Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அசுர வேகத்திலொரு ஆய்வு

Featured Replies

திருமலை துறைமுகத்தில் வான்புலிகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல் நடைபெற்று மிகக்குறுகிய நேரத்தில் தமிழ்வின் இணையத்தளம் ஒரு ஆய்வினை வெளியிட்டிருக்கிறது. மிகக்குறுகிய நேரத்தில் இந்த கள ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் புதிய "சிந்தனை" ஒன்றுக்கு வழிவகுத்துள்ளது. ( வாராந்த கள ஆய்வு)

[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 01:24.32 AM GMT +05:30 ]

திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தியிருப்பது, இலங்கைப் படைத் தரப்பினர் மத்தியில் மனோநிலையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பிராந்தியத்தை இந்த வருட இறுதிக்குள் தமது கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமையை மறுக்கவியலாது.

மறுபுறத்தில் தமிழர்கள் மத்தியில் இந்தத் தாக்குதல் ஒரு தெம்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் தமிழர்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பகுதிக்குள் படைத்தரப்புப் பிரவேசித்திருப்பது சற்றுக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து விடுவார்களோ? என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு நிலை தோன்றுமாக இருந்தால், அது தமிழ் மக்களைச் சிங்களவர்கள் மத்தியில் அடிமை நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற அச்சம் தமிழர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இவ்வாறான ஒரு நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது வெற்றியளித்ததா? அல்லது தோல்வியடைந்ததா? என்ற கேள்வியைக் காட்டிலும் இந்தத் தாக்குதல் தற்போதைய சூழ்நிலையில் நடத்தப்பட்டுள்ளமை இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் மீண்டும் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது எனலாம். பொதுவாக வன்னியில் இடம்பெறுகின்ற தரைவழித் தாக்குதலின் போது ஏற்படுகின்ற படையினரின் இழப்புக்களை அரசாங்கம் மூடி மறைத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு இலங்கையில் உள்ள அனைத்துச் சிங்கள ஊடகங்களும் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. எனினும் திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இந்த வான் தாக்குதலை இந்தச் சிங்கள ஊடகங்களினாலோ அரசாங்கத்தினாலோ மறைக்க முடியவில்லை. எனவே இது உண்மையாக, அரசாங்கத்தின் பிரசாரத்திற்குக் கிடைத்த பின்னடைவு என்றே கொள்ளலாம்.

படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்தும் வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றார்கள் என்ற செய்திகளே ஒவ்வொரு நாளும் இலங்கையில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சிங்கள ஊடகங்களிலும் 10 க்கு மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் பலியானதாகவே செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. இது சிங்கள மக்கள் மத்தியில், இன்றைய அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒரு பிரதிப்பலிப்பே அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாரிய வெற்றியைப் பெற்றமையாகும்.

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேற்றைய தாக்குதலை அடுத்து எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினர் உட்பட்டவர்களுக்கு பொதுவான ஒரு கவலை ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் தாக்குதலை வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்களுக்கு முன்னதாக மேற்கொண்டிருக்கக்கூடாது என்பதுதான். ஏனெனில் அந்தத் தாக்குதல்களைச் சுட்டிக் காட்டி அரசாங்கத்தின் யுத்த முனைப்புப் பிழையானது என்பதைத் தமது தேர்தல் பிரசாரத்தின் போது சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்தியிருக்கலாம் என்பதே அந்த கவலையாகும்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தாக்குதல்களைத் தென்னிலங்கையின் அரசியல் நலனுக்கு என்றில்லாமல் தமது இராஜதந்திர மற்றும் யுத்தகள நிலவரத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்வர் என்பது இந்தத் தாக்குதலின் மூலம் உலகிற்குத் தெரிய வந்துள்ளது.

இந்தியாவினால் வழங்கப்பட்ட ராடார் கருவிகளுக்குத் தென்பட்டபோதும், இவ்வாறான ஒரு துணிகரத் தாக்குதலை நடத்திவிட்டுப் பாதுகாப்பாக திரும்பிச் சென்றதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் புதிய "சிந்தனை" க்கான இடத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் என்றே கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் கருத்துக்கள் - டெய்லி மிரர் பத்திரிகையில் இருந்து

Hi, this is Mervin, do I need to hide in the bunker? I am scared....Ohhh..help me mumi.... -Mervin DeSilva

What happened to the radars and anti-aircraft missiles? -Thangaa

Time to bash India! Radars err; useless Indian radars -xxx

may be nobodies monitoring radars now. because few months nothing happened -Priyal

Very sad. This shows how ready we were ! After years of the first air attack, still we cant shot down this mosquito.. We boost about radar systems and air defence systems.. It's time to act wise without boosting. This is an insult to our victories in wanni. SLAF sould have a solid plan to cut-off the LTTE mosquito airforce! -nilantha

where is all Radars? -Newton

But we only to move just 12km to Kilinochchi...know?????? -kusumpan

What? Can't believe but it may be there last try to boost the image- Maluwa

Karu, Ennada machang? Where does it say heavy explosions in the news article? Man your jokers in the vanni know that their days are numbered -pitta

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.