Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னதான் நடக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நடக்கிறது

இலண்டனில் இருந்து ஈழ விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் எதிராக இயங்கும் இணையத்தளமான தேசம் இணையத்தளத்தினில் தமிழ்த்தேசியத்திற்காக பாடுபடும் அமைப்பு என்கிற பெயரில் இயங்கும் தமிழ் போறூம் அமைப்பில் ஒருவரான சுரேனின் செவ்வி வெளியானது. அந்தச் செவ்வி வெளியான பின்னர் அலருடன் தொர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் தனக்கு அந்த இணைய்த்தளம் பற்றியோ அல்லது அதனை இயக்குபவர்கள் பற்றியோ தெரியாததால் தான் செவ்வி வழங்கிவிட்டேன் என்று விளக்கத்தை சொன்னார் ஆனால் அதே இணையத்தில் தமிழ்ப் பாராழுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தியின் செவ்வி வெளியகியிருந்தது. அந்தத் தளத்தினை இயக்குபவர் யார்? யாரால் இயக்கப்படுகிறது. அது மட்டுமல்ல இலங்கையரசின் சமாதானக்குழுவில் உள்ள திஸ்ச விதாரண என்பவர் அந்தத் தளத்தின் முக்கிய இயக்குனரை அடிக்கடி இலண்டனில் சந்திப்பது பகிரங்கமாக தெரிந்திருந்தும்.ஜெயானந்த மூர்த்தி அந்த இணையத்திற்கு செவ்வி வழங்கியது எப்படி. அப்படியானால் அவர் விலை போய்விட்டாரா?? தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் சில நிகழ்வுகளிற்காக இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகியபோது அவர்களிற்கு தங்களால் வரமுடியாது நேரமில்லையென ஒதுக்கித்தள்ளியவரால். திட்டமிட்டு தேசியத்திற்கு எதிராக இயங்கும் ஒரு குழுவினருக்கு ஆற அமர இருந்து செவ்வி கொடுத்திருப்பது எப்படி??இவர்கள் மட்டும்தான் விலை போய் விட்டாரகளா?? அல்லது தமிழர் தேசத்தின் அனைத்துலகச் செயலகத்தின் செயற்பாடுகள் அனைத்துமே வில போய்விட்டதா??

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

உந்தத் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அல்லது உணர்வில்லாதவர்கள் எண்டிறதை எப்பிடிக் கண்டுபிடிக்கிறது. உங்கை எல்லாரும்தான் தமிழ்த் தேசியம் தமிழ்த் தேசியமெண்டு கூவிக்கொண்டு திரியினம்.

மற்றது பேட்டி குடுக்கிறதில என்ன இருக்கு. தேசியத் தலைவர் கூடத் தன்னைப்பற்றி அவதூறாக எழுதுற பத்திரிகைகளுக்கெல்லாம் பேட்டி குடுத்திருக்கிறாரே! நாங்கள் எப்பிடியாவது தமிழ்த் தேசியத்தை எங்களுக்குள்ள வளைச்சுப் போடவேணும் அதில குந்திக்கொண்டு குளிhகாய வேணுமெண்டு யோசியாமல் அதைக் கொஞ்சம் பரவலாக்கி அதில எல்லாரும் பங்கெடுக்கக்கூடிய விதத்திதில சிந்திச்சுச் செயல்பட்டால் எல்லாத்துக்கும் குறிப்பாத் தமிழ்த் தேசியத்துக்கு நல்லதெண்டு நினைக்கிறன்.

தமிழ் போறத்துக்கும் இது பொருந்தும். ஏனெண்டால் தமிழ்த் தேசியத்தில பங்கெடுக்கிறதுக்கு தமிழீழத்தில தமிழனாப் பிறந்திருந்தாப் போதும். அதுக்கெண்டு பிறக்கிறதுக்கு ஸ்பெசலா ஒரு பிரதேசம் தேவையில்ல. அப்பிடியில்லாட்டி எம்பிமார் அல்லது அவையட வாரிசுகளா மட்டும்தான் இரிக்கோணுமெண்டுமில்ல.

Edited by karu

சாத்திரி அண்ணா தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஆதரவாளர்கள் ஒரு ஊடகத்துக்கு பேட்டி கொடுப்பதை வைத்து அவர்களை துரோகிகள் விலைபோய்விட்டவர்கள் என்று எப்படி முத்திரை குத்தலாம்.? தமிழ் செல்வன் அண்ணா தமிழ் தேசியத்துக்கு எதிராக எழுதிய எத்தனையோ ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.அவர் விலை போனவரா?தேசியத் தலைவரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும் அனைத்துலகச் செயலகம் விலை போய்விட்டதா? என்று நீங்கள் கேள்வி எழுப்பியிருப்பதை நான் கடுமையா ஆட்சேபிக்றன்.உங்களுக்கு நான் ஒரே ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புறன்.2003 ம் ஆண்டு மாவீரர் தினம் சிறீலங்கா அரச தொலைக்காட்சியான ரூபவாகினிக்கு ஊடாகத்தான் நேரஞ்சல் செய்யபட்டது.அந்த நேரஞ்சலை செய்வதற்கு ரூபவாகினியின் வானும் அதன் தொழில்நுட்பவிலாளர்களும் மற்றும் ரூபவாகினி பணியாளர்கள் என்ற போர் வையில் சிறலங்கா புலனாய்வுத்துறையினர் சிலரும் கிளிநொச்சிக்கு வந்திருந்தார்கள்.இதை நாங்கள் தேசியத் தலைவரின் கவனத்துக்கு கொண்டுபோன போது "எங்களுக்கு எண்டு ஒரு சிறந்த புலனாய்வு கட்டமைப்பு இருக்கு.அவை தங்கடை வேலையை ஒழுங்கா செய்யினம்.அவையின்ரை வேலையை நீங்கள் செய்ய வெளிக்கிட வேண்டாம்.உங்கடை வேலையை நீங்கள் ஒழுங்கா செய்யுங்கோ எண்டு பேசிப் போட்டார்.

சிலர் தாம் மட்டும் தான் தமிழ்த் தேசியத்தின் தூண்கள் என்ற நினைப்போடு செயற்படுவதும், கருத்துக்கள் பகிர்வதும் நகைப்பிற்கிடமானது. இவர்களால் மேன்மேலும் எம்மவர்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி குளிர்காய முடியுமே தவிர, தேசியத்திற்காக வேறொன்றும் செய்ய முடியாது. ஒரு ஊடகம் எவர் நடாத்தினாலும், அவர்கள் சகலரையும் பேட்டி கண்டு அவர்களது கருத்தக்களை மக்களிடம் எடுத்துச் செல்வது தான் ஒரு ஊடகத்தின் கடமை. மற்றும்படி மக்கள் தெளிவாகவே உள்ளார்கள். அவர்களால் எது சரி, எது பிழை என்பதை தீர்மானிக்கவும் முடியும்.

சிலர் தாம் மட்டும் தான் தமிழ்த் தேசியத்தின் தூண்கள் என்ற நினைப்போடு செயற்படுவதும், கருத்துக்கள் பகிர்வதும் நகைப்பிற்கிடமானது. இவர்களால் மேன்மேலும் எம்மவர்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி குளிர்காய முடியுமே தவிர, தேசியத்திற்காக வேறொன்றும் செய்ய முடியாது. ஒரு ஊடகம் எவர் நடாத்தினாலும், அவர்கள் சகலரையும் பேட்டி கண்டு அவர்களது கருத்தக்களை மக்களிடம் எடுத்துச் செல்வது தான் ஒரு ஊடகத்தின் கடமை. மற்றும்படி மக்கள் தெளிவாகவே உள்ளார்கள். அவர்களால் எது சரி, எது பிழை என்பதை தீர்மானிக்கவும் முடியும்.

வசம்பண்ணா

நீங்க சொல்வதுதான் சரி.

இங்கை தேசியம் தேசியம் என்கிறவையை பாருங்கோ!

