Jump to content

அதிக மதிப்பெண் கிடைத்தும் பலன் இல்லை வேலை கிடைக்காத விரக்தியில் திருடனாக மாறிய என்ஜினீயர் கைது


Recommended Posts

வேலை கிடைக்காத விரக்தியில் திருடனாக மாறி சென்னை கல்லூரியில் நள்ளிரவில் புகுந்து கத்தியுடன் கலாட்டா செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

நள்ளிரவில் கலாட்டா

சென்னை கடற்கரையில் உள்ள பிரசிடென்சி கல்லூரி ரசாயன ஆய்வுக்கூடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டு இருந்தார். கருங்கல்லால் அவர் பூட்டை உடைக்க முயற்சித்த போது எழுந்த சத்தம் கேட்டு, கல்லூரி காவலாளி விரைந்து சென்று அவரை பிடிக்க முற்பட்டார். உடனே அந்த வாலிபர் தன் சட்டைப்பையில் மறைத்து வைத்து இருந்த கத்தியைக் காட்டி மிரட்டினார்.

"நான் முதல் வகுப்பில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து உள்ளேன். எனக்கு வேலை இல்லை. என்னை விட குறைந்த மதிப்பெண் வாங்கியவன் மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறான். எனக்கு வேலை கொடுக்காத கம்பெனிகளை குண்டு வைத்து தகர்க்கப்போகிறேன். குண்டு செய்வதற......................

தொடர்ந்து வாசிக்க.......................

க்ட்ட்ப்://இசோர்ய.ப்லொக்ச்பொட்.cஒம்/2008/03/ப்லொக்-பொச்ட்_1962.க்ட்ம்ல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதே கதை சண்டை தொடன்கியபின்னும் 2௦௦7லும் இருந்தது கொழும்பில் .
    • தவறவிட்டு விட்டோம் என சொல்லவரவில்லை. யாராகினும் தமக்கு பிடித்தவர்களை,நண்பர்களை,கலைஞர்களை பாராட்டலாம்.. அல்லது எமக்கு கல்வி தந்த ஆசான்களின் பெருமைகளை சொல்லியும் பாராட்டலாம்.  
    • நேற்று நண்பன் ஒருத்தனுக்கு வாட்சப்  போன் டேய் எங்கு இருக்கிறாய் சோமாலி க்கு பக்கத்தில் ஏதோ இடத்து கடல் பாசையில் அது இங்கு வேணாம்   அப்ப பிறகு ஆறுதலா போன் போடுகிறேன் இல்லையட இப்பத்தான் ரிலக்ஸ்சா இருக்கிறம் உலக நாட்டு நேவி முழுக்க இங்குதான் நிக்குரான்கள் இவங்களுக்கு பியுள் புல் பண்றதிலே நமக்கு மாதம் முழுதும் இதுதான் வேலையாகி போகுது .   மேற்குலகு என்ன முடிவில் உள்ளது என்பது விளங்குது .
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு ------------------------------------------------------------------- ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும்.   முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல.   ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர்.   அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர்.   சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள்.   மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது.   'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.   பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது.   இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர்.    நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார்.   பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன்.   (தொடரும்........)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.