Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெல்பேர்ண் பொங்கு தமிழ் நிகழ்வில் 2,000-க்கும் அதிகமானோர் பேரெழுச்சியுடன் பங்கேற்பு

Featured Replies

மெல்பேர்ண் பொங்கு தமிழ் நிகழ்வில் 2,000-க்கும் அதிகமானோர் பேரெழுச்சியுடன் பங்கேற்பு

[சனிக்கிழமை, 05 யூலை 2008, 05:58 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

அவுஸ்திரேலியாவின் விக்டோறியா மாநிலத்தில் உள்ள மெல்பேர்ண் நகரில் இன்று சனிக்கிழமை பொங்கு தமிழ் நிகழ்வு மிகவும் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

மெல்பேர்ண் நகரின் மையத்தில் அமைந்துள்ள பெடரேசன் சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 2,000-க்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.

பிற்பகல் 2:00 மணியளவில் நிகழ்வு தொடங்கியது.

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தவில், நாதஸ்வர கச்சேரியுடன் விக்டோறியா தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவகுமார் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில், மங்கள விளக்கை திருமதி துளசி பரமசிவன் ஏற்றி வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற எழுச்சி அரங்காற்றுகைகளின் தொடக்க நிகழ்வாக திருமதி மீனா இளங்குமரன் நடனப்பள்ளி சிறுமியின் வரவேற்பு நடனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, பொங்கு தமிழ் பாடல் இசைக்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்ற மக்களின் உணர்ச்சிகளை மேலும் எழுச்சிகொள்ள வைத்த இந்தப் பாடல், அங்கு கூடியிருந்தவர்களை எழுந்து நின்று கரகோசம் செய்யுமளவுக்கு பரவசப்படுத்தியது.

அடுத்து உரையாற்றிய அவுஸ்திரேலிய ஈழத் தமிழ்ச் சங்கச் தலைவர் மகேந்திரராஜா, பொங்கு தமிழ் நிகழ்வு என்றால் என்ன, அது எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பவை பற்றி கூறினார்.

அதனையடுத்து, வணக்கத்துக்குரிய டீக்கின் அடிகளாரும் அவரைத் தொடர்ந்து ரிச்சர்ட் வூட்டன் அடிகளாரும் உரையாற்றினர்.

ஈழத்தமிழர் போராட்டத்துக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர்கள் இன்றைய நாளும் இந்த பொங்கு தமிழ் நிகழ்வை பாராட்டி தமிழ் மக்களின் எழுச்சி கண்டு தாம் வியப்படைவதாகவும் இவ்வாறான தமிழ் மக்கள் திரட்சியை முன்னர் தான் கண்டதில்லை என்றும் கூறினர்.

நீதியின் வழி நின்று தமது நியாயபூர்வமான உரிமைகளை கோரி போராடும் தமிழ் மக்களின் இந்த தொடர்ச்சியான போராட்டங்களை அவுஸ்திரேலிய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர்கள் அங்கு இடித்துரைத்தனர்.

அடுத்து இடம்பெற்ற பிரபல பாடகர் நித்தி கனகரட்னத்தின் பாடல், தாயக விடுதலை வாழ்வில் தமிழ் மக்கள் படும் துயரத்தை படம் பிடித்துக்காட்டியது.

அதனைத் தொடர்ந்து, மெல்பேர்ண் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் தமிழர் உரிமை மற்றும் போராட்ட உணர்வுகளை ஆங்கிலத்தில் பாடலாக பாடினார். இவ்வாறு பாடப்பட்ட சுமார் மூன்றுக்கும் அதிகமான பாடல்களை அப்பகுதியால் சென்ற அவுஸ்திரேலிய நாட்டு குடிமக்களையும் நின்று உன்னிப்பாக கேட்க வைத்தன.

அதனையடுத்து, அவுஸ்திரேலிய வானொலியில் தமிழர் பிரச்சினைகள் தொடர்பான ஆங்கிலச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த அன்ரனி கிறேசியன் உரையாற்றினார்.

தமிழரின் உரிமைப் போராட்டம் தாண்டவேண்டிய தடைகளுக்கு பொங்கு தமிழ் நிகழ்வு எத்துணை முக்கியத்துவமானது என்பதை அவர் வலியுறுத்தினார்.

அடுத்த நிகழ்வாக, நிருத்தா சொரூபி நடனப்பள்ளி மாணவிகளின் நடனம் இடம்பெற்றது. ஈழத்தமிழ் எழுச்சிப் பாடலுக்கான நடனம், பாரம்பரிய நடனமான கரகாட்டம் ஆகியவற்றை மேடையேற்றிய மாணவிகளின் ஆற்றுகைகள் திரண்டிருந்த மக்களை எழுச்சிகொள்ள வைத்தது.

