Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தீவு எதை நோக்கிச் செல்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவு எதை நோக்கிச் செல்கிறது? - புனிதன்

இன்றைய நிலையிலிருந்து இலங்கைத் தீவின் எதிர்காலம் எதை நோக்கிப் போகிறது என்ற வினாவுக்கு விடை தேடும் ஒரு சிறு முயற்சி இது.

சகிப்புத் தன்மையுடன் தமிழ் சமூகம் தொடர்ந்து வாழும் என்றும், தமிழ் சமூகத்தின் உரிமைகள் சர்வதேச நிறுவனங்களால் பேணப்படும் என்றும், காந்தீய சிந்தனைகளால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்த - படித்த - தமிழ் அரசியல் வாதிகளில் பெரும் பகுதியினர் இலங்கைத் தீவினுள் ஒரு தமிழ் மாநிலத்தை நோக்கியே இலங்கை செல்கிறது என்று எண்ணியிருந்தனர். இச்சிந்தனையில் மாறுபட்ட தமிழ் அரசியல் வாதிகள் இன-மத-மொழி வேறுபாடற்ற இலங்கைத் தீவு நோக்கிய கனவில் திளைத்திருந்தனர்.

இந்த இரு சிந்தனைகளும் இன்னும் சில இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளிடம் உண்டு. ஆயுதம் ஏந்திச் சுதந்திரத் தமிழீழம் கேட்டுப்பின் அரசியல்வாதி வேடம் தாங்குபவர்களிடமும் உண்டு. இலங்கைத் தீவின் எதிர்காலத்தில் அக்கறை காட்டுகின்ற வெளிநாட்டுத் தலைவர்கள், ராஜதந்திரிகள் போன்றவர்களிடமும் உண்டு. இலங்கைத் தீவின் எதிர்காலத்தைப் பற்றி ஆய்வு செய்யும் அரசியல் ஆய்வாளர்களிடமும் உண்டு. புலம் பெயர்ந்த தமிழர்கள், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் ஆகியோரில் ஒரு சாராரிடமும் உண்டு. (பிற் குறிப்பைப் பார்க்க..)

'சிங்கள-புத்த இலங்கைத் தீவு' என்ற மகாவம்ச மந்திரத்தைச் செபித்துக் கொண்டிருக்கின்ற, இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள், கடந்த 60 வருடங்களாக, 'மேலே கூறிய இரு சிந்தனைகளையும் மாறி மாறிச் செயற்படுத்த விழைகிறோம்', என்று தமிழ் மக்களுக்கும் அனைத்துலகச் சமூகத்துக்கும் காட்டுவதற்கென்றே ஒப்பந்தங்களைச் செய்தபடி 'சிங்கள-புத்த இலங்கைத் தீவு' என்ற மகாவம்ச சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் முயற்சியில் கை விடாது முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஒப்பந்தங்களை நடைமுறைப் படுத்தாது இழுத்தடிப்பதே, தமிழ் மக்களையும், அனைத்துலகச் சமூகத்தையும் ஏமாற்றி, - மகாவம்ச சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் முயற்சியிலிருந்து விலகாமல் - காலப்போக்கில் அச் சிந்தனை என்ற இலக்கை அடையும் ஒரு நாடகமே. இந்த ஒப்பந்தங்களை நடைமுறைப் படுத்தாது குப்பைக் கூடைக்குள் போடுவதும் மகாவம்ச சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் முயற்சியின் ஓரங்கமே. இச் சிந்தனையை நோக்கியே இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களும், அனைத்துச் சிங்களக் கட்சிகளும், கொள்கை வகுப்பாளர்களும் சென்று கொண்டிருக்கின்றனர்.

