Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தட்ஸ்தமிழில் ஒரு தமிழனின் கருத்து

Featured Replies

பதிவு செய்தவர்: கீரன் பதிவு செய்தது: 12 Sep 2008 09:18 pm

இந்தியா என்றால் அது தமிழர்களுக்கு ஆதரவான அரசு என்ற மாயை தமிழீழத்தமிழரிடம் இருக்கிறது. இது முற்றிலும் தவறு. நேரு முதல் இந்திரா காந்தி, இராசீவ் காந்திவரை, இடையில் லால் பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய், நரசிம்ம ராவ், வி.பி. சிங், சந்திரசேகர் என எல்லோருமே தமிழக - தமிழீழத் தமிழர்களை மட்டும் அல்ல மலையகத் தமிழர்களையும் கிள்ளுக்கீரையாகவே பார்த்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டகம் செய்து வந்திருக்கிறார்கள்.

நேரு காலத்தில் பத்து இலட்சம் தமிழர்களது குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அவர் வாளா இருந்தார். லால் பகதூர் சாத்திரி காலத்தில் அவரும் சிறில்ங்கா பிரதமர் சிறிமா பண்டாரநாயக்காவும் செய்த உடன்பாட்டின்படி 600,000 மலையகத் தமிழர்கள் இலங்கையில் இருந்து ஆடு மாடுகள் போல் கப்பலில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பப்ட்டார்கள்.

இந்திரா காந்தி தமிழர்கள் சிக்கலில் அக்கறை காட்டினார் என்பது உண்மைதான். ஆனால் அது இந்தியாவின் பூகோளநலன்கள் சார்ந்த அக்கறை ஆகும். அன்றைய சிறிலங்கா அதிபராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா அமெரிக்க சார்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். இந்திரா காந்தி - சஞ்சீவ் காந்தி இருவரையும் முறையே பசுவுக்கும் - கன்றுக்கும் ஒப்பிட்டு மேடையில் பேசினார். அவற்றால் சீற்றம் அடைந்த இந்திரா காந்தி அவருக்கு ஒரு பாடம் படிப்பிக்க எண்ணித் தமிழ் இளைஞர்களுக்கு இந்தியாவில் இராணுவ பயிற்சி கொடுத்தார். அவரது சுயநலத்தில் தமிழீழ மக்கள் சார்பான ஒரு பொதுநலம் இருந்தது என்பது என்னமோ உண்மைதான். ஆனால் அவருக்குப் பின்னர் பிரதமராக வந்த இராசீவ் காந்தி எல்லாவற்றையும் பொரிமா முட்டிக்காரன் மாதிரி போட்டு உடைத்தார்.

அன்றைய வெளியுறவுச் செயலாளராக இருந்த ஏ.பி. வெங்கடேஸ்வரன் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார். அதன் பின் இராசீவ் காந்தி தனக்கு வேண்டிய எடுபிடிகளை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டார். அதில் ஒருவர் றோமேஷ் பண்டாரி. அதன் பின் நடந்தது தெரிந்ததே.

இந்தியா - இலஙகை உடன்பாடு கைச்சாத்தாகியது. இந்த உடன்பாட்டின் மூலம் வடகிழக்கு மாகாணம் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. இந்த உடன்பாட்டை தென்னிலங்கை பேரினிவாத கட்சிகள் வீதிகளில் இறங்கி முழுமூச்சாக எதிர்த்துப் போராடின. அதில் இன்றைய மகிந்தா இராசபக்சேயின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன உள்ளடக்கம். ஜனதா விமுக்தி பெரமுன அமைப்பு இந்தியப் பருப்பைச் சாப்பிடுகிறவர்கள் தலை துண்டிக்கப்படும் என எச்சரிக்கை செய்தது. இந்தியா சார்பானவர்கள், ஆளும்கட்சி ஆதரவாளர்கள் அவர்களால் கொல்லப்பட்டார்கள். இந்த உடன்பாட்டை ஆளும் கட்சியில் உள்ள பலரும் எதிர்த்தார்கள். அதில் முக்கியமானவர் அன்றைய பிரதமர் இரணசிங்க பிரேமதாசா ஆவார்.

இலங்கை-இந்திய ஒப்பதந்தத்தின் கீழ் வி.புலிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்க வழி வகுத்தது. . வடகிழக்க நிர்வாகசபையில் புலிகளுக்குப் பெரும்பான்மை இடம் தருவதாகவும் வி. புலிகளின் செலவினங்களுக்காக மாதாந்தம் அய்ந்து மில்லியன் இந்திய ரூபாய் தருவதாகவும் இராசீவ் காந்தியால் பிரபாகரனுக்கு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் என்ற நூலில் இந்தத் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. .