அடுத்து பேசிய மெல்பேர்ண் இந்திய தமிழ்ச் சங்கப் பொருளாளர் அசோகராஜா, தமிழர்கள் எதிர்கொண்டு வரும் படுகொலை கலாச்சாரம் விடுதலைப் புலிகளால் ஒழிக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார்.

ஈழ விடுலைப் போராட்டத்தை தனது நெஞ்சத்தொட்டிலில் தாலாட்டி வளர்க்க ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர். இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருந்தால், பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தமிழீழம் மலர்ந்திருக்கும் என்று கூறினார்.

"பேதமை பதுமையாக தன்னை புரட்சித்தலைவி என்றி கூறிக்கொண்டு ஆட்சிக்கட்டில் ஏறிய ஜெயலலிதா தமிழரின் போராட்டத்தை தூக்கியெறிந்து நடந்து கொள்கிறார் என்று நாம் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், அவர் தமிழச்சியே அல்ல" என்றும் தெரிவித்தார்.

அதனை அடுத்துப் பேசிய, மருத்துவப்பணிக்காக வன்னி சென்று வந்த அவுஸ்திரேலிய குடிமகனான ஜேசன் தோமஸ் மற்றும் அவுஸ்திரேலிய சோசலிச முன்னணி செயலாளர் மாகரிட்டா வின்டிச் ஆகியோர் திரண்டிருந்த மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தனர்.

"தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை அவுஸ்திரேலிய மக்கள் மதிக்கிறார்கள். உண்மை நிலை தெரியாத பலர் இது தொடர்பில் இன்னமும் மௌனமாக இருக்கிறார்கள். இப்படியான தொடர் மக்கள் போராட்டங்களே இந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன் இந்த அரசுக்கும் தமிழ்மக்களின் அபிலாசைகள் தொடர்பில் கரிசனையை ஏற்படுத்தும். அனைத்துலக அரசுகள் பல தமது நலன்சார்ந்தே தமது நாட்டு வெளியுறவுக்கொள்கைகளை வகுத்துக்கொள்கின்றன். ஆனால், மக்கள் போராட்டங்கள் மட்டுமே அதனை மாற்றியமைக்கும் சக்தி கொண்டவை. எம்மைப் பொறுத்தவரை நாம் தமிழீழ ஆதரவுக்கொள்கையை என்றுமே கைவிடமாட்டோம். தமிழர்களுக்கு தன்னாட்சி உடைய தனித்தேசம் கிடைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்" என்று அவர்கள் கூறினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழ் மூத்த குடிமக்கள் சங்கத்தின் சீராளன் குணரட்ணம், "தமிழர்களின் தன்னாட்சி உரிமையின் தேவை குறித்து" வலியுறுத்தினார்.

தாயகத்திலிருந்து வருகை தந்த பிரதம பேச்சாளரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உரையாற்றினார்.

அவர் தனது உரையில்,

"தாயகக் கோரிக்கையை நெஞ்சில் சுமந்து நிற்கும் எமது மக்கள் இன்று போல் என்றும் காண்பிக்கும் எழுச்சியே களத்தில் போராடும் எமது பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பலமாக அமையும்.

"சிறிலங்கா அரசு எதையும் எமக்கு தங்கத்தாம்பாளத்தில் வைத்து தந்துவிடும் என்று இனியும் எம்மால் கனவு கண்டுகொண்டிருக்க முடியாது. இது எமக்கு வரலாறு அளித்துள்ள மிகப்பெரிய சந்தர்ப்பம். தேசியத்தலைவர் பிரபாகரனின் பின்னால் அணிதிரண்டு நின்று எமக்கான தேசத்தை வென்றெடுப்பதே எமக்கு முன்னுள்ள வரலாற்றுக்கடன்.

"70-களில் முன்வைக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கையை அன்று முதல் இன்றுவரை வந்த சிங்கள அரசுகள், தாங்கள் தட்டி விளையாடும் விளையாட்டுப்பொருளாகவே பரிகசித்து வந்துள்ளன. அந்த நிலை இனிமேல் தொடராமல் இருக்கவேண்டுமெனில் எமக்கான தேசத்தை நாம் துரித கதியில் பெறவேண்டும். அதற்கு நாம் எல்லோரும் இணைந்து பாடுபட வேண்டும்.