என்று பொத்துவில் தொட்டு கிழக்குக் கரையோரமாக வடக்குக்கும், தொடர்ந்து வடக்கிலிருந்து சிலாபம் வரை மேற்குக் கரையோரமாக தெற்குக்கும், தொடர்ச்சியாக வியாபித்திருந்த தமிழர்களின் பாரம்பரிய பூமியைத் துண்டு துண்டாகப் பிரிக்க இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள் முனைந்தார்களோ அன்றே 'சிங்கள-புத்த இலங்கைத் தீவு' என்ற மகாவம்ச சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் முயற்சி தொடங்கிவிட்டது. முதலில் மன்னார் - புத்தளம் தொடர்ச்சி வில்பத்து சரணாலயத்தால் துண்டாடப்பட்டது. தொடர்ந்து பொத்துவில் - அம்பாறை - மட்டக்களப்பு - திருகோணமலை - முல்லைத் தீவு வரை சிங்களக் குடியேற்றங்களால் இடைச் செருகல்கள் மேற்கொள்ளப்பட்டு புதுப்புதுச் சிங்களத் தேர்தல் தொகுதிகள் தோன்றித் துண்டாடின. இச் செயல்கள் அனைத்துமே தமிழர் தாயகம் என்று ஒன்று வியாபித்து இருந்ததால் வந்த விளைவே.

1958ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது தமிழர்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு - திருகோணமலை - யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியபோது தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ தமிழர் தாயகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது சிங்களத்தரப்பினால் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அன்றைய நிலையில் தமிழர்களுக்கு என்றும் எதுவித பயமுமின்றி தலைநிமிர்ந்து வாழக்கூடிய பூமியாக தமிழர் தாயகம் இருந்தது. இப்படியான ஒரு தாயகம் இருக்கிறது என்பதே 'சிங்கள-புத்த இலங்கைத் தீவு' என்ற மகாவம்ச சிந்தனைக்கு எதிராக இருந்தது. இன்றைய நிலையில் தமிழர்கள் துப்பாக்கி முனையிலும், உணவு, உடை, வீடு, கல்வி, மருந்து, எதுவும் இன்றியும், சாகக்கூடிய பூமியாகவே, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர்ந்த ஏனைய தமிழர் தாயகம் இருக்கிறது. அன்றைய நிலையில் இருந்து இன்றைய நிலைக்குத் தமிழரும், அவர்களின் தாயகமும் தள்ளப்பட்டதை, சிங்கள-புத்த இலங்கைத் தீவு என்ற மகாவம்ச சிந்தனை வெற்றியை நோக்கி நீண்ட தூரம் வந்துவிட்டது என்று கொள்ளலாம்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் முன்னரே சிங்கள-புத்த இலங்கைத் தீவு என்ற மகாவம்ச சிந்தனை அடைந்திருக்க வேண்டிய முழு வெற்றியை ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் தடுத்தார்கள் அல்லது இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை மறுக்க முடியாதது.

தமிழர் தாயகம் என்று ஒன்று இருக்கின்றது என்பதைத் தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னிப் பெரு நிலத்தில் செய்து கொண்டிருக்கும் ஆட்சி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழர் தாயகத்தின் ஆக்கிரமிப்புப் பகுதிகள் சிறிது சிறிதாக வன்னிப் பெரு நிலத்துடன் இணைக்கப் பட்டு பழைய தமிழர் தாயகமாக விரிய முடியுமா? இதற்கு எவ்வளவு காலம் செல்லும்? ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் தாயகம் இருக்குமா? அன்றித் தனிநாடாக மலருமா?

வன்னிப் பெரு நிலம் பழைய தமிழர் தாயகமாக விரிய முடியுமா? என்ற வினாவுக்குச் சிலாபம் வரை விரிய முடியாது என்பதே விடையாகும். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வரை விரிவாக்குவது என்ற விடுதலைப் புலிகளின் மனோதிடம் அதை நனவாக்கும் என்று நம்பிக்கை வைக்கலாம். இந்த விரிவு நிறைவேறாமல் போக முடியாது என்பதற்கு இரு இனங்களும் இனிச் சேர்ந்து வாழ முடியாது என்ற அளவுக்கு விரிசல் கண்டுவிட்டதைக் காரணமாகக் கூறலாம். இதற்கு எவ்வளவு காலம் செல்லும்? என்ற வினாவுக்கு உலகம் மனது வைத்தால் நாளையும் நடக்கலாம்ளூ இல்லையெனில் இன்னும் சில ஆண்டுகள் செல்லலாம் என்பது விடையாகிறது.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் தாயகம் இருக்குமா? சிங்கள-புத்த இலங்கைத் தீவு என்ற மகாவம்ச சிந்தனையில் இருந்து பெரும்பான்மை இனத்தவர் மீண்டு வந்து தமிழர் தாயகம் என்று ஒன்று இருந்தது; இருக்கிறது; இருக்கும்; என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் தாயகம் இருக்க முடியும். அல்லது ஒரே நாட்டுக்குள் இரு இராணுவம் இருக்கலாம் என்றாலும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் தாயகம் இருக்க முடியும். இரண்டுமே சாத்தியமற்றவை. எனவே தமிழர் தாயகம் தனிநாடாக மலருவது மட்டுமே சாத்தியமானது.