ஆனால் ஜே.ஆர். வி.புலிகளின் விருப்பத்திற்கு மாறாக தனது கையாளை அந்த இடைககால நிர்வாகசபையின் தலைவராக நியமிக்க முயற்சி செய்தார்.

இந்திய அமைதிப்படை தமிழீழம் சென்றது. உடன்பாட்டை மீறி ஜே.ஆர். ஜெயவர்த்தனா மணலாற்றில் பாரிய சிங்களக் குடியேற்றத்தை உருவாக்கினார். அதனைத் தடுத்து நிறுத்த வக்கில்லாமல் இந்திய இராணுவம் இருந்தது. அய்ந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அன்றைய அரசியல் பொறுப்பாளராக இருந்த திலீபன் சாகும்வரை நோன்பு இருந்தார். . அந்த அய்ந்து அம்சக் கோரிக்கைகள் பின்வருமாறு.

பதில் | அவதூறு குறித்து தகவல் தர

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: கீரன் பதிவு செய்தது: 12 Sep 2008 09:16 pm

1.பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2.புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியா நிறுத்தப்படல் வேண்டும்.

3.இடைக்கால அரசு நிறுவப்படும்வரை புனர்வாழ்வு என அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தபட வேண்டும்.

4.வடகிழக்கு மாகாணங்களில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5.இந்திய அமைதிபடையின் மேற்பார்வையில் ஊர்காவல்படை என அழைக்கப் படுவோருக்கு வழங்கப் பெற்ற ஆயுதஙகள் திரும்பப் பெறப் பெற்றுத் தமிழ் ஊர்கள் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இரானுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

இiவைகள் தான் வி. புலிகளால் இந்திய அரசிடம் (15.09.1987) வைக்கப்பட்ட கோரிகைகளாகும்.

பன்னிரண்டு நாட்கள் தண்ணீர் கூடக் குடிக்காமல் நோன்பிருந்த திலீபன் 26.09.1987 அன்று வீரச் சாவைத் தழுவிக் கொண்டார் அவனது உயிரைக் கரப்பாற்றுமாறு இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோள்கள் இந்தியத் தரப்பால் உதாசீனம செய்யப்பட்டன. குறிப்பாக அன்றைய இந்திய தூதுவர் டி.என். டிக்சிற் உதாசீனம் செய்து விட்டார்.

இதக்கிடையில் தமிழ்நாட்டில் விட்டு வந்த தங்கள் ஆயுதங்களை எடுத்து வரச் சென்ற வி.புலிகளின் முக்கிய தளபதிகள் - குமரப்பா, புலேந்திரன், நளன் உட்பட 17 பேர் சிறிலங்காவின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குமரப்பா, புலேந்திரன் கைதான செய்தி தெரிந்ததும் சிறிலங்கா அரசு உடன்பாட்டை மறந்துவிட்டது. அவர்களைத் தந்திரமான முறையில் கொழும்புக்கு கொண்டு செல்ல முயற்சித்தது. அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும் படி இந்திய இராணுவத்தைச் சிறிலஙகா அரசு வற்புறுத்தியது. ஏன் கட்டாயப் படுத்தியது என்று கூடச் சொல்லலாம். சிறிலங்கா அரசின் இதய சுத்தியை க் கண்டு கொள்ள இந்த ஒரு நிகழ்வே போதுமானது. எனினும் இந்திய அரசு அதனைப் புரிந்து கொள்ளவில்லை. குமரப்பா - புலேந்திரனைப் படகக்காய்களாக வைத்துத் தான் தீட்டிய உடன்பாட்டினை வி.புலிகள் மீது திணிக்க இந்தியா பேரம் பேசியது. நாடகம் நடத்த எத்தனித்தது.

குமரப்பா,புலேந்திரன் குழுவினர் கடற்படையால் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கபட்டு பலாலி இராணுமுகாமில் கொண்டு போய் வைக்கப்ட்டிருந்தார்கள். அப்பொழுது பலாலி இராணுவ முகாம் இந்திய இராணுவத்தினரின் கட்டுபாட்டில் இருந்தது. வி. புலிகள் கைது செய்து வைக்கபட்ட 17 பேரையும் உடனடியாக விடுதலை செய்யும்படி இந்திய அரசிடம் வேணடுகோள் விடுத்தனர். இலங்கை பாதுகாப்பு அமைசர் லலித் அதுலத் முதலி கைதான விடுதலைப் புலிகளைக் கொழும்புக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

பதில் | அவதூறு குறித்து தகவல் தர

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: கீரன் பதிவு செய்தது: 12 Sep 2008 09:14 pm

.