"இன்று புலம்பயர்ந்து வாழும் தமிழன் ஒவ்வொருவனும் தனது பணியைச் செவ்வனே செய்தால் அதுவே மண்மீட்புக்கு நாம் செய்யும் மகத்தான சேவை" என்றார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வின் முக்கிய அங்கமான பொங்கு தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

இதனை படித்த விக்ரோறிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளர் தலைவர் சபேசன்,

"இந்த பொங்கு தமிழ் எழுச்சி என்பது தொடக்கம்தான். இது தொடர்ந்து புதிய பரிணாமங்களை பெற்று மேலும் வளரும். அறுவடைக்கு பின்னர்தான் பொங்கல் நடைபெறுவது வழக்கம். ஆனால் நாம் இங்கு திரண்டு எமது தமிழின உணர்வுகளை பொங்க வைத்திருக்கிறோம். இதற்கான அறுவடை வெகுதொலைவில் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

பொங்கு தமிழ் பிரகடனத்தை மக்கள் உணர்வோடு உரத்துக்கூறி உறுதியெடுத்துக்கொண்டனர்.

பொங்கு தமிழ் பிரகடனத்தின் பின்னர் இறுதி நிகழ்வாக அங்கு இசைக்கப்பட்ட பொங்கு தமிழ் பாடலின்போது அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் எழுந்து நின்று தமது கைகளை அசைத்து தாம் தாங்கியிருந்த சிவப்பு மங்சள் கொடிகளையும் தேசியத் தலைவரின் படங்களையும் அசைத்து தமது எழுச்சியை வெளிப்படுத்தினர். சிலர் உணர்ச்சி பெருக்கிட மேடையின் முன்பாக வந்து நின்று ஆடினர். "எங்கள் தலைவர் பிரபாகரனே", "புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" என்றும் கோசமெழுப்பினர்.

மெல்பேர்ண் தமிழ் மக்களின் ஓற்றுமையின் சின்னமாக நடைபற்ற இந்த பொங்கு தமிழ் நிகழ்வு மாலை ஐந்தரை மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.

புதினம்

மிகவும் கேவலமாக நடந்த பொங்குதமிழில் இதுவும் ஒன்று. உணர்ச்சியற்ற தமிழ்மக்கள் வேண்டாவெறுப்பாக கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியிது. யாரோ ஒரு நடன ஆசிரியையின் மாணவிகளை ஆடவிட்டு தமிழ் கலாச்சாரம் இதுதான் என்று மெல்போர்ன் வெள்ளைமக்களுக்கு எடுத்துக்காட்ட முனைந்திருக்கிறது இதை நடத்திய நிர்வாகம். உண்மையான வேகம் உணர்ச்சி எதுவம் இன்றி ஏதோ ஒரு கலைவிழாபோல நடந்தது. சாப்பிடாது வந்ததுபோல மக்கள் குரல் எழுப்பி கோசங்களை உரக்கச்சொல்ல சோம்பல்பட்டார்கள். பள்ளிக்கூடத்தில் பாடவிட்டதுபோல நான்கைந்து மாணவிகள் பயந்தபடி நிரையாக நின்று பாடல்களை பாடினார்கள். இது கலைவிழாவோ என நினைக்கும்படி இருந்தது. களங்கண்ட பலர் போராளிகள் மெல்பேர்னில் இருந்தும் பெரிதாக யாரும் இதிலே பங்குகொள்ளவில்லை. எவ்வளவோ தமிழ்மக்கள் மெல்பேர்னில் இருந்தும் ஒருகுறிப்பிட்ட ஒரு சிறிய பகுதி மக்கள் மட்டுமே வந்தது வெட்கக்கேடு. ஏதோ ஒரு பள்ளியின் பழைய மாணவர்கள் கூட்டத்திற்கு கூட இதைவிட அதிக மக்களை வரவைக்க முடியும். அப்படியிருக்க ஏன் அனைத்து மக்களையும் வரவைக்கமுடியவில்லை . அப்படி என்ன இதன் நிகழ்ச்சிப்பொறுபபாளர்கள் செய்கிறார்கள். முழுநேர உறுப்பினர்களான இவர்கள் வேறு ஏதும் தொழில் செய்கிறார்களா என சந்தேகிக்க வைக்கிறது. கடந்த காலத்தில் ஏதோ ஒரு குடும்பசண்டையில் தலையிட்டு மிரட்டுவதற்கு உயர்மட்ட உறுப்பினர்ஒருவர் வந்தார் இது பழைய கதை. யாரோ ஒரு பொப்பிசைப்பாடகரை வைத்து கிறித்தவ தேவாலயங்களில் பாடுகின்ற பாடல்களை மாற்றி பாடவைத்தார்கள். இது கொஞ்சம்கூட விடுதலை உணர்வை கொண்டுவரவில்லை. . யாரோ இரண்டு தமிழர்களின் அனுதாபிகளான வெள்ளை நண்பர்கள் உண்மையில் உணர்ச்சியற்ற மக்களைப்பார்த்து கவலைகொண்டு மக்களை உற்சாகப்படுத்தும் உத்திகளில் ஈடுபடவேண்டியதாகிவிட்டது. பெண்களைப்பார்க்க ஆண்களும் ஆண்களைப்பார்க்க பெண்களும் கூடிய ஒரு பொதுவிழா திருவிழாவாகிப்போனது பொங்கு தமிழ். எந்த தொலைக்காட்சியும் இதை ஒளிபரப்ப நினைத்து அங்கு வருகைதராக்கூட இல்லை. இது மிகப்பெரிய அவமானம். என்னதான் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு நடந்தாலும் எந்தப்பயனும் இல்லை இப்படிமங்கிய தமிழால். சிங்களவனின் நகைப்பிற்கு இடமாகவே நடந்தது இந்த நிகழ்வு. இதைப்பார்த்து ஈழத்தில் இருக்கின்ற எமது உறவுகள் எப்படிப்பெருமை கொள்ள முடியும். இவையெல்லாம் என்னுடன் வந்த விடுதலைப்போராளி மனம்வருந்தி என்னிடம் கொட்டித்தீர்த்தவை. அவர் சொல்லி கவலைப்பட்ட முழுவதையும் இங்கு எழுதமுடியவில்லை மன்னிக்கவும்.

