கொண்டுதான் கைதிகளாக உள்ள நோயாளிகள் சிவநடனம் புரிகின்றனர்.

இங்குள்ள சிறைக்கு வர நினைக்கும் நோயாளிகள் முதலில் கோயில் நிர்வாகத்திடம் கடிதம் எழுதி ஒப்புதல் பெற வேண்டும்.

அவருக்கு அனுமதி வழங்கப்பட்டால் கைதிக்கான அடையாள அட்டை வழங்கப்படும். அங்கு வந்து தங்கும் நோயாளிக்கு ஆகும் சாப்பாட்டு செலவை கோயில் நிர்வாகமே எடுத்துக் கொள்கிறது. சிறைக் கைதிகள் (நோயாளிகள்) அனைவரும் ஒவ்வொரு நாளும் அந்தக் குளத்தில் குளிக்க வேண்டும். அதன் பிறகு அங்குள்ள கல் ஒன்றை தலையில் தூக்கிக் கொண்டு ஐந்து முறை கோயிலைச் சுற்றி வலம் வர வேண்டும்.

கோயிலின் அனைத்து இடங்களும் தூய்மையாக பார்த்துக் கொள்ள வேண்டியது கைதிகளின் பொறுப்பு. இப்படி இங்கு தங்களை பிடித்துள்ள நோயை குணப்படுத்திக் கொள்ள சில நாள் கணக்கிலும் மேலும் சிலர் மாதக் கணக்கிலும் சிலர் ஆண்டுக் கணக்கிலும் இருக்கின்றனர்.

அவர்களது நோய் குணமானதும் அதனை அவர்களின் கனவில் வந்து சிவபெருமான் கூறுவார் என்று கூறுகின்றனர். அந்த கனவு கோயில் நிர்வாகிக்கும் வர வேண்டும். அப்போதுதான் அவர் கைதியை விடுதலை செய்வார்.

இந்த கோயிலைப் பற்றி கேட்டதும் பார்த்ததும் எங்களுக்கு மிக விநோதமாக இருந்தது. நம்புவதற்கும் கடினமாக இருந்தது. ஆனால் இங்குள்ள கைதிகளின் உறவினர்கள் தங்களுக்குத் தெரிந்த பலர் குணமடைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

நீங்கள் என்ன கூறுகிறீர்கள். எங்களுக்கு கூறுங்கள்!

http://tamil.webdunia.com

  • கருத்துக்கள உறவுகள்

சிவபெருமானுக்கு வைத்தியநாதன் அதாவது வைத்தியர்களுக்கெல்லாம் தலைவன் என்றவோர் பெயருண்டு. பழைய வைத்தியக்குறிப்புகள் எழுதப்பட்ட வாகடத்திலும் சித்த வைத்திய நூல்களிலும் சிவபெருமானால் செய்யப்பட்ட மருந்துகள் பற்றிய விபரங்கள் உள்ளன. பல நோய்களுக்கும் மருந்தாகப் பாவிக்கப்படும் கஞ்சாவைச் சிவமூலிகையென்று குறிப்பிடுவார்கள். இலங்கை போன்ற நாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கஞ்சாவை மருந்துகளில் கலப்பதற்கு சித்த வைத்தியர்களுக்கு அரச அனுமதி அளிப்பது வழக்கத்திலுள்ளது. தாந்தரீக யோகம் எனப்படும் ஒருவகை யோகமுறையைச் சிவனும் உமையும் செய்ததாகவும் அது மிகவும் சிறந்த யோகக்கலையென்றும் நோயற்ற வாழ்வுபெற அந்த யோகா பெரிதும் உதவுமென்றும் சொல்கிறார்கள். சிவன் வட இந்தியாவில் இமயமலைச் சாரலில் முற்காலத்தில் வாழ்ந்த சிவந்தமேனியும்(பொன்னார் மேனியன்), செம்பட்டைத் தலையும் கொண்ட ஒரு சாதாரணமனிதனாவார். கிட்டத்தட்ட இன்றைய வெள்ளையர்களின் சாயலுடையவர். பின்னர் தனது படையோடு தென்னாட்டைக் கைப்பற்றினார். இருக்கு வேதகாலத்திற்குப் பின்னரே சிவபெருமானின் ஆட்சிக்காலம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் கடவுளாக வழிபடப்பட்டார். முருகனும் இவ்வாறே ஓர் படைத்தளபதியாக இருந்து பின்னர் கடவுளாக வணங்கப்பட்டவர். இந்த வகையில் நோக்கும்போது சிவனின் மூலிகை வைத்தியம் உட்படப் பல யோகா முறைகளிலும் உண்மைகள் இருக்கலாமென்றே எண்ணத் தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிட்டாங்கய்யா..தொடங்கிட

