Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்வினை, சூனியம் நம்பிக்கை உண்டா?

செய்வினை, சூனியம் நம்பிக்கை உண்டா? 37 members have voted

  1. 1.

    • ஆம்
      8
    • இல்லை
      16
    • சுத்த பம்மாத்து
      13

Please sign in or register to vote in this poll.

Featured Replies

வசிசுதா எழுதியது --பாவம் அந்த குஞ்சு..

மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் தான் இப்படி ஒரு காரியம் செய்வார்கள் -- உண்மைதான்! அப்பொழுது நான் சின்னப்பிள்ளை! ஒன்றுமே செய்யவில்லை! இப்போதென்றால் அதைப்பறக்க விடுங்கள் என்று சண்டையாவது போட்டிருப்பேன்! மற்றப்படி எதுவுமே நம்புபவர்களுக்குத் தான்! கடவுளாயிருந்தாலும் பேய் பிசாசு செய்வினையாயிருந்தாலும்..............

.........; :lol:

  • Replies 67
  • Views 12.3k
  • Created
  • Last Reply

சீ சீ நீங்களெங்கே நானெங்கே. நான் படித்தனான் எண்டு தானே சொன்னனான். ஆனால் பாஸ் பண்ணினான் எண்டு சொல்லவில்லையே.

:roll: :roll: :roll: :roll:

அதுகள் அறியாமயால அப்படி செய்யுதுகள் எண்டது இங்க எல்லாருக்கும் தெரியும் தானே. இங்க புலம் பெயர் நாட்டில அறிந்து செய்யுதுகளே.

கோவிக்க வேண்டாம். அறியாமல் செய்வதை மன்னிக்கலாம் அறிந்தும் பெருமைக்காக செய்வதை என்னவென்று சொல்லுவது.

குளக்கட்டான் என்னும் அழகான பெயரினை ஏன் குளக்ஸ் என சுருக்கு ஒரு எஸ் இனை போடுகின்றீர்கள். இடையில் அப்பப்போது மிஸ்ரர் என்னும் சொல் வேறு வருகின்றது. எமக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வதற்கு பதில் பட் எமக்கு நம்பிக்கை இல்லை.

மிஸ்ரர்= திரு, திருவாளர்

பட்= அனால்

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ இதில வேற ஒரு விசயம் இருக்கா..படிக்கிறது வேற, பாஸ் பண்ணுறது வேற....ம்ம்ம்

நான் இது பற்றி படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ இதில வேற ஒரு விசயம் இருக்கா..படிக்கிறது வேற, பாஸ் பண்ணுறது வேற....ம்ம்ம்

நான் இது பற்றி படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

¬Á¡õ. ¦ºó¾¢ø ¸×ñ¼Ã¢¼õ ¦º¡øÖÅ¡÷, "«ñ§½, ¿£í¸ 10ÅÐ FAILÖí¸.. ¿¡ý ã½¡í¸¢Ç¡Š À¡…¤í¸. À¡…¡ FAILÄ¡ ¦ÀâÍ? ¿£í¸§Ç ¦º¡øÖí¸"

¬Á¡õ. ¦ºó¾¢ø ¸×ñ¼Ã¢¼õ ¦º¡øÖÅ¡÷, "«ñ§½, ¿£í¸ 10ÅÐ FAILÖí¸.. ¿¡ý ã½¡í¸¢Ç¡Š À¡…¤í¸. À¡…¡ FAILÄ¡ ¦ÀâÍ? ¿£í¸§Ç ¦º¡øÖí¸"

இது கொஞ்சம் அதிகமா தெரியல்ல?

கிராமபுர பாமரமக்ககிடையே இவற்றின் ஆதிக்கம் மிகையாகத் தான் காணப்படுகிறது இவர்களை ஏமாற்றி பிழைக்கவே ஒரு கூட்டம் காத்திருக்கு.........ஏமாறுபவர்கள

எனக்குப் போட்டுத்தான் உவன் குத்தியன் தமக்கையை தள்ளி விட்டவன்

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் போட்டுத்தான் உவன் குத்தியன் தமக்கையை தள்ளி விட்டவன்

