Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னி மக்களின் அவலங்களுடன் கரையும் சுமைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்களின் அவலங்களுடன் கரையும் சுமைகள்

- த.தமயா -

இலங்கையின் ஜனநாயக ஆட்சிமுறையானது தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதொன்றாகவே காணப்படுகின்றது.

ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலப்பகுதியில் தமிழனுக்கு பயங்கரவாதி எனும் முத்திரை குத்தப்பட்டு தமிழ் மக்களின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டு அவர்கள் இரத்த வெள்ளத்தில் மிதக்க வைக்கப்பட்டார்கள். அவருடைய ஆட்சியை விட மிகவும் கொடுங்கோலான ஆட்சி முறையையே

இன்றைய மகிந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

நீதி கேட்டுப் போராடி வருகின்ற தமிழ் மக்களின் முதுகில் ஏறி எதுவித மனிதநேயமுமின்றி மகிந்தரின் நயவஞ்சக ஆட்சி அவர்களை நசுக்கிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் எங்குமே சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ முடியாத நிலை இன்று காணப்படுவது உலகம் அறிந்த உண்மை.

எம்மக்களின் மனித உரிமைகள், மனித விழுமியங்கள் எல்லாம் பறிக்கப்பட்ட நிலையில் நிர்க்கதியாக வாழும் வன்னி மக்களின் இடப்பெயர்வுகள் மிகப்பாரிய அவலங்களைத் தோற்றுவித்துள்ளன.

போர் வியூகங்களை எல்லா முனைகளிலும் கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் வன்னி மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் காணப்படுவது வேதனை தருவதாக உள்ளது.

இம்மக்களின் இடப்பெயர்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது வீடு வாசல்கள் சொத்துடைமைகள் அனைத்தையும் இழந்து உடுத்த உடையுடனே கிளிநொச்சி, விசுவமடு, புதுக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வியல் முறை சிதைக்கப்பட்டு சின்னாபின்னப் படுத்தப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் பொதுக் கட்டடங்களிலும், கூடாரங்கள் அமைத்தும், மர நிழல்களிலும், வெட்டவெளிகளிலும் வாழ்ந்து வருகின்ற அவல நிலையை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

மாற்றமடையும் பருவ காலங்களால் இனிவரும் மாதங்கள் மழைக்காலம் என்பதால் மழைக்கு ஈடுகொடுக்க முடியாத கூடாரங்களிலும், மரநிழல்களிலும், வெட்டவெளிகளிலும் வாழும் மக்களினது நிலை என்ன? இதனால் சுகாதார சீர்கேட்டு பிரச்சினைகள் உருவாகும் அபாயநிலை இருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மற்றும் இவர்களின் தேவைக்கேற்ப போதிய அளவு மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் அம்மக்களின் நிலை மிகவும் மோசமானதாகவே காணப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை பொருளாதார ரீதியில் முடக்கி விட்டுள்ளது. வன்னி மக்களுக்குத் தேவையான போதுமான உணவுத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாத மகிந்த 'இம்மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து காப்பாற்றி வன்னி மண்ணைக் கைப்பற்றும் வரை இந்தப் போர் ஓயப் போவதில்லை" என அடிக்கடி அறைகூவல் விடுத்து வருகின்றார்.

இதிலிருந்து, மகிந்த அரசாங்கம் இவ்வாறு கபட நாடகம் ஆடி தமிழ் வர்க்கத்தையே பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாகவும் விடா முயற்சியுடனும் இருக்கின்றது என்ற உண்மை புலனாகின்றது.

தற்போதைய நிலையில் இங்குள்ள மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுபவையாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம், போரூட், வெண்புறா, தமிழர் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் போன்ற நிறுவனங்கள் காணப்பட்டாலும் மக்களுக்குத் தேவையான உணவுகளைக் கொடுத்து அவர்களின் சிறிய தேவைகளைக் கூட நிவர்த்தி செய்யக்கூடிய அளவில் அந்நிறுவனங்களின் கைகளில் போதிய இருப்புக்கள் இல்லை. தேவையின் நிமிர்த்தம் சிறிய குடிசைகளை இம்மக்களுக்கு அமைத்துக் கொடுக்கக்கூட முடியாத நிலையில் தொண்டு நிறுவனங்கள்

உள்ளன.

குடிசைகளுக்கான பொலித்தீன் கூரைச் சீலைகளை எடுத்துச் செல்வதற்கு சிறிலங்கா இராணுவம் தடை விதித்துள்ளமையே இதன் காரணமாகும். இதன் விளைவாக குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் போன்றோர் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதைவிட மட்டுப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களையே பார ஊர்திகள் மூலம் ஓமந்தை ஊடாக அரசாங்கம் அனுப்பிக் கொண்டிருக்கின்றது.

வன்னி மக்களின் அவலங்களை சிரம் மேல் கொண்டு அவர்களுக்குச் சென்று உதவ முடியாத அளவில் அரசசார்பற்ற நிறுவனங்களை அரசு தடைசெய்துள்ளது.

இந்நிலை தொடருமானால் பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு எம் உறவுகள் தள்ளப்படுவார்கள். இதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

ஆகவே, இவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு எம்மவர்களைக் காப்பாற்ற வேண்டியது புலம்பெயர் வாழ் தமிழர்களாகிய எமது கடமை.

