Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிராக பக்ரீரியாக்கள் பயன் படுத்தும் பொறிமுறைகள்

Featured Replies

நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிராக பக்ரீறியாக்கள் பயன் படுத்தும் பொறிமுறைகள்

Mechanisms of antibiotic resistance

மிக நீண்டகாலமாக மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் அங்கிகளுக்கு/ காரணிக்களுக்கெதிராக மனிதன் போரடியே வந்துள்ளான். சின்னமுத்து, அம்மை, போலியோ போன்ற வைரஸ் நோய்களுக்கெதிரான தடுப்பூசிகள இந்நோய்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவியது. பக்ரீரியாக்களுக்கெதிரான (Bacteria) நோய்களை கட்டுப்படுத்துவதில் 1940 ஆம் ஆண்டளவில் கண்டுபிடிக்கப்பட்ட பென்சிலின் (Penicillin)மற்றும் அதன் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய நுண்ணுயிர் கொல்லிகளும் (Antibiotics) பெரும் பங்காற்றின என்றால் மிகையில்லை. ஆனால் பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள்ளேயே அதனை எதிர்த்து வளர/ பெருக்கக்கூடிய பக்ரீரியாக்களும் உருவாக தொடங்கிவிட்டன.

எவ்வாறு பக்ரீரியாக்கள் இவ்வாறு எதிர்ப்பு தன்மையை பெற்றன? அதற்கான காரணங்கள் எவை? என்று பார்ப்பதற்கு முன்பாக இந்த நுண்ணுயிர் கொல்லிகள் எவ்வாறு பக்ரீரியாவை கொல்கிறன என்பதை விளங்கி கொள்வது அவசியமானது.

பொதுவாக 4 வகையான செயற்பாடுகள் மூலம் நுண்ணுயிர் கொல்லிகள் பக்ரீரியாக்களை கொல்கிறன.

1. கலச்சுவர்த் தொகுப்பை தடுத்தல்- interference with cell wall synthesis

கலச்சுவர்த் தொகுப்பை தடுக்கும் நுண்ணுயிர்கொல்களுக்கு உதாரணமாக

a) பிற்ற- லக்ராம் (Beta-lactam): penicillins, cephalosporins, carbapenems, monobactams

இவை கலச்சுவர் தஒகுப்பதற்கு தேவையான நொதியங்களின் செயற்பாட்டை தடுக்ப்பதன் மூலம் பக்ரீரியாக்கள் கலச்சுவரை தொகுக்கமுடியாமல் இறக்கிறன.

b) கிளைக்கோ புரதங்கள் : Glycopeptides : vancomycin, teicoplanin

இவை கலச்சுவர் தொகுப்பில் போது உருவாகும் பதார்த்ததிற்கிடையே குறுக்கு பிணைப்புக்கள் ஏற்படுவதை தடுக்கிறன.

2. புரதத் தொகுப்பை நிரோதித்தல்- inhibition of protein sysnthesis

இவற்றிற்கு உதாரணமாக:

Macrolids, aminoglycosides, tetracyclines chloramphenicol, streptogramins, oxazolindones

ஆகியவற்றை சொல்லலாம்.

3. கருஅமிலங்களின் தொகுப்பை தடுத்தல்- interference with nucleic acid synthesis

இவற்றிற்கு உதாரணமாக:

Fluroquinolones சொல்ல முடியும், இவை கரு அமிலமான DNA தொகுப்பை தடை செய்கிறன.

4. கல அனுசேப செயன்முறையை நிரோதித்தல்- inhibition of metabolic pathway

இவற்றிற்கு உதாரணமாக trimethoprim, sulfonamides சொல்ல முடியும். இவை பொலிக் அமில தொகுப்பை நிரோதிப்பதன் மூலம் இறுதி விளைவாக கரு அமில தொகுப்பை நிரோதிக்கிறன.

