Jump to content

பிரியங்கா நளினி சந்திப்பு...புலிகளுடன் 'சமாதான' சிக்னல்?/தமிழன் எக்ஸ்பிரஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

21priyanka.jpg

பிரியங்காவின் தமிழக விஸிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ""விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு "இரங்கல் பா' எழுதிய முதல்வருக்கு கண்டனம்;

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டத்தை அடக்க வேண்டும்'' என்றெல்லாம் அனல் பறக்கும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்.

21nalani.jpg

இந்த நேரத்தில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியை பிரியங்கா சந்தித்தார் என்ற செய்தி, காங்கிரஸ்காரர்களைக்கூட டென்ஷன் ஆக்கியுள்ளது.

ஆனால் "பிரியங்கா- நளினி' சந்திப்பின் பின்னணியில் மூன்று முக்கியக் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

முதல் காரணம் இது!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளில் நளினியும் ஒருவர். அவருக்கு சோனியா காந்தி காட்டிய கருணையால் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

தற்போது வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, ஆயுள் தண்டனைக் காலமான 14 வருடங்களை ஜெயிலில் முடித்துவிட்டார்.

இந்நிலையில் நன்னடத்தை அடிப்படையில் அவரை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை அவரது வழக்கறிஞர்கள் மேற்கொண்டார்கள்; சிறைத் துறை அதிகாரிகளிடமும் இது பற்றி பேசியுள்ளார்கள். ஆனால் தமிழக சிறைத்துறை அதிகாரிகளோ, ""ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.

ஆகவே ஆயுள் தண்டனையான 14 வருடத்தை முடித்துள்ள நிலையில் நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசுதான் அனுமதி கொடுக்க வேண்டும். மாநில அரசின் கையில் ஏதும் இல்லை'' என்று கைவிரித்துவிட்டதாகத் தெரிகிறது.

இரண்டாவதாக, இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் படு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முன்னாள் துணை பிரதமர் அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது பா.ஜ.க.

அதை தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு விட்டன. இந்நிலையில், "காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார்?' என்ற கேள்வியை எதிர்க்கட்சிகளே இப்போது கேட்கத் தொடங்கி விட்டன.

இந்தக் கேள்விக் கணைகளைச் சமாளிக்க, "ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக இருப்பதற்கு நூற்றுக்கு நூறு சதவீதம் தகுதி படைத்தவர்' என்று மூத்த காங்கிரஸ் அமைச்சரான அர்ஜூன் சிங் ஆரம்பித்தார்.

பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், "சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை' என்று அறிவித்தார்.

"ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மகிழ்ச்சியே' என்றார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அர்ஜூன்சிங்கின் கருத்தை பிரணாப் முகர்ஜியும் வழி மொழிந்தார்.

மூன்றாவதாக இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தினமும் 50 புலிகள் செத்தார்கள்; 100 புலிகள் சுடப்பட்டார்கள் என்றெல்லாம் இலங்கை ராணுவம் கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் இந்தியா மீதுகூட பிரபாகரன் சீறிப் பாய்ந்து அறிக்கை வெளியிட்டார். இந்த மோதலில் இந்தியா அமைதியாக இலங்கை பக்கமாக நின்று, "புலிகளை அழிக்கட்டும்' என்ற ரீதியில் வேடிக்கை பார்க்கிறது என்ற கோபம் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மத்தியில் இருக்கிறது.

இந்தக் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக "ரா' போன்ற அமைப்புகளே எச்சரித்துள்ளதாக உளவுத்துறை வட்டாரத் தகவல்.

இப்படிப் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியில் நளினியை சென்ற மாதம் 19ஆம் தேதி வேலூர் வந்து சந்தித்துள்ளார் பிரியங்கா. முதலில் நளினியைப் பார்க்க வேண்டும் என்று நினைத்த பிரியங்கா, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மூலம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

அந்த அதிகாரிகளும் மாநில அரசுக்கோ, மாநில உளவுத்துறைக்கோ எந்தத் தகவலும் சொல்லாமல் நேரடியாக வேலூர் சிறையில் உள்ள சூப்பிரண்டுடனேயே தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்கள். ஆனால் அனுமதி கொடுப்பதில் திடீரென்று ஒரு சட்ட சிக்கல் எழுந்திருக்கிறது.

இது பற்றி நம்மிடம் பேசிய சிறைத்துறை அதிகாரி ஒருவர், ""எங்கள் சிறைத்துறை விதிகளின்படி பார்வையாளர்களை அனுமதிக்கும் விஷயத்தில் கண்காணிப்பாளருக்குத்தான் முழு அதிகாரம் இருக்கிறது. அவர் விருப்பப்பட்டால் உயரதிகாரிகளுக்குச் சொல்லலாம். இல்லையென்றால் அவர் மட்டத்திலேயே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் சிறைத் துறை விதிகளில் கைதிகளின் "உறவினர்கள்' சிறைக்கு வந்து பார்க்கலாம் என்று இருந்தது. பிறகு அதை "உறவினர்கள் மற்றும் நண்பர்கள்' என்று மாற்றினார்கள்.

ஆகவே பிரியங்கா நளினியைப் பார்க்க வேண்டும் என்று செய்தி அனுப்பியதும் சிறைத்துறைக் கண்காணிப்பாளரே முடிவு செய்து அவரை அனுமதித்திருக்கலாம்'' என்று பூடகமாகப் பேசினார்.

