Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐந்தாவது தடவையும் புலிகள் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர்--லக்பிம பாதுகாப்பு ஆய்வு

Featured Replies

ஐந்தாவது தடவையும் புலிகள் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் பௌத்த உரிமைகள் கேந்திர மையமான பிலியந்தலையில் வெடித்த குண்டு காரணமாக அந்தப் பிரதேசம் வாரம் முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது.

கடந்த 25ஆம் திகதி நகரில் வெடித்த குண்டின் ஓசைகள் இன்னும் நகர மக்களின் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. பாடசாலை விட்டு வீட்டுக்கு செல்லும் நோக்கில் பேரூந்தில் ஏறிய மாணவர்களும், வேலை முடிந்து வீடு நோக்கி சென்ற பெரியவர்களும் இந்த குண்டில் சிக்கிக் கொண்டனர்.

இதன்போது பாடசாலை புத்தக பைகளும், வேலைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தவர்களின் பைகளும் வீதியில் சிதறிக்கிடந்தன. சிலரின் கையடக்க தொலைபேசிகள் இடைவிடாது ஒலித்து கொண்டிருந்தன. உறவினர் நண்பர்களை தேடியவர்கள் இந்த தொலைபேசி அழைப்புகளை எடுத்திருக்க கூடும். கொழும்பு நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பிலியந்தலை நகரில் வெள்ளை கொடியேற்றும் அவசியம் புலிகளுக்கு ஏன் ஏற்பட்டது.

கடந்த வாரம் இந்த நாட்டு மக்களினதும் ஊடகங்களினதும் கூடிய கவனத்தை பெற்ற மடு தேவாவலய வழிபாட்டு பூமியை படையினர் கைப்பற்றியது தொடர்பாகவே இருந்தது. இதனுடன் முகமாலையில் ஏற்பட்ட தோல்வி இந்த வெற்றியை கீழடித்துச் சென்றது.

அரசாங்கத்தை சங்கடத்திற்குள் ஆழ்த்தியது. அரச ஊடகங்கள் மடு வெற்றியை மன்னாரில் இருந்து நேரலை செய்தன. இந்த வெற்றியின் களிப்பில் இருந்து அரசாங்கத்தை மாத்திரமல்ல மக்களுக்கும் ரணத்தை ஏற்படுத்தும் தேவை புலிகளுக்கு இருந்தது என்பது தெளிவான ஒன்று.

இதன் பிரதி பலனே பிலியந்தலை பேரூந்து குண்டு வெடிப்பு. இந்த குண்டு வெடிப்பில் 26 பயணிகள் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர். மடு வெற்றி கீழே சென்று பிலியந்தலை குண்டு வெடிப்புச்சம்பவம் மேலெழுந்தது. குண்டு வெடிப்பை நிகழத்த கெரில்லாக்கள் பலியந்தலையை தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் அங்கு பெருபான்மையாக சிங்களர்கள் வாழ்கின்றனர் என்ற காரணத்தினால் இருக்க கூடும்.

இந்த நகரம் பௌத்த்தின் ஒன்ற்றுமையினால் உருவாக்கப்பட்ட நகரமாகும். கடந்த பொதுத் தேர்தலில் பிலியந்தலையின் தேர்தல் தொகுதியான கெஸ்பேவ பிரபலமான ஐக்கிய தேசிய கட்சியை மூனறாம் நிலைக்கு தள்ளி ஜாதிக ஹெல உறுமய கட்சியை இரண்டாம் நிலைக்கு கொண்டு வந்தது. இந்த கட்சியின் வாக்கு வங்கியானது சிங்கள பௌத்த மக்களாகும். சிங்கள பௌத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பபட்டுள்ள, பிலியந்தலை, கிரிபத்கொட, களணி, ஆகிய நகரங்களை புலிகள் மோப்பமிடுவதாக பல காலங்களுக்கு முன்னர் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்தனர்.

இது குறித்து புலனாய்வுதுறையினர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெளிவுப்படுத்தி இருந்தனர். எனினும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் புலனாய்வுதுறையினரின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை. இதன் பிரதிபலனை பொது மக்கள் அனுப்பவித்தனர்.

இந்த குண்டு வெடிப்பை அடுத்து பிலியந்தல காவல்துறை பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். பேரூந்து நிலையத்தில் கடமையில் இருந்த காவல்துறை சிப்பாய் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

எனினும் இவை அனைத்தும் காலம் தாமதித்தே நடைபெற்றன. பொறுப்புகூற வேண்டியவர்கள் முதலில் கெரில்லாக்களுக்கு தாக்குதல் நடத்த இடமளித்து விட்டு, பின்னர் பாதுகாப்பு குறைகளை குறித்து ஆராய்ந்து பார்க்கின்றனர்.