போரினால் தமிழர் தாயகத்தை மீட்க முடியுமா? தனிச் சுதந்திர நாடாக அது மலருமா? இந்தப் போரில் யாராவது வெல்வார்களா என்ற வினாவுக்கு ஆய்வாளர்கள் இரு சாராருமே வெல்ல முடியாத போர் என்று கூறுகின்றனர். ஒன்றுமே இல்லாது தொடங்கி இன்று தரைப்படை, கடற்படை, வான்படை என்னும் அளவுக்கு வளர்ந்திருப்பதே ஒருகரை வென்று கொண்டிருக்கிறது என்று தானே கூறுகிறது. மரபுப் போரால் வெல்ல முடியுமா? முடியாது. கரந்தடிப் போரால் வெல்ல முடியுமா? முடியாது. வியட்நாம் வெல்லப் பட்ட போது அமெரிக்க நாட்டின் ஒரு பகுதியாக வியட்நாம் இருககவில்லையே. அனைத்துலக ஆதரவால் வெல்ல முடியுமா? முடியாது. எண்ணையோ, மூலப் பொருள்களோ இல்லாத ஒரு நாட்டிடம் அனைத்துலகம் ஆதரவு எப்படிக் காட்டும்? எந்தக் கரை போரியலால், மனஉறுதியால், பொருளாதாரச் சீர்குலைப்பால், மற்றக் கரையைக் களைக்க வைக்கிறதோ அந்தக்கரை இலக்கை அடைவது தவிர்க்கமுடியாதது.

அனைத்துலக நாடுகளின் ஆதரவு என்றும் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கே உண்டு. இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்கள், பறிபோகும் பத்திரிகைச் சுதந்திரங்கள் போன்றவற்றால் அனைத்துலக நாடுகள் சிலவற்றின் ஆதரவு இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போகும் சந்தர்ப்பம் உண்டு. எனினும் தமது வர்த்தக நன்மைகளுக்காகவும், பிராந்திய ஆதிக்கம் நிலை நாட்ட வேண்டியும் தொடர்ந்து ஆதரவளிப்பதை அனைத்துலக நாடுகள் செய்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அரச சார்பற்ற நிறுவனங்களினால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் குழுவில் வகித்த அங்கத்தை இலங்கை இழந்தபோது அனைத்துலக நாடுகளினால் எதுவும் செய்ய முடியாது போயிற்று.

அண்மைய கணிப்பீட்டின் படி சராசரி மாதம் 180 போராளிகள் போரில் மரணிக்கின்றனர். தொடர்ந்து 200 கிலோ மீற்றர் எல்லைகளைக் காக்கும் போது தவிர்க்க முடியாத இந்த இழப்புக்களை ஈடு செய்வது மிகக் கடினம். வளங்களின் இழப்புக்களைக் குறைத்தபடி மண் மீட்பதென்பது போரியல் தந்திரங்கள், உபாயங்கள், ஆகியவற்றால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று. இப்படியான சூழலில் மக்கள் ஆதரவுடன் கூடிய தலைமை முக்கியமாகிறது. அதில் தமிழர் தரப்பு புண்ணியம் செய்ததே. போரை எப்படியும் இழுத்தடிப்பது என்று இலங்கை அரசும், விடுதலை இயக்கங்களினால் புதிய நாடுகள் தோன்ற இடமளிக்கக் கூடாது என்ற நிலையில் உள்ள வல்லரசுகளும் இழுத்தடிப்பதற்கு முடிவு செய்தால் அடுத்தடுத்த தலைமைகள் பற்றிய எண்ணம் தலைதூக்குகிறது.

