Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரெலியாவில் சுற்றுலா - பகுதி 1 பிரிஸ்பனும், சூழவுள்ள இடங்களும்

Featured Replies

auflagxi6.gif

அவுஸ்திரெலியா உலகில் மிகப்பெரிய நிலப்பரப்புள்ள நாடுகளில் ஒன்று.

maphtmtxtaustraliamapjd6.gif

இப்பகுதியில் நான் பிரிஸ்பனிலும், பிரிஸ்பனுக்கு அருகில் உள்ள (உ+ம் பொற்கரை(Gold coast), சூரியன் ஒளியில் பிரகாசிக்கிற கரை(sunshine coast), பைரன் குடா (Byron bay) - நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ளது) இடங்களிலும் பார்த்த இடங்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன்.

sthmapsk0.jpg

குயின்ஸ்லாந்து(Queensland) மாகாணத்தின் தலைநகராக விளங்குவது பிரிஸ்பன். பிரிஸ்பன்(Brisbane) நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் எல்லையில் அமைந்திருக்கிறது

100166nf3.gif

Edited by Aravinthan

  • Replies 172
  • Views 19k
  • Created
  • Last Reply

அரவிந்தன்,

மீண்டும் ஒரு சுவாரசியமான புது பயணதொடரை ஆரம்பித்துள்ளீர்கள். வாழ்த்துகள். தொடரை வாசிக்கா ஆவலாக உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் இன்னும் ஓரிரு வருடங்களில் அவுசுக்கு வரும் எண்ணம் உள்ளது.எல்லாவற்றையும் விபரமாக எழுதுங்கள் போய் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

வாழ்த்து தெரிவித்த தூயாவுக்கு நன்றிகள்.

ஈழப்பிரியன், நீங்கள் அவுஸ்திரெலியாவிற்கு எந்த இடத்துக்கு வருகிறீர்கள்?

அடுத்த பகுதி எப்போ?

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் அவுஸ்ரெலியா சுற்றுலா தொடர் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.கப்டன் குக்கை மாதிரி நீங்களும் ஏதாவது ஒரு தீவை கண்டு பிடியுங்கோ.வரைபடங்களை பார்க்கும் போது நெடுக்ஸ் பதியும் வன்னி களமுனை வரைபடங்கள் மாதிரி இருக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன், நீங்கள் அவுஸ்திரெலியாவிற்கு எந்த இடத்துக்கு வருகிறீர்கள்?

எனக்கு ஒரே ஒரு அண்ணன் தான் அவர் சிட்னியில் பெண்டல் கில் என்ற இடத்தில் இருக்கிறார்

Edited by eelapirean

  • தொடங்கியவர்

உலக நிலப்பரப்பில் அவுஸ்திரெலியாவின் நிலப்பரப்பு 5 வீதமாகும். உலகில் 6 வது பெரிய நிலப்பரப்பை உடைய நாடு அவுஸ்திரெலியா. அவுஸ்திரெலியாவை விட ரஸ்யா, கனடா, சீனா, அமெரிக்கா,பிறேசில் ஆகிய நாடுகள் பெரிய நிலப்பரப்பை உடையவை. ஆனால் உலகில் மிகவும் குறைந்தளவு சனத்தொகை கொண்ட நாடுகளில் அவுஸ்திரெலியாவும் ஒன்று. அவுஸ்திரெலியாவின் நிலப்பரப்பில் ஒரு சதுர கிலோமீற்றரில் 2.5 மனிதர்கள் வாழ்கிறார்கள். பிரித்தானியாவை எடுத்துக் கொண்டால் ஒரு சதுர கிலோமீற்றரில் 244 மனிதர்கள் வாழ்கிறார்கள்.

மேற்கு ஐரோப்பாவைவிட மேற்கு அவுஸ்திரெலியா மாநிலத்தின் நிலப்பரப்பு பெரிது. மேற்கு ஐரோப்பாவில் பல நாடுகள் இருக்கிறது எமக்குத் தெரியும் தானே.

பின்வரும் படங்களைப் பார்க்கும் போது அவுஸ்திரெலியா எவ்வளவு பெரியது என்று தெரிகிறது.

