Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமா திடுக் ஆவேசம்.. ''புலிகளுக்கு ஆயுதம் கடத்துவேன், பெருமையாக!''

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமா திடுக் ஆவேசம்..

''புலிகளுக்கு ஆயுதம் கடத்துவேன், பெருமையாக!''

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலி இயக்கத்தை ஆதரித்தும், அவர்களது புகழ்பாடியும் சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கம், ஜனவரி 25-ம் தேதி 'கருத்துரிமை மீட்பு மாநாடு' நடத்தி முடித்திருக்கிறது! கூட்டணியில் இருக்கும் சிறுத்தைகளின் இந்த சீறல், ஆளும் தி.மு.க-வுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையிலிருந்து வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் பேசிய பேச்சுக்கள் மற்றும் திருமாவளவனின் பேச்சுக்கள் அடங்கிய கேசட்டை திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்ட போலீஸ், அதை அப்படியே தன்னுடைய சட்டப்பிரிவுக்கு அனுப்பி, ரிசல்ட்டுக்காகக் காத்திருப்பதாக கோட்டை வட்டாரத்தில் இருந்து செய்தி கசிகிறது.

எப்படியும் திருமாவளவன் மீதும் விடுதலைச்சிறுத்தை கள் அமைப்பின் மீதும் நடவடிக்கை இருக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். திருமா வளவனை நாம் சந்தித்தோம். அப்போது, அவருடன் இலங்கையைச் சேர்ந்த ரணகுமாரசிங்க பிரேமாலால் என்பவரும் இருந்தார். சிங்களரான இவர், அங்கிருக்கும் எதிர்க்கட்சியான புதிய இடதுசாரி கட்சியின் அரசியல் குழு உறுப்பினர். புலிகளை ஆதரிக்கும் ஒரே சிங்களக் கட்சி இதுதான்.

திருமாவளவனிடம் நாம், ''தடை செய்யப்பட்ட இயக் கத்தை வெளிப்படையாக மாநாடு போட்டு ஆதரிப்பது, இந்திய இறையாண்மையை மீறும் செயல்தானே?'' என்று கேட்டோம். தயக்கமே காட்டாமல் தீர்மானமாகப் பதில் சொல்ல ஆரம்பித்தார் திருமாவளவன்-

''கருத்துரிமை மீட்பு மாநாடு நடத்தியது, இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுக்

கொள்கையில் உள்ள தவறுகளை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டு வதற்காகத்தான். எந்த ஒரு வெளியுறவுக் கொள்கையிலும் மக்கள் பங்களிப்பு வேண்டும் என்பது எங்கள் இயக்கத்தின் கருத்து. விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய நாடாளுமன்றத்தில் கருத்துக் கேட்கவில்லை. இதுசம்பந்தமாக விவாதமும் நடைபெறவில்லை. குறைந்தபட்சம் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடமாவது மத்திய அரசு கலந்து பேசியிருக்க வேண்டும். மக்களின் பங்களிப்பு துளிகூட இல்லாமல் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு, அவர்கள் சொன்னபடி புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதை நாங்கள் எதிர்க்கிறோம்.

முன்பு இப்படித்தான் ராஜீவ் காந்தியும் ஜெயவர்த் தனேவும் போட்ட ஒப்பந்தத்தில் புலிகளின் கருத்தைக் கேட்கவேயில்லை. இதனாலேயே அந்த ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேறவில்லை. இருதரப்பிலும் நிறைய இழப்புகள் ஏற்பட்டன.

தமிழ் ஈழத்தை ஆதரிப்பதையே 'புலிகள் ஆதரவு' என்று இங்கே திரித்துச் சொல்கிறார்கள். ஈழ மக்களுக்கு சோகம் நடந்தாலோ, ஈழப்போரில் உயிரிழப்பு ஏற்பட்டாலோ இரங்கல் சொல்வதுகூட இங்கே தேச துரோகமாகக் கருதப்படுகிறது. தமிழக முதலவருக்கே இதுதான் இங்கே நிலைமை. எங்கள் கருத்துக்களை உரக்கச் சொல்லத்தான் செய்வோம். போலீஸ§க்கும் அரசாங்கத்துக்கும் பயந்து ஓடிஒளிய மாட்டோம்.

நாங்கள் நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டின் செய்தியே, 'புலிகள் விஷயத்தில் தமிழக மக்க ளின் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு அதிகாரிகள் இனி எந்த முடிவெடுத்தாலும் அதற்கு எதிராக நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்' என்பதுதான். இந்திய அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு அதன் அதிகாரிகள் கட்டுப்படலாம், அச்சப்படலாம்... நாங்கள் அச்சப்பட மாட்டோம்!''

''இந்தியாவில் இருந்து கொண்டு இன்னொரு தேசப் பிரச்னையில் இவ்வளவு தூரம் சலசலப்பு உண்டாக்குவது நியாயமா?''