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

«¼ôÀ¡Å£ «òà.. ¯ÁìÌ ¿¡ý À¢øÄ¢ ÝÉ¢Âò¨¾ §À¡ðÎ «ì¸¡¨Ç ¸ðÊÅîºÉ¡§É¡?? §ƒ¡ùù ±ýÉ ±øÄ¡ò¨¾Ôõ ÁÈóÐ §À¡É£÷ §À¡Ä.. «ì¸¡¨Ç À¡÷ò¾ ¯¼§É 1 ¸¡Ä¢Ä ¿¢ñ¼¨¾ ÁÈóÐ §À¡î§º¡?? «¨¾Å¢¼ ¾¡Ä¢¸ðÎÈ §¿Ãò¾¢Ä ܼ ´Õ §À¡ò¾ø Å¡í¸¢¾ó¾¾§É?? «¨¾¦ÂøÄ¡õ ÁÈóÐ ¯ôÀÊ §Àº¢ôÒðʧÂôÀ¡.. :cry: :cry: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அப்பு மப்பிலைதான் மாண்டவரோ

போத்தில் கொடுக்காமல் விட்டிருந்தால் அப்பு எஸ்கேப்தான் .............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி குடும்ப கதையை ஏன் இங்க கதைக்கிறியள்? சொல்லி போட்டு ஆச்சிட்ட அடி வாங்கவோ??

பில்லி சூனியம் இவை மலையாளத்தில் அதிகம் காணபடுகிறது..ஏன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மட ஊரிலை மட்டக்களப்பைதான் சொல்வார்கள் திறமைசாலிகள் என்று அதுமாதிரி கேரளாவிலை கனக்க ஆட்கள் இருக்கலாம்

அதுசரி அப்படி செயயிற ஆட்களைத் தெரிந்தால் உந்த பத்தை வசியம் பண்ணுறதுக்கு கேட்டுச்சொல்லுங்கோ பிறகு களத்திலை இஷ்டப்பட்ட மாதிரி கூத்தடிக்கலாம்

வேணுமெண்டால் மோகனையும்............................

000041816sg.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் நம்பிக்கையில்லை. ஆனால் நான் நேரடியாக ஒரு சம்பவத்தை பார்த்தும் அனுபவித்தவனும் என்ற வகையில் என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பத்தில் அதை அப்படியே விட்டுவிட்டேன். இதில் ஏதோ உளவியல் ரீதியான நுட்பம் உள்ளதாகவே எனக்கு படுகின்றது. நண்பர்களுக்கு ஆர்வமிருந்தால் அந்த சம்பவத்தை முழுமையாக தருகின்றேன்.

