Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞருக்கு என்ன நடந்தது? இல்லை இதுதான் உண்மை முகமா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் போலி ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் சொத்து வாங்குகின்றனர் எனத் தகவல்கள் வருகின்றன. இதை அனுமதிகக் கூடாது என்று கலலெக்டர் மற்றும் பொலிஸாருக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர்கள் மற்றும் எஸ்.பிக்கள் மாநாட்டில் இது குறித்து, கருணாநிதி பேசியவை வாருமாறு :

தமிழ்நாட்டிலுள்ள 117 இலங்கை அகதி முகாம்களில் 73,433 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் பல்வேறு ஆவணங்களைத் தவறான வழிகளில் பெற்று, தமிழகத்தில் சொத்து வாங்குவதில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்தியக் குடிமகனாக அல்லாதவர் இந்த உரிமை அனுபவிக்க வழியில்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத் வேண்டும். நாட்டின்; இறையான்மைக்கு ஊறு விளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு கருணாநிதி பேசியுள்ளார்.

நன்றி சுடர் ஒளி

வீரகேசரியிலிருந்து

ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்குவது தடுக்கப்பட்ட வேண்டும் அவ்வாறு நடக்காமல் தமிழகக் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கருணாநிதி அறிவித்திருப்பதற்கு தமிழக கட்சிகள் பலவும் தமது கடும் கண்டனத்தை கேசரி வார வெளியீட்டிற்கு தெரிவித்த போது வெளிப்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் பிற இனத்தவர்கள் மட்டும சொத்துகளை வாங்கும் நிலை உள்ளபோது தமிழர்கள் மட்டும் தமிழகதில் சொத்துக்களை வாங்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறாh தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பழ.நெடுமாறன்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் :

பொதுவாக வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர் இந்தியாவில் சொத்துக்கள் வாங்க தடையேது கிடையாது. என்.ஆர்.ஐ எனப்படும் அத்தகைய இந்திய வம்சாவளியினர் இந்தியா முழுவதும் சொத்தகளை வாங்கி வருகிறார்கள்.

தமிழகத்திலும் கூட குஜாரத்திகளும், மார்வாடி மக்களும் அதிகளவில் நிபுலன்களை வாங்கி சொத்துகளைச் சேர்த்து வருகிறார்கள். ஆனால், ஈழத்தமிழர் மட்டும் சொத்துக்களை வாங்கக் கூடாது என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று விளங்கவில்லை.

தமிழர்களாக இருந்தால் சொத்துக்களை வாங்கக் கூடாது என்று கருணாநிதி கருதுகிறாரா? இதை சக தமிழர்கள் என்ற வகையில் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எந்தச் சட்டத்தின் அடிப்படையில் கருணாநிதி இவ்வாறு ஓர் அறிவிப்பபை வெளியிட்டிருக்கிறார்? இதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். அதிலும் திடீரென்று இப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதையும் அவர் கூற வேண்டும்.

தானும் தன் குடும்பத்தாரும் மட்டும் சொத்துகளை வாங்கிக்குவித்தால் போதும் என்று கருணாநிதி நினைக்கிறார் போலும். வாழ வழியில்லாமல் தமிழகத்திற்கு அகதிகளாக வருகிறார்கள் ஈழத்தமிர்கள். அப்படிப்பட்டவர்கள் இங்கே சொத்த்துகளை வாங்க வர வில்லை. ஓராளவு வசதிபடைத்த சிலர் சொத்துகள் வாங்குவதற்கும் தமிழக அரசு தடைபோடுவது கண்டிக்கத்தக்கது. வேண்டுமெனறே தமிழர்களுக்கு எதிராக கருணாநிதி இவாவறு செயற்படுகிறார் என்றார்.

தொல் திருமாவளவன்

இதே வேளை தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் சொத்து வாங்கக்கூடாதென்ற கருணாநிதியின் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவா தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளர்ர்.

இது குறித்து அவர் :

கருணாநிதியின் இந்த அறிவிப்பு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. எந்தப் பின்னணியில் இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறார் என்று தெரியவில்லை.

இந்த அறிவிப்பால் காவல் துறையினரின் இடையூறுகள், தொல்லைகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பெருகும். தேவயைற்ற புதுத் தொல்லைகள் உருவாகும். எனவே கருணாநிதி இந்த அறிவிப்பபை மறுபரிசீலனை செய்வது மிக மிக இன்றியமையாததாகும்.

தமிழகத்தில் அண்டை மாநிலத்தவர்கள் நிலங்களை வாங்கிக் குவிக்கிறார்கள். குறிப்பாக வடநாட்டவர்கள் தமிழக மண்ணையே சூறையாடும் அளவிற்கு தாறுமாறாக விலை நிர்ணயம் செய்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறாhகள்.

அதேபோல் பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் விளை நிலங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர். தமிழ்நாட்டு தமிழர்களே குடியிருப்பதற்கு வழியில்;லாமல் தவிக்கும் நிலை உருவாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்hவறான சூழலில் அதைப் பற்றியேல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகள் அரசுக்குத் தவறான தகவல்களைக் கொடுத்ததன் அடிப்படையில் கருணாநிதி இந்த அறிவிப்பை செயதிருக்கக்;கூடும் எனக் கருதுகிறோம். என்றாலும் இந்த அறிவிப்பை முதல்வர் திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்துகின்றோம். என்றார்.

