Jump to content

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிப்பீடமேறினால் ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும்:


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிப்பீடமேறினால் ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும்: புதினத்துக்கு வழங்கிய பேட்டியில் இல.கணேசன்

[திங்கட்கிழமை, 21 யூலை 2008, 04:58 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

இந்தியாவின் மத்திய அரசில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றத்தின் மூலம், தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப்பீடமேறினால், ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் இம்முறை நடவடிக்கை எடுக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

"புதினம்" இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ila_ganeshan_20080721001.jpg

பேட்டியின் முழுவிவரம் வருமாறு:

இந்தியாவில் அரசு மாற்றம் ஒன்று ஏற்பட்டால் ஆட்சிக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி, அவ்வாறு ஆட்சிபீடமேறும் பட்சத்தில் - இம்முறை - ஈழத்தமிழர்கள் விடயத்தில் எந்தவிதமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

ஏற்கனவே, இது தொடர்பில் வாஜ்பாய் அவர்கள் மிகத்தெளிவாக கருத்து தெரிவித்திருக்கின்றார். இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் இப்போது மறுக்கப்படுகின்றன. அந்த உரிமைகளை தமிழர்களுக்கு வழங்குமாறு சிறிலங்கா அரசைக்கோரும் சகல உரிமைகளும் பாரத அரசுக்கு இருக்கின்றது.

இலங்கையில் தமிழர்கள் படும் அவதியைக்கண்டு, பக்கத்திலிருக்கும் பாரதம் சும்மா இருக்க இயலாது. அங்குள்ள விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்களை மாத்திரம் காரணம் காட்டி, சிறிலங்கா அரசால் தமிழர்கள் படும் அவதியை பாரதம் காணாமல் இருக்கமுடியாது.

ila_ganeshan_20080721002.jpg

"இலங்கையில் தமிழர் படும் அவதியைக் கண்டு பக்கத்திலிருக்கும் பாரதம் சும்மா இருக்க இயலாது"

இப்படியான நிலைப்பாடு ஆட்சிக்கு வரும் முன்னர் - கடந்த தடவையும் - இருந்திருக்கின்றதே தவிர, ஆட்சிக்கு வந்த பின்னர் பாரதீய ஜனதா கட்சி ஈழத்தமிழர்கள் விடயத்தில் எந்தவிதமான உருப்படியான - காத்திரமான -நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையே?

அதற்கு சிறிலங்காவும் ஒரு காரணம். ஒருமுறை இந்திய அரசாங்கம் அதற்கான முயற்சியை மேற்கொண்டபோது, அதற்கு சிறிலங்கா அரசாங்கம் எப்படி நடந்துகொண்டது என்பது உங்களுக்கு தெரியும். அங்கு தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக சொல்லிக்கொள்ளும் விடுதலைப் புலிகள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

பாரத நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலையான பிறகு, சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு மாற்றத்தின் காரணமாக, பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது என்பதும் உங்களுக்குத் தெரியும்.

பின்னடைவு என்று நீங்கள் கருதுவது என்ன? ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் உங்களால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க உதவிசெய்ய முடியாதுள்ளது என்று கூறுகின்றீர்களா?

ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னர், தமிழ்நாட்டிலிருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும்கூட, விடுதலைப் புலிகளைச் சார்ந்தவர்களுக்கே மக்கள் ஆதரவு தந்தார்கள். நானே பார்த்திருக்கின்றேன்.

ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. சாதாரணமாக, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லக்கூடியவர்கள்கூட அது குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்க தயக்கம் காட்டுகின்றனர்.

அப்படியானால், முன்னைய நிலை தற்போது இல்லை என்று கூறுகின்றீர்களா?

ஆம். தற்போது நிலைமை மாறியிருக்கின்றது.

ஆனால், ஆயிரம் காரணமிருந்தாலும், இன்று இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்களுக்கான உரிமைகளை - சம உரிமைகளை - பெற்றுக்கொடுக்கவேண்டிய கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது.

தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவது தொடர்பில், இதுவரை எழுத்திட்ட எந்த ஒப்பந்தத்தையும் சிறிலங்கா அரசு கடைபிடிக்கவே இல்லை. இதுதான் இப்பிரச்சினை இவ்வளவு தூரம் இழுபட்டுக்கொண்டிருப்பதற்கு காரணம்.

இந்த ஒப்பந்தங்களையெல்லாம் சிறிலங்கா அரசு கடைப்பிடித்ததைவிட மீறியதே அதிகமாக இருப்பதால், மேற்கொண்டு இவ்வாறு நடைபெறாமலிருப்பதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டால் மாத்திரம் போதாது. அது கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதை பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.

"தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவது தொடர்பில், இதுவரை எழுத்திட்ட எந்த ஒப்பந்தத்தையும் சிறிலங்கா அரசு கடைப்பிடிக்கவே இல்லை"

ஆட்சிக்கு வரும் உங்களின் பி.ஜே.பி. கூட்டணி அரசின் ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடு, காங்கிரஸ் அரசினது அணுகுமுறையிலும் பார்க்க எவ்வாறு வேறுபட்டு நிற்கப்போகின்றது?

ஈழத்தமிழர்கள் விடயத்தில் காங்கிரஸ் அரசு ஏன் ஒரு மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், எமது நாட்டு அரசாங்கம் குறித்து அதிகம் விமர்சனம் செய்ய இப்போது நான் விரும்பவில்லை.

தற்போது ஆட்சியில் இருக்கின்ற கட்சிக்கு எதிர்க்கட்சி என்ற வகையிலும் - தமிழக கட்சி என்ற ரீதியிலும் உங்களின் கருத்தை தெரிவிக்கலாம் இல்லையா?

ஆம். அரசியல் ரீதியாக அவர்களை விமர்சனம் செய்தாலும் கூட ஒரு அந்நிய நாட்டு ஊடகத்தில் எமது நாட்டு அரசு பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை.

உங்களின் கட்சி உட்பட எந்தக்கட்சியும் ஆட்சிக்கு வருவதற்கு முனனர், சார்பான நிலைப்பாட்டையும், ஆட்சிப்பீடமேறிய பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிவிடுவதாகவும் உள்ளது. அது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

இங்கு சூழ்நிலை என்பது முக்கியமான விடயம். அன்றுள்ள சூழ்நிலையை பொறுத்துத்தான் அரசாங்கம் முடிவு செய்யும்.

கடந்த தடவை நாம் ஆட்சியிலிருந்தபோது காணப்பட்ட சூழ்நிலை உங்களுக்குத் தெரியும். இப்போது இந்த ஐந்தாண்டுகளில் சூழ்நிலை மாறியிருக்கின்றது.

நிச்சயமாக, ஆட்சிக்கு வரும் எமது அரசு இப்போது இருக்கின்ற சூழ்நிலையை கருத்திற்கொண்டு பணிபுரியும். அப்படி செய்யும்போது, அது இலங்கை தமிழர்களுக்கு சாதகமாகவும், அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதாகவும்தான் அமையும். அந்தவகையில், நான் நிச்சயமாக எனது அரசாங்கத்துக்கு குரல் கொடுப்பேன்.

ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான மத்திய அரசின் கொள்கை வகுப்பில் தமிழகக்கட்சிகள் எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்தக்கூடியதாக உள்ளது?

மத்தியில் இருக்கின்ற கட்சிகளைப் பார்த்தால், இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. ஆட்சியில் பங்கேற்றுள்ளனர். இதுபோன்ற கட்சிகள், மத்தியில் உள்ள அரசை வற்புறுத்துவதாக இல்லை. காரணம், ஏற்கனவே இது போன்ற பிரச்சினைகளில் ஈடுபட்டு கையைச் சுட்டுக்கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி இது குறித்து எதுவும் சிந்திப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால், தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை, நாம் இது குறித்து பல்வேறு விதமான கூட்டங்கள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் நடத்திவருகின்றோம். பிரச்சினைகளை தீர்க்கமாக - ஆழ்ந்து - சிந்தித்து வருகின்றோம்.