ஒன்று "அங்கை" இருந்து தப்பியோடிவந்தவராகஇருப்பார்!

அல்லது தேசியம் பேசியே இங்கு[யாழில்] என்ன நடக்குது என்று நோட்டம் போடுபவராக இருப்பார்!!

உண்மையில் தேசியத்தை நேசிப்பவர்கள் அதிகம் பேசுவது இல்லை.

யாரைப்பற்றி எழுதினால் தாம் பிரபலம் ஆகலாம் என்கிறதுதான் இப்போ சிலரின் உள்நோக்கமே :lol:

இங்கை தேசியம் எங்கை வாழுது :)

[இதை வாசிக்கும்போது சம்மத்தபட்டவருக்கு கோபம் வரலாம் :) எங்கே உங்களிடம் இருக்கும் அனைத்து ஐடியையும் பாவிச்சு என்னை திட்டுங்கோஓஓஓஓஓ இதுதானே உங்கள் வேலை] (முதலாவதாக திட்ட ஒகஸ்ரியனை அனுப்புங்கோ :D )

Edited by r.raja

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி கரு.அதியன்.வசம்பு.ரஜா. உங்கள் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன். காரணம் அவர்கள் ஒரு ஊடகம் என்கிற முறையில் ஜெயானந்த மூர்த்தி பேட்டி கொடுத்துள்ளார். அதே போல ஊடகம் என்கிற முறையில் ரி.பி.சி. தேனீ. ஈபிடிபி. ஆகிய ஊடகங்களை அவர்களது செயற்பாடுகளை ஏன் துரோகி என்கிறார்கள்?? அண்மையில் கூட தரிசனம் தொலைக்காட்சி இயக்குனரையும். அதன் ஊழியர்களையும் நீங்கள் துரோகிகள் உங்கள் ஒலி ஒளி பரப்பினை நிறுத்துங்கள் என்று சொல்லி தொலைபேசிமூலமாகவும் நேரடியாகவும் மிரட்டல்கள் விட்டார்களே. ஏன்?? அவர்களும் ஊடகம் என்கிற முறையில் தங்களுடைய கடைமையைத்தானே செய்தார்கள்.அப்படியானால் இனிவருங்காலங்களில் துரோகஊடகம்.ஆதரவு ஊடகம் என்று பிரிக்காமல் பொதுவாகவே எல்லாமே ஊடகம் என்கிற முறையில் பார்க்கவேண்டியதுதானே.ஏனென்ற

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயானந்த மூர்த்தியின் செவ்வி நன்றி தேசம் இணையத்தளம்.

பா உ ஜெயானந்தமூர்த்தி 1983 முதல் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தனது வாழ்க்கையை இணைத்துக் கொண்டவர். இதன் காரணமாக 1986ல் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பூசா மற்றும் வெலிக்கடை முகாம்களில் 36 மாதங்கள் தடுத்து வைக்கபட்டவர். 1989ல் விடுதலையாகி மீண்டும் தனது பொதுப்பணியில் ஈடுபட்டார். 1991ல் ஊடகவியலாளராக பணியை ஆரம்பித்தார். எந்த ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பிலும் உறுப்பினராக இருக்கவில்லை என்று தெரிவிக்கும் இவர் 2004 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.கொடுப்பது. அப்படி ஒரு நிலை உருவானால் விடுதலைப் புலிகளதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் நிலையென்ன ?

பா உ ஜெயானந்தமூர்த்தி அவர்களை லண்டன் ஹரோ பகுதியில் அவர் தங்கிருந்த வீட்டில் ஓகஸ்ட் 17 அன்று சந்தித்து இந்நேர்காணலைப் பதிவு செய்தோம். நேர்காணல் முழுவதுமே நட்புடன் உரையாடி தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இச்சந்திப்பில் என்னுடன் சேனன் கலந்துகொண்டார். ஜெயானந்தமூர்த்தியின் நண்பர் அனுசிறீஸ்குமார், விமல்ராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.

வடக்கை விடுவிக்கும் யுத்தம் பற்றி…..

தேசம்நெற்: இன்றைய வன்னிப் புலம்பெயர்வு பற்றி என்ன அறிந்து உள்ளீர்கள் ?

ஜெ.மூ: இராணுவம் படை நடவடிக்கைகளை செய்து கொண்டிருப்பது எல்லாருக்கும் தெரியும். இராணுவம் தொடர்ச்சியாக பொதுமக்கள் குடியிருப்பகளை வாழ்விடங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. அதனால் மக்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். உணவுப் பிரச்சினை, மருத்துவப் பிரச்சினை என அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து கொண்டுள்ளனர். பொது வேலைத்திட்டங்கள் எதனையும் சர்வதேச நிறுவனங்கள், உள்ளுர் நிறுவனங்கள் செய்ய முடியாத நிலையொன்றை ஸ்ரீறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கிறது. அரசாங்கத்திற்கூடாக விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்கள் கூட அங்கு உரியமுறையில் சென்றடையவில்லை. மக்கள் தொடர்ச்சியாக பட்டினிச்சாவை எதிர்நோக்கிவர்களாகத்தான் அங்கு காணப்படுகிறார்கள்.

தேசம்நெற்: நேற்று (ஓகஸ்ட் 16) சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டு உள்ள அறிக்கையில் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மக்களுடைய பாதிப்புப் பற்றி கவனமெடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி உள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம்சாட்டி உள்ளதே ?

ஜெ.மூ: சர்வதேச மன்னிப்புச்சபை கொழும்புப் பேச்சாளரின் இந்தக் குற்றச்சாட்டை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறன். ஏனென்று சொன்னால் விடுதலைப் புலிகள் விடுதலைப் புலிகள் பொது மக்களைக் கேடயமாக வைத்து அங்கு எந்த ஒரு நடவடிக்கையையும் செய்யவில்லை. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி மக்கள் அங்கு சென்றிருக்கிறார்கள். அகதிகளாக தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். மக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்கள், கண்மூடித்தனமான வான்வெளித் தாக்குதல்கள் காரணமாகத்தான் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலையேற்பட்டது. போரியல் விதிமுறைகளுக்கு அப்பால் மக்கள் மீதான இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கிறது.

விடுதலைப் புலிகள் போய் சிங்கள மக்கள் மீதோ சிங்கள குடியிருப்புகள் மீதோ தாக்குதல் நடத்தவில்லை. தன்னுடைய மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அத்தாக்குதலை நடாத்தும் இராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் தாக்குதலையே விடுதலைப் புலிகள் மேற்கொள்கின்றனர். அங்கு மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கியே இடம்பெயர்கின்றனர். ஏனெனில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி மக்கள் செல்ல முடியாது.

இராணுவத்தினர் அல்லது ஸ்ரீலங்கா அரசாங்கம் பிரச்சாரம் செய்யலாம் தங்களுடைய பகுதிக்கு மக்களை வரும்படி. சகல வசதிகளும் செய்து தரப்படும் என்றும் சொல்லலாம். ஆனால் அவ்வாறு மக்கள் வந்தால் மக்கள் மீதான கெடுபிடிகள் அதிகரிக்குமே தவிர, நிச்சயமாக அந்த மக்களை அரசாங்கம் காப்பாற்ற முடியாது. உதாரணமாக 2007 வாகரைத் தாக்குதலைக் குறிப்பிடலாம். விடுதலைப் புலிகள் எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ளாமலேயே பொதுமக்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டது. அதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1000க்கும் மேற்பட்டவர்கள் காயப்பட்டனர். இது அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே செய்யப்பட்டது. அவ்வாறே வன்னியிலும் அரசு செய்கிறது.

