Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரியங்காவுடன் சந்திப்பின் எதிரோலி நளினியுடன் பேச முருகன் மறுப்பு

Featured Replies

வேலூர் சிறையில் நளினியுடன் பிரியங்கா சந்தித்;து பேசியபிறகு நளினியுடன் அவர் கணவர் முருகன் பேச மறுத்து விட்டார். இன்று நடக்கும் சந்திப்பில் நளினியுடன் முருகன் பேசுவாரா? அல்லது புறக்கணிப்பார்ர? என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நளினியும் அவரது கணவர் முருகனும் 15 நாட்களுக்கு ஒரு முறை, சனிக்கிழமைகளில் சந்தித்து பேச அனுமதிக்கப்படுகிறது. ஒவ்வொரு சந்திப்பிலும் 30 நிமிடங்கள் பேச அனுமதி வழங்பகப்படுகிறது. பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறைக்காவலர்கள் ஆண்கள் சிறையிலிருந்து பெண்கள் சிறைக்கு முருகனை கூட்டிச் சென்று வருவார்கள்

பிரியங்கா நளினி சந்திப்பு நடத்து 3 நாட்கள் கழித்து மார்ச் 22ம் திகதி நளினியும் முருகனும் சந்தித்து பேசினார்கள். அப்போது பிரியங்கா தன்னை சந்தித்து சென்ற தகவலை முருகனிடம் நளினி கூறினார்.

இதை எதிர்பாராத முருகன் நளினியிடம் காரசாரமாக பேசி உள்ளார். 'பிரியங்காவை சந்திக்க நீ ஏன் அனுமதி கொடுத்தாய்?' என்று முருகன் கேட்டதாவும் அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாவும் கூறப்பட்டுகிறது. அதற்குள் நேரம் ஆகிவிடவே அடுத்த முறை வந்து பேசுவதாக முருகன் கூறிவிட்டு போய்விட்டார்.

அடுத்த சந்திப்பு கடந்த 5ம் திகதி நடக்க இருந்தது. அன்று முருகன் நளினியை சந்திக்க மறுத்து விட்டார். ஏன் என்று காரணம் கூறவில்லை. அதில் இருந்து நளினி சரியாக சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 7ம் திகதி முருகனின் தங்கைக்கு காட்பாடியில் திருமணம் நடந்தது அந்த விழாவில் முருகனும் நளினியும் செல்ல வில்லை. கடந்த 13ம் திகதி நளினி தற்கொலை செய்ய முயன்றதாக தகவல் பரவியது. இது பற்றி சிறை அதிகாரிகளிடம் கேட்ட போது அதை அவர்கள் மறுத்தனர். கடந்த 25ம் திகதி வேலூர் ஆண்கள் சிறைக்கு சென்ற முருகனின் உறவினர்கள் முருகனை சந்தித்த பின் பெண்கள் சிறைக்குச் சென்று நளினியை சந்திக்க அனுமதி கேட்டு மனுக் கொடுத்தனர். அதற்கு நளினி, 'தனக்கு வயிற்று வலி இருப்பதால் சந்திக்க விருப்பமில்லை' என்று கூறி மறுப்புத் தெரிவித்துள்ளார். முருகன் தன்னைப் பார்க்கவராத கோபத்தினால் முருகனின் உறவினைரை நளினி சந்திக் மறுத்து விட்டதாக கூறப்பட்டது.

இந் நிலையில் இன்று நளினியும் முருகனும் வேலூர் பெண்கள் சிறையில் சந்திக்க இருக்கிறார்கள்.

இந்த சந்திப்பையும் முருகன் புறக்கணிப்பாரா? என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நளினியுடன் முருகன் சந்திக்கும் போது கூடுதல் பொலிசாரை பாதுகாப்புக்கு அனுப்ப ஆயுதப்படை பொலிஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பிரியங்கா நளினியை சந்தித்ததற்கு பிறகு, நளினியுடன் முருகன் பேச மறுத்ததாகவும் அதைத் தொடர்ந்து நளினி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலை பெண்கள் சிறையின் அதிகாரிகள் மறுத்தனர். இந்த நிலையில், நேற்று முருகன் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் பரவியது. இதனால் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏரளமான நிருபர்களும் போட்டோகிரப்பாகளும் ஆண்கள சிறைக்கு முன்பு கூடி நின்றனர். இது குறித்து வேலூர் ஆண்கள் சிறை சுப்பிரண்டன் நாராயணமூர்த்தி நிருபாகளிடம் கூறியதாவது : கைதி முருகன் தற்கொலைக்கு முயற்சி செய்வதாக கூறுவது வெறும் வதந்தி தான். காலையில் முருகன் பொங்கல் உணவை சாப்பிட்டடார். பகலில் சாம்பருடன் சாதம் வழங்கப்பட்டது. அதை அவர் சாப்பிட்டார். முருகன் ஆரோக்கியமாக இருக்கும் போது அவரைப்பற்றி யார் இது போன்ற வதந்திகளை பரப்புகிறார்கள்? என்று தெரியவில்ல. என அவ்வாதிகாரி கூறினார்.

நன்றி வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

கைதி முருகன் தற்கொலைக்கு முயற்சி செய்வதாக கூறுவது வெறும் வதந்தி தான்.

வதந்திக்கு குறைவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.