மலையக தமிழர்கள், வடக்கு-கிழக்கு தமிழர்கள் எல்லோரின் பிரச்சினைகளையும் ஆராய்ந்து வருகின்றோம். எனவே, எமது புதிய அரசு வரும்போது நிச்சயமாக ஒரு மாற்றம் தெரியும் என கருதுகின்றேன்.

"இலங்கை தமிழர்கள் நல்வாழ்வு விடயத்தில் தமிழக கட்சிகளாகிய எமக்குள் வேறுபாடு உள்ளது என்பது உண்மை"

அப்படியானால், கடந்த தடவை உங்களின் கட்சி கடைப்பிடித்தது போன்று அல்லாமல் - தற்போது காங்கிரஸ் கடைப்பிடிப்பது போன்றும் அல்லாமல் - இம்முறை உங்களின் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஈழத்தமிழர்களுக்கு சார்பான ஒரு போக்கை கடைப்பிடிக்கும் என்று கூறலாமா?

கடந்த தடவை எமது அரசு அப்போதிருந்த சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுத்தது. அதில் எந்த தவறும் இல்லை. இப்போது இருக்கின்ற சூழ்நிலையை ஆராய்ந்து எமது அரசு நடவடிக்கை எடுக்கும். அந்த நடவடிக்கை தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவதாக அமையும்.

உங்கள் அரசின் அந்த நடவடிக்கை தமிழர்களின் போராட்டத்தை அங்கீகரிப்பதாக அமையுமா?

அது எந்தவகையில் அமையும் என்பதெல்லாம் தற்போது பேசி முடிவு எடுக்கவேண்டியது அல்ல.

எப்படி வருகின்றது என்பது முக்கியமல்ல. எது வருகினறது என்பதுதான் எமக்கு முக்கியம்.

அந்தவகையில், தமிழர்களுக்கு நல்வாழ்வு, அமைதி, அங்கிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்பி அங்கே அமைதியாக வாழ்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்குதல் இவைதான் எமக்கு முக்கியம்.

அந்தவகையில், தற்போது தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் தலைவர்களுடன் இணைந்து எவ்வளவு தூரம் உங்களின் கட்சி பங்காற்றுகின்றது?

எம்மிடம் அவர்கள் வரட்டும் பேசுவோம். இந்த விடயத்தில் எல்லோருமே கருத்தொற்றுமையுடன் இருக்கின்றோம் என்று சொல்ல இயலாது. பல்வேறு கோணங்களில் சிந்திக்கின்றோம்.

இலங்கை தமிழர்கள் நல்வாழ்வு என்று சொன்னாலும்கூட, அதில் எமக்குள் வேறுபாடு உள்ளது என்பது உண்மை.

இனரீதியான பிரச்சினையாக உள்ள ஈழத்தமிழர்கள் விடயத்துக்கு பகிரங்கமாக குரல் கொடுப்பதற்கு உங்களின் கட்சி தவறினாலும் கூட, உங்களின் கட்சி இந்து மதம் சார்ந்த ஒரு மதவாதக்கட்சி என்ற ரீதியில் பார்த்தால், ஈழத்தில் பாதிக்கப்படுகின்ற இந்துக்கள் குறித்தோ அல்லது அங்கு சிறிலங்காப் படைகளால் அழித்தொழிக்கப்படும் ஆலயங்கள் குறித்தோ உங்கள் தரப்பிலிருந்து எந்தக் கண்டனங்களும் வெளிவரவில்லையே?

இது மத ரீதியான பிரச்சினை அல்ல. பாரதீய ஜனதா கட்சி இந்த விடயத்தில் தலையிடவேண்டும் என்பதற்காக இந்துக்கள்தானே தாக்கப்படுகின்றனர் என்று பார்க்கக்கூடாது.