மன்னிப்புச் சபை ஒன்றை கவனிக்க வேண்டும் இராணுவம் செய்கின்ற தாக்குதலை நிறுத்த வேண்டும். இராணுவம் பொதுமக்கள் மீது நடத்துகின்ற தாக்குதலை நிறுத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித அழிவும் ஏற்பட வாய்ப்பில்லை. மன்னிப்புச் சபையின் இந்தக் கூற்று என்பது தமிழ் பொது மக்களைப் பொறுத்தவரை ஒரு வேதனையான விடயம் தான்.

தேசம்நெற்: இன்று (ஓகஸ்ட் 17) காலை மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி நகரும்படி இலங்கை இராணுவம் விமானங்களில் இருந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து கேட்டுக் கொண்டு உள்ளது. விடுதலைப் புலிகளையும் சரணடையும்படி கேட்டுக்கொண்ட உள்ளது. யுத்தம் மக்கள் அடர்த்தியாக வாழும் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. (29 ஓகஸ்ட்டில் கோதபாய ராஜபக்சவின் அறிவிப்பும் அதனையே தெரிவிக்கிறது.) இந்த நிலையில் யுத்த பிரதேசத்திற்குள் மக்களை அழைத்துச் செல்வது அல்லது அதற்குள் மக்களைத் தடுத்த வைத்திருப்பது எவ்வகையிலும் அவர்களுக்கு பாதுகாப்பாக அமையாது. என்னுடைய கேள்வி, மக்கள் தாமாக விரும்பி அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்ல விரும்பினால் விடுதலைப் புலிகள் அதனை அனுமதிப்பார்களா? அவர்களது நகர்வைத் தடுக்கமாட்டார்களா ?

ஜெ.மூ: மக்களைத் தடுத்து நிறுத்தகின்ற என்று ஒரு விடயம் அங்கில்லை. அந்த மக்கள் விரும்பினால் அவர்கள் வெளியெறிச் செல்வதற்கு எவ்வித ஆட்சேபனையும் அங்கில்லை. ஆனால் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல விரும்பவில்லை. அதுதான் விசயம்.

தேசம்நெற்: நீங்கள் சொல்கிறீர்கள் இந்த யுத்தத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று. ஆனால் 2002 புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு விடுதலைப் புலிகளே மாவிலாறு பகுதியில் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர். ஆகவே இந்த யுத்தத்தை ஆரம்பித்ததில் விடுதலைப் புலிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. மேலும் புரிந்தணர்வு ஒப்பந்தத்திற்குப் பின்னர் விடுதலைப் புலிகளே கூடுதலான அரசியல் படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர். இதனை சர்வதேச உரிமை அமைப்புகளும் தெளிவாக குறிப்பிட்டு உள்ளன.

ஜெ.மூ: அரசியல் படுகொலைகள் செய்தது என்று சொன்னால் எந்தவித ஆதாரமும் இல்லை. ஆதாரங்களோடு எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அரசியல் படுகொலைகள் என்பது இலங்கையில் மிகவும் மலிந்தபோய் காணப்படுகிறது. எந்தக் கட்சியும் எந்தக் குழுவும் அரசியல் படுகொலையைச் செய்யலாம். அதாவது ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்ட படுகொலைகள் என்று சொல்றதற்கு எதுவும் இல்லை.

மாவிலாறு பிரச்சினைதான் யுத்தத்திற்கு காரணம் என்று சொல்கிறீர்கள். அது ஒரு சிறு பிரச்சினை. அந்தப் பகுதிக்கு தண்ணீர் விடவில்லை என்றுது தான். அதைப் பேசித் தீர்ப்பதற்கு பல தடவை முயற்சிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அங்கிருந்த போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினூடாக பல தடவைகள் அப்பிரச்சினையை பேசித் தீர்க்க முயற்சித்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதன் காரணமாகத்தான் இந்த சண்டை நடக்க வேண்டி வந்தது. இலங்கை அரசாங்கம் தான் அதனை ஆரம்பித்தது. அது தான் இந்த நிலைமைக்குக் காரணம்.

மாவிலாறாக இருக்கட்டும், கிழக்காக இருக்கட்டும், இன்று யுத்தம் நடைபெறும் வன்னியாக இருக்கட்டும் விடுதலைப் புலிகள் என்றைக்குமே வலிந்த ஒரு தாக்குதலை நடத்தவில்லை. தற்காப்புச் சண்டைகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. தங்களுடைய போராளிகளைக் காப்பாற்ற வேண்டும், என்று பல்வேறு காரணங்களுக்காக தற்காப்புச் சண்டைகளைச் செய்ய வேண்டி இருந்தது. அதைத்தான் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இவ்வாறான குற்றச்சாட்டுகள் விடுதலைப் புலிகள் தான் சண்டையை ஆரம்பித்தார்கள் என்றது, விடுதலைப் புலிகள் தான் அரசியல் படுகொலையைச் செய்தார்கள் என்றது ஆதாரமற்ற கூற்றுக்களாகத்தான் இருக்கு.

தேசம்நெற்: நீங்கள் சொல்கிற அதே விடயம் தான் லண்டனிலும் கருணா வந்திருந்த போது அவரைத் தண்டிக்க முடியாமல் போனதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரை சட்டம், ஒழுங்கு எதுவும் கிடையாது. யார் யாரையும் சுடலாம் என்ற ஒரு நிலை அங்கு உள்ளது. ஆயுதம் தாங்கிய அனைவருமே பொறுப்பில்லாமல் இருந்தால் அங்குள்ள மக்களின் நிலையென்ன ? இராணுவம் சாராத வன்முறைசாராத ஒரு அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிற நீங்கள், இதற்கு என்ன முடிவு என்று நினைக்கிறீர்கள் ?

ஜெ.மூ: இன்றைக்கு எடுத்து பார்த்தீங்கள் என்றால் கிழக்கில் இராணுவ நடவடிக்கை என்றும் அந்தப் பிரதேசம் விடவிக்கப்பட்டது என்றும் கூறிக்கொண்டு அங்கு இன்றைக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அங்கு இன்றைக்கும் அந்த மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைதான் இருக்கிறது. இராணுவக் கெடுபிடி இருக்கிறது. ஆயுதக் குழுக்களின் கெடுபிடி இருக்கிறது. நடத்தல்கள் நடக்கிறது. கைதுகள் நடக்கிறது. கப்பம் கோரப்படுகிறது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமை மிக மோசமாகத்தான் இருக்கிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிற மக்களை கேடயமாக வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் குறம்சாட்டினாலும் கிழக்கு பகுதியில் உள்ள மக்களும் நிம்மதியாக வாழவில்லை. இதற்கு ஒரு அரசியற் தீர்வுதாக் காணப்பட வேண்டுமேயொழிய, இராணுவ நடவடிக்கையோ ஆயுதக் குழுக்களின் நடவடிக்கையோ அல்லது கிழக்க மாகாணசபைத் தேர்தலை உருவாக்கி தேர்தலை நாடத்தி நிர்வாகத்தை ஏற்படுத்துகிறது போன்ற நடவடிக்கைகள் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகவோ நியாயமான தீர்வாகவோ அமையமாட்டாது.

ஆனால் வன்முறையோ அல்லது இராணுவ நடவடிக்கைகளோ தான் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இறுதிக்கட்டமான ஒரு அரசியல் தீர்வு என்பது மிக முக்கியம். இதற்கான வழிமுறைகளைத்தான் நாங்கள் எட்ட வேண்டும் எள்ற நிலைப்பாடு இருக்கிறது. இதன் மூலமாகத்தான் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றலாம்.

ஏகபிரதிநிதித்துவமும் தீர்வுத்திட்டமும் பற்றி…..

தேசம்நெற்: தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் அதற்கு ஏற்ற தீர்வு என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இத்தீர்வு தொடர்பாக என்ன திட்டம் உள்ளது.

