Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யும் அரசியல் தலைவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

chandrika-03.jpg

கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யும் அரசியல் தலைவர்கள்

அதிகார போதையில் நியாயத்தை மறந்து செயற்பட்டுவிட்டு பின் கவலைப்படுவதால் என்ன பயன்?

வ.திருநாவுக்கரசு

சிறிலங்கா மக்கள் கட்சியின் ஸ்தாபக தலைவராய் விளங்கியவராகிய விஜய குமாரதுங்கவின் 20 ஆவது ஆண்டு நினைவஞ்சலி தொடர்பாக அவரின் மனைவியும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிகா குமாரதுங்க 17.02.2008 திகதி வெளியாகிய "சண்டே லீடர்" வார இதழுக்கு வழங்கியிருந்த விலாவாரியான பேட்டியானது எமது கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. சந்திரிகா தனது பதவிக் காலத்தில் சில பாரிய தவறுகள் இழைத்துள்ளதை ஒப்புக்கொள்கின்றார். அதாவது குறிப்பாக அன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை பதவியில் நீடித்திருப்பதற்கு இடமளிக்காமல் வீட்டுக்கு அனுப்பியமை இமாலயத் தவறு என சந்திரிகா குறிப்பிட்டுள்ளார். ஐ.தே.மு. அரசாங்கம் அன்று பதவியேற்ற கையோடு தம்மீது மேற்கொண்ட பழிவாங்கல் நடவடிக்கைகளையும் ஊழல்களையும் கவனத்தில் எடுக்காமல் மென்மையான போக்கினைக் கடைப்பிடிப்பதாக தனது கட்சியினர் தன்மீது கடிந்து அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே தான் விக்கிரமசிங்க அரசாங்கத்தை அகற்றுவதற்குப் புறப்பட்டதாகவும் சந்திரிகா குறிப்பிட்டிருக்கின்றார். எவ்வாறாயினும் விக்கிரமசிங்க அரசாங்கம் இனப் பிரச்சினை தொடர்பாக மேற்கொண்டுவந்த செயற்பாட்டினை முதன்மைப்படுத்தி மற்றைய சச்சரவுகள் மற்றும் கருத்து மோதல்களைப் பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்றெல்லாம் இன்று சந்திரிகா வருத்தம் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு தலைவர்கள் இழைத்த தவறுகள்

அதற்கப்பால் வேறு சில தலைவர்கள் இழைத்த தவறுகள் தொடர்பாகவும் சந்திரிகா கருத்து வெளியிட்டுள்ளார். முதலாவதாக `சுதந்திர' இலங் கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க கல்லோயாவில் மூவின மக்களையுமன்றி சிங்களவர்களை மட்டும் குடியேற்றியதன் மூலம் கிழக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் கைங்கரியத்தினை ஆரம்பித்தவர். அது இன்றும் தமிழர் மனதில் நீங்காத கறையாகவுள்ளது. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களை அபகரித்து சிங்கள மயமாக்கும் டி.எஸ்.சேனநாயக்காவின் பிரயத்தனத்தை தொடரும் பாணியில் பின்னர் மகாவலி அமைச்சர் பதவி வகித்தவராகிய காமினி திசாநாயக்க மணலாற்றுப் பகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றியவர். அதுதான் வெலிஓய என்றழைக்கப்படும் பகுதியாகும்.

அதுபோலவே, 1950களில் ஐ.தே.க. அரசாங்கத்தில் வர்த்தக, வாணிப அமைச்சராயிருந்தவராகிய ஆர்.ஜீ.சேனநாயக்க திருகோணமலையில் திட்டமிட்டு சிங்களவர்களைக் குடியேற்றிவர். டி.எல்.சேனநாயக்கா மற்றும் காமினி திசாநாயக்கா நாட்டுக்கு விதத்தவை வினையா அல்லது தினையா என்பதை பின்னோக்கி மீட்டுப் பார்ப்பதற்கு அவகாசமின்றி திடீர் மரணங்களை எய்திவிட்டனர். ஆர்.ஜீ.சேனநாயக்க ஐ.தே.க.விலிருந்து விலகி சிங்கள மகஜன கட்சி எனும் புதிய அமைப்பொன்றினை உருவாக்கியதோடு இன, மத சாக்கடையில் ஆழமாகத் தலையைப் புதைத்து மரணித்தவர்.

எஸ்.டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க என்ன செய்தவர்?