விரைவான போரியல் தந்திரங்கள், உபாயங்களுடன் அரசியல் தந்திரங்கள், உபாயங்களும் இணைந்து தமிழர் தலைமைத்துவம் செயற்பட வேண்டியது அவசியம். முக்கியமாக இழுத்தடிக்கும் நிலைக்குத் தள்ளப் படுவதும் சாணக்கியமாக தடுக்கப் பட வேண்டியது. களநிலை மாற்றங்கள் நாளுக்கு நாள் மாறும் தன்மை கொண்டது. தலைமைப் பீடத் திட்டங்களும் அவற்றுக்கு அமையவே மாறும். நல்லதே நடக்கும்.

பிற் குறிப்பு:

இதைவிட மிக மோசமான சிந்தனை ஒன்று மிகச் சிறிய அளவு தமிழர்களிடம் உண்டு. அத் தமிழர்கள் புலம் பெயர்ந்தோரில் ஒரு துளியாகவும், வெளிநாடுகளில் பிறந்து வெளிநாட்டவர்களாகவே தாயக நினைவற்றவர்களாகவே வளர்ந்தவர்கள். அவர்கள் நாம் இப்போது வாழும் நாட்டு மொழியைப் படித்து அம்மொழியிலேயே வேலை செய்து வாழ்கிறோம். அப்படியே இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் சிங்களத்தைக் கற்று அம்மொழியிலேயே வேலை செய்வதால் என்ன பிழை என்று வாதிக்கிறார்கள். அவற்றைச் செய்தும் (உத்தியோகச் சம்பள உயர்வுக்கே சிங்களம் படித்தோம் தானே!) எதுவித நன்மையும் இருக்கவில்லை என்பதுடன் தீமை இருந்தது என்பதே உண்மை என்பது இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு கறை படிந்த அத்தியாயம்.

- சூரியன்

அனைத்துலகம் நீதி நியாயத்தை கடைபிடித்து எங்களுக்கு தமிழீழம் என்ற நாடு கிடைக்க வழிசெய்யும் என்பதெல்லாம் கானல் நீருக்கு ஒப்பானது.அனைத்துலகத்தின் மனித உரிமை மீதான அக்கறை தனமனித சுதந்திரம் பற்றிய கரிசனம் எல்லாமே போலித்தனமானவை.இன்றைய உலகமயமாதல் சூழலில் தங்களது சந்தைப் பொருளாதாரம் மற்றும் அவை சாhந்த பிராந்தியஅரசியல் நலன்களை வைத்தே தேசங்களினதும் தேசிய இனங்களினதும் விடுதலையையும் இருப்பையும் அனைத்துலகத்தை ஆளுமை செய்யும் வல்லாதிக்க சக்திகள் தீர்மானிக்கின்றன.

எமது மக்களின் முன் எப்போதும் ஒரே சிந்தனை

இருக்க வேண்டும்..

அது தான் முதலில் தாயக மண் முழு மீட்பு

அதன் பின் நமது மற்றைய நடவடிக்கைகள்.......

எமது முழு நோக்கம் சிந்தனை அதுவே மூச்சாக

இருக்கவேண்டும்... அதற்கு தடையாக உள்ள வற்றைஉ

அகற்ற் உறுதி பூணுவோம்.....,.,

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களின் முன் எப்போதும் ஒரே சிந்தனை

இருக்க வேண்டும்..

அது தான் முதலில் தாயக மண் முழு மீட்பு

அதன் பின் நமது மற்றைய நடவடிக்கைகள்.......

எமது முழு நோக்கம் சிந்தனை அதுவே மூச்சாக

இருக்கவேண்டும்... அதற்கு தடையாக உள்ள வற்றைஉ

அகற்ற் உறுதி பூணுவோம்.....,.,

உறுதி எடுப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.