ஜெ.மூ: தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2004 தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட விடயமே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதுதான். தமிழ் தேசியம், தாயக உரிமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை மையமாக வைத்துத்தான் தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டு இருந்தது. ஆகவே விடுதலைப் புலிகளுடைய அந்தத் தீர்வு தொடர்பாக அதாவது 2002 புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் தீர்வு பேச்சுவார்த்தைக் கூடாக ஒரு தீர்வுத்திட்டம் தயாரிப்பது. அதனோடு ஒன்றிணைந்ததாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேலைத் திட்டங்களும் செயற்பாடுகளும் இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அரசியல் ரீதியாக விடுதலைப் புலிகளுடன் நெருகிய உறவு இருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியாக ஒரு தீர்வுத்திட்டத்தை வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

தேசம்நெற்: விடுதலைப் புலிகள் வைக்கின்ற தீர்வை மட்டும் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்குமா? அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியாக ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்குமா?

ஜெ.மூ: தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியாக ஒரு தீர்வுத்திட்டத்தை கொண்டுவரப் போவதில்லை. ஏனென்றால் விடுதலைப் புலிகளுக்கூடாக அவர்களுடன் இணைந்துதான் அரசியல் தொடர்பான வேலைத் திட்டங்களைச் செய்து கொண்டு உள்ளது. அதனால் அரசியல் வேலைத் திட்டங்களை அவர்களுடன் இணைந்ததான் செய்து விருகிறோம். அவர்களுடைய தீர்வுத்திட்டத்தையே முன்னெடுத்துச் செல்கின்ற செயற்திட்டத்தையே நாங்கள் செய்கின்றோம்.

தேசம்நெற்: இன்று கிழக்கில் ஒரு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாகாண அரசு உள்ளது. தமிழ் தரப்பிலும் முஸ்லீம் தரப்பிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளன. ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகரும் போது இவர்களின் பங்களிப்பை ஏற்றுக்கொண்டு அரசியல் தீர்வை நோக்கி நகர தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தயாரா ?

ஜெ.மூ: நிச்சயமாக அதனை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்று சொன்னால், தமிழீழ விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகள் என்று தமிழ் மக்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். இதனை முன்னரே குறிப்பிட்டு இருக்கிறேன். கிழக்கு மாகாணத்தில் நடந்த தேர்தல் என்பது ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த தேர்தல். அதிலும் 50 வீதமான மக்களே வாக்களித்து உள்ளனர். அதுவும் பலவந்தப்படுத்தப்பட்டே வாக்களித்து இருந்தனர். பெரும்பாலான வாக்குகள் கள்ள வாக்குகளாகவே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

எதிர்வரும் காலங்களில் பேச்சுவார்த்தை என்று வரும்போது விடுதலைப் புலிகளுடன் மட்டும்தான் பேச்சுவார்த்தை இடம்பெற முடியும்.

தேசம்நெற்: அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை என்று வரும்போது விடுதலைப் புலிகள் தவிர வேறு எந்த அமைப்புடனும் கலந்துகொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரில்லை என்கிறீர்களா ?

ஜெ.மூ: நிச்சயமாக இல்லை. இது ஏற்கனவே பல தடவை கூறப்பட்ட விடயம். மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு இருக்கின்றோம். நிச்சயமாக அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசம்நெற்: விடுதலைப் புலிகளுடன் மட்டும் தான் அரசியல் தீர்வு பற்றி பேச வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்நிபந்தனையிடுவது சாத்தியமான ஒன்றல்ல. அது ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உங்களுக்கும் நன்கு தெரியும். இதுவே இலங்கை அரசுக்கு கிடைக்கும் ஒரு வெற்றியே. அடிப்படையிலே நீங்கள் ஜனநாயக விரோதிகள் என்பதனை உங்கள் முன்நிபந்தனையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறான போக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் பினாமி அமைப்பு என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

மேலும் கிழக்கு தேர்தலில் குழுகக்கள் ஆயுதம் வைத்திருந்தனர் என்பது நீங்கள் குறிப்பிடுகின்ற 2004 தேர்தலுக்கும் பொருந்தும். அப்போது விடுதலைப் புலிகளும் ஆயுதம் தாங்கி இருந்தனர். ஆகவே இலங்கை வரலாற்றில் தேர்தல்கள் முற்றிலும் வன்முறையற்ற தேர்தலாக அமைந்து இருக்கவில்லை. கிழக்கில் தேர்தல் முழுமையான ஜனநாயக அடிப்படையில் இல்லாவிட்டாலும் ஒப்பீட்டளவில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்றே கருதப்பட வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட 2004 தேர்தலும் 2008 கிழக்கு தேர்தலும் ஒரே வகையினதே.

ஜெ.மூ: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பினாமி அமைப்பு என்பதே வந்து ஒரு அருவருக்கத்தக்க விடயம். ஏனென்று சொன்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுடன் இணைந்து பொதுமக்கள் தந்த ஆணையின்படி அரசியல் வேலை செய்கின்ற ஒரு அமைப்பு. 2002 ஒப்பந்தத்திற்குப் பின்னான தேர்தல் என்றது வந்து விடுதலைப் புலிகள் சம பலத்துடன் இரண்டு நாடுகளின் தலைவர்கள் என்ற ரீதியில் கூட அதனைப் பார்க்கலாம். ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில் தான் அந்தத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஆயுதக் கலாச்சாரத்தை அல்லது ஆயுதத்தைப் பயன்படுத்தி அங்கு வாக்களிப்பு நடக்கவில்லை. மக்களை மிரட்ட வேண்டிய தேவையும் ஏற்படவில்லை. அவ்வாறான எந்த விடயமும் நடைபெறவுமில்லை.

ஆனால் கிழக்கு மாகாணத் தேர்தல் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆயுதக் குழுவின் துணையுடன் கிழக்கு மாகாணத்தில் அரசு தனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி மேற்கொண்ட தேர்தல். கிழக்கு தேர்தல் காலத்தில் இலங்கையின் அத்தனை அமைச்சர்களும் அங்கு முகாமிட்டு நின்று சகல அரசாங்கத்துறை வழங்கலையும் பயன்படுத்தி ஆயுதங்கள் பணம் குண்டர்கள் கூட்டம் எல்லாமே பயன்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல யுஎன்பி முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் குற்றம்சாட்டி உள்ளன. அங்கு மிக மோசமான ஜனநாயக விரொதத் தேர்தல் நடைபெற்றது என்பதுதான் உறுதி.

தேசம்நெற்: கிழக்கில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டது என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் இலங்கை வரலாற்றில் வன்முறையற்ற தேர்தல்கள் இடம்பெற்று இருக்கவில்லை. அவ்வாறு கிழக்கிலும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று இருக்கிறது. ஆனால் தேர்தல் முடிவை முற்றாக புறக்கணிக்க முடியாது. மேலும் கிழக்கு தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில அறிக்கைகள் விட்டிருந்தது. அதாவது அரசுக்கு எதிரான கட்சிகளுக்கு வாக்களிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டிருந்தது. அப்படியானால் இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸ்ற்கும் மக்கள் வாக்களித்து உள்ளனர். அங்கு ஒரு ஜனநாயத்தன்மை இருந்து உள்ளது. அப்படிப் பார்த்தால் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து உள்ளனர் என்று கொள்ளலாமா ?

ஜெ.மூ: நிச்சயமாக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றுமுழுதாக அந்தத் தேர்தலை நிராகரித்தது.

தேசம்நெற்: இல்லை. இல்லை. அரசுக்கு எதிரான கட்சிகளுக்கு வாக்களிக்கும்படி தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டிருந்தது. புறக்கணிக்கச் சொல்லிக் கேட்கவில்லை.