இதன் அர்த்தமானது பாதுகாப்புகளில் காணப்படும் குறைப்பாடுகள் காரணமாக போரில் மேலும் மேலும் பொது மக்கள் பலியாவதாகும். பிலியந்தலை குண்டு வெடிப்பின் சூடு தனியும் முன்னர் கெரில்லாக்கள் மற்றுமொரு தாக்குதலை நடத்தினர், அந்த தாக்குதல் தரையில் நடத்தப்படவில்லை, வானில் இருந்து நடத்தப்பட்டது.

கடந்த ஞாயிறு உதயமாகி ஒரு மணியும் முப்பது நிமிடங்களும் ஆன நிலையில் வவுனியாவில் பொருத்தப்பட்டுள்ள இந்திரா 2 ரேடாரில் சந்தேகத்திற்கிடமான இரண்டு விமானங்கள் தென்பட்டதை விமான படை அதிகாரிகள் கண்ணுற்றனர். இந்த தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு பின்னர் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இடம்பெறவிருந்தது.

கடந்த 28ஆம் திகதி இலங்கை வந்த ஈரான் ஜனாதிபதியை இலங்கை ஜனாதிபதி வரவேற்றிருந்தார். ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு விசேட வான்பாதுகாப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

நான்காவது ஈழ யுத்தத்தின் புதிய அச்சுறுத்தலான புலிகளின் விமானங்கள் காரணமாக ஜனாதிபதி செல்லும் இடங்களுக்கு வான் பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்று எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாகியுள்ளது.

வவுனியாவில் உள்ள ரேடார்களில் புலிகளின் இலகுரக விமானங்கள் தென்பட்டதை அடுத்து வவுனியாவில் உள்ள விமானப்படை அதிகாரிகள் பிரதான விமான படை முகாம் மற்றும் கொழும்பின் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரிகளுடன் பல தகவல்கள் பரிமாறப்பட்டன.

கொழும்பில் உள்ள பெரிய கட்டடிடங்களில் அமைக்கப்பட்டு விமான எதிர்ப்பு ஆயுதங்களுடன் படையினர் புலிகள் விமானத்தை வீழ்த்த வானத்தை நோக்கி பார்த்து கொண்டிருந்தனர்.

எனினும் கெரில்லாக்களின் இலகு ரக விமானங்கள் கொழும்பு நோக்கி வரவில்லை. இந்திரா ரேடாரில் விமானங்கள் தென்பட்டு சில நிமிடங்களில் மணலாறு குடியேற்ற திட்ட பகுதியின் வான் பரப்பில் உழவு இயந்திரத்தின் ஒலியை படையினர் மாத்திரம் அல்ல மக்களும் நன்றாக உணர்ந்தனர்.

இந்த இருள் சூழ்ந்த நேரத்தில் கெரில்லாக்களின் இரண்டு விமானங்கள் படையினரின் இரண்டு முகாம்களை நோக்கி மூன்று குண்டுகளை வீசின. மணலாற்றில் உள்ள 2323வது படைப்பிரிவின் தலைமையகம், கல்குளத்தில் உள்ள கட்டளை பிறப்பிக்கும் தலைமையகம் ஆகியவற்றின் மீது இந்த குண்டுகள் வீசப்பட்டன.

கெப்பட்டிகொல்லாவில் இருந்து கொக்குதொடுவாய் வரை உள்ள பிரதேசம் இந்த படையினரின் நிர்வாக்த்திற்குள் உள்ளது. இந்த தாக்குதல்களில் படையினருக்கு குறிப்பிட்டு சொல்ல கூடிய பாதிப்புகள் ஏற்படவில்லை. இதில் ஒரு படைச்சிப்பாய் மாத்திரம் காயமடைந்து வைததியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

. இந்த நிலையில் கெரில்லாக்களின் விமானத்தை தாக்கும் நோக்கில் விமானபடையினரின் எப் 7 ரக தாக்குதல் விமானஙகள் இரண்டு கட்டுநாயக்காவில் இருந்து புறப்பட்டது. எதிரி விமானங்களை தாக்க இந்த விமானங்களில் வசதிகள் உள்ளன.

எதிரி விமானங்களை அடையாளம் காண ரேடாரும், அவற்றை தூரத்தில் இருந்து தாக்கவல்ல ஏவுகணைகளும் இந்த தாக்குதல் ஜெட் விமானத்தில் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் முல்லைத்தீவு வான்பரப்பில் பறந்து வருவதற்கு முன்னர் கெரில்லாக்களின் விமானங்கள் தரையிறக்கப்பட்டு, முல்லைத்தீவு காட்டில் மறைந்து போயின.

இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு தினங்களுக்கு பின்னர் கடந்த 28ஆம் திகதி காலை 9.45 அளவில் இரணைமடு பிரதேசத்தில் உள்ள புலிகளின் ஓடுதளம் மற்றும் அதனை அண்மித்திருந்த கட்டிங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக விமானபடையினர் அறிவித்தனர்.

இந்த அறிக்கையில் இறுதியில் தாக்குதல் வெற்றிகரமான நிகழ்த்தப்பட்டது என்ற வழமையான விசேட வாசகம் காணப்பட்டது. எவ்வாறாயின் புலிகள் மேற்கொண்ட 5வது விமான தாக்குதல் இதுவாகும்.

இந்த அனைத்து தாக்குதல்களையும் நடத்திய பின்னர் புலிகளின் விமானிகள் எதுவித பாதிப்பும் இன்றி வன்னிக்கு சென்றுள்ளனர். புலிகளின் விமானிகள் திறமையினால் மாத்திரம் இது நடைபெறவில்லை.

அவர்கள் தப்பிச் செல்வதற்கான காரணம் விமானபடையினரிடம் உள்ள குறைப்பாடுகள் என்பது தெளிவு. புலிகள் தமது விமான தாக்குதலை ஒரு வருடத்திற்கு முன்னர் அதாவது 2007ஆம் ஆண்டு மாhச் 26ஆம் திகதி அதிகாலை 12.45 அளவில் கட்டுநாயக்க விமான படைதளம் மீது மேற்கொண்டிருந்தனர். இதில் மூன்று விமான படையினர் கொல்லப்பட்டனர்.

கெரில்லாக்கள் இரண்டாவது விமான தாக்குதலை பலாலி படைத்தலைமையகத்தை இலக்கு வைத்து 2007ஆம் ஏப்ரல் 24ஆம் திகதி அதிகாலை 1.20 அளவில் மேற்கொண்டிருந்தனர். கெரில்லாக்களின் இந்த தாக்குதலின் போது வீசப்பட்ட குண்டுகள் மைலட்டி கிராமத்தில் வீழ்ந்தது.

இந்த தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டனர். இதேவேளை 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி கெரில்லாக்களின் விமானங்கள் கட்டுநாயக்கவில் இருந்து வவுனியான நோக்கி செல்வது ரேடாரில் தென்ப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் புலிகளின் விமானங்களை தாக்கும் நோக்கில் அனுராதபுரம் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட எம்.வை 24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி விபத்துக்குள்ளாகியது.

கெரில்லாக்கள் மூன்றாவது முறையாக கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல ஆகிய இடங்களில் உள்ள எண்ணெய் குதங்கள் மீது கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி அதிகாலை 1.50 அளவில் விமான தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து 2007ஆம் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி கெரில்லாக்கள் வான் வழியாக சென்று இரண்டு குண்டுகளை வீசினர்.

இதன் போது அனுராதபுரம் விமானப்படை தளம் இலக்கானது. இந்த தாக்குதலின் போது புலிகளின் விமானங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக வவுனியாவில் இருந்து புறப்பட்ட தாக்குதல் உலங்குவாhனூர்தி மிகிந்தலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

எவ்வாறாயினும் அனைத்து விமான தாக்குதல்களின் பின்னரும் விமானப்படையினர் கெரில்லாக்களின் இரணைமடு ஒடுதளம் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்கள் தற்போது வீட்டில் மனைவியுடன் கோபம் ஏற்பட்டவுடன் சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும் பொருள் ஒன்றை தூக்கி அடிப்பது போன்ற நிலைமையாக மாறியுள்ளது.

இதற்கான காரணம் என்னவெனில் புலிகளின் விமானங்களை தாக்க முடியாத நிலையில் எந்த நாளும் இரணைமடு ஒடுதளம் மீது தாக்குதல் நடத்துவதால் ஏற்பட்டதாகும், இந்த நிலையில் புலிகள் இதுவரை தமது கட்டுபாட்டு பிரதேசத்தில் இருந்து தொலைவில் உள்ள இலக்குகள் மீதே இதுவரை விமான தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர்.

எனினும் இம்முறை புலிகளின் முக்கிய கட்டுபாட்டு பிரதேசமாக முல்லைத்தீவு அருகில் உள்ள முன்னரங்க பகுதியான மணலாறு பிரதேசத்தில் உள்ள கட்டளை தலைமையகங்கள் இரண்டின் மீது விமான தாக்குதலை நடத்தியுள்ளனர். கெரில்லாக்கள் இம்முறை இரணைமடு ஒடுதளத்தை பயன்படுத்தி விமானங்களை வானில் செலுத்தவில்லை.

