Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை, ஜனநாயகம், ஈழநாட்டின் விடுதலை - சாண்டில்யன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித சுதந்திரத்தைப் பாதுகாத்து அரசாட்சி செய்வதே ஜனநாயகத்தின் கொள்கையும் பழக்கமும். ஜனநாயகத்தை வரையறுப்பதென்றால்: மனித சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நிறுவும் அறக்கட்டளையாகும். ஒரு ஜனநாயக சமுதாயதத்தின் பழக்கங்கள் அந்த சமுதாயத்தில் சகிப்புத்தன்மை, கூட்டுறவு, இணக்கம் இவைகளின் மதிப்பை ஒப்புவி செய்வதாகும். அந்த நாட்டின் எல்லா குடி மக்களும் பாதுகாப்போடும் சுதந்திரத்தோடும் வாழ வழி செய்வதே ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் கொள்கையாகும். ஆனால், இலங்கை சிங்கள சமுதாயமும் அதன் அரசியலும் தொன்று தொட்டு ஈழத் தமிழரை கொன்று குவிப்பதில் கண்ணோட்டமாக இருìகின்றார்கள். சிங்களச் சமுதாயத்தின் கழுகுப் பார்வை எதிர்க்கும் தமிழனை அழிக்கவேண்டும், ஒழிக்கவேண்டும், மற்றோரை, தங்கள் இனத்திற்குள் உறிஞ்சிக் கொள்ளும் முறைகளை வழிவகுக்கவேண்டும். பல லட்சம் தமிழர்கள் சிங்கள சமுதாயத்தினுள் உறிஞ்சப்பட்டுவிட்டார்கள். இன்றய சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு, அனுராதபுரம், பொலன்னறுவ, இப்படி பல ஊர்களில் வாழும் தமிழர், தங்களுடைய இன அடையாளத்தை மறந்து, இருதலைக் கொள்ளி எறும்புகள் போல வாழுகின்றார்கள்.

குணரத்தினம் எப்படி குணரத்ன என்ற பெயரில் மாறினார்கள்.

குலசிங்கம் எப்படி குலசிங்க என்ற பெயரில் மாறினர்கள்.

ராஜரட்ன என்ற பெயரில் வாழ்ந்த துவேஷம் மிக்க ஒரு அரசியல் வாதி ஒரு தமிழர்.

இப்படி பல உண்மைகளை தமிழ் மக்கள் நாளடைவில் மறந்து விட்டார்கள்.

அன்றய தமிழ் அரசியல் வாதிகள் விட்ட பிழைகள், இன்று தேசியத் தலைவரின் முன்னிலையில் ஆயுதப் போரட்டமாக மாறி விடுதலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும், சரித்திரம், சுழலும் சக்கரம் போல சுற்றிக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் நாட்டுக்கு விடுதலை தேடும் முகமாக தேசியத் தலைவரின் முன்னிலையில் இளம் வாலிபர்களும், யுவதிகளும், தங்கள் உயிரை அர்ப்பணம் செய்து, போராடுகின்றார்கள். ஆனால், இவர்களுக்கு, எத்தனை எதிரிகள். உமா மஹேஸ்வரன் தொடக்கம் கருணாவரை எதிரிகளாக மாறி, இன்று இலங்கை இராணுவத்தோடு சேர்ந்து ஒட்டுப்படைக் குழுக்கழாக மாறி தமிழரை அழிக்கின்றார்கள். தமிழரை அழிப்போமென்று சபதம் போட்டிருக்கின்றார்கள். ஒற்றுமை, ஒற்றுமை, என்று கூச்சல் போடுகின்றோம். ஒட்டுக் குழுக்கள் தங்கள் நிலையை உணருவார்களா?

இவர்களுடைய அறியாமை, தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் எங்கு தூக்கி எறிகின்றது. தமிழ் தாய் மண் / திருநாடு, சிங்கள மக்களால் குடியேற்றப்பட்டு, சிங்கள மாநிலமாக மாற்றப்பட்டு, அத்தோடு தமிழ் மக்களையும் உறிஞ்சி எடுத்து சிங்கள மக்களாக மாற்றிவிடும்.