மறுபுறத்தில் தனது தந்தையார் எஸ்.டபிள்யூ.ஆர் .டி. பண்டாரநாயக்க 1956 இல் இலங்கை அரசியலில் பெரிய மாற்றம் கொண்டு வந்தவரென சந்திரிகா தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். அன்று ஆங்கிலத்திற்கு இணைப்பு மொழி அந்தஸ்து வழங்கத் தவறியமை மிகப் பெரியதொரு தவறாயினும் அது நயவஞ்சகமாகச் செய்யப்பட்டதல்ல, சிங்கள மொழியின் அந்தஸ்து உச்சநிலையினை அடைந்துவிட்டதன் காரணமாக ஆங்கிலம் அகன்று போகும் நிலை ஏற்பட்டதாக சந்திரிகா குதர்க்கம் செய்துள்ளார். மேலும், தமிழ் மொழி புறந்தள்ளப்பட்டதை அவர் வெகு இலகுவாக மறந்துவிட்டார் போலும். தனிச் சிங்களச் சட்டத்தினை நிறைவேற்றியதன் மூலம் பிரிவினைக்கு வித்திட்டு 1958 இல் மோசமான இனக்கலவரத்தினைத் தூண்டிவிட்டு பண்டாரநாயக்க தமிழரைப் பதம்பார்த்தவர். கலவரத்தை அடக்குவதற்கு அவசரகால நிலையைத்தானும் உடனடியாகப் பிரகடனப்படுத்தாமல் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவர். சில பௌத்த பிக்குமாருக்கு அடிபணிந்து 1957 இல் பண்டாரநாயக்க- செல்வநாயகம் ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தவர்.

"இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் நீண்டகாலமாக மனைந்த புண்ணாகியுள்ளதால் சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்கள் எறியும் எலும்புத் துண்டுகளைப் பெற்றுக் கொண்டு தமிழர் சந்தோஷப்பட முடியாது. தமிழர் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையீனங்கள் ஆழமானவை, அதிகாரப்பகிர்வு பிரிவினைக்கு இட்டுச் சென்று விடுமென தீவிரவாதிகள் பிதற்றுகின்றனர். நாம் அதனை மறுதலித்து வந்துள்ளோம். அதிகாரப் பகிர்வு தான் வெவ்வேறு சமூகங்களை ஒன்றிணைக்க வல்லதென நாம் விளக்கி வந்துள்ளோம். அதிகாரப்பகிர்வு எவ்வாறு பிரிவினை வாதத்தினை முறியடிக்கும் என்பதை விஜயகுமாரதுங்க மிக ஆழமாக விளக்கி வந்தவர்" இவ்வாறு சந்திரிகா தனது செவ்வியில் பரிவாகப் பேசியுள்ளார். தாம் இது விடயமாக பல கருத்தரங்குகளை நடத்திய போதெல்லாம் தென்னிலங்கையில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் 68% மக்கள் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தினை ஆதரித்தனர். ஆனால், மகிந்த ராஜபக்ஷ மட்டுமே ஆதரவு தெரிவிக்க மறுத்திருந்தார் என்றெல்லாம் சந்திரிகா தற்போது கூறுகின்றார்.

சந்திரிகா பதவிக் காலத்தில் என்ன செய்தவர்?

இவ்வாறாகவெல்லாம் இன்று கூறிவரும் சந்திரிகா 1994 முதல் 2005 வரை பதவி வகித்த காலத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதற்கு மாறாக 1995 இல் முடுக்கிவிட்ட "சமாதானத்துக்கான யுத்தம்" எனும் இராணுவ அணுகுமுறையிலேயே ஈடுபட்டிருந்தார். 1995 ஜூலையில் அந்த சமாதானத்திற்கான யுத்தத்தை முடுக்கிவிட்டதன் பின்னர் வெளிப்படுத்திய "பிராந்தியங்கள் ஒன்றியம்"எனும் தீர்வுத் திட்டம் படிப்படியாகப் பற்கள் பிடுங்கப்பட்ட நிலைதான் எஞ்சியது. எனவே, தமிழர் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டனர் என இன்று சந்திரிகா குறிப்பிடும் அதே படலம் தான் அவரின் ஆட்சிக் காலத்திலும் இடம்பெற்றது.