முல்லைத்தீவு – மாங்குளம் ஏ 34 வீதியில் முள்ளியவளை பிரதேசத்தில் கெரில்லாக்கள் புதிய ஓடுதளம் ஒன்றை புதிதாக அமைத்துள்ளனர் என புலனாய்வுதுறையினர் மதிப்பிட்டுள்ளனர். இந்த பிரதேசம் புலிகளின் பலமிக்க பிரதேசமாகும்.

கெரில்லாக்கள் தமது விமான பலத்தினை முதன் முதலில் முள்ளியவளை பிரதேசத்தில் உள்ள வற்றாபளை பகுதியில் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர். 1998ஆம் ஆண்டு வற்றாபளை அம்மன் கோயில் உற்சவத்தின் போது, கெரில்லாக்கள் வானில் இருந்து மலர்தூவினர்.

எவ்வாறாயினும் கெரில்லாக்கள் இம்முறை விமான தாக்குதலை நடத்தியது, படையினரின் கனரக ஆயுதங்களை அழிக்கும் நோக்கத்தில் மாத்திரமல்ல என்பது தெரிக்கின்றது.

இந்த தாக்குதலின் மூலம் புலிகள் விமான படையினரின் பலத்தை பரீட்சித்து பார்;த்திருக்கலாம். கெரில்லாக்களின் விமானங்களை தம்மால் சுட்டு வீழ்த்த தயாராக உள்ளனர் என விமான படையினர் கடந்த காலங்களில் கூறிவந்தனர்.

இதற்காக பல மில்லியன் டொலர் பொறுமதியான தாக்குதல் ஜெட் விமானங்கள், விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், ரேடார் கட்டமைப்பு என்பவற்றை இலங்கை இறக்குமதி செய்திருந்தது. இந்த புதிய ஆயுதங்களை கொண்டுள்ள படையினர் தம்மீது தாக்குதலை நடத்த எவ்வளவு நேரம் செல்லும், அந்த ஆயுதங்கள் என்ன என்பதை புலிகள் பரீட்சிக்க கூடும்.

இதன் காரணமாகவே இருளில் சென்று எவரும் நினைக்காத இலக்கு மீது விஸமத்தனமாக தாக்குதலை கெரில்லாக்கள் மேற்கொண்டுள்ளனர். விமான படையினர் எவ்வளவு பணத்தை செலவிட்டு வசதிகளை பெற்றிருந்த போதிலும் இதுவரை கெரில்லாக்களின் இலகு ரக விமானங்களை வீழ்த்த முடியவில்லை.

ஆயுதம் அல்ல ஆயுதத்தை இயக்குபவர் பெறுமதியானவர் என்பது மீண்டும் ஊர்ஜிதமாகியுள்ளது. கெரில்லாக்களின் இந்த பரீட்சாத்த நடவடிக்கை பாரிய தாக்குதல் ஒன்றுக்கான முன் ஏற்பாடாக இருக்கலாம்.

தொடர்ந்தும் இருளில் தடவியப்படி கெரில்லாக்களின் விமானங்களை குறும்படி கருவிகள் என கூறி வாய் மூலம் யுத்தம் செய்ய முடியாது என்பதை அனைவரும் தற்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.

இதனிடையே புலிகள் மணலாறு பிரதேசம் நோக்கி பிரங்கி தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலுக்கு முன்னர் கெரில்லாக்கள் முகமாலையில் தாக்குதல் நடத்தியிருந்தனர், கடந்த 23ஆம் திகதி முகமாலையில் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களின் போது கெரில்லாக்கள் பீரங்கி குண்டு மழை பொழிந்துள்ளனர்.

இந்த தாக்குதல் அடுத்து கெரில்லாக்களுக்கு ஒரே தடவையில் இந்தளவு பிரங்கி குண்டுகள் எவ்வாறு கிடைத்தன எனற ஒரு கேள்வி எழுந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான கப்பல்களை அழித்த போது சில இராணுவ அதிகரிகள் புலிகள் சர்வதேச ஆயுத வலைப்பின்னலுக்கு தாம் முற்றிபுள்ளி வைத்ததாக தெரிவித்தனர்.

எனினும் புலிகள் கடல் மார்க்கமாக தொடர்ந்தும் ஆயுதங்களை கொண்டு வருகின்றனர் என புலனாய்துறையினர் தெரிவித்திருந்தனர். விடுதலைப்புலிகள் கப்பல்கள் மற்றும் மத்திய தர கப்பல்கள் மூலம் ஆயுதங்களை கொண்டு வந்து தரையிறக்கி வருகின்றனர்.

கடந்த காலங்களில் அவர்கள் அதிகளவான பீரங்கி குண்டுகளையும் எறிகணைகளை இறக்கியுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நன்றி லக்பிம பாதுகாப்பு ஆய்வு:

http://isoorya.blogspot.com/

http://esoorya.blogspot.com/

Edited by isoorya

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.