நண்பர் ஆதீபன்

என்னை பொறுத்தவரையில் இந்த பொங்கு தமிழ் சிறப்பாக நடந்தது எனத்தான் சொல்லுவேன்.இதுவரை வராத எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர்.பலர் வரவில்லைதான் ஆனால் அதற்கு நிகழ்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பாகிவிடமுடியாது குறுந்தகவல்கள் மூலம் செய்திகள் பரப்பப்பட்டன அதே போல போதுமான அறிவிப்புகள் இருந்தன ஏன் யாழ் களத்தில் கூட பனர் மூலம் அறிவிக்கப்பட்டது .

பயந்த படி மாணவிகள் பாடியது என்கின்றீர்கள் சிறுமிகளை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பாடச்செய்யும் போது மேடை பயம் வருவது இயற்கை அதனை யாரும் பெரிசாக எடுத்து கொள்ள முடியாது.நடன ஆசிரியையின் மாணவிகளை ஆடவிட்டு தமிழ் கலாச்சாரம் என காட்ட முனைகின்றது என நீங்கள் சொல்லுவது அபத்தமான குற்றச்சாட்டு.பொய் கால் குதிரை முதற்கொண்டு தவில் வரை பாவிக்கப்பட்டது.

1500-2000 எண்ணிக்கையான மக்கள் உட்பட வலு நேர்த்தியாகவே நடைபெற்றது மெல்பேர் பொங்கு தமிழ் உலக நகரங்களில் நடந்ததுக்கு எந்தவிதமான குறையும் இருக்கவில்லை என்பதே உண்மை

melbourne_pongu_tamil_20080705015.jpg

melbourne_pongu_tamil_20080705014.jpg

melbourne_pongu_tamil_20080705013.jpg

melbourne_pongu_tamil_20080705012.jpg

melbourne_pongu_tamil_20080705011.jpg

melbourne_pongu_tamil_20080705010.jpg

melbourne_pongu_tamil_20080705009.jpg

melbourne_pongu_tamil_20080705008.jpg

melbourne_pongu_tamil_20080705007.jpg

melbourne_pongu_tamil_20080705004.jpg

DSC_0176.jpg

DSC_0201.jpg

DSC_0212.jpg

DSC_0214.jpg

DSC_0220.jpg

DSC_0229.jpg

DSC_0233.jpg

DSC_0250.jpg

DSC_0262.jpg

நண்பர் ஈழவன்

பொங்கு தமிழ் சிறப்பாகத்தான் நடந்துள்ளது. அதில் சந்தேகம் இல்லை. ஆனால் போராட்டத்தில் களமாடி, கரும்புலிகளுடன் கூட இருந்து, அவர்கள் மனநிலையை எல்லாம் அறிந்த, தாக்குதல்களில் போராளிகள் காயமடைந்து இறக்கும் போது கூட இருந்து அவற்றையெல்லாம் அனுபவித்த, தலைவருடன் கூட இருந்து அவர் வேகம் விவேகம் தைரியம் ஆற்றல் எல்லாவற்றையும் கண்ணுற்ற ஒரு போராளிக்கு மெல்பேர்ணில் நடந்த பொங்கு தமிழ் ஒப்புக்குச்சப்பாத்தான் நடந்ததாக தெரிகிறது. நான் எழுதியது அவரது ஆதங்கம் தான். வருடத்தில் ஒரு தடவை அனைத்து தமிழ் மக்களும் வந்து இந்த பொங்கு தமிழை நடத்தி உலகையே திரும்பிப்பார்க்க வைக்கமுடியாதா என்ன?