அங்கு பாதிக்கப்படுபவர்கள் இந்துக்கள்தான் என்று போராடுபவர்கள் குரல் கொடுத்திருப்பார்களேயானால், இன்று நாடு தழுவிய பேரெழுச்சி ஏற்பட்டிருக்கும். அதுபோன்று செய்யத்தவறியதால்தான் இப்போது இந்த நிலமை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னக்கு இது நல்ல டீலா படுகுது. திராவிடம் பேசும் வைகோ, வீரமணி,தியாகு,சீமான் திருமா நல்லவராயினும் அவர்களால் எமக்கு நல்லது செய்யும் அளவுக்கு வலு இல்லை.

மற்றைய திராவிட கட்சிசியான திமுக/கலைனருக்கோ வாரிசு சண்டையிலேயே மண்டை காஞ்சிடும். எம்மை பார்க்க நேரமில்லை. ராமதாஸ் தனி ஆவர்த்தனம். வியகாந்தோ குழப்பத்தின் முழு உருவம்.

ஆனால் இந் இந்துதுவா சங்பரிவார் கோஸ்டி அப்படி இல்லை. ஏத்திவிட்டா சும்மா எழும்பி ஆடுங்கள். தலைவர் இதுகளின்ர உதவிய நாடுறது நல்லம். அடுத்த ஆட்சியிலாவது ஏதாவது நடக்கும்.

ஆனா ஒன்று இந்த மதவெறி கூட்டத்தை நமது ஊருக்கை வரவிடக்கூடாது. ஏற்க்கனவே இங்கு பலபிரிவினை, இதில இந்து - இந்துஅல்லாதார் பிரச்சினையும் சேர்ந்தா, கதை கந்தல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னக்கு இது நல்ல டீலா படுகுது. திராவிடம் பேசும் வைகோ, வீரமணி,தியாகு,சீமான் திருமா நல்லவராயினும் அவர்களால் எமக்கு நல்லது செய்யும் அளவுக்கு வலு இல்லை.மற்றைய திராவிட கட்சிசியான திமுக/கலைனருக்கோ வாரிசு சண்டையிலேயே மண்டை காஞ்சிடும். எம்மை பார்க்க நேரமில்லை. ராமதாஸ் தனி ஆவர்த்தனம். வியகாந்தோ குழப்பத்தின் முழு உருவம்.

ஆனால் இந் இந்துதுவா சங்பரிவார் கோஸ்டி அப்படி இல்லை. ஏத்திவிட்டா சும்மா எழும்பி ஆடுங்கள். தலைவர் இதுகளின்ர உதவிய நாடுறது நல்லம். அடுத்த ஆட்சியிலாவது ஏதாவது நடக்கும். <_<

