Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எயிட்ஸ் க்கே உதவியா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எய்ட்ஸுக்கே உதவியா"? [1]

அன்று 'வலென்ட்டைன்' தினம்! அதாங்க! காதலர் தினம்னு முத்தமிழ்ல ஒரு நூறு இழையில அவங்கவங்க சொல்லிகிட்டு இருக்காங்களே... அதேதாங்க... !

நானும் ஒரு சில இழைகளில் எழுதிய என் கவிதைகளையும்[???] கருத்துகளையும்[!!##**] படித்த என் மனைவி என்னிடம் சொன்னார்!

'ஏங்க! உங்களுக்கு வேற வேலை இல்லியா? நீங்க ஒரு டாக்டர்தானே! அது சம்பந்தமா எதுனாச்சும் எழுதக் கூடாதா?'

'என்ன? இப்ப பாலியல் கல்வி - பெற்றோருக்கு' ன்னு ஒண்ணு எழுதினேனே! போறாதா?' என அப்பாவியாய்க் கேட்டேன்!

'ம்க்கும்! நீங்கதான் மெச்சிக்கணும்! "நான் தான் அதைப் பெத்தாச்சே, எதுக்குப் படிக்கணும்"னு யாரும் அங்கே வரல்லை! நீங்க வேற ஏதாவது எழுதுங்க! இந்த இஸ்லாமிய இழை திசை திரும்பி ஹோமோஸெக்ஷுவாலிடி.. ஓ.. இங்கே தமிழ்ல தான் பேசணும்ல!... ஓரினச் சேர்க்கையாலத்தான் எய்ட்ஸ் அதிகமா பரவுதுன்னு சொல்றாங்களே! அதைப் பத்தி எழுதுங்க. புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுக்கட்டும்!"

என் ஞானக்கண்[!!!] திறந்தது!

இதோ, உங்களை எல்லாம் அடுத்த சில நாட்களுக்கு தொல்லை பண்ண முடிவு செய்து................எப்படி இதைத் தொடங்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்!

அப்பத்தான் வந்தான் என் நண்பன் சுகுமார்!

"டேய்! எய்ட்ஸுன்னா என்ன? எப்படி வருது? இதுக்கு என்ன அறிகுறிங்க? எப்படி கண்டுபிடிப்பது? இதுக்கு என்ன சிகிச்சை செய்வது? இதுனால என்ன ஆகும்? இதைப் பத்தி ஆளாளுக்கு என்னமோ சொல்றாங்களே அதெல்லாம் உண்மையா பொய்யா? நீதான் டாக்டராச்சே! எனக்கு இப்ப இந்த உண்மை தெரிஞ்சாகணும்" என ஓடி வந்தான்!

"ஏண்டா! எதுனாச்சும் ஏடாகூடமா செஞ்சுட்டியா? சொல்லுடா" என அதட்டினேன்1

"அதெல்லாம் இல்லைடா! இதையெல்லாம் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. தப்புத்தண்டா பண்ணாம இருக்கறதுக்காகத்தான்! அதான் கேட்டேன்," என அப்பாவியாக, அழகாகச் சிரித்தான்!

"சரி! அப்போ, நீ கேள்விகளாக் கேளு. நான் சொல்றேன்" என்றேன், ஒரு வழி கிடைத்த நிம்மதியுடன்!!

இதோ! அவன் கேள்விகளும், என் பதிலும்!

"எய்ட்ஸ்"ன்னா என்ன?

அக்வைர்ட் இம்யோனோ டிஃபிஷியென்ஸி ஸிண்ட்ரோம் [Acquired Immuno Deficiency Syndrome] இதுதாங்க எய்ட்ஸ்[AIDS] அப்பிடீன்னு சொல்லப் படுவது! அதாவது, 'தானே வரவழைத்துக் கொண்ட தன்னெதிர்ப்புக் குறைவை விளைவிக்கும் அறிகுறிகளைக் கொண்ட ஒரு நோய்' என தமிழில் விளக்கலாம்!

இந்தப் பெயர், ஒரு மருத்துவரால் ஒரு சில அறிகுறிகளாலுமோ, அல்லது சில பரிசோதனைகள் மூலமோ அறியப்படுவதுன்னு மட்டும் இப்போதைக்குப் புரிஞ்சுக்கோங்க!

'இது எப்படித்தான் வருது?'

Virus] எ'ஹெச்.ஐ.வி. வைரஸ்[HIV Virus], அதாவது, ஹ்யூமோஇம்யூனோ டிஃபிஷியென்ஸி வைரஸ்[Human Immuno Deficiency ன்னும் ஒன்றால் ஒரு நோய் வருகிறது.'