மட்டக்களப்பு, திரிகோணமலை, வவுனியா, இந்த நகரங்கள் சொற்ப காலகட்டத்தினில், சிங்கள நகரங்களாகிவிடும். மிஞ்சி இருப்பது ஏது? யாழ்ப்பாணம். இந்த நகரத்தையும் சிங்கள நாடாக்க ஒரு ஒட்டுக்குழு தலைவன் பாடு படுகின்றான்.

இந்த, ஒட்டுக்குழுத் தலைவர் மாருக்கு, சாண்டில்யனின் கேள்வியும் வேண்டுகோளும். பிரிவினை உங்கள் மனதில் எப்படித் தோன்றியது. எதற்காகத் தோன்றியது. ஒட்டுக் குழுக்கழாகிய நீங்கள் எல்லோரும் தமிழர்கள் இல்லையா? உங்கள் இனம் என்ன? உங்கள் தாய் தமிழச்சியானால், உங்களுக்கு தாய்ப் பாசமில்லையா? அல்லது, தொப்புள் கொடி அறுத்த போதே தாய் பாசமும் அறுபட்டுவிட்டதா? அல்லது தாய்ப் பாசமென்பது என்னவென்று அறியாதவர்களா? ஒரு மனிதன் ஒரு செயலை தொடங்குமுன்னே, அதன் விளைவுகளையும், முடிவுகளையும் மனக் கண்பார்வையோடு சிந்திப்பான். சிந்திக்கத் தெரியாதவன், முட்டாள். அவன், அரசியலுக்குத் தகுந்தவனல்ல. தாதா பதவி / நிலைக்குத்தான் தகுதி பெற்றவன். இன்றோ, தமிழினத்திற்கு சுதந்திரத்தோடு வாழ ஒரு நாடில்லை.

வேறு ஒரு எழுத்தாளர் கூறியது போல:

நாமில்லா நாடில்லை!

நமக்கோர் நாடில்லை!

நம்மினமோ தமிழினமாம்!

வேரில்லா மரமும்!

நாடில்லா இனமும் ஒன்றே!

புல்லுக்கும் பூண்டுக்கும்!

கூட வேருண்டு!

தமிழினத்திற்கோ

நாடில்லை! வீடில்லை!

ஒட்டுக்குழுக்களாக நீங்கள் எதைச் சாதிக்க விரும்புகின்றீகள். உங்களுடைய குறிக்கோள் என்ன? புலம் பெயர்ந்த மண்ணிலும் தமிழ் மக்களை எதிரிகளாகத்தான் பார்க்கின்றீர்கள். அழிக்க முனைகின்றீர்கள்.

1956ம் ஆண்டிலிருந்து 1983ம் ஆண்டு வரை சிங்களக் காடையர்கள் தமிழ் மக்களைக் கொன்று குவித்தார்கள். ஆனால், 1983ம் ஆண்டிலிருந்து இன்றுவரை, ஒட்டுக்குழுக்கழாகிய நீங்களும், அரச பயங்கரவாதிகளோடு சேர்ந்து, வெட்கம், மானம், ரோஷம் இல்லாது, தூய தமிழ்த் தாய்களையும், அவர்கள் பெற்ற பிள்ளைகளையும் கொன்று குவிக்கின்றீர்கள். யாழில், எத்தனை, கடத்தல்கள், கொலைகள், கிழக்கில், மேற்கில், இப்படி ஒவ்வொரு நகரத்தினிலும் கடத்திக் கொலை செய்கின்றீர்கள். இவையெல்லாம், எதற்காக? உங்கள் வயிற்றை நிரப்புவதற்காகவா? அல்லது, பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசையாலா?