சொல்லுங்கோவன்........... அப்பதானே தெரியும் அதில் உள்ள உளவியல் நுட்பம் என்னவென்று.................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எஙகள் வீடு பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு ஓழுங்கையில் உள்ள 4 வீடுகளில் உள்ளது. எமது வீடு முதலாவது. இரண்டாவது வீட்டில் 11 பிள்ளைகள். 09 ஆண்கள் 02 பெண்கள். மூத்த பிள்ளை பெண். கட்டுக்கோப்பில்லாத அந்த வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவும் தான். ஆண் பிள்ளைகள் காதல் என்ற பெயரில் தனித்தனியே பிரிந்து விட்டார்கள். இரண்டாவது பெண்பிள்ளையும் வெளிநாட்டிலிருந்து வந்த அந்த வீட்டின் உரிமையாளரின் பையனை காதலித்து தனிக்குடித்தனம் போய் விட மிஞ்சியது 2 3 ஆண்பிள்ளைகளும் அந்து மூத்த அக்காவும் தான். அந்த நேரத்தில் தான் 3 வீட்டிற்கு வாடகைக்கு ஒரு தம்பதியினர் வந்தனர். அவர் இலங்கை கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றவர். பிள்ளைகள் இல்லை. அந்த காலகட்டம் கோட்டை ராணுவ முகாமை மீட்பதற்கான உக்கிர போர் நடைபெற்ற காலம். எமது வீட்டில் பங்கர் அமைக்க வசதியில்லாததால் 2 வது வீட்டில் அவர்களது பங்கரையும் எமது பங்கரையும் அருகருகே அமைத்திருந்தோம். அப்போது 3 வீட்டில் வந்திருந்த அந்த ஓய்வு பெற்ற நபர் இந்த அக்காவை பாலியல் ரீதியில் தவறாக அணுகமுற்பட்டுள்ளார். அவர் அதை தவிர்த்து விடவே அவர் செய்வினை செய்ததாக சொல்லப்பட்டது. முதலில் அந்த நபர் பற்றி எங்களிடமே முறையிட்ட அக்கா காலப்போக்கில் அவரது வீட்டிலேயே தனது ஓய்வு நேரங்களை கழிக்க தொடங்கி விட்டார். இதை தட்டிக்கேட்க முற்பட்ட தனது தந்தையுடன் சண்டை போட்டு அற்த சண்டை முற்றி எமது அயலவர்கள் எல்லாம் அந்த வீட்டில் கூடிவிட்டார்கள். இவ்வாறு அநேகம் தடவை நடைபெறுவது வழமை. ஆனால் அப்போது எல்லாம் எல்லாவற்றையும் பொறுமையாக தாங்கி அமைதி காத்து வந்த அந்த அக்காவே பெரும் பலத்துடன் சண்டை போட்டு தந்தையின் வேட்டியை கூட உரிந்து விட்டார். எமது அயலில் அந்த அக்கா அந்த வீட்டில் பிறந்ததே பாவம் என பேசுமளவுக்கு நன் மதிப்பை கொண்டிருந்த ஒருவர். எந்த நேரமும் சமையல் சகோதரர்களி;ன் ஆடைகள் துவைப்பது என ஓய்வற்ற வேலை- திடீரென இப்படியொரு மாற்றம். இறுதியில் பூசாரி ஒருவரிடம் கொண்டு போனார்கள். அவர் சொன்னார் இவரை அடையும் முயற்சியில் செய்வினை செய்யப்பட்டிருக்கின்றது. அதை அகற்ற வேண்டும். இதுவரை நடந்த சம்பவங்களுடன் நான் செய்வினையை தொடர்புபடுத்தவில்லை. இனி தான் விடயமே.