நண்பர் ஈழவன்

பொங்கு தமிழ் சிறப்பாகத்தான் நடந்துள்ளது. அதில் சந்தேகம் இல்லை. ஆனால் போராட்டத்தில் களமாடி, கரும்புலிகளுடன் கூட இருந்து, அவர்கள் மனநிலையை எல்லாம் அறிந்த, தாக்குதல்களில் போராளிகள் காயமடைந்து இறக்கும் போது கூட இருந்து அவற்றையெல்லாம் அனுபவித்த, தலைவருடன் கூட இருந்து அவர் வேகம் விவேகம் தைரியம் ஆற்றல் எல்லாவற்றையும் கண்ணுற்ற ஒரு போராளிக்கு மெல்பேர்ணில் நடந்த பொங்கு தமிழ் ஒப்புக்குச்சப்பாத்தான் நடந்ததாக தெரிகிறது. நான் எழுதியது அவரது ஆதங்கம் தான். வருடத்தில் ஒரு தடவை அனைத்து தமிழ் மக்களும் வந்து இந்த பொங்கு தமிழை நடத்தி உலகையே திரும்பிப்பார்க்க வைக்கமுடியாதா என்ன?

இங்கு பலர் உண்டு அவர்களுக்கு இங்கு வரும் வரைதான் ஈழம் இங்கு வந்து ஈழத்தை சாட்டி நன்மைகள் பெற்றபின் தாம் வேறு என்ர கொள்கையில் இருப்பவர்கள் அவர்களை நாம் நம்பி பயனில்லை ஆனால் இங்கு இருக்கும் மக்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப மக்கள் இந்த முரை கலந்து கொண்டது சிறப்பானதே அதுமட்டுமல்ல வெள்ளை இனத்தவர்களும் மற்ற இனத்தவர்களும் நடனங்களை பார்வையிடும் சாக்கில் எமது நியாயமான கோரிக்கைகளையும் உள்வாங்கி இருந்தனர்.

எம்மால் முடிந்த தமிழத்தை நேசிக்கும் அத்தனை மெல்பேன் வாழ் தமிழர்களின் சார்பான சிறந்த நிகழ்வை நடத்தி இருந்தோம் என நான் நினைகின்றேன்.இனி வரும் காலங்களில் அந்த போராளி அண்ணா விரும்பிய வடிவில் இன்னும் மெல்பேனில் செயற்பாடுகள் இருக்கும் என நம்பலாம்

எம்மால் எடுத்த மிகுதி படங்கள்

DSC_0273.jpg

DSC_0295.jpg

DSC_0301.jpg

DSC_0311.jpg

DSC_0336.jpg

DSC_0366.jpg

DSC_0369.jpg

DSC_0388.jpg

DSC_0458.jpg

மோகன் அண்ணா மேலும் படங்கள் உள்ளன இணைக்க வழி இல்லையா :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை ஆதீபன்,

உங்களுக்குச் சொன்ன அந்த நபர் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார் என நினைக்கிறேன்.

ஆனானப்பட்ட வன்னியிற்கூட கூட்டம் சேர்ப்பது இமாலயச் சிக்கலாக இருந்த காலங்களுண்டு. அவருக்கும் இது தெரியும்.

மெல்பேணிலுள்ள ஈழத்தமிழரின் தொகைக்கு பொங்குதமிழில் கலந்துகொண்டவர்களின் வீதம் குறைவுதான். ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று 'வன்னிப் பார்வை'யிலிருந்து கொண்டு கருத்துச் சொல்வது சரியன்று. அவர் பேபி ஆசிரியையின் சங்கநாதத்தோடு மேல்பேண் கலைநிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்த்திருப்பார், பிறகு, அவை உணர்வுபூர்வமாகவில்லையென்று சொல்கிறார் போலும்.

இந்த நிகழ்வில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது இளையோர்களின் பங்களிப்பு. அதிலும் பெரும்பாலானவர்கள் யுத்தச் சூழலில் வளராதவர்கள், ஏன் பிறக்காதவர்கள்கூட. அவர்கள் இப்படியான போராட்டங்களில் உத்வேகத்தோடு பங்குபற்றுவதற்கு வலுவான அடிப்படைக் காரணிகளில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இருந்தும் இந்தளவுக்கு அவர்களை ஒன்றித்து வைத்திருப்பதே ஒரு வெற்றியென்றுதான் சொல்வேன்.