ஜெ.மூ: அறிக்கைகளை வடிவாகப் பார்த்திருந்தீர்கள் என்றால் முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை முற்றாக புறக்கணிக்கும்படி கேட்டிருந்தது. அதற்கு பின்னர் மக்களுக்கு ஒரு பிரச்சினை வந்துவிட்டது. அவ்வாறான சூழலில் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. நீங்கள் அரசுக்கு எதிரான கட்சிகளுக்கு உங்கள் வாக்குகளைப் பிரயோகியுங்கள் என்று தெரிவித்து இருந்தோம்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல இது ஒரு மோசமான தேர்தல். கடந்த காலங்களிலும் மோசடி இடம்பெற்று இருக்கலாம், தேரதல் என்பது இலங்கையில் ஒழுங்காக நடைபெறுவதில்லை என்பது ஒரு வழமையான விடயம். ஆனால் இதை வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வாக்களிக்கப்பட்டது என்று கொள்ள முடியாது. ஏனென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கு போட்டியிட்டு இருந்தால் என்ன நிலைமை வந்திருக்கும் என்பதை எல்லோரும் அறியக் கூடியதாக இருந்திருக்கும். அனைத்து ஆசனங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கும்.

தேசம்நெற்: ஜனநாயக அமைப்பு என்ற முறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் பங்குபற்றி இருக்கத்தானே வேண்டும்.

ஜெ.மூ: 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தப்படி கொண்டுவரப்பட்ட இந்த மாகாணசபை முறையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும் பொது கிழக்கு மாகாணத்தை மட்டும் பிரித்த வைத்தக் கொண்டு நடத்தும் தேர்தலை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.

தேசம்நெற்: அதனை நிரூபிப்பதற்காகவேனும் நீங்கள் போட்டியிட்டு இருக்கலாம் அல்லவா ?

ஜெ.மூ: அவ்வாறான விடயத்தை நாங்கள் அங்கு செய்ய முற்பட்டு இருந்தால் நிச்சயமாக ஸ்ரீலங்காவின் அரசியல் சூழ்ச்சிக்குள் நாங்கள் செல்ல வேண்டி இருந்திருக்கும். 50 வீதமான மக்கள் வாக்களிக்கவில்லை என்பதே இதற்கு எதிரானது தான். வாக்களித்த மக்கள் மாகாணசபைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்று சொல்ல முடியாது. சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால் தெரியும் அங்கு எப்படியான நிலை இருக்கிறது என்று. ஆகவே இந்த தேர்தலையும் வாக்களிப்பையும் வைத்தக் கொண்டு கிழக்கு மக்களுடைய தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை நிச்சயம் சொல்ல முடியாது.

தேசம்நெற்: இன்றைய சூழலில் கிழக்கில் புலிகளது கட்டுப்பாடு இல்லையென்றே சொல்லலாம். அங்கு வெளிநாட்டு முதலீடுகள் எல்லாம் இடம்பெறுகிறது. அவ்வாறான சூழலில் விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ் மக்களுடைய ஒரே பிரதிநிதிகள். ஏகபிரிதிநிதிகள் அவர்களுடன் மட்டும்தான் பேச வேண்டும் என்று நீங்கள் கேட்பது எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைக்கான சாத்தியமே இல்லை என்பதாக கொள்ள முடியுமா?

ஜெ.மூ: பேச்சுவார்த்தை என்று வருகின்ற போது அதற்கான பலத்தை காட்ட வேண்டும் என்கிற தேவை இருக்கிறது. பலம் என்பது முக்கியமான ஒரு விடயம். எதிர்காலத்தில் குழப்பமான ஒரு நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வைப் பெற முடியாது. விடுதலைப் புலிகள் தனி அமைப்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேசித்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற முடியும். எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை என்ற ஒன்று நடைபெற வேண்டுமானால் ஈடுபடுவதானால், இப்பொழுது கிழக்கு மாகாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறுகிறீர்கள், வடக்கு மாகாணத்திலும் ஒரு சிறுபகுதி தான் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறுகிறீர்கள், எதிர்காலத்தில் பல இடங்களைத் தங்களுடைய ஆளுகைக்குள் கொண்டு வந்ததன் பின்னர் தான் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறுவது சாத்தியமாகும்.

தேசம்நெற்: அதாவது விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கைப்பற்றிய பின்னர்தான் பேச்சுவாரத்தை சாத்தியமாகும் என்கிறீர்களா?

ஜெ.மூ: அதாவது இழந்த இடங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர்தான் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. இடைநடுவில் முடியாது. அல்லது 2002 ஒப்பந்தப்படி உள்ள இடங்களுக்கு இராணுவங்கள் விலகிச் செல்ல வேண்டும். இப்போது ஒப்பந்தம் இருக்கின்றதா இல்லையா என்பதே கேள்விக்குறி. 2002ல் இருந்ததான நிலைமை வந்ததன் பின்னரே பேச்சுவார்த்தைக்கான சாத்தியப்பாடு ஏற்படுகின்ற ஒரு நிலைமை இருக்கின்றது.

தேசம்நெற்: நாங்கள் அனுபவத்தில் கண்டது என்னவென்றால் யாருடைய இராணுவ பலம் ஓங்கி உள்ளதோ அவரகள் பேச்சுவாரத்தைக்கு செல்ல மாட்டார்கள். விடுதலைப் புலிகள் தாங்கள் இழந்த பகுதிகளைக் கைப்பற்றி பலமான நிலையை அடைந்தால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அதே போல் இராணுவமும் விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றி பலமாக வந்தால் அவர்களும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டிய அவசியமில்லை. யார் இராணுவரீதியாக பலமாக இருக்கிறார்களோ அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய அவசியமில்லை. பலவீனமானவர்களே பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்.

நாங்கள் 30 ஆண்டகளுக்கு போராட்டத்தை கொண்டு சென்றிருக்கிறோம் நூறாயிரத்திற்கு மேலான உயிர்கள் இழக்கப்பட்டு இருக்கிறது. இது ரிற் போர் ரற் என்ற மாதிரி மாறி மாறி நடக்கப் போகிறது. இன்னும் 30 வருடத்திற்கும் முடிவில்லாத ஒரு விடயத்தைத் தான் சொல்கிறீர்கள். நீங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரிதிநிதியாக இருந்தாலும் ஒரு இராணுவ அமைப்பின் பிரதிநிதியாகவே பதிலளிக்கிறீர்கள்.

ஜெ.மூ: விடுதலைப் போராட்டம் என்று சொன்னால் ஒரு குறுகிய காலத்தில் குறுகிய வரையறையை வைத்து நடந்தது கிடையாது.

தேசம்நெற்: அண்மையில் தெற்காசியாவில் வெற்றி கண்ட ஒரு போராட்டமாக நேபாளத்தில் இடம்பெற்ற மாவோயிஸ்ற்களின் போராட்டத்தைக் குறிப்பிடலாம். அவர்கள் எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நீண்ட காலத்திற்குப் பிற்பாடே ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள். இன்று அவர்கள் தமது போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளார்கள். அவர்களது வெற்றிக்கு மிக முக்கியமாக அமைந்த காரணிகளில் ஒன்று ஆயுதப் போராட்டத்தை மற்றுமொரு போராட்ட வடிவத்திற்கு (மக்கள் போராட்டமாக்கி) மாற்றி இன்று அதிகாரித்தை கைப்பற்றி உள்ளார்கள். அவ்வாறான ஒரு வேலைத்திட்டம் விடுதலைப் புலிகளிடமோ தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஜெ.மூ: தற்போதைய இராணுவ நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு எல்லாம் முடிந்துவிட்டதாக சிலர் கருதுகிறார்கள். அதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. போராட்டத்தில் பல்வேறு நேரகாலங்களுக்கு ஏற்ற வகையில் போராட்டங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. போராட்டத்தின் வழிமுறைகள் சிலவேளை மாற்றுப்படலாம். இலட்சியம் என்பது நிச்சயமாக வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தமிழீழம்தான். அந்த இலட்சியத்திற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் நிச்சயமாக தமிழ் மக்கள் எல்லோரும் கூடுதலாக ஆதரவாக இருக்கிறார்கள்.

தேசம்நெற்: அதற்கு மாற்றான எந்தத் தீர்வுக்கும்…..