கேக்கிறதுக்கு நல்லாய்தான் இருக்கு. ஆட்சிக்கு வந்தபிறகு 'கேம்' கேட்டாங்கள் எண்டால்? ஆனால் ஒண்டு செய்யலாம்... முதல்ல காங்கிரஸ்காரங்களையும், கருநாகத்தின்ர ஆட்சியையும் கவுக்கோணும். பிறகு தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுசேர்ந்து பாரதீய ஜனதாவுக்கு ஆதரவளிக்கலாம். செய்வாங்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமொிக்கா நினைத்தாலும் புட்டின் தாக்குதலை நிறுத்தமாட்டாா் – உக்ரேனிய ஜனாதிபதி! ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் 2 நிபந்தனைகளை விதித்துள்ளார். அதன்படி, ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும் எனவும் நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதிப்பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியுள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் எனவும் அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை என்பதால் இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்தோடு, ஹிட்லர் செய்த அதே விடயத்தையே ரஷ்ய ஜனாதிபதி செய்வதாகவும், இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1388176
    • உக்ரைன் அமைதி மாநாடு –  ரஷ்யா பக்கேற்காததனால் சீனாவும் புறக்கணிப்பு! நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் ‘உக்ரைன் அமைதி மாநாடு’ சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்ஸர்லாந்தில் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் இந்த சா்வதேச மாநாடு இடம்பெற்று வருகிறது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் நடைபெறுகிறது. குறித்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு போன்ற மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் 50 க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்றுள்ளதுடன், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இதில் பங்கேற்றுள்ள, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீா் ஸெலென்ஸ்கி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, உலகமே ஒன்று கூடினால் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவிட முடியும் என தெரிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, உலக நாடுகளை ஒன்று திரட்டுவதில் இந்த மாநாடு வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த மாநாட்டில், ரஷ்ய பங்கேற்கவில்லை. இதனால் குறித்த ‘உக்ரைன் அமைதி மாநாட்டை சீனாவும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388152
    • இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு ஆரம்பம்! 16 JUN, 2024 | 11:26 AM   தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (16) காலை 10 மணியளவில் ஆரம்பமானது. கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி. தவராசா உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இன்றைய கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.   https://www.virakesari.lk/article/186180
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியவர்கள், இளம் வயதினரிடையே நீரிழிவு நோய் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. அதுகுறித்த விழிப்புணர்வும் பரவலாக காணப்படுகின்றது. ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், அதுபல தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளுக்கு எதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது? அதற்கான அறிகுறிகள் என்ன? அதனை தடுக்க முடியுமா? சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டைப் 1 நீரிழிவு நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுவது டைப் 1 நீரிழிவு நோய். உடல் செல்களுக்கு குளுக்கோஸ் செல்ல உதவும் இன்சுலின் என்ற ஹார்மோனுக்கு பற்றாக்குறை ஏற்படுவதுதான் நீரிழிவு நோய். அந்த இன்சுலின் ஹார்மோன் கணையத்தால் உற்பத்தி செய்யப்படாத நிலையே டைப் 1 நீரிழிவு நோய். பெரியவர்கள், இளம்பருவத்தினருக்கு ஏற்படுவது டைப் 2 நீரிழிவு நோய். அது பெரும்பாலும் வாழ்வியல் முறைகள், மரபியல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகின்றன. ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவு நோய் எவ்வித காரணங்களும் இன்றி, தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படுகிறது என்கிறார், குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார். “டைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவதால் இது பிறப்பில் ஏற்படும் நோய் என கருதக்கூடாது. குழந்தைப்பருவத்தில் ஒரு வயது முதல் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் இது ஏற்படும். இதனால், கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்கள் பாதிக்கப்பட்டு, இன்சுலின் சுரப்பு நின்றுவிடும். எந்த வைரஸ் தொற்று காரணமாகவும் இது தூண்டப்படலாம்” என விளக்குகிறார் அருண்குமார்.   