1) அவுஸ்திரெலியாவும் பிரித்தானியாவும்

ukzo3.gif

2) அவுஸ்திரெலியாவும் ஐரோப்பாவும்

europeqi5.gif

3) அவுஸ்திரெலியாவும் அமெரிக்காவும்

usaqh3.gif

சனத்தொகையில் சில வருடங்களுக்கு முன்பு சிறிலங்காவை விட அவுஸ்திரெலியாவின் சனத்தொகை குறைவாக இருந்தது. தற்பொழுது தான் சிறிலங்காவை அவுஸ்திரெலியா முந்தியது. அதுவும் வருடாவருடம் அவுஸ்திரெலியாவில் குடியுரிமை பெருபவர்களினாலும், சிறிலங்காவில் இருந்து வெளினாடுகளுக்கு மக்கள் இடம் பெயர்வதினாலும், பலர் கொல்லப்படுவதினாலும் அவுஸ்திரெலியா சிறிலங்காவை சனத்தொகையில் முந்தி விட்டது.

கிட்டத்தட்ட அமெரிக்காவின் நிலப்பரப்பை உடைய அவுஸ்திரெலியாவின் சனத்தொகை அமெரிக்காவின் லொஸ் ஏன்யலின் சனத்தொகையின் அளவுக்கு நிகராகும்.

australiace3.gif

சிட்னியில் இருந்து பிரிஸ்பனுக்கு(Brisbane) செல்ல 1010 கிலோமிற்றர் தூரம் பயணிக்க வேண்டும். கிட்டத்தட்ட மகிழுந்தில் செல்ல 11 மணித்தியாலம் எடுக்கும். சிட்னியில் இருந்து பேர்த்துக்கு(Perth) மகிழுந்தில் செல்ல 44 மணித்தியாலம் எடுக்கும். 2 நாட்கள் எடுக்கும். 4110 கிலோமீற்றர் தூரத்தில் சிட்னியில் இருந்து பேர்த் இருக்கிறது.

சிட்னியில் இருந்து மற்றைய முக்கிய இடங்களின் தூரங்களும் நேரங்களும் (கிலோ மீற்றர்/மணித்தியாலம்)

கன்பரா(Canberra) 288/3

மெல்பேர்ன்Melbourne) 963/9

அடிலேய்ட்(Adelaide) 1427/14

அலெய்ஸ் பிரிங்(Alice Springs) 2850/32

கெயர்ன்ஸ்(Cairns) 2730/32

டார்வின்(Darwin) 3991/43

மேலே உள்ள தகவல்கள் வீதிகளின் நிலமைகள், காலநிலைகளைப் பொறுத்து வேறுபடும்.

பிரிஸ்பனும் கெயர்ன்சும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இருந்தாலும் பிரிஸ்பனில் இருந்து கெயர்ன்சுக்கு செல்ல 1718 கிலோமீற்றர் செல்ல வேண்டும். அதாவது 21 மணித்தியாலங்கள் எடுக்கும்.

சிட்னியில் இருந்து 2 மணித்தியாலம் விமானத்தில் பயணித்தால் நியூசிலாந்து வரும். 3 மணித்தியாலம் பயணித்தால் வனு-அற்று(Vanuatu) வரும். ஆனால் 4 - 5 மணித்தியாலம் பயணித்தால் தான் பேர்த் வரும். பேர்த்தில் இருப்பவர்கள் சிங்கப்பூருக்கு சிட்னியை விட விரைவாக விமானத்தில் சென்று விடுவார்கள்.

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ அரவிந்தன் அண்ணா நம்மட ஊரைப்பற்றி நல்லதா சொல்லுங்கோ. :unsure:

இங்க Gold Coast ஐ பொற்கரை என்டு தான் சொல்லுவார்கள்

Edited by இன்னிசை

  • தொடங்கியவர்

பிரிஸ்பனும் சூழவுள்ள இடங்களும் என்ற தலைப்பினை இட்டு விட்டு அவுஸ்திரெலியாவைப்பற்றி ஏன் எழுதுகிறேன் என்று நீங்கள் நினைக்கக்கூடும். அவுஸ்திரெலியா பற்றிய முதல் பதிவு என்பதினால் சில அவுஸ்திரெலியாவைப்பற்றிய தகவல்களை தந்திருந்தேன். பிரிஸ்பனில் காலநிலை யாழ்ப்பாணத்தைப் போல இருக்கும் என தமிழர்கள் சிலர் சொல்வதுண்டு. குளிரைத்தவிர்த்து வாழ விரும்புபவர்கள் தேர்வு செய்யும் இடங்களில் பிரிஸ்பனும் உண்டு. ஈழத்தமிழர்கள் அவுஸ்திரெலியாவில் சிட்னியில் அதிகளவில் வசிக்கிறார்கள். அடுத்ததாக மெல்பேர்னில் வசிக்கிறார்கள். 3வதாக ஈழத்தமிழர்கள் வாழும் இடம் பிரிஸ்பனாகும். பிரிஸ்பனில் சில தமிழர்களின் வீடுகளுக்கு சென்றால் முருங்கைக்காய் மரங்களைப் பார்க்கலாம். மாமரங்களைப் பார்க்கலாம். இனி பிரிஸ்பனிலும், சூழவுள்ள இடங்களிலும் சுற்றுலா சென்ற இடங்களைப் பற்றிச் சொல்லுகிறேன்.