ஜே.வி.பி.யும் ஜே.எச்.யு.வும் 10% வாக்குகளை மட்டும் பெற்றுள்ளபோதும் இவ்விரு கட்சியினரும் தான் இன்று 90% மக்கள் சார்பில் முடிவுகள் எடுக்கின்றனர் எனவும் இவர்கள் இனவாதத்திலேயே திழைத்திருக்கின்றனர் என்கின்றார் சந்திரிகா. தனது ஆட்சி காலத்தில் ஒரு கட்டத்தில் ஜே.வி.பி.யினரோடு கூட்டுச் சேர்ந்தது தவறுதான் என்றும் அவர் இன்று கூறுகின்றார். அவர்கள் வழிக்கு வருவார்கள் என்பதுபோல் தெரிந்ததாகவும் ஒரு வருடகாலமாக கலந்துரையாடல்கள் நடத்திய பின்னரே ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு தான் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர்கள் தனது அரசாங்கத்துக்குள் நுழைந்து விடுவதற்காக நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடித்திருப்பதாக தான் பின்னர் உணர்ந்துவிட்டதாகவும் சந்திரிகா கூறுகின்றார். குறிப்பாக, இனப் பிரச்சினைதான் அவர்களோடு சர்ச்சைக்குரியதாயிருந்தது என கவலை தெரிவிக்கும் சந்திரிகா "நான் எனது நேரத்தையும் சக்தியையும் வீணடித்துவிட்டேன் அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவர்கள் மனங்களில் மிக வேடிக்கையானதும் அரசியல் முதிர்ச்சியற்றதுமான கருத்துகளே காணப்பட்டன. இனப்பிரச்சினை தொடர்பாக அவர்கள் தெட்டத்தெளிவான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினால் ஒழிய எந்தவொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் செய்துகொள்வதை நான் விரும்பவில்லை. ஆனால், ஷ்ரீ.ல.சு.க. தலைமைப்பீடம் என்மீது அழுத்தத்தினைச் செலுத்தி விட்டது" என கவலைப்படுகின்றார்.

அன்று ஜே.வி.பி.யுடன் என்ன விலை கொடுத்தென்றாலும் கூட்டுச் சேர வேண்டும், அவர்களால் பாராளுமன்றத்தில் எத்தனை ஆசனங்கள் வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாலும் அதற்கு இடமளிக்கப்பட வேண்டுமென அநுரா பண்டாரநாயக்கதான் முன்னணியில் நின்று அடம்பிடித்தவர். ஜே.வி.பி.யினர் தெட்டத்தெளிவாக இனவாதப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோல் நாடறிந்த விடயமாகியுள்ள போதிலும் பதவி மோகம் காரணமாக அரசியல் சந்தர்ப்பவாதத்தினால் உந்தப்பட்டே ஜே.வி.பி.யுடன் கூட்டுச் சேரும் நிகழ்ச்சி நிரல் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பின்னர் ஜே.வி.பி.யினரின் செயற்பாடுகள் கடுமையான கசப்பினை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜே.வி.பி.யுடனும் கூட்டுச் சேர வேண்டுமென்று தான் அழுங்குப் பிடியாய் நின்றமை தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என அநுரா பண்டாரநாயக்க பகிரங்கமாகக் கூறிவைத்தவர். இவ்வாறாகவெல்லாம் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல் ஆட்சிபீடத்தில் இருக்கும் போது துணிச்சலின்றி தொலைநோக்கின்றி முன்யோசனை எதுவுமின்றி அதிகார போதையில் கண்மூடித்தனமாகச் செயற்பட்டுவிட்டு பின்னர் கவலை தெரிவிப்பதில் எதுவித பயனுமில்லை. இத்தகையவர்கள் பகிரங்க விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு பொருத்தமான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட வேண்டியவர்கள். அல்லாவிட்டால் இந்த நாடு மேன் மேலும் பின்னடைவு கண்டு உலகில் சிரிப்புக்குள்ளாக்கப்படும் நாடுகளின் முன்னணியில் திகழும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

http://www.thinakkural.com/

  • கருத்துக்கள உறவுகள்

செய்த தவறின் பிரதிபலிப்பை அண்மையில் இவர் வியாங்கொட, அத்தனகலவில் புதிய பேரூந்து நிலையம் ஒன்றை திறந்து வைக்க சென்றிருந்தார்.செல்வாக்கு மிக்க தனது அத்தனகலவில் தன்னை பார்க்க சனக்கூட்டம் அலைமோதும் என எதிர்பார்த்து சென்றிருந்தார். நிகழ்ச்சிக்கு சமூகமளித்தவர்கள் 50 க்கு குறைவானவர்களே. இவவின் செல்வாக்கு இந்த நிலையில் உள்ளது.Cheer_by_Ravmaster.gif

  • கருத்துக்கள உறவுகள்

இவக யாரு ஓ ஒரு கண்பறி போனாப்பிறகு சனத்தை ஒளி மயமான எதிர் காலத்துக்கு கூட்டிக்கொண்டு போறனெண்டு சொன்ன நம்மடை சந்திக்காவா. சும்மா சொல்லக்: கூடாது இப்பவும் அந்த மாதிரித்தான் இருக்கு . நான் சொன்னது அவாவின்ரை சிரிப்பை :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயது வட்டுக்கை போயும் இன்னும் .....தணிக்கை செய்யப்பட்டுள்ளது..

இது அவ சந்திரிக்காவை சொன்னனான் மற்றாக்கள் தங்களையெண்டு நினைச்சு பிறகு மூஞ்சையை நீட்டுறேல்லை :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.