பிறந்தது முதல் பேரினவாதத்தின் அனைத்துக் கொடூரங்களையும் ஒவ்வொருநாளும் அனுபவித்து வளர்ந்தவர்களை, போராட்டத்தில் இணைப்பதற்கு தாயகத்தில் நடத்தப்பட்ட பிரயத்தனங்கள் உங்கள் நண்பருக்கு நிச்சயம் தெரிந்தே இருக்கும். மைலுக்கொரு கொட்டில் போட்டு விசரன் பைத்தியக்காரன் மாதிரி கத்திக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் இருப்பார்கள் போராளிகள். இயக்கத்துக்கு எடுக்கக்கூடத் தேவையில்லை; இருவரையாவது நிறுத்தி பத்துநிமிடம் தமது கருத்தைக் கேட்க வைத்தாலே அவர்களுக்கு இமாலயச் சாதனை. சைக்கிள் ஹாண்டிலில் ஸ்டிக்கர் பொட்டு தயாராக இருக்கும். ஒவ்வொரு பரப்புரைக் கொட்டிலை நெருங்கும்போதும் எமது பெண்கள் ஸ்டிக்கரை எடுத்து நெற்றியுச்சியில் ஒட்டிவிட்டுக் கொட்டிலைக் கடப்பார்கள். பிறகு பொட்டு மீண்டும் ஹாண்டிலில். இது நடந்தது வன்னியில். 'உறவுகளே! ஒருநிமிடமாவது கதையுங்கள்' என்று எழுதிய பெரிய பதாகைகள் ஒவ்வொரு பரப்புரைக் கொட்டிலிலும் தொங்கும்.

கரும்புலிகளையும் தலைவரையும் அறிந்தார்களோ இல்லையோ மேற்படி விசயங்கள் தெரியாமல் வன்னியிலிருந்து எவரும் மிஞ்ச முடியாது. போராட்டத்தில் இணையவேண்டிய, குறைந்தபட்சம் போராளிகள் சொல்வதைக் கேட்க வேண்டியதற்காக வன்னியிலிருந்தவர்களுக்கிரு

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா மேலும் படங்கள் உள்ளன இணைக்க வழி இல்லையா :lol:

மற்றைய படங்களையும் இணைக்கலாமே?.

அதீபனின் நண்பர் , ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். மெல்பேர்ணில் வாழும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி இருக்க 2000க்கு மேல் கலந்து கொண்டது என்பது மெல்பேர்ணைப் பொருத்தவரையில் சாதனை என்றே சொல்ல வேண்டும். நாதஸ்வர இசை தமிழர்களின் கலை, பொய்க்கால் குதிரை ஆட்டம் தமிழர்களின் ஆட்டம். இதை விட்டு தென்னிந்திய நடிகர்கள் போல குத்தாட்டம் ஆட அதிபனின் நண்பர் எதிர்ப்பார்த்தரோ?. மெல்பேர்ணில் இந்நிகழ்வு நடைபெற்ற இடம் வேற்று நாட்டவர்களும் பார்ப்பதற்கு ஏற்ற இடம். இதனால் அவுஸ்திரெலியா வெள்ளைக்காரர்கள் பலரும் இந்நிகழ்வைக் கண்டு தமிழர்களுக்குள்ள பிரச்சனையினை அறிந்தார்கள். மெல்பேர்ணில் உள்ள எம்மவர்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்ததாக,

மெல்பேண் என்பது தமிழர்கள் செறிவாக வாழும் பகுதியன்று. இந்நிலையில் குழும உணர்வு ஒப்பீட்டளவில் குறைந்திருப்பது யதார்த்தமே.

அங்க, இஞ்ச ஒப்பிட்டுப் பார்த்து எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் மேலெழுதிய சிலருக்காக அதைச் செய்யலாம். மெல்பேணிலும் 2000 பேர் கலந்துகொண்டார்கள், சிட்னியிலும் அதேயளவு தொகையினர் கலந்துகொண்டார்கள் எனச் செய்திகள் சொல்கின்றன.

மெல்பேணில் 2000 என்றால் சிட்னியில் குறைந்தது 5000 பேராவது கலந்துகொண்டிருக்க வேண்டுமல்லவா? இங்கே சிட்னியைக் குறைசொல்வது நோக்கமன்று. அதேதொகையில் மெல்பேணில் கலந்துகொண்டதென்பது மெல்பேணின் திறமை என்றல்லவா ஆகிறது?

மெல்பேண் நிகழ்வில் எமக்குச் சில விமர்சனங்கள் உள்ளனதான். ஆங்கிலப் பதாகைகளின் எண்ணிக்கையைக் கூட்டியிருக்க வேண்டும், பொங்குதமிழ்ப் பொருட்கள் வாங்கவென்று அணுகினால், இருபது ரி-ஷேட்டும், ஐம்பது குடையும்தான் வந்தது, அதுகள் உடனயே முடிஞ்சுபோச்சு என்ற பொறுப்பற்றதனமான பதில்கள் என எமக்குச் சில விமர்சனங்கள் உள்ளன. இவற்றைக்கூட தனிப்பட்டவர்களில் சுமத்திவிட்டு நாங்கள் தப்பியோட முடியாது.