்டாங்கள்

இந்த சிறைச்சாலை மண்ணை கொண்டு போய் வன்னியில் வைத்தால் எமது போராளிகள் ஒவ்வொருவரும் மரணிக்காமல் எல்லோரும் புத்துயிர் பெற்று வாழ்வார்கள் நாமளும் 20,000 இளைஞர்களை பறிகொடுத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

வெங்காய செய்திகளை யாழில் போட்டு அதை வெங்காயம் போல் விவாதிப்பதை தயவு செய்து தவிர்க்க சொல்லி என்னொரு வெங்காயம் சொல்லுகிறது :D

எமது மனவரங்கில் தொடர்ச்சியாக,முடிவில்லாது கொட்டபடும் எண்ணங்களின் இயல்புகளை கருத்துகளின் தன்மைகளை,பார்வைகளின் அந்தரங்க நோக்குகளை நாம் விழிபுணர்வுடன் விசாரணை செய்து பார்க்க தவறினால் கருத்தாதிக்க சிறையில் இருந்து நாம் விடுதலை பெறுவது சாத்தியமில்லை."

-தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம்

கருத்தாதிக்க சிறையில் இருந்து நாம் எப்போது விடுதலை பெறுவோம் என்று அந்த சிவனிற்கே தெரியாது. :lol:

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னையா கொடுமையா இருக்குது. சித்தவைத்தியத்தைப் பற்றி எழுத வெளிக்கிட்டா தேசிய இனப் பிரச்சனையையும் வன்னிக்களத்தையும் கொண்டு வந்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கம் முடிச்சுப் போட்டு ஏதோ பிதற்றுறீங்கள். நாலாம் கட்ட ஈழப்போரை நினைச்சித் தல கழண்டு போச்சுதுபோல. அனுமார் சஞ்சீவி மலையக்கொண்டுவந்து இராமர்ர பக்கத்தில செத்துக்கிடந்த சேனையளயல்லாம் எழுப்பின புழுகுகளை வச்சிக்கொண்டு இஞ்சயும் நாங்கள் சாகிற ஆட்களையெல்லாம் எழுப்பலாமெண்டு சொல்ல வரயில்ல. அந்தக்காலத்தில இருந்த சில மனிசர்கள்தான் சித்தவைத்தியத்தைக் கண்டுபிடிச்சவையெண்டும் இந்தியாவில பழைய மருத்துவ ஏடுகளில சித்த வைத்தியம் பற்றி விளக்கமாக இருக்குதெண்டும் அதை ஆராய்ச்சி பண்ணி இப்போது பல நோய்களைக் குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகுதெண்டதையும் அறிவிக்கத்தான் சில விளக்கங்களச் சொன்னநான்.

சித்த வைத்தியம் பற்றின கருத்துக் களத்தையும் வன்னிக்களமெண்டு நினைச்சுக்கொண்டு வெங்காயத்தனமாச் சிந்திச்சு எல்லாத்தையும் போட்டுக்குழப்பி ஏதோ பெரிய தேசியவாதியெண்ட நினைப்புல இப்பிடிப் பசப்பிக்கொண்டு மற்றவைய முட்டாளாக்கப் பார்க்கிறத்தில என்ன வரப்போகுது. இந்தக் களத்தை ஏதோ தங்கட குஞசியப்பு வீட்டுக்களமெண்டு நினைச்சுக்கொண்டு ஆழுக்காள் விசர்ப்பதில்களை எழுதிக்கொண்டு சற் பண்ணிக் கொண்டிருக்கினம். யாராவது எதையாவது சிந்தனையத் தூண்டிற விதமா எழுதினா மட்டும் ஏங்கவூட்டுக் களத்தில எங்களப் பசப்ப விடாம இவையார் வந்து எழுதுறதுக்கு எண்டு துள்ளிக் குதிக்கினம். அப்போ நடத்துங்கோ உங்கட விசர்ச் சற்றை. யாழ்க் களம் உங்களைப் போன்ற அலட்டல் பேர்வளிகளின் களமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா கருவே நான் தேசியவாதி இல்லை சாதாரண ஜில்மார் பேர்வழி இருந்திட்டு எப்பவாதும் வருவேன் கருத்தும் வைப்பேன் எனகேற்ற கருத்தை வைத்தா ஜால்ரா போடுவேன் வித்தியாசமான கருத்தை வைத்தா தேசியத்தை கொண்டு வருவேன்,அதாவது தேசதிற்கு ஆதரவா கருத்தை வைத்தா தேசிய விரோதமாக கருத்தை கொண்டு வருவேன் தேசியதிற்கு விரோதமான கருத்தை வைத்தா தேசியதிற்கு ஆதரவா கருத்தை கொண்டு வருவேன்,நம்ம வழியே தனிவழி அதாவது நாம சினிமா பேர்வழி தப்பா நினைத்திடாதையுங்கோ நானொரு தேசியவாதி என்று, எனது பிழைப்பிற்காக தேசத்தின் குரலின் கருத்துகளை எடுத்து விடுவேன்,கோவித்திடாதையுங்கோ இல்லை சும்மா தான் கேட்கிறேன் உங்களிற்கு ஒரு தடிமன் வந்தா பனடோல் போடாமல் இந்திய சித்த வைத்தியத்தையா நாடுகிறீர்கள் உடனே போய் பனடோல் தானே போடுறியள் இல்லை மருந்து ஒன்றும் எடுக்காமல் ஆலேலோயா என்று பிரார்த்தனையா செய்கிறீர்கள். :lol:

"சிவப்பு சிந்தனைகள்" , "தேசிய போராட்டம்" பாருங்கோ இரண்டிற்கும் அடியேனிற்கு ஒற்றுமை வேற்றுமை தெரியாது பாருங்கோ,உங்களிற்கு ஏதாவது தெரிகிறதோ இப்ப புலத்தில ஊரில இருந்த சிவப்பு சிந்தனைகள் எல்லாம் "படம்" காட்டீனம் பாருங்கோ அதற்கேற்ற போல புலத்தில வசதிகள் எல்லாம் இருக்குதுங்கோ .அப்ப நானும் வரட்டே. :D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

டியர் மிஸ்டர் புத்தன்

நீங்கள் இக்களத்தின் கருப்பொருளிலிருந்து தடம் புரண்டு மீண்டும் மீண்டும் எங்கோ போகிறீர்கள். உங்களுக்குச் சிவப்புச் சிந்தனையிருக்குமானால் அதைக் கூர்மைப்படுத்திக் கொள்ளுங்கள். சமயங்களை காப்பியங்களை புராண இதிகாசங்களை எப்படிச் சிவப்புச் சிந்தனையின் மூலம் அணுகமுடியுமென்பதை அறிய ராகுல சங்கிருத்தியாயனின் வொட்கா முதல் கங்கைவரை, இருக்கு வேதாகாலத்து ஆரியர்கள் போன்ற நூல்கள் உதவக் கூடும். சமயக் கடவுளர்களை அச்சமயங்கள் கூறும் அதே கற்பனாவாதக் கண்கொண்டு நோக்காமல் காரணகாரியத் தொடர்பு கொண்டு ஆய்வுசெய்யும்போது புத்தி ஜீவித்தனமான சில முடிவுகளுக்கு வரமுடியும். ஒரு காலத்தில் மனிதர்களாக இருந்தவர்களே பின்னர் கடவுளர்களாக வழிபடப்பட்டார்கள் என்று ஆய்ந்தறிவது ஒரு போதும் முட்டாள்தனமானதாகாது. ஒன்றை முற்றாக மறுப்பதிலும் அதை அறிவுக்கண்கொண்டு ஆய்ந்து தெளிதலே சரியான அணுகுமுறையாகும். மனம் நிறையச் சிவப்புச் சிந்தனையால் மறைக்கப்பட்ட நிலையில் இருப்போரில் பலர் எடுத்த எடுப்பிலேயே எதையும் தீர ஆராயாமல் மற்றவர்களை முட்டாளகளாக்கப் பார்க்கின்றனர்.

தலையிடிக்கோ காய்ச்சலுக்கோ பனடோல் குடிப்பதற்கும், சித்த வைத்தியத்திலுள்ள நன்மை தீமைகளை அணுகி ஆய்வதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக நான் எண்ணவில்லை. அதே வேளை ஆல்லேலூயாக்காரன் தனக்குள்ள நம்பிக்கையின் அடிப்படையில் மனம் சம்பந்தப்பட்ட குறித்த் சில வியாதிகளை பிரார்த்தனைமூலம் சுகமாக்குவதிலும் உண்மைகளில்லாமலில்லை. எதையும் தீர ஆய்வு செய்யுங்கள் அதன் பின்னர் முடிவுகளுக்கு வாருங்கள. ஏனென்றால் இவ்வுலகில் நம்பிக்கைகள் பல கோடி. அவற்றை நம்புபவர்களும் பலனடைபவர்களும் பலகோடி. எங்கும் எதிலும் ஏதோவோர் உண்மை பொதிந்திருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.