பல பரிமாண அடக்கு முறைகளிலும் அழிவுப்பாதைகளிலும் இருந்து தப்பி புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், புலம் பெயர்ந்த நாடுகளிலும், ஆயுதம் தாங்கி தமிழ் மக்களை கொலை செய்கின்றீர்கள். இது தமிழனுக்கு ஆண்டவனின் சாபமா? ஒட்டுக்குழுக்களே - சற்றே சிந்தியுங்கள். வாழ வழி தெரியவில்லையா?

தமிழன் சாதி, மதபேதமின்றி, ஒரே கொள்கையோடு, ஒரே குவிமையைத்தை, வைத்து ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம். ஒற்றுமை, ஒற்றுமை, என்று கூச்சலிட்டுக்கொண்டு, பின் வழியால், சாதி, சாதி, சமயம், சமயம், என்ற வேறுபாடுகளோடு, மனதை இறுகிய நிலையில் வைத்துவிட்டால், எங்களுக்கு விடுதலையில்லை, அடிமை வாழ்க்கைதான். கால் பந்தாடுபவர்கள், ஒரே குழுவில், கொள்கை வேறுபட்டாலும், அவர்களுடைய குறிக்கோள் ஒன்றுதானே? இலக்கில் பந்தை அடித்து வெற்றிபெறுவது.

வேற்றுமையில் ஒற்றுமை என்று வாதாடுகின்றார்கள். அதாவது: unity in diversity;- focus in class, caste & creed distinction. நடைமுறைக்கு இந்த வாதம் ஒத்து வராது.

1956ம் ஆண்டு ஆனி 5ம் திகதி, சிங்கள மொழி மசோதா, பண்டாரநாயக்காவினால், பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது. அன்றய நாளில், பாராளுமன்றத்திற்கு வெளியே, தமிழ் அரசியல்வாதிகளும், தொண்டர்களும் மசோதாவை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்தார்கள். தமிழர்கள் சிங்களக் காடையர்களால் அடித்துக், கூட்டித், துடைக்கப்பட்டார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால்: அடித்துத் கூட்டிய காடையர்களில் புத்தபிக்குமாரும் சேர்ந்துதான் புடைத்தார்கள். இதில் புத்த சமயத்தில் பிழை கூறலாகாது. அதைக் கடைப்பிடிப்பவர்களைப் பார்த்து நாம் சிரிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சமுதாயத்தோடுதான் தமிழர்கள் இன்றய வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஜனநாயகம் என்று உலகத்திற்குக் கூறிக்கொண்டு, இலங்கை அரசாங்கம் இதுவரை எதை நடைமுறையில் வைத்து ஆண்டு கொண்டிருக்கின்றார்கள்: இனத் துவேஷம் / பிரச்சனை, கொடுங்கோன்மை ஆட்சி, பாலியல் வல்லுறவுக்கள், பொருட்கள் சூறையாடல், கொலைகள், வேலைவாய்ப்பு இல்லாமை, குறைந்த பட்ச கல்வி முன்னேற்றங்கள், இப்படி எத்தனையோ.

தமிழர்களாகிய நாங்கள், இன்னுமா இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும். தமிழ் இனத்திற்குள்ளேயே பாலியல் வல்லுறவுக்கள், பொருட்கள் சூறையாடல், கடத்தல்கள், கொலைகள் செய்ய வேண்டுமா? ஒன்றுபட்டால் என்ன நீங்கள் மாண்டுவிடுவீர்களா?

தமிழர்கள் பிரிவினையோடு வாழ்ந்ததற்கு உதாரணம்: 1833ல் இரண்டு நாடுகளை பிரித்தானியா இணைத்தபோது எம்முடய அன்றய அரசியல் வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. 1948ல் சுதந்திரம் கிடைத்தபோது கூட எம்முடய அன்றய அரசியல் வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால், ஜின்னா, பாகிஸ்தான் என்றொரு நாடு இறையாமையோடு தன்னுடைய மக்களுக்கு வேணுமென்று பிரித்தானியாவோடு வாதாடி வென்றார்.

ஜின்னாவிற்கும், எமக்கும் என்ன வித்தியாசம்? சிந்தியுங்கள் தமிழர்களே!