டி.எஸ்.எஸ் மணி

இதே வேளை மத்திய உளவளத்துறை அதிகாரகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் முதல்வர் இப்படியான அறிவித்தலை செய்திருக்கிறா என்று கம்யூனிஸ் பிரமுகர் டி.எஸ்.எஸ்.மணி தெரிவித்ததுள்ளார்.

மேலும்

ஈழத்தமிழர்கள் உள்நாட்டுப் போர் நடப்பதால் தமிழகத்ததுக்கு வருகிறார்கள். அவ்வாறு தமிழகத்துக்கு வரக்கூடியவர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

அகதிகளாக வருகிறவர்கள் ஒரு பிரிவினர் இவர்கள் அகதிகளுக்கான முகாமில் தங்க வைக்கப்படுகிறாhகள். தங்களின் அன்றாட வாழ்க்கையையே நடத்தவே சிரமம்படுகிறவர்கள். அந்த அகதிகளுக்குப் போதுமான வசதிகள் இல்லை.

இவர்களுக்குக் கிடைக்க வேண்டியவை எதுவும் சரிவரக் கிடைப்பதில்லை என்பதேல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. இது அகதிகளின் அவல நிலை. இத்தகையவர்களால் சொத்துக்களை வாங்க முடியாது.

இன்னொரு பிரவினர் இந்தியா வருவதற்கான விசாவை முறைப்படி பெற்று விமானத்தில் தமிழகம் வந்த இறங்குபவர்கள். தமிழகக் காவல் நிலையத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து பின்னர் சொந்தச் செலவில் வாடகை வீடுகளில் தங்குகிறார்கள்.

இவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள உறவினாகள் வகையில் பணம் வருகிறது. 'மணியார்டர் எகானமி' என்று யாழ்ப்பாணத்தில் சொல்லுவது போன்ற வாழ்க்கையை வாழ்பவர்கள்.

இவர்கள் தாங்கள் வசிப்பதற்காக தமிழத்தில் வீடுகளை வாங்குகிறார்கள். மற்றப்படி விவசாயம் செய்வதற்கோ, நிறுவனம் தொடங்குவாதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. மேலும் இவ்வாறு விமானத்தில் வந்து முறைப்படி தமிழகத்தில் தங்குபவர்களில் பலர் இந்திய அரசிடம் இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்களும் செய்கின்றார்கள்.

இந்தியாவில் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கக் கூடியவர்கள், விதிமுறைகளின்படி இந்தியாவில் விவசாய நிலங்களை வாங்கக் கூடாது மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆக விவசாய நிலம்தான் வாங்கக் கூடாது என்று விதிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, குடியிருக்க இல்லம் வாங்கக் கூடாது என்று விதிமுறை இல்லை.

இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டு, போர் நடப்பதால் இங்கு வந்து தங்கியுள்ள ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள், இங்கும் அதிகமாக உறவினர்களைக் கொண்டிருப்பவர்கள், தாங்கள் வாழும் இடத்தையும் சொந்தக் காசில் வாங்கக் கூடாது என்று முதல்வர் சொல்லியிருப்பரேயானால், அதிகாரிகள் அவருக்குத் தவறாக வழிகாட்டி இருக்கிறார்கள் என்று அர்த்தம். இலையெனில் மத்திய அரசிலிருந்து ஈழத்திலிருந்து வரும் எல்லா தமிழர்களையும் கண்காணிக்க வேண்டும் என்று கொடுக்கும் நிர்ப்பந்தம் காரணமாக மத்திய அரசின் உளவு நிறுவனஙக்ள வலுக்கட்டாயமாக முதல்வர் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தையைப் பிடுங்கியிருக்கிறார்கள்.

முதல்வர் மனதார இவ்வாறு ஈழத்தமிழர்களுக்கு எதிராகச் சொல்லக்கூடிய மனப்பாங்கு உள்ளவர் அல்லர். laugh.gif அதிகாரிகளின் தவறான வழிகாட்டலோ, சுட்டிக்காட்லோ, அல்லது மத்திய உளவுத்துறை அதிகாரிகளின் நிhப்பந்தத்தின் மூலமாக முதலவரின் வார்த்தைகளைப் பிடுங்கியதே தான் இந்த நிகழ்வு என்றார். (நல்ல சமாளிப்பு)

Edited by puspaviji

  • கருத்துக்கள உறவுகள்

:wub: கருணாநிதிக்கெதிராக இங்கு எழுதப்படும் கருத்துக்கள் பலவும் இன்னோரென்ன காரணங்களுக்காக நீக்கப்படுகின்றன. இது கருணாநிதி மேல் வைக்கப்படும் விமரிசனங்களால் அவர் ஈழத்தமிழர்மேல் வைத்திருப்பதாகக் கருதப்படும் அநுதாபம் குறைவடையலாம் என்ற கருத்து காரணமாக இருக்கலாம். ஆனால் அவர் எம்மீது கொண்டிருப்பதாகக் கருதப்படும் அநுதாபம் இதுவரையிலும் என்ன செய்தது என்பதும், இப்போது என்ன செய்து வருகிறது என்பதும் வெள்ளிடைமலை.