ஆனால் வன்னிப் பார்வையிலிருந்துகொண்டு வளத்தா குடுமி சிரைச்சா மொட்டை எண்டு கதைவிடக்கூடாது என்பதே எனது கருத்து.

மற்றைய படங்களையும் இணைக்கலாமே?.

.

DSC_0513.jpg

DSC_0511.jpg

DSC_0439.jpg

DSC_0450.jpg

DSC_0479.jpg

DSC_0414.jpg

DSC_0366.jpg

DSC_0336.jpg

அடுத்ததாக,

மெல்பேண் என்பது தமிழர்கள் செறிவாக வாழும் பகுதியன்று. இந்நிலையில் குழும உணர்வு ஒப்பீட்டளவில் குறைந்திருப்பது யதார்த்தமே.

அங்க, இஞ்ச ஒப்பிட்டுப் பார்த்து எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் மேலெழுதிய சிலருக்காக அதைச் செய்யலாம். மெல்பேணிலும் 2000 பேர் கலந்துகொண்டார்கள், சிட்னியிலும் அதேயளவு தொகையினர் கலந்துகொண்டார்கள் எனச் செய்திகள் சொல்கின்றன.

மெல்பேணில் 2000 என்றால் சிட்னியில் குறைந்தது 5000 பேராவது கலந்துகொண்டிருக்க வேண்டுமல்லவா? இங்கே சிட்னியைக் குறைசொல்வது நோக்கமன்று. அதேதொகையில் மெல்பேணில் கலந்துகொண்டதென்பது மெல்பேணின் திறமை என்றல்லவா ஆகிறது?

மெல்பேண் நிகழ்வில் எமக்குச் சில விமர்சனங்கள் உள்ளனதான். ஆங்கிலப் பதாகைகளின் எண்ணிக்கையைக் கூட்டியிருக்க வேண்டும், பொங்குதமிழ்ப் பொருட்கள் வாங்கவென்று அணுகினால், இருபது ரி-ஷேட்டும், ஐம்பது குடையும்தான் வந்தது, அதுகள் உடனயே முடிஞ்சுபோச்சு என்ற பொறுப்பற்றதனமான பதில்கள் என எமக்குச் சில விமர்சனங்கள் உள்ளன. இவற்றைக்கூட தனிப்பட்டவர்களில் சுமத்திவிட்டு நாங்கள் தப்பியோட முடியாது.

ஆனால் வன்னிப் பார்வையிலிருந்துகொண்டு வளத்தா குடுமி சிரைச்சா மொட்டை எண்டு கதைவிடக்கூடாது என்பதே எனது கருத்து.

சப்பாத்து ஆய்வு நல்லவன் சார் வந்திருந்தனீங்கள் என எனக்கு தெரியும் :lol:

நாசுக்காக அமைதியாக ஓரமாக நிண்டு இதையோ கவனிச்சனியள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சப்பாத்து ஆய்வு நல்லவன் சார்

அடப்பாவி,

இன்னும் ஞாபகம் வைச்சிருக்கிறியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

Tamils call for solidarity

Chris Slee

12 July 2008

One thousand Tamils gathered in Federation Square on July 5 for Pongu Thamil (Tamil upsurge). The event included traditional Tamil dancing, music and speeches on the Tamil people’s struggle for self-determination in Sri Lanka.

Mahenda Rajah, president of the Eelam Tamil Association of Victoria, outlined the Tamil minority’s oppression. “The first act of discrimination was the disenfranchising of 1 million Tamils”, he said, referring to the 1948 decision to deny citizenship rights to Tamil plantation workers born in Sri Lanka, but whose ancestors had come from India.

Rajah described the state-sponsored “colonisation” schemes, where Sinhalese settlers were placed in traditionally Tamil areas with the aim of making Tamils a minority. He told of the decision to make Sinhala the sole official language of Sri Lanka, and described other state measures that discriminate against Tamils in “employment, economy, education and every other area of life”.

Peaceful protests have been met by violent repression. Rajah said: “Tamils have been subjected to intimidation, torture, rape, unlawful imprisonment … There have also been cases of targeted killings of Tamil members of parliament, journalists, human rights activists, religious and community leaders, and civilians who speak out against the human rights violations of the Sri Lankan government and armed forces.”

Referring to the formation of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Rajah said, “Tamils were forced to defend themselves” against the violence. The LTTE had been willing to negotiate with the Sri Lankan government and a peace agreement was signed in February 2002, but the government later withdrew from it.

Rajah urged people to “support us to achieve a lasting negotiated political solution” that would “establish a recognised homeland for the Tamils with full autonomy”.