17 வி.புலிகளையும் கொழும்புக்கு கொண்டு வர அன்றைய தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஒற்றைக்காலில் நின்றார். தவறின் தனது பதவியை விட்டு விலகி விடுவதாக ஜெயவர்த்தனாவை மிரட்டினார்.

கைது செய்த நேரம் போர் நடைபெற்ற நேரம் அல்ல. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களை உடனடியாக விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் அமைதியை நிலைநாட்டச் சென்ற இந்திய இராணுவம் அதைக் கடுகளவும் உணரவில்லை. டிக்சிற் உணரவில்லை. இராசீவ்காந்தி உணரவில்லை.

இராணுவத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று போருக்கு செல்லும் இராணுவம் மற்றையது அமைதிப் பணிக்கு செல்லும் இராணுவம். இன்றைய உலகின் இராணுவங்களை அவதானிப்போர் இதை எளிதாக உணரலாம். இந்தியா அனுப்பி வைத்த இராணுவம் போருக்குச் சென்ற இராணுவமா? அல்லது அமைதிக்கு சென்ற இராணுவமா? என்பதை அதை அனுப்ப முன் ஆய்வு செய்திருந்தால் பின் எழுந்த பல சிக்கல்களை தவிர்த்திருக்கலாம்.

இந்திய இராஐதந்திரிகள் மூலம் இலங்கை அரசுக்கு கைதுசெய்த வி.புலிகளை விடுதலை செய்யும் படி கொடுக்கப்பட்ட அழுத்தங்கள, வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டன. அவர்களைச் சந்தித்த தளபதி கிட்டு, மாத்தையா அவர்கள் தாம் கொண்டு சென்றிருந்த சயனைற் குப்பிகளை குமரப்பா, புலேந்திரன் உட்பட அனைத்துப் போராளிகளுக்கும் வழங்கினார்கள்.

இந்திய அரசுக்கு குமரப்பா, புலேந்திரன் உட்பட கைதாகி இருக்கும் வேங்கைகளின் பெறுமதி புரியவில்லை. திருமணத்தின் போது குமரப்பா போட்ட மணமாலை கூட வாடியிருக்கவில்லை. இது அவருடைய திருமணத்திற்கு வருகை தந்து வாழ்திச் சென்ற இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும் தெரியும்.

குபரப்பா, புலேந்திரன் உட்பட்ட 12 போராளிகள் (05.10.1987) சயனைற் அருந்தி வீரச்சாவை இணைத்துக் கொண்டார்கள். சயனயிட் அருந்திய எஞ்சிய 5 பேர் உயிர் தப்பினார்கள்.

தீருவில் தீயில் பன்னிரு வேங்கைகளது பூதவுடல்கள் வெந்து சாம்பலானது.

பதில் | அவதூறு குறித்து தகவல் தர

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: கீரன் பதிவு செய்தது: 12 Sep 2008 09:12 pm

இரு அரசுகளுக்கும் குமரப்பா, புலேந்திரன் உட்பட கைதாகி இருந்த வேங்கைகளின் பெறுமதி புரியுவில்லை. . குமரப்பாவின் திருமணத்துக்குச் சென்று வந்த இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும் தெரியவில்லை.

இந்தச் சூழ்நிலையில் இதுவரை குருதி சிந்தி வளர்த்தெடுத்த போராட்டத்தை அதே உறுதியுடன் கொண்டு செல்வதா? அல்லது அரை - குறைத் தீர்வுத் திட்டங்களால் சீரழிந்து சின்னாபின்னமான மற்றைய நாடுகளின் போராட்டங்கள் போல தமது போராட்டத்தையும் தடம் மாற்றி இறக்குவதா? இந்த இரண்டில் ஒன்றை முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு வி.புலிகள் தள்ளப்பட்டார்கள்.