உதவிகள் கேட்ட காலம் போய் இப்போது உபத்திரவமாவது செய்யாமல் இருங்கள் என்று கேட்கும் காலம் வந்திருக்கிற்து.

எங்களை நாங்களே முட்டாள்களாக்குவதை விடுத்து யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதே சிறந்தது.

இன்று நேற்றல்ல 1983 ல் இருந்து கருணாநிதி ஈழத்தமிழருக்கு எமது விடுதலை போரட்டத்திற்கு என்ன செய்தார் என்பதை தேடிப்பாருங்கள் இந்த அரசில் வாதியின் உண்மை முகம் தெரிந்துவிடும். எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கின்றோம். இவர்கள் அரசில்வாதிகள். இவர்களால் இப்படித்தான் நடந்து கொள்ள முடியும். இனியாவது விழித்துக் கொள்வோம். ஒதுங்கியிருங்கள். உங்கள் உதவி எமக்குத் தேவையில்லை தயவுடன் உபத்திரவம் தராமல் இருந்தால் போதும் அரசியல் அசுத்தங்களே.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை உலகத் தமிழர்களின் தலைவன் என்ற நிலையில் இருந்து தரமிறக்கியுள்ளது.

செவ்வாய், 24 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்]

தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் மீது கலைஞரின் அரசாஙக்ம் விதித்துள்ள சொத்துத் தடையை, மலையக மக்கள் முன்னணி கண்டித்துள்ளது.இது குறித்து, தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல்

கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கும், மலையக

மக்கள் முன்னணியின் தலைவர் - அமைச்சர் பெ.சந்திரசேகரன்,

தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் மீது கலைஞர்

விதித்துள்ள சொத்துத் தடை, புலம்பெயர்ந்து வாழும்

ஈழத்தமிழர்களை திகிலடைய வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலக நாடுகளில் அகதித் தஞ்சம் கோரிய ஈழத்தமிழர்கள் மீது,

இற்றைவரைக்கும் எவ்விதமான சொத்துத் தடைகளையும் மேற்குலக

அரசுகள் விதிக்காத நிலையில், ஷமரத்திலிருந்து வீழ்ந்தவனை

மாடேறி மிதித்த கதை| போன்று, ஈழத்தமிழர்களின் மனதை

நோகடிக்கும் வகையில் கலைஞர் நடந்து கொள்வதாகவும்,

அமைச்சர் பெ.சந்திரசேகரன் அவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்கள் மீது கலைஞர் முத்துவேல் கருணாநிதி விதித்துள்ள

சொத்துத் தடை, உலகத் தமிழர்களின் தலைவன் என்ற நிலையில்

இருந்து அவரைத் தரமிறக்கி, அருவருப்புக்கும், தலைகுனிவுக்கும்

உரிய ஒருவராக, அனைத்துத் தமிழர்களும் கருதும் நிலைக்கு

வழிகோலும் என்றும,; அமைச்சர் பெ.சந்திரசேகரன் எச்சரித்துள்ளார்.

http://www.pathivu.com/?p=1424

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் உண்மை முகம் இதுவே

ஏமாறுபவன் இருக்கும் வரை

ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்???

ஆனால் இவர்களைக்கண்டிக்கக்கூட உரிமையற்ற

அல்லது

பலமில்லாத இனமாய் என் இனம் சோரம் போனபடி.....

இதைவிட நாம் யார் என்று காட்டிவட்டு அனைவரும் ...........

இதைவிட நாம் யார் என்று காட்டிவிட்டு அனைவரும் ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes: கருணாநிதிக்கெதிராக இங்கு எழுதப்படும் கருத்துக்கள் பலவும் இன்னோரென்ன காரணங்களுக்காக நீக்கப்படுகின்றன. இது கருணாநிதி மேல் வைக்கப்படும் விமரிசனங்களால் அவர் ஈழத்தமிழர்மேல் வைத்திருப்பதாகக் கருதப்படும் அநுதாபம் குறைவடையலாம் என்ற கருத்து காரணமாக இருக்கலாம். ஆனால் அவர் எம்மீது கொண்டிருப்பதாகக் கருதப்படும் அநுதாபம் இதுவரையிலும் என்ன செய்தது என்பதும், இப்போது என்ன செய்து வருகிறது என்பதும் வெள்ளிடைமலை.

உதவிகள் கேட்ட காலம் போய் இப்போது உபத்திரவமாவது செய்யாமல் இருங்கள் என்று கேட்கும் காலம் வந்திருக்கிற்து.

எங்களை நாங்களே முட்டாள்களாக்குவதை விடுத்து யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதே சிறந்தது.

ரகு நீங்கள் சொல்லுறதுதான் சரி எங்கள நாங்களே முட்டாளாக்கக்கூடாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.