Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதயச்சந்திரன் எழுதிய ''வலிசுமந்த சிலுவையை மக்களே இறக்கி வைப்பர்''

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதயச்சந்திரன் எழுதிய ''வலிசுமந்த சிலுவையை மக்களே இறக்கி வைப்பர்''

கொலைக் கரங்களால், தமிழ்க் கத்தோலிக்க மதகுரு அழிக்கப்பட்டுள்ளார். வடகிழக்கு மாகாண மனித உரிமைச் சங்கத்தை வழிநடத்திய கருணாரட்ணம் அடிகளாரை ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் பலிகொண்டு விட்டது.

உலக மனித உரிமைக் காவலர்கள் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?

வழமை போன்று கவலை தெரிவித்து, பேசியே தீர்க்க வேண்டுமென பல்லவி பாடப் போகிறார்களா?

இந்நிகழ்வு எந்தப் பயங்கரவாதத்தைச் சார்ந்தது என இவர்கள் நினைக்கின்றனர்?

அழிக்கப்படும் ஒரு இனத்தின் போராட்டத் தலைமையைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நிலைப்பாட்டை இனியாவது இவர்கள் மாற்றுவார்களா?

போராட்ட தர்மத்தையும், தமிழ் மக்களின் மானிட உரிமைகளையும் நிலைநிறுத்த, அரும்பாடுபட்ட ஒரு அற்புதமான மனிதனை தமிழினம் இழந்துள்ளது.

விடுதலை இறையியலின் (Liberation Theology) தாயகக் குறியீடு, அடிகளார் என்பதனை உரத்துச் சொல்லலாம்.

சிலுவையைக் கழுத்தில் சுமந்து, வெள்ளை உடை தரித்த இன விடுதலைப் போராளி இவர்.

தான் வரித்துக் கொண்ட மதக் கோட்பாடுகளை தாயக மக்களின் விடுதலை உணர்வோடு கலந்து, அம்மக்களுக்குப் போராடக் கற்றுக் கொடுத்ததே அவரின் தனிச் சிறப்பு.

இடம்பெயர்ந்த மடுமாதாவும், உயிரிழந்த அடிகளாரும் ஒரு கனத்த செய்தியை எம் முன்னே விட்டுச் சென்றுள்ளார்கள்.

காகம் இருக்க பனம் பழம் விழும். ஆனாலும் சுதந்திரம் சும்மா வராது.

மனித உரிமை வேண்டி முழக்கமிட்ட ஒரு மனிதரை வீழ்த்தி விட்டோமென எவரும் கொக்கரிக்கலாம்.

அவர் பரப்பிய விடுதலைக் கருத்து விதைகள், தாயகப் பரப்பெங்கும் விருட்சங்கங்களாக வளர்ந்து, எல்லைகளை வகுக்கப் போவதை அவர்கள் உணர வேண்டும்.

நிக்கராகுவா, எல்சல்வடோர், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மக்களோடு இணைந்து விடுதலைப் போராட்டங்களில் பல கத்தோலிக்க மதகுருக்கள் பங்காற்றுகிறார்கள்.

அதேபோன்று ஈழ விடுதலைப் போரா ட்டத்தளத்தில் கருணாரட்ணம் அடிகளாரின் பாத்திரமும் ஒரு காத்திரமான வகிபாகத்தை கொண்டுள்ளது.

தட்டினாலும் கதவு திறக்கப்படலாம். உடைத்தாலும் கதவு திறக்கப்படலாமென்பதே விடுதலை இறையியலின் புதிய பரிமாணமாகக் கொள்ளப்படும்.

அதனைச் சரிவரப் புரிந்து, மக்களோடும், அவர் தம் விடுதலை வேட்கையோடும் இணைந்து, சமூகத்திலிருந்து அந்நியமாகாமல் இறுதிவரை போராடிய கருணாரட்ணம் அடிகளாரின் விடுதலைப் பணியை உலகத் தமிழினம் நிச்சயம் மறக்காது.

தேவாலயங்களைக் குண்டு வீசி அழிப்பது, கத்தோலிக்க மதகுருமாரைக் கடத்துவது போன்ற நாசகார வேலைகளை திட்டமிட்ட வகையில் முன்னெடுத்துச் செல்வதனை அவதானிக்கலாம்.

தேவாலயத்தினுள் பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் மக்கள் பிரதிநிதிகளை கொல்லுமளவிற்கு வெறியாட்டம் அதிகரிக்கிறது.

விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட 17 வயது சிறுமியை, பெண் போராளியெனப் பொய்யுரைத்தவர்கள் அடிகளாரையும் சிலுவை சுமந்த புலியெனக் கூறுவார்கள்.

இப்புனை கதைகளை நியாயப்படுத்தும் வகையில் மௌன விரதம் மேற்கொள்வார்கள் பிராந்திய ஜனநாயகவாதிகள்.