இதன்பின்புதான் வி.புலிகள் தங்கள் ஆயுதங்களை இநதிய இராணுவத்திடம் ஒப்படைக்க மறுத்தார்கள். இந்திய இராணுவம் - வி.புலிகள் இடையில் போர் மூண்டது. 3,000 தமிழர்களை இந்திய இராணுவம் சுட்டுத்தள்ளியது. பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள். ஒரே நாளில் வல்வெட்டித்துறையில் 65 ஆண், பெண், குழந்தைகள் இந்திய இராணுவத்தினால் கொலை செய்யப்பட்டார்கள். அதனை இந்தியாவின் மைலா என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோர்ஜ் பெர்னான்டஸ் காட்டமாகக் குறிப்பிட்டார்.

அன்றிருந்து இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்தியாவின துரோகம் தொடர்கிறது. ஒரு காலத்தில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடுகளை நடத்திப் போராடிய முதல்வர் கருணாநிதி தனது ஆட்சியைக் காப்பாற்றுவதிலேயே இன்று கண்ணும் கருத்துமாக இருக்கிறார். கோபாலபுர ஆதீனத்தின் தம்பிரான் நினைத்தால் ஈழத்தமிழர்களுக்கு உதவலாம். ஆனால் அவர் எதனையும் ்செய்ய மாட்டார். அவருக்கு இன்றிருக்கும் ஒரே ஆசை தனது மகன் ஸ்டாலினுக்கு மகிடம் சூட்ட வேண்டும். அழகிரியை பாண்டிய நாட்டுக்கு குறுநில மன்னராக்க வேண்டும். கனிமொழிக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் நெப்போலியன் பாணியில் தமிழகத்தை தனது குடும்ப உறுப்பினர்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

தமிழக தேசிய சக்திகள் ஒன்றுபட்டுப் போராடினால்தான் தமிழர்களுக்கு விடிவு ஏற்படும். மருத்துவர் இராமதாஸ், வைகோ, தொல். திருமாவளவன், கி. வீரமணி, பழ. நெடுமாறன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், கொளத்தூர் மணி, மணியரசன், தியாகு போன்றோர் தங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு ஒரே தேசியக் குடையின் கீழ் அணிதிரள வேண்டும். இதுதான் தமிழக - ஈழத்தமிழர்களது விடுதலைக்கு சரியான வழியாகும்.

http://thatstamil.oneindia.in/news/2008/09...d-.html#cmntTop

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தியா விடயத்தில் நாம் தவறு செய்தோம்" என்று மருகும் இந்திய அபிமானிகள் இதை ஆறுதலாக வாசிப்பார்களா? வாசித்தாலும் புரிந்து கொள்வரா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின்,

இந்திய அபிமானம் என்பது எம்மில் பலருக்கு இன்று நேற்று வந்ததல்ல. நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. காந்தி தேசம், அன்னை இந்திராவின் தேசம், தாய்நாடு, தந்தையர் நாடு என்று இன்னும் எத்தனையோ செல்லப்பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்ட நாடு.

அது என்ன செய்தாலும் ஒன்றில் அது ஈழம் எடுத்துத் தருவதற்காகவே செய்கிறது அல்லது சிங்களவனிடமிருந்து எங்களைப் பாதுகாக்கவே அப்படிச் செய்கிறது என்பதுதான் எமது எண்ணம். அப்படியேதும் இந்தியா கோபமாக நடந்து கொண்டால் அது நாம் விட்ட தவறுகளாலேயே ஆகும்.

நாம் விட்ட தவறு , நாம் விட்ட தவறு என்று சொல்லுபவர்கள் அவை எவை என்று சொன்னால் மற்றவர்களுக்கும் சற்று விளக்கமாக இருக்கும். ஏட்டிக்குப் போட்டியாக தவறு செய்கிறோம் என்று கூறுபவர்கள் நாம் செய்த தவறுகள் எவை என்பதைச் சொல்ல வேண்டும்.

அழிக்கப்பட்ட இந்திய ராடரின் மிச்ச மீதங்கள் அகற்றப்படுமுன்னரே புதிய ராடர் அமைப்பதற்கு இந்தியக் குழு ஒன்று வந்து இறங்கியிருக்கு ! இதுவும் நாம் விட்ட தவறினால்த்தான் என்று நினைக்கிறேன். புலிகள் வவுனியாவில் தக்குதல் நடத்தும்போது சற்றுக் கவனாமாக இருந்திருக்கலாம். அவர்கள் அந்த இரு இந்தியர்களையும் காயப்படுத்தியிருக்கக் கூடாது. அது இன்னொரு தவறு. இப்படி தவறுக்கு மேல் தவறு செய்து இந்தியாவின் கோபத்தைச் சம்பாதித்துக்கொண்டிருக்கிற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.