இந்த நான்கு முக்கிய விளைவுகளுக்கு மேலதிகமாக ஐந்தாவதாக சில நுண்ணுயிர் கொல்லிகள் கல மென்சவ்வை குழப்புவதன் மூலம் சில பக்ரீரியாக்களை கொல்வதாகவும் நம்பப்படுகிறது.

உதாரணமாக polymyxins

ஏன் நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புத்தன்மையுள்ள பக்ரீரியாக்களை பற்றி அதிகம் கவனிக்க வேண்டியுள்ளது?

மனிதருக்கு நோயை ஏற்படுத்தும் பல பக்ரீரியாக்கள் உதாரணமாக

Klebsiella pneumoniae: bacterial pneumonia, urinary tract infections

Psudomonas spp.: bacterial pneumonia பொதுவாக நோய் எதிர்ப்பு தன்மை குறைந்தவர்களில் தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடியது.

Strephylococci : சாதாரணமான தோலில் ஏற்படும் காயங்களில் தொற்று ஏற்படுத்தல் போன்ற சாதாரணமான நோய்களில் இருந்து உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய pneumonia, meningitis, osteomyelitis endocarditis, Toxic shock syndrome (TSS) septicemia போன்றவற்ரையும் ஏற்படுத்த கூடியது.

Enterococci : பொதுவாக urinary tract infections, bacteremia, bacterial endocarditis, diverticulitis, meningitis ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடியது.

இவை பொதுவாக வைத்தியசாலை சூழலில் காணப்படக்கூடிய பக்ரீரியாக்களாக இருப்பதுடன், வைத்திய சாலை சூழலில் போதுமான கவனிப்பற்ற நிலையியிருப்பின் இலகுவில் பரவலடைய கூடியன.

இவ்வகை பக்ரீரியாக்கள் நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்பு தன்மையை பெறும் போது சாதாரண நுண்ணுயிர் கொல்லிகளின் மூலம் கட்டுப்படுத்த முடியாது போவதுடன், நோயாளிகளின் குருதியிலும் தொற்றுதல் அடைகிறன.

மேலும் இவை இலகுவில் பரவலடைந்து நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இயலாத காரியமாக மாறவும் முடியும்.

அத்துடன் நீண்ட காலமாக தொட்ற்சியாக குறிப்பிட்ட சில நுண்ணுயிர் கொல்லிகளை நோயாளிக்கு சிகிச்சைக்கு பயன்படுத்துவதன் மூலம் சிறிதளவான எதிர்ப்புத் தன்மை உள்ள நுண்ணங்கிகள் உருவாக முடியும். இவை சாதாரணமான பரிசோதனைகளில் அடையாளம் காண முடியாது போகலாம்.

நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிராக பக்ரீரியாக்கள் கொண்டுள்ள எதிர்ப்பு பொறிமுறைகள்

சில வகையான பக்ரீரியா இனங்கள் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணுயிர் கொல்லிவகைகளுக்கோ எதிர்ப்பு தன்மை கொண்டவையாக இருக்கலாம். உதாரணமாக பிற்ற- லக்ராம் வகைகளுக்கு எதிர்ப்பு தன்மை.

பல வகையான நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு பொறிமுறைகளை பக்ரீரியாக்கள் வெளிப்படுத்த முடியும். அவற்றில் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது முன்னர் நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புத் தன்மையற்ற பக்ரீரியாக்கள் குறிப்பிட்ட நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புத் தன்மையை பெறுவதாகும். இவ்வாறு குறிப்பிட்ட நுண்ணுயிர் கொல்லிகளுக்கான எதிர்ப்பு தன்மையை பெற்று கொண்ட பக்ரீரியாக்கள், அதே வகையான நுண்ணுயிர் கொல்லிகள் தொடர்ந்தும் பாவிக்கப்படுவதால் ஏற்படுத்தப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இலகுவில் பல்கிபெருகுவதுடன் ஏனைய பகுதிகளுக்கும் பரவலடைய முடியும்.