உடனே குறுக்கிட்ட நாம் அந்த அதிகாரியிடம், ""அது சரி... பிரியங்கா நளினிக்கு "உறவினரா'? அல்லது "நண்பரா?' அதை எப்படி உயரதிகாரிகளிடம் ஆலோசிக்காமல் சிறைத்துறை கண்காணிப்பாளர் முடிவு செய்திருப்பார்?'' என்று கேட்க, ""இந்த மாதிரி வம்பு பிடித்த கேள்விகள் எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்'' என்று ஜகா வாங்கிக் கொண்டார் அந்த அதிகாரி.

வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளராக இருக்கும் ராஜசவுந்தர்யா, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவருக்கு நெருங்கிய உறவினராம். அந்த வகையில் சட்ட நுணுக்கங்களைத்தெரிந்து, தனக்கே உள்ள விசேஷ அதிகாரத்தின் கீழ் நளினியை சந்திக்க பிரியங்காவிற்கு அனுமதி அளித்துள்ளார் என்று செய்திகள் உலா வருகின்றன.

ஆனால் இந்தச் சந்திப்பை மாநில உளவுத்துறை சார்பில் வேலூரில் உள்ள அதிகாரிகள் சிலர் கண்டுபிடித்து விட்டார்களாம். ஆனாலும் பிரியங்காவுடன் வந்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், ""இதை நியூஸ் ஆக்க வேண்டாம். சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.க்குக் கூட சொல்ல வேண்டாம்.

ஏனென்றால் இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சென்ஸிட்டிவான விஷயம்'' என்று கூறவே, அந்தச் செய்தியை வெளியில் கசிய விடாமல் அமைதி காத்தது மாநில உளவுத்துறை.

நளினியை சந்தித்தது குறித்துப் பேசியுள்ள பிரியங்கா, ""வன்முறை, கோபம், வெறுப்பு ஆகியவற்றில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை'' என்று சொல்லியுள்ளார்.

அதே போல் பிரியங்காவின் தம்பி ராகுல் காந்தியும் (எதிர்கால பிரதம வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படுபவர்), ""எங்கள் குடும்பத்தினருக்கு கோபம், வெறுப்பு, பகை எதுவும் இல்லை'' என்று அறிவித்துள்ளார்.

விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கின்ற சூழ்நிலையில் தங்கள் குடும்பத்திற்கு யார் மீதும் வெறுப்பு, பகை இல்லை என்றும், குறிப்பாக விடுதலைப் புலிகளுக்காக ராஜீவ் கொலையில் செயல்பட்ட நளினி மீதே பகை இல்லை என்பதையும் பறைசாற்றும் விதத்தில் பிரியங்காவின் சந்திப்பு அமைந்துள்ளது.

காங்கிரஸின் எதிர்காலம் ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் கையில் இருக்கிறது. இந்நிலையில், "விடுதலைப் புலிகளுடன் நாங்கள் சமாதானமாகவே போக விரும்புகிறோம்' என்பதை அறிவிக்க நளினியுடனான சந்திப்பு பிரியங்காவிற்கும், சோனியா குடும்பத்திற்கும் உதவியிருக்கிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

மொத்தத்தில் இது ஒரு சமாதான சிக்னல்! புலிகள் இதனை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது இனிமேல் தான் தெரிய வரும்.

வர்மா

குடும்பத்திற்கே உரித்தான கருணை!

"பிரியங்கா - நளினி' சந்திப்பு பற்றி ராஜீவ் கொலை வழக்கை விசாரித்தவரும், முன்னாள் சி.பி.ஐ. டைரக்டருமான டி.ஆர்.கார்த்திகேயனிடம் கேட்டோம். அவரோ, ""மன அமைதி வேண்டி, மன சமாதானம் அடைய நான் நளினியை சந்தித்தேன். இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட முடிவு.

அது பற்றி விமர்சனம் செய்யாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரியங்கா. அவருக்கு நல்ல மனம் இருக்கிறது. அதுவும் இளகிய மனம் என்ற பெரிய மனம் இருக்கிறது. ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்தால் மட்டுமே இது மாதிரி மனம் வரும். அந்த மனம் பிரியங்காவிற்கு இருக்கிறது. புத்த மதத்தில் ஒரு தியான முறை இருக்கிறது.

அதைப் பின்பற்றினால் மனத் தெளிவு, கருணை எல்லாம் தானாகவே வரும். அதைத்தான் பிரியங்கா கடைபிடித்துள்ளார். இயற்கையாகவே கருணையும், மனத்தெளிவும் அவர் குடும்பத்திற்கே உரியது. அவரது தந்தையான ராஜீவ் காந்தியும் கருணை மிக்கவர். தாய் சோனியாவும் கருணை மிக்கவர்.

அதனால்தான் தூக்கு தண்டனை பெற்ற நளினிக்கு கருணை காட்டி அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்க பிரியங்காவின் அன்னை சோனியா உதவினார். பிரியங்காவின் இந்த அனுகுமுறை பாராட்டத் தக்கது'' என்றார்!

********************

தமிழன் எக்ஸ்பிரஸ்/சிறப்புக்கட்டுரை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.