நாம் போராடுவது தனி நாடு கேட்டல்ல! பிரிவினை கேட்டல்ல!. எங்களுடைய நாட்டைத் திருப்பித் தரும்படி கேட்கின்றோம். (இலங்கை பிரித்தானியரிடம் கேட்டது; விடுதலையும், சுதந்திரமும் இறையாமையும்).

அதைத்தான் நாங்கள் இப்போது இலங்கையிடம் கேட்கின்றோம்.

தமிழீழத்தின் விடுதலையும், சுதந்திரமும், இறையாமையும்.

நன்றி

சாண்டில்யன் 22-06-08

Edited by Sandilyan

தமிழீழத்தின் விடுதலையும், சுதந்திரமும், இறையாமையும்.

சாண்டில்யன் 22-06-08

உது ஸ்ரீலன்காவின் கையில் இல்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: அருமையான கருத்து சாண்டில்யன்.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது ஸ்ரீலன்காவின் கையில் இல்லை. :rolleyes:

வணக்கம்

ஆமாம் எமது கேள்வி - இறையாமை விடுதலை சுதந்திரம் : ஈழ நாட்டிற்கு கிடைப்பதென்றால் சர்வதேசமும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். தர்ம முறையில் இலங்கையைக் கேட்டோம். ஆனால் சிங்களக் சமுதாயம் என்ன வழி வகுத்தது. இன அழிப்பு. 1956 ஆண்டு தொடக்கம் இன்று வரை.

ஆயுதப் போரில் பல பல தமிழ் எதிரிகள் முளைத் திருக்கின்றார்கள்.

இத்தனை ஒட்டுக்குழுக்கள் மத்தியில் சர்வதேசத்தின் பார்வை எப்படி இருக்கும்.

நன்றி

சாண்டில்யன்

Edited by Sandilyan

வணக்கம்

ஆமாம் எமது கேள்வி - இறையாமை விடுதலை சுதந்திரம் : ஈழ நாட்டிற்கு கிடைப்பதென்றால் சர்வதேசமும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். தர்ம முறையில் இலங்கையைக் கேட்டோம். ஆனால் சிங்களக் சமுதாயம் என்ன வழி வகுத்தது. இன அழிப்பு. 1956 ஆண்டு தொடக்கம் இன்று வரை.

ஆயுதப் போரில் பல பல தமிழ் எதிரிகள் முளைத் திருக்கின்றார்கள்.

இத்தனை ஒட்டுக்குழுக்கள் மத்தியில் சர்வதேசத்தின் பார்வை எப்படி இருக்கும்.

நன்றி

சாண்டில்யன்

சர்வதேசமென்பது ஒரு காடையர் கூட்டம்.

எம்மிடம் கொடுத்து கூட்டு வைப்பதற்கு பெரிதாக எதுவுமில்லை

இதை முரட்டு பலம் மூலமே கவர்ந்து சிலரை கவுக்கமுடியும்.

ஒட்டுகுழுக்கள் பற்றிகதைப்பதிற்க்கு ஒண்டுமில்லை.

60 வருசம் கோவணத்தை புடித்துக்கொண்டு சண்டைபுடிக்கிறோம்.

சிலர் ஈஸியாய் இருப்பதற்க்கு ஜங்கி போட ஆசைபடுகிறார்கள்.

ஆனால் இதை சர்வதேசம் கணக்கெடுப்பதில்லை.

சிலர்தான் தூக்கிபிடிக்கிறார்கள்.பிரா கூட போட்டுவிடபாக்கிறார்கள்

அந்த சிலரைதான் கவனமாக கையாளவேண்டும்.

Edited by Panangkai

பிரா,ஜங்கி,கோவணம்..... சும்மா ஒரு கூற்றுக்காக. பாலிளிவு அல்ல!

மொத்தத்தில் சாண்டியனின் கருத்துக்க்ளை வரவேற்கிறேன்

நன்றி....சிந்தித்து செயல் பட ஒரு சந்தர்ப்பம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.