உதாரணமாக பென்சிலின் எனும் நுண்ணுயிர் கொல்லிக்கு X எனும் வகை நோய் விளைவிக்கும் பக்ரீரியா எதிர்ப்பு தன்மையை பெறுகிறது என கொள்ளுவோம். மனித/ மனிதன் வளர்க்கும் விலங்குகளின் உணவு சமிபாட்டு (ஜீரண) தொகுதி இயற்கையில் பல வகையான நன்மை விளைவிக்கும்/ தீங்கற்ற பக்ரீரியாகள் காணப்படுகிறன. இவற்றுடன் குறிப்பிட்ட X எனும் வகை நோய் ஏற்படுத்தும் பக்ரீரியாவல் போட்டி போட முடியாது. எனவே அவை மிக குறைந்த எண்ணிக்கையில், நோயை ஏற்படுத்த போதுமான எண்ணிக்கையில் இல்லாது இருக்கும். நாம் பென்சிலின் எனும் நுண்ணுயிர் கொல்லியை ஏதாவது ஒரு நோய்க்கு பயன்படுத்துகிறோம் என வைத்துகோண்டால், பென்சிலின் மூலம் X எனும் பக்ரீரியாவை கொல்ல முடியாது. ஆனால் உடலில் உள்ள தீங்கற்ற பக்ரீரியாக்களை கொல்ல முடியும். இதனால் X பக்றீரியாவுக்கு போட்டி இல்லது போகும். இந்த சூழ் நிலையை X பக்ரீரியா சாதகமாக்கி கொண்டு பல்கி பெருகும்.

எதிர்ப்பு பொறிமுறைகள்

படம்: 1 (http://www.scq.ubc.ca/attack-of-the-superbugs-antibiotic-resistance/)

1. குறிப்பிட்ட நுண்ணுயிர் கொல்லிகளை அழிவடையச்செய்யும் நொதியங்களை (enzymes)சுரப்பதற்கு தேவையான பரம்பரை அலகுகளை (Genes) பெற்று கொள்ளுதல். உதாரணமாக பிற்ற-லக்ராம் வகை நுண்ணுயிர் கொல்லிகளை (பென்சிலின்)அழிக்கும் நொதியங்களை சுரக்கும் வல்லமை பெறல். இதன் மூலம் குறிப்பிட்ட நுண்ணுயிர் கொல்லிகள் தமது தாக்குதல் இலக்கை (கலச்சுவர் தொகுப்பு இடம்) அடைய முதலே அழிவடைந்துவிடும் (படம் 1).

2. பக்ரீரியாக்கள் நுண்ணுயிர் கொல்லிகள் தமது இலக்கை அடையமுதல் அவற்றை கலத்துக்கு வெளியே(efflux pumps) வெளியேற்றும் பிறனை பெறல் (படம் 1).

3. பக்ரீரியா தமது அனுசேப செயன் முறையை மாற்றி அமைக்கக்கூடிய பல வகையான பரம்பரை அலகுகளை பெற்று கொள்ளுதல். இதன் மூலம் அவை கலச்சுவரில் நுண்ணுயிர் கொல்லி இணையும் இலக்கை அல்லது கல அனுசேப செயன்முறையை பாதிக்கும் இலக்கை முன்னைய இயல்பில் இருந்து மாற்றி அமைப்பதால் தொடர்ந்தும் குறிப்பிட்ட நுண்ணுயிர் கொல்லியால் செயற்பட முடியாது போகும்.

படம் 2 (http://www.scq.ubc.ca/attack-of-the-superbugs-antibiotic-resistance/)

பொதுவாக நுண்ணுயிர் கொல்லிக்கு எதிப்பு தன்மையற்ற பக்ரீரியா நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்பு தன்மையை விகாரம் (mutation), மற்றும் தேர்ந்த அழுத்தம் (Selection) காரணமாக பெற முடியும். அல்லது முன்னரே எதிப்பு தன்மை உள்ள பக்ரீரியாவில் இருந்து பரிமாற்றம், இணைப்பு, போன்றவற்றின் மூலம் பெற்று கொள்ள முடியும் (படம் 2).