ஜெ.மூ: இவ்வளவு இழப்புகளைச் சந்தித்த பிறகும் இறுதித் தீர்வு என்று சொன்னால் நிச்சயமாக தனிநாட்டுத் தீர்வாகத்தான் இருக்குமே தவிர வேறு திர்வுகளைப் பெற்றுக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசம்நெற்: தமிழீழத்திற்கு மாற்றான எந்தத் தீர்வையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது.

ஜெ.மூ: இதுவரை காலமும் சமஸ்டிää ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு இடைக்கால நிர்வாக சபையென்று பல்வேறு வகையான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்திடம் சர்வதேச ரீதியான நோர்வே அரசாங்கத்தினூடாக முன்வைக்கப்பட்டது. எதையுமே ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. இவற்றுக்கூடாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க எந்தவொரு சக்தியும் உதவவில்லை. இதற்குப் பிறகு இன்னமும் சமஸ்டி என்றோ இடைக்கால நிர்வாகசபை என்றோ பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. முழுமையான தீர்வு நிச்சயமாக தனி அரசு தான்.

ரிஎன்ஏ யின் பாராளுமன்ற பிரிதிநிதித்துவம் பற்றி…..

தேசம்நெற்: தமிழீழம் தான் ஒரு தீர்வு என்றால், ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறீர்கள், இலங்கையில் நடைபெற்ற குறைந்தபட்ச ஜனநாயக நடைமுறையைக் கொண்ட தேர்தல்களையும் புறக்கணித்த பின் எதற்காக இன்னமும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறீர்கள்? ஏன் லண்டன் வந்த பின்னரும் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க முடியாமையை நீடித்து இருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

ஜெ.மூ: அதற்கான தேவை இருக்கிறது. எங்களுடைய மக்களுக்கு…

தேசம்நெற்: நீங்கள் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் எல்லோ ?

ஜெ.மூ: தமிழ் மக்களுக்கான சேவைகளை செய்ய வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது. அதுக்காக இருக்கிறம்.

தேசம்நெற்: நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதன் மூலம் நீங்கள் இலங்கை அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள். ‘இலங்கை ஒரு பல்லின சமூகம். எங்களுடைய பாராளுமன்றத்தில் 23 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அமைச்சர் ஒருவர் இருக்கிறார்’ என இலங்கை அரசு பிரச்சாரப்படுத்த அல்லவா நீங்கள் உதவுகிறீர்கள் ?

ஜெ.மூ: பாராளுமன்றத்தில் கூட நாங்கள் தமிழ் மக்களுக்கு தனியரசுதான் தீர்வு என்று தானே சொல்லி வாறம். நாங்கள் சத்தியப் பிரமாணம் செய்திருந்தாலும் தமிழ் மக்களுடைய அபிலாசைகளைச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

தேசம்நெற்: இதே அபிலாசைகளுக்காகவே தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் உட்பட பலர் தமது பாராளுமன்ற பதவிகளைத் துறந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் அதற்குத் தயாரில்லை என்று கொள்ளலாமா ?

ஜெ.மூ: நாங்கள் பதவிகளைத் துறந்துவிட்டால் வேறவர்கள் அதற்குள் வந்து இருந்துகொண்டு தமிழ் மக்களுக்க எதிரான துரோகச் செயல் செய்வதை நாங்கள் விரும்பவில்லை.

தேசம்நெற்: இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றிய நிலையில் இராணுவக் கட்டுப்பாட்டில் ஒரு பொதுத் தேர்தல் இடம்பெற்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அத்தேர்தலில் போட்டியிடாது என்று கொள்ளலாமா ?

ஜெ.மூ: விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் நகர்வுகள் எப்படி அமையும் என்று சொல்ல முடியாது. ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள் காரணமாக நாங்கள் உள்ளுராட்சித் தேர்தலில் எமது வேட்பாளர்களது பாதுகாப்பு காரணமாக வேட்பாளர்களை நிறுத்தவில்லை. கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப் பொறுத்தவரை கோட்பாட்டு ரீதியில் நாங்கள் கிழக்கு மாகாண சபையை நிராகரித்ததால் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால் பொதுத்தேர்தல் ஒன்று வாற நேரத்தில் அந்த சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி தீர்மானம் எடுப்போம். அது பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது.

தேசம்நெற்: நீங்கள் உட்பட குறிப்பிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகத் தீவிரமாக அரசுக்கு எதிராக செயற்படுகிறார்கள். உங்கள் வீட்டின் மீதும் கைக் குண்டு வீசப்பட்டது.

ஜெ.மூ: தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை எல்லோருக்குமே பாதுகாப்பும் அச்சுறுத்தலும் உள்ளது. மாமனிதர் ரவிராஜ் பாதுகாப்பு உயர்வலயத்திற்கள் வைத்துத் தான் சுட்டுக் கொல்லப்பட்டவர். ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் ஆராதனைணில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டவர். மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் தமிழ் மக்களுக்காக எங்களோடு தோளுக்கு தோள் நின்று குரல் கொடுத்தவர். அவர் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார். கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்றிய பத்திரிகையாளர்கள் நடேசனாக இருந்தாலும் சரி தராக்கியாக இருந்தாலும் சரி யாழ்ப்பாணத்தில் நிர்மலராஜனாக இருந்தாலும் சரி சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்கள். தமிழ் மக்கள் மிகவும் மோசமான ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழர்கள் என்றால் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. யாருக்கும் போய் தலைகுனிந்து குறிப்பாக சிங்கள அரசாங்கத்திற்கு கீழ் போயிருந்து வாழ்வது என்றால் முடியாது. எங்களுக்கு வரலாறு இருக்கிறது. அங்கு அட்சி அதிகாரங்களோடு இருந்தவர்கள் தான் தமிழர்கள். இவ்வளவு இழப்புகளை இவ்வளவு அவலங்களைச் சந்தித்த பிறகு இன்னும் இன்னும் தலைகுனிந்து போவது என்பது என்னைப் பொறுத்தவரை இயலாது. இந்த ரீதியில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறது. அங்கு மிக மோசமான அச்ச நிலை ஒன்று இருக்கிறது. ஆனா எங்களுக்கு தெரியும். என்ன நடக்கும் என்று தெரியும். அதைப் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. மக்களுக்காகத் தான் குரல்கொடுத்து வாறம்.

நீங்கள் நினைக்க வேண்டாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்காக இருப்பவர்கள் அல்ல. இந்த பதவி பந்தா எதுவுமே எங்களுக்கு இல்லை. எங்கட சம்பளம் கூட எங்களுக்கு காணாத ஒரு நிலை. அதில கூட எங்கட மக்களுக்கு நாங்கள் செய்து குடுக்கிறம். என்னைப் பொறுத்தவரை நான் சொல்கிறேன். அந்த சிங்கள பாராளுமன்றத்திற்குள் இருந்து நாங்கள் குரல் கொடுக்கிறம்.

தேசம்நெற்: சிலருக்கு இருக்கும் அச்சுறுத்தல் அளவுக்கு மற்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்ப பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது வௌ;வேறு அரசியல் பின்னணிகளை உடையவர்கள் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு சடுதியான அமைப்புத் தானே. என்னுடைய கேள்வி இதற்குள் அண்மைக் காலத்தில் உடைவு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா ?

ஜெ.மூ: நிச்சயமாக இல்லை. அப்படி சில பொய்யான வதந்திகள் என்று தான் நான் அதைச் சொல்வேன். அரசாங்க மட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு பல முயற்சிகள் நடந்தகொண்டிருக்கிறது. பல்வேறு விதமான முயற்சிகள் செய்யப்பட்டு அது தோல்வி கண்டது.

எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் ஒரே கொள்கையுடனும் ஒரே கட்டுக் கோப்புடனும் தான் இருக்கிறோம். அதில மாற்றுக்கருத்து இல்லை. ஜொலியாக கதைப்பதை வைத்தக் கொண்டு நினைக்கலாம் இவர்களை உடைக்கலாம் என்று. அது தப்புக் கணக்கு. எங்கட பலம் எங்கட ஒற்றுமைதான்.

தேசம்நெற்: கிழக்கை விடுவித்து பிள்ளையானிடம் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) ஒப்படைத்தது போல் வடக்கிலும் அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்துவதை நோக்கியே அரசு செல்கிறது. வடக்கை விடுவித்து அமைச்சர் டக்ளஸ் தேவானநாதாவிடம் கொடுப்பது. அப்படி ஒரு நிலை உருவானால் விடுதலைப் புலிகளதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் நிலையென்ன ?

ஜெ.மூ: அரசாங்கம் வந்து கிழக்கைப் போன்று வடக்கிலும் ஒரு நிலையை ஏற்படுத்தலாம் என்று கனவு காண்கிறது. ஆனால் அது நிச்சயமாக வந்து ஒரு கஸ்ரமான நிலைமையாகத்தான் வந்து சேரும். அதே நேரம் அவ்வாறான நிலை ஏற்படும் போது விடுதலைப் புலிகளாக இருந்தாலும் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி கலந்தாலோசித்து எங்கள் குழு முடிவுகளை எடுக்கும்.

கருணாவின் பிரிவும் கிழக்கு வாதமும் பற்றி…..

தேசம்நெற்: 2004 தேர்தலுக்காக மட்டக்களப்பில் நீங்கள் உட்பட வேட்பாளர்களைத் தெரிவு செய்தது கருணா (விநாயகமூர்த்தி முரளீதரன்). கருணா வைத்த யாழ் மையவாதம், பிரதேசவாதம் தொடர்பான பிரச்சினைகள் இல்லையென்கிறீர்களா ?

ஜெ.மூ: தமிழ் தேசியத்தைப் பொறுத்த வரையில் நிச்சயமாக அப்படி ஒரு பிரதேசவாதம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்தது பரவலாக விடுதலைப் புலிகள் தான.

தேசம்நெற்: கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்தது கருணா தானே.

ஜெ.மூ: அவர் மட்டக்களப்பு அம்பாறை விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்தவர். அப்ப அவர் தெரிவு செய்தார்.

தேசம்நெற்: இந்த பிரிவினை எப்படி உருவானது ?

ஜெ.மூ: கருணா வைத்த குற்றச்சாட்டு இருக்குது அபிவிருத்தி நடவடிக்கைகளில் கிழக்கு புறக்கணிக்கப்பட்டது என்று. விடுதலைப் புலிகளுக்குள்ள இருந்து பார்த்தால்தான் அந்த விடயம் தெரியும். பொதுவாக பார்க்கும் போது அவ்வாறான புறக்கணிப்புகள் அங்கு இடம்பெற்றதாகக் கூறமுடியாது. அப்படி இடம்பெற்றதாக இருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே அதனை தெரியப்படுத்தி இருக்கலாம். ஆனால் அப்படியான தெரியப்படுத்தல்கள் இடம்பெறவில்லை. இறுதிக்கட்டத்தில தான் வந்து இக்குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அதை உண்மையாக என்னால் சொல்ல முடியாது என்னவென்று சொன்னால் உண்மையான நிலைமை என்ன நடந்தது என்று சொல்ல இயலாது. புறக்கணிப்பு இடம்பெற்றது என்றதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசம்நெற்: நீங்கள் கருணாவுடைய பள்ளித் தோழனும் அல்லவா ?

ஜெ.மூ: ஆமாம்.

தேசம்நெற்: இப்படியான உணர்வு அதாவது கிழக்கு மாகாண மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற உணர்வு அவருக்கு முன்பு இருக்கவில்லையா ?

ஜெ.மூ: இல்லை. வடக்கு - கிழக்கு இணைந்த போராட்டம் ஒன்றுக்கு தானே அவர் தளபதியாக இருந்தவர். அவ்வாறான ஒரு இது இருந்ததாக நான் அறியவில்லை.

தேசம்நெற்: இந்த பிரிவினைக்கு சில மாதங்கள் முன்னதாக தராக்கி சிவராம் உட்பட சிலர் கிழக்கு பிரிவினையை முன்வைக்கும் கலந்தரையாடல்களை சந்திப்புகளை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறதே ?

ஜெ.மூ: தனியாக கிழக்கு என்பது தொடர்பாக கலத்துரையாடல்களோ சந்திப்புகளோ இடம்பெறவில்லை.

தேசம்நெற்: கிழக்கு பிரச்சினையில் நீங்கள் சொல்கிறீர்கள் முற்றிலுமாக அங்கு ஒரு ஏற்றத்தாழ்வு இல்லையென்று. இன்று அங்கு ஒரு குறிப்பிட்ட அளவான மக்கள் வாக்களித்து ஒரு மாகாண அரசையும் தோற்றவித்து உள்ளார்கள். அங்கு ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாக கூறவரவில்லை. ஆனால் இதே காலப்பகுதியில் ஒராண்டுக்கு முன்னர் மட்டக்களப்பில் ஆறு அல்லது ஏழு கொலைகள் இடம்பெற்ற சூழல் ஒன்று இருந்தது. ஆனால் இந்த தேர்தலுக்குப் பின் வன்முறைகள் மிக மிகக் குறைந்து உள்ளது. மக்களுடைய உயிரிழப்பு குறைந்து உள்ளது அல்லவா ?

ஜெ.மூ: அங்கு வந்து கடத்தல்களோ உயிரிழப்புகளோ இல்லையென்று…

தேசம்நெற்: நான் அப்படிச் சொல்லவரவில்லை. ஜனநாயகம் மலர்ந்திருக்கிறது என்று சொல்லவில்லை. எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து உள்ளது என்று சொல்கிறேன். வடக்கில் ஏற்படுகின்ற மனித இழப்புகள் அவலங்களுடன் ஒப்பிடும் போது கிழக்கில் இப்போது அவ்வாறு இல்லை என்கிறேன்.

ஜெ.மூ: அரசாங்கமும் ஆயுதக் குழுக்களும் அவ்வாறான தாக்குதல்களை செய்து கொண்டிருந்தது. இப்ப சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தன்னுடைய நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அதை குறைச்சுக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியத் தலையீடு பற்றி…..

தேசம்நெற்: இந்தியா இலங்கைப் பிரச்சினையில் இன்னமும் செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் விடுதலைப் புலிகளுடன் இந்தியா நேரடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு சட்டச சிக்கல்கள் உள்ளது. அந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் ஒரே வழி. சர்வதேச சமூகத்திற்கும் அதுதான் ஒரேவழி ஏனென்றால் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டு உள்ளது. அப்படியான நிலையில் அரசாங்கமும் சரி, இந்தியாவும் சர, சர்வதேசமும் சரி விடதலைப் புலிகளுடன் பேசமாட்டோம் தமிழ் தேசியக் கூட்டமைப்படன் தான் பேசுவோம் என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலையென்ன ?

ஜெ.மூ: நாங்கள் இன்னமும் இந்தியாவில் நம்பிக்கை இழக்கவில்லை. இந்தியா தமிழ் மக்களுக்கான பிரச்சினையை தீர்த்த வைக்கும் என்ன நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

தேசம்நெற்: இந்தியா உங்களுக்கு தமிழீழம் வாங்கித் தராது தானே.

ஜெ.மூ: வாங்கித் தருமா இல்லையா என்பது நடைமுறைச் சாத்தியத்தைப் பொறுத்துத்தான் தெரியும்.

தேசம்நெற்: உங்களுக்கு அந்த நம்பிக்கையும் இருக்கிறது.