''நான் பிறந்த மண்ணின் மீது பற்றுடையவன்தான். அதேசமயம் என் தாய் நாடு தவறு செய்தால் அதை உரிமையோடு தட்டிக்கேட்கும் பொறுப்பு ஒரு குடிமகனான எனக்கு உண்டு. கடலுக்கடியில் கண்ணிவெடிகளைப் போடுவது, இலங்கை அரசின் அடாவடி செயல்..! கடந்த பத்து வருடத்தில் 200 மீன்வர்களைக் கொன்றிருக்கும் இலங்கை அரசை நம் மத்திய அரசு கண்டித்திருக்க வேண்டும். ஆனால், எங்களைப் போன்றவர்கள் மீது செய்யாத குற்றத்தைச் செய்ததாகச் சொல்லியும் இலங்கைக்கு ஆயுதங்களைக் கடத்துவதாகச் சொல்லியும் பொய்க்குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதும் சொல்கிறேன்... என்னைப் பொறுத்த வரை புலிகளுக்கு ஆயுதம் கடத்தும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றால் அதற்காகப் பெருமைப்படுவேன்!''

''காவல்துறை உங்கள் மாநாட்டுக்கு நெருக்கடிகள் கொடுத்ததாகவும், ஒட்டுமொத்த மாநாட்டையும் கண்காணித்ததைத் தொடர்ந்து உங்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் வரும் செய்திகள் குறித்து..?''

''மாநாடு நடப்பதற்கு முதல்நாள் இரவு, மேடையைப் பிரிக்கவேண்டும் என்று வந்து நின்றார்கள் சென்னை போலீஸார். எங்கள் இயக்கத்துத் தோழர்கள் ஆர்வ மிகுதியால் பிரபாகரனும், நானும் பேசிக் கொண்டிருப்பது மாதிரியான படங்களை கிராபிக்ஸ் முறையில் வடிவமைத்து அதை பேனர்களாக மாநாடு நடந்த இடத்துக்குப் பக்கத்தில் வைத்து விட்டார்கள். இதில்தான் போலீஸ§க்குக் கோபம் வந்திருக்க வேண்டும்.

அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பிரபாகரனின் படங்கள் அகற்றப்பட்டன. ஆனால், 'மாநாடு ரத்து' என்று தமிழகம் முழுக்க செய்திகள் பரவி, எங்கள் இயக்கத்தினர் மறியல் செய்ய கிளம்பிவிட்டார்கள். அவர்களை சமாதானப்படுத்தினேன். என்னைப் பொறுத்தவரை, நான் இந்திய இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. கருத்துச் சுதந் திரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் உரக்கச் சொல்லியிருக்கிறேன். இதற்காக என்மேல் நடவடிக்கை வரும் என்றால், அதை இன்முகத்தோடு வரவேற்கத் தயாராகவே இருக்கிறேன்.''

''ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகும் தமிழகத்தில் இருந்துகொண்டு புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவது சரியா?''

''தமிழக மக்கள் ராஜீவ் கொலைச் சம்பவத்தை மறந்து விட்டார்கள். 'ராஜீவ் கொலையை மறக்க முடியவில்லை' என்று பேசும் இளங்கோவன் முதல் ஜெயலலிதா வரையிலானவர்கள், ராஜீவ் காந்தி இறந்த துக்கத்தில் வேறு வேலையே பார்க்கவில்லையா? தினம்தோறும் பல்துலக்கி சாப்பிடுகிறார்கள், அடுத்தடுத்த பதவிகளுக்காக நித்தம் நித்தம் அரசியல் செய்கிறார்களே..?'' என்று திருமாவளவன் கேட்டு முடிக்க... அவருடன் இருந்த ரணகுமாரசிங்க பிரேமாலால் பேசத் துவங்கினார்-

''இலங்கை அரசாங்கம் செய்து கொண்டிருக்கும் கருத்துரிமை பறிப்புகளைப் பற்றி மாநாட்டில் நான் விரிவாகப் பேசினேன். இலங்கை அரசு போர் என்ற பெயரால் செய்துகொண்டிருக்கும் தீவிரவாதத்தின் எதிர் விளைவுகள்தான் புலிகளின் தீவிரவாதம். வெளியில் வராத இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன், கேளுங்கள்... இலங்கை அரசுக்கு எதிராக சிங்களப் புலிகள் என்ற அமைப்பு உருவாகி வருகிறது. இந்த அமைப்பைப் பற்றி மோப்பம் பிடித்துவிட்ட இலங்கை அரசு, சிங்களப் புலிகளை உருவாக்கிக் கொண்டிருந்த 26 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்து, இருட்டுச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. இந்த அமைப்பைத் தொடங்க காரணமான இலங்கையின் பிரபல பத்திரிகையாளரான ரோஹித பாகன அபயநாயகா இப்போது ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் புகுந்திருக் கிறார்'' என்றார்.

மாநாட்டின் மற்றொரு சிறப்பு அழைப்பாளரான இலங்கை எம்.பி-யான சிவாஜிலிங்கத்திடம், ''இலங்கைப் போரில் புலிகளின் கை தாழ்ந்து வருவதாக செய்திகள் வந்தபடி இருக்கிறதே?'' என்று கேட்டோம்.

''கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் புலிகள் பின்வாங்கியதை இலங்கை ராணுவம் மிகப்பெரிய வெற்றியாக உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. அங்கே புலிகளின் தளங்கள் அழிக்கப்படவில்லை. ஆயுதங்கள் அழிக்கப்படவில்லை. போராளிகளின் ஆயுத பலமும், ஆள்பலமும் அழிக்கப்படாத சூழ்நிலையில், புலிகளின் பின்வாங்கல் தந்திரோபாயம் கொண்டதாகவே தோன்றுகிறது'' என்றார் அவர்.

http://www.vikatan.com/jv/2008/feb/03022008/jv0502.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.