'வாங்க சுகுமார்! வீட்ல எல்லலரும் நலமா?' எனத் தேநீர் கொண்டு வந்த என் மனைவி, என்னைப் பார்த்து, 'ஐயோ! இது எல்லாருக்கும் தெரியுங்க! இது எப்படி பரவுதுன்னு சொல்லுங்க சாமி!' என முறைத்தார்!

'சொல்லத்தானே போறேன்! அதுக்குள்ள ஏன் இப்படி தொணதொணக்கற? சுகுமார் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பான். போய் ஏதாவது சமையல் பண்ணு!' என அவரை ஒருமாதிரியா சமாளிச்சேன்!

' நீ கேளு சுகுமார்! இதனால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த நோயை, ரத்தமும் ரத்தமும் கலப்பதின் மூலமாகவோ, அல்லது பாலியல் மூலமாகவோ.... அதாவது, உடலுறவின் மூலமாகவோதான் பெறுகிறார்கள்! ஒரு தாய் தனது குழந்தைக்கும் இதைத் தர முடியும்.... கருவுற்றிருக்கும் போதோ அல்லது தாய்ப்பாலைத் தரும்போதோ! இந்த நோயைப் பெற்றவர்கள் சிறிது காலத்தில், எய்ட்ஸ் என்னும் நிலையை அடைகிறார்கள் என்பதே நடப்பு!' என்றேன்.

[தொடரும்]

நன்றி:டாக்டர் சங்கர் குமார்

முத்தமிழ் குழுமம்

ம்ம்...எல்லாரும் வந்து படியுங்கோ உதை அக்சுவலா ஜம்மு பேபியை தவிர :) ..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் அப்படி தான் பாருங்கோ :lol: )...தமிழ் தங்கை அக்கா தாங்ஸ் வோ ட ஆர்ட்டிக்கல்..மிச்சத்தையும் தொடருங்கோ என்ன.. :wub:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா எது எப்ப யாருக்கு வரும் என்று யாருக்கு தெரியா வந்தாலும் கேட்க ஏலாது வராட்டியும் கேட்க ஏலாது" :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்...எல்லாரும் வந்து படியுங்கோ உதை அக்சுவலா ஜம்மு பேபியை தவிர :blink: ..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் அப்படி தான் பாருங்கோ :blink: )...தமிழ் தங்கை அக்கா தாங்ஸ் வோ ட ஆர்ட்டிக்கல்..மிச்சத்தையும் தொடருங்கோ என்ன.. :blink:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா எது எப்ப யாருக்கு வரும் என்று யாருக்கு தெரியா வந்தாலும் கேட்க ஏலாது வராட்டியும் கேட்க ஏலாது" :blink:

அப்ப நான் வரட்டா!!

மிக்க நன்றி ஜம்மு, நிச்சயமாகத் தொடர்ந்து போடுகின்றேன். இது கட்டாயம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய பதிவு...

எய்ட்ஸுக்கே உதவியா-2."

அவ்ளோதானா? ரத்தம், இல்லாட்டி உடலுறவு, இப்படித்தான் இது பரவுமா? என்றான் சுகுமார்.

பொதுவா, இதுதான் சரின்னாலும், ரத்தம், விந்து[sperm], பெண்வழியில் சுரக்கும் நீர்[vaginal fluids], மார்பில் சுரக்கும் பால், மற்றைய உடலில் இருந்து ரத்தத்துடன் கலந்த நீர்[bodily fluids] இவற்றின் வழியே இந்த நோய் பரவலாம்.

"சரி! இந்த -ஹெச்.ஐ.வி. எப்படி 'எய்ட்ஸ்' ஆக மாறுகிறது? "

'இந்த வைரஸ் நம் உடலில் ஒரு தடுப்புச் சக்தியாக இருந்து, வரும் நோய்களை எதிர்க்கும் CD4 என்கின்ற 'உதவி செய்யும் செல்களை [Helper Cells] நேரடியாகத் தாக்கத் தொடங்குகிறது! இந்த செல்களின் அளவு குறைந்து வருவதை வைத்து, இந்த எய்ட்ஸ் என்னும் நோய் வந்து கொண்டிருக்கிறது என நாம் அறிய முடியும்.

இந்த வைரஸ் உடலில் கலந்து, பல ஆண்டுகளுக்குப் பின்னே இது நிகழத் தொடங்குகிறது. எனவே, இந்த வைரஸ்களின் அளவைக் குறைப்பதன் மூலம், எய்ட்ஸ் வருவதை தள்ளிப் போட முடியும்... அதற்குத்தான் மருந்துகள் உதவுகின்றன!