Other speakers at the Pongu Thamil included Bishop Hilton Deakin, retired Uniting Church minister Richard Wootton, Tamil radio broadcaster Anthony Gration, aid worker Jason Thomas, Margarita Windisch from the Socialist Alliance and Green Left Weekly, and visiting Tamil National Alliance MP Sivagilinga.

http://www.greenleft.org.au/2008/758/39166

Terrorist turns liberator in the stroke of a pen

Marika Dias

12 July 2008

What’s the difference between a liberation movement and a terrorist organisation?

This question was brought sharply into focus recently when US President George Bush signed a Bill to remove Nelson Mandela and other members of the African National Congress from the US’s terrorist watch list. While the ANC was removed from the US Department of State’s list of foreign terrorist organisations some years ago, Mandela and other members remained on the terrorist watch list because of their connections with the ANC.

Most people today would find it extraordinary that Mandela could have ever been branded a terrorist. But it stands as a cautionary tale in examining how Australia’s anti-terrorism laws are applied to liberation struggles.

The US declared the ANC a terrorist group during South Africa’s Apartheid era. In the context of the Cold War, some saw it as a communist organisation that was a threat to pro-West South Africa. Other factors leading to its listing as a terrorist organisation were the ANC’s military wing and the US’s relationship with the Apartheid South African government at the time.

Yet when agreement on the bill was announced, the US representative introducing it stated: “The Senate and the House have now both affirmed that America’s place is on the side of those who fought against Apartheid, and there should be no discrimination in our legal code based on their ANC association alone”. With the benefit of hindsight, what was then a terrorist organisation is now readily seen as a liberation movement.

In Australia there are currently 19 organisations officially listed as terrorist organisations. This includes a section of Hamas, the officially elected Palestinian government, and the Kurdistan Workers Party (PKK), which many Kurds, with their history of systematic oppression, regard as their party. There are also other organisations that Australian law classes as terrorist organisations due to a very broad definition of terrorism.

While the people affected by these laws in Australia do not have the profile of Mandela, the impact of branding an organisation as “terrorist” is deeply felt and has many practical consequences.

On one level it becomes a criminal offence to be a member of the organisation, to give it money, to receive money from it, to provide it with training of any sort and, for listed organisations, to associate with its members.

The funding offences may be committed directly or indirectly. This can create a minefield for people sending money to family members overseas or giving to overseas charities. When the tsunami hit Sri Lanka in 2006, the Australian Tamil community raised significant funds for relief efforts. But the north-east region of Sri Lanka is largely administered by the Liberation Tigers of Tamil Eelam, which falls within the broad definition of a terrorist organisation under Australian law. The LTTE also played a significant role in the provision and distribution of post-tsunami aid. This meant that many community members and organisations who wanted to contribute to the relief efforts risked falling foul of our sweeping anti-terrorism laws.

Concerns about these sorts of risks prevail in many Australian communities that maintain an attachment to overseas regions where groups labelled terrorist organisations operate.

Communities linked with listed organisations also face increased attention from the authorities. After the listing of the PKK as a terrorist organisation in late 2005, Kurdish protesters outside the Turkish embassy in Melbourne were told by police that it was illegal for them to carry placards showing jailed PKK leader Abdullah Ocalan. In fact it was not illegal, but this kind of misinterpretation of the laws is not uncommon. And a consequence of this increased official scrutiny is a chilling effect on protest and other forms of political expression.

The listing of an organisation as a terrorist organisation also has a symbolic effect. Even if people do not find themselves facing criminal charges or police attention, there is the sense that the cause of that organisation has been criminalised. The sense of injustice this creates is all the more heightened where the organisation’s cause is self-determination; particularly given that the right to self-determination is recognised under international law.

There is also a sense that any connections and aspirations shared with that organisation — regardless of how legitimate — have been criminalised. Imagine if the ANC were still fighting Apartheid today and were listed as a terrorist organisation. It would be difficult not to see the listing as a show of support for Apartheid.

The Parliamentary Joint Committee on Intelligence and Security recently released its report on the decision to keep the PKK on Australia’s list of terrorist organisations last month. It did not recommend taking the PKK off the list. The re-listing of the PKK, and the way that the term “terrorist organisation” is used in Australian law, reflects a failure on the part of our politicians. It is a failure to recognise that communities may support the broad aims of an organisation without supporting that group’s engagement in violent acts.

It is also a failure to recognise what history has taught us: that longstanding and systematic oppression perpetrated by state actors often gives rise to social movements that employ violent tactics. Labelling those movements “terrorist organisations” is not the solution. The solution lies in the end of that oppression, not in criminalising the people who oppose it.

[Marika Dias is a Community Legal Centre Lawyer and convenor of the Anti-Terrorism Laws Working Group.]

http://www.greenleft.org.au/2008/758/39148

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.