அந்த பூசாரி ஏதோ புசை எல்லாம் செய்த பின்னர் கேட்கும் சாப்பாடெல்லாம் கொடுக்க சொல்லி விட்டு போய்விட்டார். (குறிப்பு: அக்கா இந்த காலகட்டத்தில் சாப்பாட்டில் அக்கறை கொள்ளவில்லை) நித்திரையாய் கிடக்கும் அக்கா திடீரென எழும்புவார். பொங்கல் வேணும் என்பார். 1 கொத்து அரிசியில் பொங்கினால் அவரே அவளவையும் சாப்பிடுவார். பின்னர் பழம் என்பார். கொடுத்தால் 1 சீப்பு வாழைப்பழம் முழுவதும் உண்பார். இளநீர் என்பார். குறைந்தது 10 இளநீர் ஒரேயடியாக குடிப்பார். இவையெல்லாம் நான் நேரடியாக பார்த்த சம்பவங்கள். இவை முடிந்த பின்னர் நன்றாக நித்திரை கொள்ளுவார். திடீரென பெரும் சத்தம் கொண்டு எழும்புவா. இப்படியான ஒரு நேரத்தில் தான் புக்காரா விமானங்கள் வரவே நாங்கள் அவர்கள் வீட்டிற்கு பங்கருக்குள் ஓடினோம். எமது விதி... நித்திரையாய் கிடந்த அக்காவை எமது பங்கருக்குள் கொண்டு வந்து இறக்கி விட்டார்கள். இறுதி நேரம் தந்தையார் ஓடிவந்து அக்கா எழும்பினா இதை கையில் வைச்சு ஊதி விடு என்று ஒரு விபூதி பொட்டலத்தை எனது கையில் திணித்து விட்டு தங்களது பங்கருக்குள் போய் விட்டார். திடீரென அக்கா பெரும் சத்தம் போட்டுகொண்டு எழும்பினார். எனது சகோதரிகள் பயந்து விட்டார்கள். புக்காராக்கு பயந்து இங்கு வந்தால் .. இது வேறு பயம். நான் அந்த விபூதியை உள்ளம் கையில் வைத்து ஊதினேன். ஏதோ மயக்க மருந்து கொடுத்தது போல் அக்கா மீன படுத்துவிட்டார். அந்த சம்பவத்தின் பிறகு புக்காரா வந்தாலும் நாங்கள் பங்கரை பெரிதாக நாடவில்லை என்பது வேறு கதை. இப்படி ஏதோ எல்லாம் செய்து அவர் ஓரளவு தேறிவிட்டார். கடந்த வருடம் நான் வீட்டிற்கு போன போது அவர் திருமணம் செய்து 3 பிள்ளைகளும் உள்ளார்கள். ஆனால் அவர் பழைய அக்கா இல்லை. எமது வீட்டோடு நல்ல மாதிரி இல்லை. நாங்கள் தொலைந்து போனால் தான் தனக்கு நிம்மதி என்பதாக நெடுக திட்டுவாராம். நான் நிக்கும் போது திட்டினார்- எனக்கு கோபம் வந்துவிட்டது. அப்போது எனது அப்பா அந்த பிள்ளைக்கு நடந்த பிரச்சனை தெரியும் பிறகேன் ரென்சனாகிறாய். நாங்க இத்தின வருசமா பொறுத்து கொண்டு தான் இருக்கிறம் எண்டார். அவரின் தாயார் என்னுடன் நல்ல பாசம். ஆனால் அவர்கூட அக்காக்கு தெரியாமல் தான் என்னை வந்து சந்தித்தார். நான் சாப்பிட சொல்லி கேட்டேன். அவர் சொன்னார்.... உங்கள் வீட்டில் வந்து யாருக்கும் சொல்லாமல் சாப்பிடும் உரிமை எனக்கு இருக்கிறது. ஆனால் வருவதில்லை. ஏனென்றால் பிறகு அக்கா உங்கள் வீட்டை கண்டபடி திட்டுவாள். நீங்க எல்லாதையும் பொறுத்து கொண்டு இருக்கிறதே பெரிய விடயம் என்று. நான் இங்கு வந்து ஒரு சில மாதங்களில் அந்த தாயாரும் இறந்து விட்டார். அவர் கூட இறக்கும் நேரத்தில் சரியாக துன்பப்பட்டதாக எனது தந்தை சொன்னார். காலை 8.00 மணிக்கெல்லாம் எமது வீட்டின் முன்னால் உள்ள வாசிகசாலைக்கு வருவாராம். இரவாகும் வரை அதிலேயே குந்தி கொண்டு இருப்பாராம். கண்களால் கண்ணீர் வழிந்த படியே இருக்குமாம். அப்பா சொன்னார் அவர் உண்ணாமல் இருந்து தான் இறந்திருக்க வேண்டும் என்று-

நண்பர்களே.... இது நான் சந்தித்த உண்மை சம்பவம். எந்த திரிவுபடுத்தலும் இல்லாமல் சொல்லி இருக்கின்றேன். உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். (குறிப்பு: அக்காவின் தாய் தந்நை அந்த பக்கத்து வீட்டு தம்பதிகள் எல்லாம் இப்போது இறந்து வி;ட்டார்கள்)

நீங்கள் சொன்ன மாதிரி உளவியல் ரீதி என்று கூடச் சொல்லலாம்...இதை கிஸ்திரியா...என்றும் சொல்வார்கள்...ஆனால் சாப்பாட்டு விடயங்கள் கொஞ்சம் இடிக்குது நம்பமுடியவில்லை :idea: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வியாசன் நீங்கள் சொல்லும் மட்டக்களப்பு விடயத்தில் எனது பார்வை வித்தியாசமானது. ஆனால் நண்பர்கள் யாரும் இந்த விடயத்தை பிரதேச வாரியாக பார்த்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழர்களுக்கே உரித்தான விருந்தோம்பல் பண்பு மட்டக்களப்பு மக்களிடம் சற்று அதிகமாகவே உள்ளது. பாடசாலை ஆசிரியர்கள்ää கமநலத்திணைக்களம் என பல்வேறு பணிகளுக்கு பிற தேச வாசிகள் அந்த நகருக்கு செல்வது வழமை. இங்கே இன்னொரு விடயத்தையும் சொல்லி விடுகின்றேன். யாழ் மண்ணில் உங்களுக்கு ஒரு நண்பன். அவன் பெயர் சுரேஸ் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு ஒரு தங்கையும் உள்ளாள். நீங்கள் சுரேசை தேடி அவன் வீட்டிற்கு போகின்றீர்கள். அவன் வீட்டிற்கு வாசலில் நின்று சைக்கிள் பெல்லை அடித்து சுரேஸ் என்று அழைப்பீர்கள். உள்ளிருந்த படியே ஒரு அநாமதேய குரல் வரும். அவர் இல்லை. வெளிய போட்டார் என்று. நீங்கள் திரும்பி விடுவீர்கள். இதுவே மட்டக்களப்பு என்றால் வாசல் திறந்த படியே இருக்கும். நீங்கள் சுரேஸ் என அழைத்தபடி உள்ளே செல்வீர்கள்- அவன் தங்கை ஓடி வந்து வாங்கோ அண்ணா உள்ளுக்கு வாங்கோ என்று தேநீர் பரிமாறியபடியே சொல்லுவாள் அண்ணா வெளிய போட்டார். இப்ப வந்திடுவார் என்று.