"இந்த ஹெச்.ஐ.வி எப்போத்தான் ஆரம்பிச்சுதுன்னு சொல்லுங்களேன்! அதை விட்டுட்டு.....!!" உள்ளிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்தது

'சொல்றேன், சொல்றேன்! நீ ஏன் கத்தறே!' என ஒரு பம்மிய குரலில் சொல்லிவிட்டு, சுகுமாரைப் பார்த்து, 'எப்போ வந்துது, எப்படி வந்துதுன்னு யாருக்கும் தெரியாது! ஆனா, 1959ல காங்கோ நாட்டுல கின்ஷாஸா நகரில் கொடுக்கப்பட்ட ஒரு ரத்தத்தில் இந்த வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை இன்னும் பரிசோதித்த போது, இந்த வைரஸ் 1950-களில் தொடங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இருப்பினும், 1979-1981-ல் அமெரிக்காவில் ஒரு சில நோயாளிகள் எந்தவொரு காரணமுமில்லாமல், எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் செல்களின் அளவுகள் குறைந்திருப்பதைக் கண்டபோது, இதை ஆராயத் தொடங்கியதின் விளைவாக இந்த எய்ட்ஸ் என்னும் நோய் இருப்பது ஒப்புக் கொள்ளப் பட்டது!

1983-ல் தான் ஹெச்.ஐ.வி. வைரஸுக்கும் எய்ட்ஸ் என்னும் நோய்க்கும் இருக்கும் தொடர்பு உறுதிப்படுத்தப் பட்டது.

"அப்படீன்னா, ஹெச்.ஐ.வி. வந்தா நிச்சயம் எய்ட்ஸ் வந்தேதான் தீருமா? " சற்று பயந்த குரலில் கேட்டான் சுகுமார்!

'இல்லை! இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர்தான் இந்த நிலைக்குச் செல்கிறார்கள். அதற்கும் ஒரு 10 வருஷம் பிடிக்கும். வாழ்க்கை முறைகள், உடல்நலக் கோளாறுகள் இந்த கால அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும்.

இன்று இருக்கும் மருத்துவக் கண்டுபிடிப்புகளால், இதன் தீவிரத்தை வெகுவாகக் குறைக்க முடியும் என்பது ஒரு நல்ல சேதி.'

"சரி! இது எனக்கு இருக்கா இல்லியான்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு சொல்லேன்!"

'என்னடா! இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறே! அதான் முதல்லியே கேட்டேன்ல! சொல்லக்கூடாது!' என நான் அலற,

உள்ளிருந்து வெளிவந்த என் மனைவி,

"ஏங்க! உங்களுக்கு எதுனாச்சும் இருக்கா! அவர்தான் ஆரம்பத்துலியே எனக்கு இல்லை, ஒரு தகவலுக்காகத்தான் கேக்கறேன்னு சொல்லித்தானே இதை ஆரம்பிச்சீங்க! பேசாம அவர் கேக்கற கேள்விக்கு மளமளன்னு பதில் சொல்லுங்க!' என அதட்டினார்!

'ஒரு எளிய ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே இதை உறுதிப் படுத்த முடியும்! ஒரு சில அறிகுறிகள் இந்த நோய்க்கென இருந்தாலும், அவற்றை மட்டும் வைத்தே இதுதான்னு சொல்ல முடியாது. அப்படி என்ன அறிகுறிகள்னு தானே கேக்கறே!

காரணமில்லாத திடீர் எடைக் குறைவு

வறட்டு இருமல்

அடிக்கடி வரும் காய்ச்சலும், இரவில் வரும் அதிகப்படியான வியர்வையும்

அதீதமான உடல் சோர்வு

அக்குள், தொடை, கழுத்து இவைகளில் நெறி கட்டுதல்,

தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேல் இருக்கும் வயிற்றுப்போக்கு

வாய், நாக்கு, தொண்டை போன்ற இடங்களில் வரும் வெள்ளைத் திட்டுகள்

ந்யுமோனியா[pneumonia] போன்ற நுரையீரல் காய்ச்சல்

உடலின் பல இடங்களில் திடீரெனத் தெரியும் சிவப்பு, பழுப்பு திட்டுகள்

நினைவாற்றல் குறைவு, மனவழுத்தம், மற்றும் சில நரம்பு சம்பந்தமான நோய்கள்.

ஆனால், முன்னரே சொன்னது போல, இவற்றில் ஏதாவது இருந்தாலே, தனக்கு இந்த நோய் என எவரும் பயப்படத் தேவையில்லை. ரத்தப் பரிசோதனை ஒன்று மட்டுமே இதை உறுதிப்படுத்தும் ஒரே வழி!

இந்த அறிகுறிகள் வர வேறு பல மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன.' என்றேன்.

தொடரும்:

நன்றி

டாக்டர் சங்கர்குமார்

முத்தமிழ் குழுமம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.