sunshinecoastmapty9.gif

map250jl0.jpg

பிரிஸ்பனில் இருந்து வடக்கு நோக்கி ஒரு மணித்தியாலத்துக்கு மேல் சென்றால் sunshine coast என்ற இடம் வரும். இங்கு அவுஸ்திரெலியா மிருகக்காட்சிசாலை (Australian zoo) இருக்கிறது. இம்மிருகக்காட்சி சாலைக்கு உலகில் பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. அதுவும் 2006ம் ஆண்டுக்கு முதல் அதிகளவில் வந்தார்கள்.வாசிக்கும் போது உலகிலே பெரிய மிருகக்காட்சிசாலைகளில் இதுவும் ஒன்று என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதைவிட பெரிய மிருகக்காட்சிசாலைகள் அவுஸ்திரெலியாவில் இருக்கிறது. ஏன் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள தெகிவளை மிருகக்காட்சி சாலை, இந்த அவுஸ்திரெலியா மிருகக்காட்சி சாலையினை விடப் பெரியது. அங்கு அவுஸ்திரெலியா மிருகக்காட்சிசாலையில் இல்லாத பலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊர்வனக்கள் இருக்கின்றன. இருந்தும் அவுஸ்திரெலியா மிருகக்காட்சி சாலையினைப் பார்ப்பதற்கு அமெரிக்கா,ஐரோப்பா நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவதற்குக் காரணம் 2006ல் அகால மரணமடைந்த ஸ்ரிவ் எர்வின்(Steve Erwin) தான்.

முதலைகளைத்தேடித் தேடிப் பிடித்த ஸ்ரிவ் எர்வினை நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். அவரின் பெற்றோரினால் ஆரம்பிக்கப்பட்ட இம்மிருகக்காட்சிசாலையில் முதலைகளின் நிகழ்ச்சியில் ஸ்ரிவ் எர்வினைப் பார்ப்பதற்காக உலகின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவதுண்டு. 2005ம் ஆண்டில் நான் பிரிஸ்பனுக்கும் சூழவுள்ள இடங்களுக்கும் சுற்றுலா சென்றேன். என்னோடு சுற்றுலா வந்தவர்களில் சிலரில் யாழ்கள உறுப்பினர்களும் அவர்களது உறவினர்களும் இருந்தார்கள். அவுஸ்திரெலியா மிருகக்காட்சி சாலைக்கும் சென்றிருந்தோம். நல்லவேளை அன்று ஸ்ரிவ் எர்வினும் அங்கு இருந்தார். 2007லும் நான் பிரிஸ்பனுக்கும் சூழவுள்ள இடங்களுக்கும் சுற்றுலா சென்றிருந்தேன். அவுஸ்திரெலியா மிருகக்காட்சிசாலைக்கும் சென்றிருந்தேன். ஸ்ரிவ் எர்வின் உயிருடன் இல்லாததினால் அம்மிருகக்காட்சி சாலை சோபை இழந்து காணப்பட்டது.

auflagxi6.gif

25356663qe0.gif

பிரிஸ்பன் சுற்றுலா பற்றி ஜம்மு தொலைபேசியில் சொன்னப்போது வந்த ஆசையை வெளியில் சொல்லாமல் வைச்சிருந்தேன். இப்போ அரவிந்தன் அண்ணா நீங்கள் எழுதியதை பார்த்த உடனே மீண்டும் ஆசை வந்திட்டுதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் ஒரு பயனுள்ள யாழ் களபகுதிகளில் இதுவும் ஒன்று... உங்களுடைய பயண கட்டுரைய விரும்பி வாசிபவர்களில் நானும் ஒருவன். சுற்றுலா செல்ல உள்ளவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் நல்ல விளக்கமான கட்டுரைகள்.

உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

அவுஸ்ரெலியா தொடரை ஆரம்பித்து விட்டீர்களா அரவிந்தன் அண்ணா..(இன்று தான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது)..சுவாரசியமான உங்கள் பயண தொடரை வாசிக்கு ஆவலில்.. :huh:

பிரிஸ்பனின் இருந்து ஆரம்பித்திருகிறீர்கள் அமைதியும்,அழகு என்றால் பிரிஸ்பன் என்று கூறலாம் இப்ப எனக்கு அளுத்து போய் விட்டது பார்த்து பார்த்து :lol: நான் தவறவிட்ட பகுதிகளை உங்கள் பயண தொடரின் பின் தான் பார்க்க கூடியதாக இருக்கும் எண்டு நம்புகிறேன்.. :huh:

மற்றது..

"ஸ்ரிவ் ஏர்வினின்" அவதாரை போட்டுள்ளீர்கள்..அதை பார்க்கும் போது சில நினைவுகள் வந்து செல்கின்றன..கந்தப்பு தாத்தாவிடம் கேட்டா சொல்லுவார்..தொடர்ந்து பயணிக்கவும்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

வாங்கோ அரவிந்தன் அண்ணா நம்மட ஊரைப்பற்றி நல்லதா சொல்லுங்கோ. :lol:

இங்க Gold Coast ஐ பொற்கரை என்டு தான் சொல்லுவார்கள்

உங்களின் கருத்துக்கு நன்றிகள். இனிமேல் நானும் இங்கு எழுதும் போது பொற்கரை என்றே எழுதுவேன்.

பிரிஸ்பன் சுற்றுலா பற்றி ஜம்மு தொலைபேசியில் சொன்னப்போது வந்த ஆசையை வெளியில் சொல்லாமல் வைச்சிருந்தேன். இப்போ அரவிந்தன் அண்ணா நீங்கள் எழுதியதை பார்த்த உடனே மீண்டும் ஆசை வந்திட்டுதே

உங்கள் ஆசை நிறைவேறும்.

மிகவும் ஒரு பயனுள்ள யாழ் களபகுதிகளில் இதுவும் ஒன்று... உங்களுடைய பயண கட்டுரைய விரும்பி வாசிபவர்களில் நானும் ஒருவன். சுற்றுலா செல்ல உள்ளவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் நல்ல விளக்கமான கட்டுரைகள்.

உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

நன்றிகள் வழக்கறிஞர்.

அவுஸ்ரெலியா தொடரை ஆரம்பித்து விட்டீர்களா அரவிந்தன் அண்ணா..(இன்று தான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது)..சுவாரசியமான உங்கள் பயண தொடரை வாசிக்கு ஆவலில்.. :lol:

பிரிஸ்பனின் இருந்து ஆரம்பித்திருகிறீர்கள் அமைதியும்,அழகு என்றால் பிரிஸ்பன் என்று கூறலாம் இப்ப எனக்கு அளுத்து போய் விட்டது பார்த்து பார்த்து :D நான் தவறவிட்ட பகுதிகளை உங்கள் பயண தொடரின் பின் தான் பார்க்க கூடியதாக இருக்கும் எண்டு நம்புகிறேன்.. :lol:

மற்றது..

"ஸ்ரிவ் ஏர்வினின்" அவதாரை போட்டுள்ளீர்கள்..அதை பார்க்கும் போது சில நினைவுகள் வந்து செல்கின்றன..கந்தப்பு தாத்தாவிடம் கேட்டா சொல்லுவார்..தொடர்ந்து பயணிக்கவும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நீங்கள் போகாத இடங்கள் சிலவற்றையும் சொல்லப் போகிறேன்.

எனக்கு ஒரே ஒரு அண்ணன் தான் அவர் சிட்னியில் பெண்டல் கில் என்ற இடத்தில் இருக்கிறார்

இப்பகுதியிலும், அருகில் உள்ள இடங்களிலும் சில யாழ்கள உறுப்பினர்கள் வசிக்கிறார்கள். சந்திக்க விரும்பினால் நீங்கள் சந்திக்கலாம்.

அரவிந்தன் அவுஸ்ரெலியா சுற்றுலா தொடர் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.கப்டன் குக்கை மாதிரி நீங்களும் ஏதாவது ஒரு தீவை கண்டு பிடியுங்கோ.வரைபடங்களை பார்க்கும் போது நெடுக்ஸ் பதியும் வன்னி களமுனை வரைபடங்கள் மாதிரி இருக்கு. :lol:

உங்களின் கருத்துக்கு நன்றிகள் புத்தன்.