இடப்பெயர்வுகளினால் அல்லல்பட்டு அவதியுறும் வன்னி மக்கள் மீது தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கம் கிபிர், மிக் போன்ற விமானங்களால் தமது கைவரிசயைக் காட்டி வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானத் தாக்குதல் நடத்தி வருவதாக பொய்ப்பிரச்சாரம் செய்து மக்களின் குடியிருப்புக்கள் மீது குண்டுகளை வீசி எம் மக்களை இரக்கமின்றி கொன்றொழித்து வருகின்றது.

இதைவிட வன்னி மக்களின் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா இராணுவம் தொடர்ச்சியாக கண்மூடித்தனமான எறிகணை வீச்சுகளை நிகழ்த்தியும் வருகின்றது. இதனால் பதுங்கு குழிகளில் மக்கள் தமது பாதுகாப்பைத் தேடி ஓட வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர்.

எதையுமே அறியாத பச்சிளங் குழந்தைகள் உட்பட எம் சொந்தங்கள இந்த எறிகணைத் தாக்குதலுக்கு பலியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மற்றும் ஆழ ஊடுருவும் பிரிவினரின் கிளைமோர் தாக்குதலாலும் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் அப்பாவித் தமிழ் மக்கள் மத்தியில் சிறிலங்கா அரசாங்கத்தின் நாசகார இராணுவ நடவடிக்கைகள் உளரீதியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

சிறிலங்கா அரசு தமிழ் மக்களையே இலக்காகக் கொண்டு போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இன்றைய போர்ச்சூழலில் இடப்பெயர்வு என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

இறைமை அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் நிம்மதியில்லாத வாழ்வினையே எம்மக்கள் இக்கட்டான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தொடர்ந்தும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தொடர்ந்தும் பெருக்கெடுக்கும் இம்மக்களின் மனித அவலங்கள் மகிந்த அரசாங்கத்தால் உலக நாடுகளின் பார்வைகளுக்கு மறைக்கப்பட்டு வருகின்றது.

எம்மின மக்கள் உலகில் வாழும் ஏனைய மக்களைப் போல் தாமும் சுதந்திரமாகவும், சமாதானமாகவும், அமைதியாகவும், நிம்மதிப் பெருமூச்சுடனும் வாழ வேண்டுமென்றே ஆசைப்படுகிறார்கள். ஆனால் இவர்களுடைய ஆசையை நிராசை ஆக்க சிறிலங்கா அரசு தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றது.

போர் நடவடிக்கைகளாலும், பொருளாதார நடவடிக்கைகளாலும் தமிழ் மக்களின் சமூக நல பண்பாட்டு அம்சங்களும் கலை கலாசார அம்சங்களும் தொடர்ந்தும் சீர்குலைக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தத்தில் எல்லாவிதத்திலும் பாதிக்கப்படுவது எம்மின மக்களே. இது தான் இன்றைய யதார்த்தம்.

தமிழீழ மக்களுக்கு தாம் பாதுகாப்பான அடைக்கலம் கொடுப்பது போன்று எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களை உலங்கு வானூர்திகள் மூலம் மக்கள் குடியிருப்புக்கள் மீது வீசியும் ஓமந்தைச் சாவடியில் வைத்து விநியோகித்து வருவதுமான செயற்பாடானது மகிந்த அரசாங்கத்தின் இயலாமையையே வெளிப்படுத்துவதாக உள்ளது.

எம்மக்கள் இனியும் மகிந்தவின் கையில் அகப்பட்டு ஏமாற மாட்டார்கள். தமிழனுக்கென்றொரு விடிவு கிடைக்கும் வரை தமிழினம் விடியலை நோக்கிப் பயணித்துக் கொன்டேயிருக்கும்.

சிங்கள இனவாதம் எல்லா வகையாலும் நெருக்கடி தந்து எம்மக்களை சிறுகச் சிறுக அழித்து வரும் இந்நிலை தொடருமானால் தமிழினம் தாய் நாட்டைக் காக்க போராடி மடிந்தது என நாளைய வரலாறு கூறாது.

எனவே, புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களாகிய நாம்; துன்பப்பட்டு, நிர்க்கதியாக, ஆதரவற்று நிற்கும் வன்னி மக்களை அழிவில் இருந்து காப்பாற்ற முன்வர வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் பாதிக்கப் படுகையில் நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

வன்னி வாழ் மக்களின் ஆத்ம உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு உயிர்மூச்சுக் கொடுப்பதில் தான் எமது சகோதரத்துவமும் தோழமையும் வெளிப்படும்.

அதேவேளை, உணவையும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் யுத்த ஆயுதங்களாகப் பயன்படுத்துவது என்பது சர்வதேச சட்ட விதிகளின் படி போர்க்குற்றமாகும். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத சிறிலங்கா அரசு தொடர்ந்து அந்த விதியை மீறி வருகின்றது.

உலக நாடுகளும் கூட அதனைக் கண்டும் காணாமலும் இருந்து வருகின்றன. உலகத்தின் மௌனம் கலையும் வரை நாம் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றோமா? அல்லது நாமாக முன்வந்து சர்வதேச சமூகத்தின் மௌனத்தைக் கலைக்கப் போகின்றோமா? இது நாம் எம்மையே கேட்க வேண்டிய கேள்வி!.

நன்றி: நிலவரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.