இந்த விருந்தோம்பல் பண்பில் மயங்கிய நம்மவர்கள் தங்கள் நிலை மறந்து காதல் வயப்படுவது உண்மை. ஆனால் மீளவும் தங்கள் தேசத்திற்கு சென்றதும் தங்கள் நிலையுணர்ந்து மாறிவிடுவார்கள். இங்கே அதிகம் பாதிக்கப்படுவது வஞ்சகம் இல்லாமல் இருக்க இடம் கொடுத்து விருந்தோம்பல் செய்தவர்கள் தான். அதுமட்டுமில்லாமல் அவரை சு10ழ்ந்துள்ளவர்கள் தங்கள் பிள்ளை அல்லது உறவினன் உத்தமன் என்பதை நிரூபிக்க கதை ஒன்றை அவிழ்த்து விடுவார்கள் மட்டக்களப்பு பாயோட ஒட்டிற்று என்று. ஆக இது தொடர்பில் நாம் பழமொழிகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டியவர்களாகவுள்ளோம் என்பதே என் கருத்து வியாசன்.

யாரும் தவறாக நினைக்க வேண்டாம். நானும் யாழ் மண் வாசி தான். ஆனாலும் எப்பொருள் யார் யார் வாய் கேப்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. கல்யாணம் ஆன பின், தற்போது உங்களுடன் அந்த அக்காவுக்கு ஏன் கோவம்?

உப்பிடியெல்லாம் நீர் கேள்வி கேட்க வேண்டுமென்றுதான்.

:wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு செய்வினை சூனியம் இரண்டிலும் நம்பிக்கையுண்டு நாம்சூனியத்திலிருந்து(ஒன்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா போங்கையா போங்க செய்வினையும் சு}னியமும் என்று கொண்டு.. கிரகங்களுக்கு நாங்க அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறம் அவங்கள் சுற்றுலாவும் போகதொடங்கீட்டாங்க.. இன்னும் செய்வினை.. :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்வினை சுhனியம் எப்படிசெய்யிறது? :roll: எனக்கு ஒருக்காசொல்லித்தாங்கோ இங்க ஒராலுக்கு வைக்கணும் அவர்ர பெயர் மோ ல் தொடங்கி ன் ல் முடியிது :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அந்த ஆள் உங்களுக்கு என்ன செய்தது.. :wink: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா வேலைசெய்யுதோ எண்டு முயற்ச்சித்து பார்க்கதான் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு செய்வினை, சூனியத்திலை நம்பிக்கை இல்லை.

ஆனால் யாராவது செய்வினை. சூனியம் பிஸ்னஸ் ஆரம்பிக்கிறதெண்டால் சொல்லுங்கோ. நானும் பங்குதாரராய் வாறன். நல்ல வருமானம் எடுக்கலாம். வெளிநர்டுகளில் இருப்பவர்கள் விரும்பத்தக்கது. நான் இங்காலை ஊர்ப்பக்க நடவடிக்கையளைப் பார்ப்பன். நீங்கள் உங்காலை பாருங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நல்ல வியாபாரத்தைத்தான் தெரிவு செய்திருக்கிறீங்கள். நானும் ஒரு பங்கு உங்கடை லிஸ்ரிலை எனது பெயரையும் இணைத்து விடுங்கோ துசி :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.