முக்கிய அறிகுறிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த டைப் 1 நீரிழிவு நோய் பெரியவர்களுக்கும் வரலாம் என்று மருத்துவர் அருண்குமார் கூறுகிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் 2022-ம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட சுமார் 95,000 குழந்தைகள் இத்தகைய டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவுக்கு முக்கியமான சில அறிகுறிகள் உண்டு. பாலியூரியா - அடிக்கடி சிறுநீர் கழித்தல் பாலிடிப்சியா - அதிக தாகம் எடுத்தல் பாலிபீஜியா - அதிகமாக பசி எடுத்தல் இவைதவிர, அதிகளவில் உணவு உட்கொண்டாலும் எடை இழப்பு அதிகமாக ஏற்படும். பிறப்புறுப்பில் தொற்று நோய்கள் எளிதாக ஏற்படும். “அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்நோய் கண்டுபிடிக்கப்படுவதில்லை,” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.   டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படாதபோது, இதனால், டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் என்ற தீவிர நிலை ஏற்படுவதாக அவர் எச்சரிக்கிறார். டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் என்பது, சர்க்கரை அளவு அதிகமாகி, அதனால் ரத்தத்தில் அமிலம் அதிகமாகி பயங்கரமான மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோமா நிலை ஏற்படும் என்று அவர் கூறுகிறார். பெரும்பாலும் இத்தகைய தீவிர நிலையில் தான் குழந்தைகளுக்கு டைப் 1 நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுவதாகவும் இதில் குழந்தைகள் இறப்பதற்கும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர் அருண்குமார் எச்சரிக்கிறார். “ஒரு குழந்தைக்கு டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ் ஏற்படும்போது, அவசர சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றி, அதன் பின்னரே இன்சுலின் சிகிச்சை தொடங்கப்படும். தீவிரமான பிரச்னைகளின் போது குழந்தையை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படலாம்” என்கிறார் அவர். குழந்தைகளுக்கு மூன்று மாதங்களில் 5% எடை இழப்பு ஏற்படுகிறது என்றால் குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். டைப் 1 நீரிழிவு நோயை தடுக்க முடியாது என்றாலும், ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்து இன்சுலின் சிகிச்சை எடுத்தால் மற்ற குழந்தைகளை போலவே ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் அக்குழந்தைகள் வாழ முடியும் என நம்பிக்கையூட்டுகிறார் மருத்துவர் அருண்குமார். உலக சுகாதார மையத்தின் தகவலின்படி, 2017-ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 90 லட்சம் பேர் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பான்மையானோர் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்கின்றனர். டைப் 1 நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணமோ அல்லது அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளோ தெரியவில்லை. டைப் 1 நீரிழிவு நோய்க்கு என்ன சிகிச்சை வழங்கப்படும்? “இன்சுலின் செலுத்துவதுதான் ஒரே தீர்வு. அதன் அளவு ஒவ்வொரு குழந்தையின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். “டைப் 1 நீரிழிவு நோயில் இன்சுலின் சுரப்பது சுத்தமாக இருக்காது. அப்படிப்பட்ட சமயத்தில் இன்சுலின் கொடுத்தால்தான் அந்த குழந்தைகள் உயிர்வாழ முடியும்” என்கிறார், மருத்துவர் சந்திரசேகர்.   குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வராதா? பட மூலாதாரம்,GETTY IMAGES மாறிவரும் வாழ்வியல் முறைகள், உடல் பருமன், மனச்சோர்வு காரணமாக, 10-12 வயது குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதாக மருத்துவர் சந்திரசேகர் கூறுகிறார். “இன்சுலின் எதிர்ப்பு தன்மை காரணமாக பெரியவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. வாழ்வியல் காரணிகள், மரபியல் காரணிகளால் இது ஏற்படும். சமீப காலமாக 10-12 வயது உடல் பருமன் கொண்ட குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. சரியான உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு காரணங்கள்” என்கிறார் அவர். சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் எதிர்காலத்தில் வரலாம் என்று கூறும் அவர், தற்போது அத்தகைய குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே டைப் 2 நீரிழிவு நோய் வந்துவிடுவதாக கூறுகிறார். டைப் 2 நீரிழிவு நோயை தடுக்கக் குழந்தைகளின் உடல் எடையை கண்காணிக்க வேண்டும், 9-11 வயது குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்திற்கான பரிசோதனைகள் எடுக்கப்பட வேண்டும் என கூறுகிறார், மருத்துவர் சந்திரசேகர். டைப்2 நீரிழிவு ஏற்படும் குழந்தைகளுக்கு மாத்திரைகள் மூலம் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதுதவிர, பிறக்கும் குழந்தைகளுக்கு நியோநாட்டல் நீரிழிவு நோய் மிக அரிதாக ஏற்படும் என்று கூறுகிறார் மருத்துவர் சந்திரசேகர். “இது குழந்தை பிறந்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் ஏற்படலாம். மரபணுக்களில் ஏற்படும் ஒரு குறைபாட்டால் இது ஏற்படுகிறது. பீட்டா செல்களில் சுரப்புகள் மாறி, மரபணுக்களில் ஏற்படும் குறைபாட்டால் இது ஏற்படுகிறது. இது டைப் 1 நீரிழிவு நோய் கிடையாது” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2552x2wpjzo
    • டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் எவை? பட மூலாதாரம்,GETTY IMAGES 16 ஜூன் 2024, 04:08 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் அதிர்ச்சிகரமான முடிவுகள் என்பது இயல்பான ஒன்றாகி வருகின்றன. கத்துக்குட்டி அணிகளின் சவால் தரும் ஆட்டத்தால் முன்னணி அணிகள் பலவும் தொடரை விட்டே வெளியேறியுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய 3 அணிகளும் வெளியேற்றப்பட்டு விட்டன. பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும், சி பிரிவில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், டி பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்காவும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இங்கிலாந்து தகுதி பி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் 3.611 ஆக இருக்கிறது. இங்கிலாந்துடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற போட்டியிட்ட ஸ்காட்லாந்து அணியும் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து தோற்றுப் போனதால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், நிகர ரன் ரேட் அடிப்படையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் கடும் போட்டி டி பிரிவில் தென் ஆப்ரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், இரண்டாவது இடத்திற்கு வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் போட்டியிடுகின்றன. தற்போதைய நிலையில் வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ, அல்லது ஆட்டம் தடைபட்டாலோ கூட வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும் மறுபுறம், நெதர்லாந்து அணியோ சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற தனது அடுத்த ஆட்டத்தில் இலங்கையை வெல்ல வேண்டும். அதேநேரத்தில், வங்கதேச அணி தனது கடைசி ஆட்டத்தில் நேபாளத்திடம் தோற்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால் மட்டுமே நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை வெளியேற்றம் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தானும், பி பிரிவில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து அணியும், டி பிரிவில் இலங்கை அணியும் கத்துக்குட்டிகளின் சவாலை சமாளிக்க முடியாமல் டி20 உலகக்கோப்பை தொடரை விட்டே வெளியேற்றப்பட்டுள்ளன. நிகர ரன் ரேட் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ரன்-ரேட் என்பது ஒரு அணி தனது முழு இன்னிங்ஸிலும் ஒரு ஓவருக்கு அடித்த சராசரி ரன்களின் எண்ணிக்கை ஆகும். உதாரணமாக, 20 ஓவர்களில் 140 ரன்கள் என்பது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கு சமம். மற்ற அணியின் ரன் ரேட்டிலிருந்து எதிரணியின் ரன் ரேட்டைக் கழிப்பதன் மூலம் நிகர ரன் ரேட் கணக்கிடப்படுகிறது. எனவே வெற்றி பெறும் அணி நேர்மறை நிகர ரன் ரேட்டையும், தோல்வியுற்ற அணி எதிர்மறை நிகர ரன் ரேட்டையும் கொண்டிருக்கும். ஒரு அணி 20 ஓவர்களையும் முழுமையாக ஆடாமல் முன்கூட்டியே ஆட்டமிழந்தால், அந்த அணியின் ரன் ரேட் 20 ஓவர் அடிப்படையிலேயே கணக்கிடப்படும். இவ்வாறு, ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்கும் நிகர ரன்ரேட் அடிப்படையிலேயே லீக் சுற்றில் அந்த அணியின் ஒட்டுமொத்த ரன் ரேட் கணக்கிடப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்லுமா? இதுவரை, ஆறு அணிகள் முந்தைய டி20 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது மறக்க முடியாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2014இல் இந்தியா மீண்டும் பட்டத்தை வெல்லும் சூழலில் இருந்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. பாகிஸ்தான் 2009இல் ஒருமுறை வெற்றி பெற்றது. அதன் பிறகு மூன்று முறை இறுதிப் போட்டி வரை வந்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, 2010 மற்றும் 2022இல் போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, டி20 உலகக்கோப்பையில் மூன்றாவது பட்டத்தைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளனர். போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 2012 மற்றும் 2016இல் இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளது. 2021இல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. https://www.bbc.com/tamil/articles/c4nn55n21rwo
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.