முன்னரே எதிப்புத்தன்மை உள்ள பக்ரீரியா எப்படி தோன்றியது என்ற கேள்வி உங்களில் யாருக்கும் எழ முடியும்

இது முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா என்ற கேள்வி போன்றது தான்.

உதாரணமாக

பென்சிலின் எனும் நுண்ணுயிர் கொல்லியை உருவாக்குவது இயற்கையில் உள்ள பென்சிலியம் எனும் ஒரு பூஞ்சணம். இது இவ்வாறன நுண்ணுயிர் கொல்லியை உருவாக்குவதன் மூலம் தனக்கு போட்டியான பக்ரீரியாக்களை தோற்கடிக்க/ அழிக்க பயன்படுத்துகிறது. எனவே அதற்கு போட்டியாக இயற்கை சூழலில் உள்ள பக்ரீரியாக்கள் காலபோக்கில் எதிப்பு தன்மையை பெற முடியும். இயற்கையில் இவை ஒரு சமநிலையில் உள்ள நிகழ்வுகள்.

நான் எற்கனவே இதைப்பற்றி எழுத ஆரம்பித்திருந்தாலும் அகிலன் எழுதிய ஆஸ்பத்திரி ராணிகள் பதிவு இதை முழுமையாகக்க தூண்டியது.

அகிலன் (http://www.agiilan.com/?p=124) மலேரியா ஏற்பட்ட காலங்களில் போதுமான வைத்தியர்கள் அற்ற சூழலில் மலேரியாவை கட்டுப்படுத்த மலேரியா மருந்துகளை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதையும், வைத்திய ஆலோசனை இல்லாமலே மருந்தை பெற முடியும் என விளம்பரம் செய்து இருந்ததையும் சொல்லியிருந்தார். இது போர் ஏற்படுத்திய அவலம். அந்த சூழலில் வேறு வழியில் நோயை கட்டுப்படுத்த முடியாது என்பதும் நிதர்சனமான உண்மை. மலேரியாவை பக்ரீரியாக்கள் ஏற்படுத்துவதில்லை அவை புரோட்டோ சோவன் எனும் ஒரு கல அங்கிகளால் ஏற்படுகிறன. அவையும் அவற்றுக்கு எதிரான மருந்துகளுக்கு எதிர்ப்பை பெறுமா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் தாயகத்தில் இருந்த காலத்திய சொந்த அனுபவமும், ஏனையவர்கள் செய்த நடைமுறைகளும் நீண்ட காலப்போக்கில் தாயகத்தில் எவ்வகையான விளைவை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது.

தாயகத்தில் காய்ச்சல் (ஜுரம்) வரும் போது சில நேரம் வைத்தியர்கள் நுண்ணுயிர் கொல்லி (பென்சிலின்/ அமொக்சிலின்), விற்றமின் சி, வலி நிவாரணி (பனடோல்) போன்றவற்றை எந்த பரிசோதனையும் இன்றி வழங்குவது வழக்கம். பரிசோதனைக்கு வசதிகள் இல்லை, வைத்தியர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் போதுமான அளவில் இல்லை என்பது போர் தந்த அவலம். இரண்டாம் முறையும் காய்ச்சல் என்று சென்றால் அதே மருந்துகள் கொடுக்கப்பட்டால், முன்றாம் முறை காய்ச்சல் வந்தால் யாரும் வைத்தியரை நாட மாட்டார்கள். சமையல் குறிப்பு போல் அதே மருந்துகளை மீண்டும் தாங்களே மருந்தகங்களில் வாங்கி உள்கொளுவார்கள். நானும் செய்திருகிறேன். இப்படி போதிய கவனமற்று மருந்துகளை உட்கொள்ளுவது நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்பு தன்மையுள்ள பக்ரீரியாக்கள் உருவாகவும்,பின்னர் நோய்களை சாதாரண நுண்ணுயிர் கொல்லிகளால் கட்டுபடுத்த முடியாத நிலையை ஏற்படவும் கூடும்.

http://viriyumsirakukal.blogspot.com/2008/05/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

பக்றீரியாக்கள் புரோகரியோட்டா (prokaryota) வகை எளிமையான பிறப்புரிமையியல் கூறுகளைக் கொண்டிருப்பதால்.. அவற்றின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது ஒப்பீட்டளவில் இலகு.