  • தொடங்கியவர்

pc270068cr5.jpg

2005ல் நான் சென்ற போது இம்மிருகக்காட்சி சாலையில் இருந்த 175வயதுடைய ஆமை 2006ல் இறந்தது. உலகப்பிரசித்தி பெற்ற சார்லஸ் டார்வின் அவர்கள் இவ்வாமை பற்றி ஆராட்சி செய்திருந்தார்.

உலகில் அதிக வயது கூடிய உயிரினங்களில் ஒன்று இறந்தது என்று பி.பி.சி செய்திகளில் இவ்வாமை இறந்த போது செய்தி வெளியிட்டார்கள். பி.பி.சி யில் வந்த செய்தியினைப் பார்க்க

http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/5109342.stm

விக்கிபீடியாவில் வந்த இவ்வாமை பற்றிய தகவல்களைப் பார்க்க

http://en.wikipedia.org/wiki/Darwin's_tortoise

எனது புகைப்படக்கருவியினால் 2005ல் எடுக்கப்பட்ட படம்.

pc280102ms4.jpg

  • தொடங்கியவர்

இம்மிருகக்காட்சி சாலையில் Animal Planet Crocoseum என்ற பகுதியில் காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் பாம்புகள், பறவைகள், முதலைகள், யானைகளின் காட்சிக்கு சுற்றுலாப் பயணிகள் 10 மணியில் இருந்தே, நான்குபக்கமும் உள்ள இருக்கைகளில் இடம் பிடிக்கச் செல்வார்கள். சூரிய வெப்பம் படுவதைத் தவிர்க்கும் இடங்களாகப் பார்த்து இடம் பிடிப்பார்கள். 2005ம் ஆண்டு இங்கு சென்ற போது புலிகளின் காட்சிகளும் பறவைகள், முதலைகள், யானைகளோடு காண்பித்தார்கள். ஆனால் 2007 சென்ற போதும் , தற்பொழுதும் புலிகளின் காட்சிகள் இப்பகுதியில் (Animal Planet Crocoseum)நடைபெறுவதில்லை.

பாம்புகளின் நிகழ்ச்சியில் விதம் விதமான பாம்புகளைக் காண்பிப்பார்கள். நீரிலும், நிலத்திலும் பாம்புகளின் காட்சிகள் நடைபெறும்.

pc280104jr9.jpg

pc280105ag9.jpg

pc280106fo2.jpg

pc280107zp4.jpg

pa290352dl1.jpg

pa290354hm2.jpg

பார்வையாளர்கள் தொட்டுப் பார்ப்பதற்கு பாம்புகளைத் தூக்கிக் கொண்டு பார்வையாளர்களிடம் வருவார்கள்.

pc280108ye1.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

2007ல் சென்ற போது, அன்று விடுமுறை தினம் இல்லை என்பதினாலும், ஸ்ரிவ் எர்வின் இறந்ததினாலும் 2005ல் சென்றதினை விட மிகவும் குறைவான சுற்றுலாப் பயணிகளே இங்கு வந்தார்கள்.

pa290345oz5.jpg

pa290346pu4.jpg

pa290347rx3.jpg

  • தொடங்கியவர்

2005ல் சென்றபோது இப்பகுதியில்(Animal Planet Crocoseum) நடைபெற்ற புலிகளின் காட்சிகளைக் கீழே உள்ள படங்களில் பார்க்கலாம். இப்பொழுது புலிகளின் காட்சிகள் இப்பகுதியில் நடைபெறுவதில்லை. புலிகள் நீரில் விளையாடியதைப் பார்த்தேன். அதன் பிற்கு புலிகளுக்கு குடிப்பதற்கு பால் கொடுத்தார்கள்.

pc280109ex2.jpg

pc280110at0.jpg

pc280111fq4.jpg

pc280112hj1.jpg

pc280113mw2.jpg

  • தொடங்கியவர்

pc280114ti8.jpg

pc280115di1.jpg

pc280117ej2.jpg

pc280118zb0.jpg

pc280119ac5.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

வெவ்வேறு விதமான பறவைகள், பறவைகளின் காட்சியின் போது பறந்து வந்தன. சில பறவைகளைக் கூப்பிடும் போது நிகழ்ச்சி நடாத்துபவரை நோக்கிப் பறந்து வந்தன. பார்வையாளர்கள் பகுதியிலும் சில பறந்து வந்து நின்றன.