ஜெ.மூ: நிச்சயமாக இருக்கிறது. தமிழீழத்தை அங்கிகரிக்கிறது இந்தியாவாக இருந்தாலும் இருக்கலாம். ஆகவே பேச்சுவார்த்தை என்று வரும்போது விடுதலைப் புலிகளுடன் தான் பேசவேண்டும். அதுக்குரிய அழுத்தங்களை நாங்கள் செய்து கொண்டிருப்பம். சட்டத்தடைகள் இருந்தால் தடையை நீக்கிவிட்டு பேசலாம் தானே.

சிங்கள மக்களுடனான உறவு பற்றி…..

தேசம்நெற்: இன்று மிகக் குறைவான தமிழர்களே இலங்கையில் வாழ்கிறார்கள். அங்கு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் சிங்கள மக்களுடைய ஆதரவு (அரசாங்கத்தை குறிப்பிடவில்லை) மிக அவசியம். இன்று யுத்தத்தால சிங்கள மக்களும் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அரசுக்கு எதிரான உணர்வு சிங்கள் மக்கள் மத்தியிலும் உள்ளது. சிங்கள மக்களுடைய நலன்களுக்காகவும் குரல் கொடுப்பதன் மூலம் அம்மக்களது ஆதரவைப் பெறும் வாய்ப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளது. அதை நோக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

ஜெ.மூ: எங்களைப் பொறுத்தவரை சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கம் பிரச்சினையில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழுக்களாகப் பிரிந்து அரசியல் வேலைகளை மேற்கொள்கிறது. அதில் ஒன்று தென்னிலங்கைப் பிரச்சாரம். ஐந்துபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அரசியல் வேலைகள் தொடர்ந்து நடந்தது. ஆனால் இடையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகள் காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் நீங்கள் சொலும் அந்த விடயம் நிச்சயமாக செய்யப்பட வேண்டும்.

பாராளுமன்றத்திலையும் நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல ஆதரவாகவே பேசி இருக்கிறம். விலைவாசி உயர்வு சிங்கள மக்களையும் பெருமளவு பாதிக்கிற விசயம். ரவிராஜ்க்கு சிங்கள மொழியாற்றல் இருந்தது. அவர் அதைக்கொண்டு சிங்கள மக்களிடையே வேலை செய்திருக்கிறார். அதை அவருடைய இறுதி ஊர்வலத்திலும் கண்டிருக்கலாம்.

தேசம்நெற்: தமிழ் அரசியல் தலைமைகள் எப்போதும் யூஎன்பிக்கு அல்லது எஸ்எல்எப்பி க்கு வாக்களிக்கும்படியே கேட்கின்றனர். அனைத்து மக்களுக்குமாக குரல்கொடுக்கும் சக்திகளை கண்டுகொள்வதில்லையே ?

ஜெ.மூ: பொதுவாக நாங்கள் சிறுகட்சிகளை நாங்கள் பெரிய அளவில் கவனத்தில் எடுப்பதில்லை. இலங்கை அரசியலில் இன்றைக்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது இரண்டு பிரதான கட்சிகளும் (யூஎன்பி, எஸ்எல்எப்பி) அடுத்தது நாங்கள் பார்க்கிறது ஹெல உறுமயவும் ஜேவிபியையும் தான் நாங்கள் பார்க்கிறோம். அதற்கான தாக்கங்களையும் அழுத்தங்களையும் தான் நாங்கள் விட்டுக்கொண்டிருக்கிறோம். மக்கள் சிறுகட்சிகளை ஆதரிப்பது அவர்களுடைய ஜனநாயகம்.

தேசம்நெற்: சிறுகட்சிகள்தானே சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கிறது ?

ஜெ.மூ: நீங்கள் சொன்ன மாதிரி சிங்கள மக்களுடைய ஆதரவு என்றுது மிக முக்கியமான ஒன்று. அப்படியான கட்சிகளுடன் நாங்கள் கதைக்கின்றோம். ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்வதற்குக் கூட நாங்கள் பங்களிப்புகளைச் செய்திருக்கிறோம். சிங்கள தமிழ் மக்களுக்கு பொதுவான விடயங்கள் என்று வரும்போது நாங்கள் எங்கள் பங்களிப்பை செய்திருக்கிறோம்.

தேசம்நெற்: நீங்கள் சிங்கள மக்கள் மீதான கரிசனைகள் பற்றி சொல்கிறீர்கள். ஆனால் தென்பகுதியில் சிங்கள மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தபடும் பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் மௌனமாக இருக்கிறது. அவற்றை கண்டிக்கத் தயங்குகிறது.

ஜெ.மூ: தென்பகுதி மக்கள் கொல்லப்படும் போது அவ்வாறான சம்பவங்கள் தொடர்பான எங்களுடைய வேதனையை தெரிவித்து இருக்கிறம்.

தேசம்நெற்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் தென்பகுதிச் சிங்கள மக்கள் மீதான தாக்குதலை கண்டிக்கவில்லையே ?

ஜெ.மூ: நாங்கள் கண்டித்திருக்கின்றோம். சிலவேளை ஊடகங்களில் வரவில்லையென்று நினைக்கிறேன். ஊடகங்கள் இவ்வாறு தான் எங்களுடைய செய்திகளைப் போடுவதில்லை.

இறுதியாக…..

தேசம்நெற்: விடுதலைப் புலிகள் மீது கடமையான விமர்சனங்களைக் கொண்டுள்ள, மாற்றுக் கருத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

ஜெ.மூ: அது அவரவர்களின் உரிமை. உண்மையில் என்னவென்று சொன்னால் எங்களுக்கு என்று ஒரு நாடு தேவை அதை உணர்ந்து எல்லோரும் செயற்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிழை சரி என்பதுக்கு அப்பால் மக்கள் மிகவும் மோசமான ஒரு நிலையில் இருக்கிறார்கள். ஸ்ரீலங்கா அரசாங்கத்தை நம்பி இறங்கி நிச்சயமாக எந்தவொரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை.

சரி கரு.அதியன்.வசம்பு.ரஜா. உங்கள் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன். காரணம் அவர்கள் ஒரு ஊடகம் என்கிற முறையில் ஜெயானந்த மூர்த்தி பேட்டி கொடுத்துள்ளார். அதே போல ஊடகம் என்கிற முறையில் ரி.பி.சி. தேனீ. ஈபிடிபி. ஆகிய ஊடகங்களை அவர்களது செயற்பாடுகளை ஏன் துரோகி என்கிறார்கள்?? அண்மையில் கூட தரிசனம் தொலைக்காட்சி இயக்குனரையும். அதன் ஊழியர்களையும் நீங்கள் துரோகிகள் உங்கள் ஒலி ஒளி பரப்பினை நிறுத்துங்கள் என்று சொல்லி தொலைபேசிமூலமாகவும் நேரடியாகவும் மிரட்டல்கள் விட்டார்களே. ஏன்?? அவர்களும் ஊடகம் என்கிற முறையில் தங்களுடைய கடைமையைத்தானே செய்தார்கள்.அப்படியானால் இனிவருங்காலங்களில் துரோகஊடகம்.ஆதரவு ஊடகம் என்று பிரிக்காமல் பொதுவாகவே எல்லாமே ஊடகம் என்கிற முறையில் பார்க்கவேண்டியதுதானே.ஏனென்ற

ஜெயானந்த மூர்த்தி அண்ணா ஒழுங்காகத் தானே பதில் சொல்லியிருக்கிறார்.இன்னும் சொல்லப் போனால் கேள்வி கேட்டவையை அம்பலப் படுத்தியிருக்கிறார்.இதுக்கு

Edited by athiyan

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவாக உள்ளவர்களை துரோகிகள், விலைபோனவர்கள் என்று சொல்லுவதால் எந்தப் பயனும் வரப்போவதில்லை.. இப்படியான சொல்லாடல்கள் நிறையவே உள்ளன. உறைக்கிற மாதிரிக் கேள்வி கேட்பவர்களையும் இலகுவாகத் துரோகி என்று சொல்லிவிட்டு கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல் தப்பிக் கொள்ளலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.