ஆனால் மனிதக் கலத்தை ஒத்த யுகரியோட்டா (Eukaryota) வகை புரட்டோசேவன்களில் (Protozoa) நிகழும் விகாரங்கள் அல்லது மாறல்கள் சிக்கல் தன்மையான உடலிரசாயன அனுசேபத்தாக்க வழிமுறைகளுக்கு இட்டுச் செல்வதால் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம். அதுமட்டுமன்றி மலேரியாவுக்குரிய (Plasmodium spp) மனித ஈரல் கலங்கள் மற்றும் செங்குருதிக் கலங்களுள் வாழ்வதால் அவற்றை பக்ரீரியாக்கள் போன்று தாக்க அழிப்பது அல்லது அவற்றுக்கான மருந்துகளைப் பாவிக்கவும் முடியாது.

(Plasmodium spp) இவையும் அவற்றுக்கு எதிரான மருந்துகளுக்கு எதிராக மாறல்கள் அல்லது விலகல்களைத் தோற்றுவித்துள்ளன. ஆனாலும் பக்ரீரியா போன்று இவ்வகை மாறல்களுக்கு உட்பட்ட புரோட்டோசோவன்களை இலகுவாக கட்டுப்படுத்த முடியாது என்பதுடன் மலேரியா (Plasmodium spp) கள் மனித உடற்கலங்களான ஈரல் மற்றும் செங்குருதிக் கலங்களுள் தங்கி வாழ்வதால் நிலையான நிர்பீடணத்தையும் இவற்றுக்கு எதிராக தோற்றுவிக்க முடியாமல் இருக்கிறது..! இருப்பினும் தற்காலிக தொற்று தவிர்ப்பு நிர்பீடணம் வழங்கப்படுகிறது.

பனடோல் போன்றவை பக்ரீரியாக்களை தாக்கி கொல்லும் மருந்துகள் அல்ல. அவை எமது உடலிரசயானத் தாக்கங்கள் சிலவற்றோடு சம்பந்தப்பட்டு காய்ச்சல் மற்றும் வலி ஏற்படுவதை கட்டுப்படுத்தும் மருந்துகள். எனவே அவை தொடர்பில் மக்கள் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

ஆனால் காச நோய் அல்லது பக்ரீரிய தொற்றுக்காக வழங்கப்படும் மருந்துகளை (antibiotic) வைத்தியரின் ஆலோசனைப் படி பெறுவதும்.. அதன் கால அட்டவணைப் படி பாவித்து முற்றாக நிறைவு செய்வதும் கட்டாயம். நோய் அறிகுறி போய்விட்டது என்று நம்பி சிலர் மருந்துகளை எடுப்பதில்லை. ஆனால் நுண்ணங்கிகள் உடலில் அறிகுறி ஏற்படுத்தாக எண்ணிக்கையில் தப்பி இருக்கும். அவை குறித்த மருந்துகளுக்கு எதிரான மாறல்களை கொண்டிருப்பின்.. மருந்துகளை நிறுத்தும் போது அவற்றின் பெருக்கத்தால் மீண்டும் நோய் ஏற்படும் போது.. அவற்றைக் கட்டுப்படுத்துவது சிரமம். அதுவே பின்னர் மருந்து எதிர்ப்பு பக்ரிரியாக்களாக வருகின்றன. எனினும் Broad-spectrum antibiotics அவற்றைக் கட்டுப்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன. இருப்பினும் அது சிக்கல்களை தோற்றுவிக்க வல்லது. :wub:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.