இப்படுகொலையூடாக, மனித உரிமை மீறல் குறித்து, அமெரிக்காவில் கருத்துரைத்த போப்பாண்டவருக்கும் பதில் கூறியாக வேண்டும். ஆனாலும் இன அழிப்புச் சூத்திரத்தினை தாரக மந்திரமாக வரித்துக் கொண்டவர்களிற்கு அடிகளாரும் ஒன்றுதான் , ஆண்டகையும் ஒன்றுதான்.

வணபிதா கருணாரட்ணம் அடிகளார், தனது கருத்தினை வெளிப்படையாகவும், நேர்த்தியான வகையிலும் எடுத்துரைக்கக்கூடியதொரு நேர்மையான மனிதர்.

மடுத் தேவாலயம் குறித்தும், கிழக்கு மாகாண தேர்தல் பற்றியும் தீவிர விமர்சனத்தை முன்வைத்த அடிகளாரின் மீது பேரினவாதச் சக்திகளின் கோரப் பார்வை திரும்பியிருக்க வேண்டும்.

அத்தோடு, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீது ஏவப்படும் இன அழிப்பு வன்முறைகளை, தான் சார்ந்த மனித உரிமை ஒன்றியத்தினூடாக சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் அவரின் செயற்பாடுகளையிட்டும் எரிச்சலுற்றிருக்க வேண்டும்.

போர் அரங்குகளில் பாரிய பின்னடைவுகளை எதிர்கொள்ளும் போது, மென் இலக்குகளை (soft target) குறி வைத்துத் தாக்குவது வாடிக்கையாகி விட்டது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இப்படுகொலை நிகழ்ந்துள்ளதால், இத்தகைய சம்பவங்களுக்கு உரிமை கொண்டாடுவதோ அல்லது குற்றச்சாட்டிற்கு பதில் கூறுவதோ, தேவையற்ற விடயமென்று அரசு கருதுகிறது.

அதனையும் மீறி, சர்வதேச மட்டத்தில் கண்டனங்கள் கிளம்பும் போது, வல்லிபுனச் சிறார்களைப் பெண் போராளிகள் என வெளியிட்ட புனை கதைகள் போன்று புதிய சோடிப்புக்களையும் அரசு கூறலாம்.

காணாமல் போகடிக்கப்பட்ட ஜிம் பிரவுண் அடிகளாரை சர்வதேச மனித உரிமை சங்கங்கள் மறந்தது போல், காலப் போக்கில் இப்படுகொலையும் கரைந்து போகலாமென கணக்குப் போடலாம்.

ஆனாலும் சிலுவையைச் சுமக்கும் மக்கள் சுவாசிக்கப் போகும் சுதந்திரக் காற்றில், அடிகளாரின் ஆத்மாவும், விடுதலை உயிர்ப்பும் கலந்தேயிருக்கும்.

சங்கங்கள் மறக்கலாம், கண்காணிப்பகங்கள் அறிக்கைகள் தயாரித்து, ஐ. நா.வின் ஆவணக் காப்பகங்களில் பதுக்கி வைக்கலாம்.

இறுதிப் பாதையை தேர்ந்தெடுக்கும்போது இவ்வறிக்கைகளை நாகாஸ்திரமாக்க மேற்குலகம் முயலலாம். ஆனாலும் மக்கள் மறக்க மாட்டார்கள். யேசுபிரானின் சிலுவையை மக்களே இறக்கி வைப்பார்கள். சிலுவைகள் இல்லாத தேசத்தில், விடுதலையின் இறையியல் புதிய வரலாறு படைக்கும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம், தமது மத வேறுபாடுகளைக் கடந்து, புதிதான மானிடத் தளமொன்றில் புகுவதனை, அடிகளாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு வெளிப்படுத்துகிறது.

இங்கு யாரும் யாரையும் வற்புறுத்தவில்லை. அடக்குமுறைக்கெதிரான தன்னியல்பான எழுச்சியின் வடிவமே இது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தோற்றமுற்று இயங்கிய வெகுஜன ஒன்றியங்கள், பேரினவாத அரக்கனால் அழிக்கப்பட்ட வரலாற்றினை புதிய பூமியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்னமும் காணாமல் போகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்கள் யாவரும், வெகுஜனப் போராட்டங்களில் முன்பு நேரடிப் பங்கினை வகித்தவர்களே. தற்போது விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உருவாகும் மக்கள் எழுச்சிகள் யாவும், வெகுஜனப் போராட்ட முனைப்பினை விடுதலையின் விரிதளமெங்கும் காவிச் செல்கின்றன.

அதன் படிநிலை மாற்றங்கள், விடுதலைச் சக்தியாக உருக்கொள்வதை பேரினவாதம் விரைவில் தரிசிக்கும்.

அடிகளாரின் மறைவிற்கு இரங்கல் பா வடித்த தாயகக் கவிஞன் தீபச் செல்வனின் கவி வரிகள் சில.

"போர் நடக்கும் தேசத்தில்

சிலுவைகளை

சுமந்து திரியும் சனங்களோடு

அடிகளார் போனார்

யேசுவோடு பல ஆயிரம்

சனங்கள் இங்கு சிலுவையில்

அறையப்பட்டனர்''

[நன்றி - வீரகேசரி]

pathivu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.