pc280122au7.jpg

pc280124yh4.jpg

pc280123vy5.jpg

pa290357kh4.jpg

pa290358fm5.jpg

  • தொடங்கியவர்

2005ல் இங்கு பயணித்தபோது, ஸ்ரிவ் ஏர்வின் அன்று வருவாரா என்பதை அறிய ஆவலோடு மக்கள் காத்திருந்தார்கள். அன்று ஸ்ரிவ் ஏர்வின் வருவார் என்று அறிவிப்பு வர, சுற்றுலாப் பயணிகள் சந்தோசத்துடன் கரகோசம் செய்தார்கள். புலிகள், பறவைகளின் காட்சிகளின் முடிவில் ஸ்ரிவ் ஏர்வின் இப்பொழுது வரவுள்ளார் என அறிவிப்பு வர, எல்லோரும் ஸ்ரிவ் ஏர்வினின் பெயரை உரக்கக் கூறி கரகோசித்தார்கள். அன்று சுற்றுலாப் பயணிகள் அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா, தென்னாபிரிக்கா போன்ற தூர தேசத்து நாடுகளில் இருந்து வந்திருந்தார்கள்.

pc280125sr3.jpg

  • தொடங்கியவர்

பட்டாசு வெடிகளின் சத்தத்தில், ஸ்ரிவ் ஏர்வின் அங்கு தோன்றினார். தொலைக்காட்சிகளில் பார்த்த ஸ்ரிவ் ஏர்வினினை நேரில் காணும் சுற்றுலாப் பயணிகள் ஆரவாரம் செய்து ஸ்ரிவ் ஏர்வினை வரவேற்றார்கள்.

pc280126od0.jpg

அன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடும் அவ்விடத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகளின் பெயர்களை முன்பே அங்குள்ள சுற்றுலா நடாத்துபவர்களுக்குச் சொன்னால் ஸ்ரிவ் ஏர்வின் பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லுவார் என்று எங்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. அன்று எங்களுடன் வந்த யாழ்கள உறுப்பினர்களில் ஒருவரின் பிறந்த நாள். அவருக்குத் தெரியாமல் அவருடைய பிறந்த நாள் பற்றிய செய்தி ஸ்ரிவ் ஏர்வினுக்கு சொல்லப் பட்டிருந்தது. ஸ்ரிவ் ஏர்வின் அங்கு வந்திருந்த ஒருவரின் பிறந்த நாள் வாழ்த்தினை முதலில் சொன்னார். பார்வையாளர்கள் கைதட்டி வாழ்த்துச் சொன்னார்கள். அடுத்ததாக யாழ்கள உறுப்பினரின் பிறந்த நாள் வாழ்த்தினை ஸ்ரிவ் ஏர்வின் சொன்னார்.

pc280127im1.jpg

அந்த உறுப்பினர் யார்? நாளை சொல்கிறேன்.

  • தொடங்கியவர்

அந்த யாழ் கள உறுப்பினரின் பெயரை அறிவித்தவுடன் எல்லோரும் வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.

சில நிமிடங்களின் பின்பு அங்கு யானைகள் அவ்விடத்தைச் சுற்றி வந்தன.

pc280128bo6.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

யானைகள் சென்றதும் முதலை நொறு அங்குள்ள நீர் நிலைக்கு நீந்தி வந்தது. முதலைகளை மற்றைய உயிரினங்கள் போல இலகுவாக சொல் வழி கேட்கப் பழக்க முடியாது. அத்துடன் முதலைகளுடன் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். கவனமில்லையென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதலைகள் இருக்கும் இடத்தில் பாதைகள் அடைக்கப் பட்டிருக்கும். பிறகு காட்சிக்காக முதலைகள் வரும் போது பாதைகள் திறந்து விடுவார்கள். முதலைகளுக்கு உணவினைக் காட்டியபடி பார்வையாளர்கள் உள்ள நீர் நிலைக்கு நீந்தி வரச் செய்தார்கள். முதலைகளுக்கு எட்ட நின்றே உணவினைக் காட்டி வரச் செய்வார்கள்.

pc280129wa9.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

தொலைக்காட்சிகளில் முதலைகளுடன் ஸ்ரிவ் ஏர்வினைப் பார்த்த எங்களுக்கு, ஸ்ரிவ் ஏர்வின், முதலைக்கு உணவூட்டினார்.

pc280130dr3.jpg

pc280131ls3.jpg

pc280132on3.jpg

pc280133hj2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.