Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டில் அதிகரித்துவரும் கடத்தல் சம்பவங்கள்

Featured Replies

வீரகேசரி இணையம் - வெள்ளை வேன் கும்பல்களால் இளைஞர் யுவதிகள் கடத்தப்படும் மற்றும் காணாமல் போகும் அவலங்கள் நாட்டில் மிதமிஞ்சித் தாண்டவமாடத் தொடங்கிவிட்டன. குறிப்பாக கொழும்பு, மன்னார், திருகோணமலைஇ புத்தளம் யாழ்ப்பாணம் போன்ற நகரங்களிலேயே கடத்தல் நாடகம் நாளாந்தம் அரங்கேறி வருகின்றது.

சிறிது காலம் மட்டுப்பட்டிருந்த கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தொடர ஆரம்பித்திருக்கின்றன. அதுவும்; கடந்த சில வாரங்களாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தே காணப்படுவதை பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறியக் கிடக்கின்றது... இவ்வாறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஆயுததாரிகளே என்றும் பரவலாகக் கூறப்படுகின்றது.

இந்தக் கடத்தல்கள் யாரால், ஏன்இ எதற்காக நடத்தப்படுகின்றன என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கடத்தல் நடத்தப்படுகின்றதா? அல்லது வேறேதேனும் அரசியல் மற்றும் பொதுவான, தனிப்பட்ட காரணங்கள் உள்ளனவா?

மன்னார் மாவட்டத்தில் மட்டும் 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 137 பேர் கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. பத்திரிகையைப் பிரித்தால் நாளொன்றுக்கு ஒரு கடத்தல் சம்பவமாவது இடம்பெறுவது இன்று வாடிக்கையாக இருக்கின்றது.

இவ்வாறு கடத்தப்படும்இ காணாமல்போகும் சிலர் சடலங்களாக மீட்கப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. கணவனைப் பிரிந்து மனைவியர், மனைவியரைப் பிரிந்து கணவன்மார் தந்தைதாயைப் பிரிந்து பிள்ளைகள், பிள்ளைகளைப் பிரிந்து பெற்றோர் என்று அவலப்படுவோரின் எண்ணிக்கையும் தினந்தினம் அதிகரித்த வண்ணமேயுள்ளது.

இவைபற்றி யாரிடம் சென்று முறையிடுவது? அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களிடம் சென்று முறையிட்டாலும் கூட ஒரு நாள்... இரண்டு நாள்... ஒரு வாரம் சுறுசுறுப்பாக இதுகுறித்த தேடுதல் நடவடிக்கைகள் நடக்கின்றன... அதன் பிறகு...? கேள்விக் குறிதான்.

காணாமல் போன, கடத்தப்பட்டோரின் உறவினர்களும் எல்லாம் செய்து பார்த்து விட்டனர். சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கும் அலுவலகங்களும் நடையாய் நடக்க வேண்டுமா? வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டுமா? சம்பந்தப்பட்ட தலைவருக்கே மகஜர் அனுப்ப வேண்டுமா? இப்படி எல்லா நடவடிக்கைகளையும் மனம் சளைக்காமல் அவர்கள் எடுத்துவிட்டார்கள் இன்றும் எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் பலன்தான் பூஜ்யமாக இருக்கின்றது. அப்படியானால் காணாமல் போனஇ கடத்தப்பட்ட உறவுகளை அடியோடு மறந்துவிடத்தான் வேண்டுமா? மக்கள் மத்தியில் எழும் இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்குமா...? எப்போது...?

யுத்தம் இடம்பெறும் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று மட்டும் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்!

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சிந்தனையில் இவைகளும் அடங்கும்.iconevildq5.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த சிந்தனையில் இவைகளும் அடங்கும்.iconevildq5.gif

ஓமோம்

கொல்லப்பட்வர்களின் எண்ணிக்கை 11...

மட்டக்களப்பில் மூவர் சுட்டுக்கொலை அப்பாவி மக்கள் கொலைகள் அதிகரிப்பு

[25 - November - 2008]

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி, கொக்கட்டிச்சோலை மற்றும் சித்தாண்டிப் பகுதிகளிலேயே இந்தச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ஞாயிறு இரவு 7 மணியளவில் மண்முனைப்பற்று வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காத்தான்குடி ஒல்லிக்குளம் பாத்திமாபுரத்தைச் சேர்ந்த, அரச சார்பற்ற நிறுவனமொன்றின் வாகனச் சாரதியான அமரசிங்கம் கிரிதரன்(28 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது சடலம் பின்னர் காத்தான்குடி பொலிஸாரால் எடுத்து வரப்பப்பட்டு மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது.

இதேநேரம், சித்தாண்டியில் தேவாலயத்திற்கு அருகில் இரவு 7.30 மணியளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளொன்றில் வந்த ஆயுதபாணிகளே இவரை வழி மறித்துச் சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர்.

சித்தாண்டி வேலாயுதம் வீதியைச் சேர்ந்த செல்லத்தம்பி வேலாயுதம் (32 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இவரது சடலம் பின்னர் செங்கலடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

இதேநேரம், ஞாயிறு இரவு 8.30 மணியளவில் கொக்கட்டிச்சோலை அரசடித் தீவு பகுதியில் இளம் விவசாயி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது வீட்டிற்குச் சென்ற ஆயுதபாணிகள் இவரை வீட்டுக்கு வெளியே அழைத்து சிறிது நேரம் உரையாடிவிட்டு சுட்டுக் கொன்றுள்ளனர்.

நாகலிங்கம் இரட்ணசிங்கம் (30 வயது) என்பவரே கொல்லப்பட்டவராவார். இவரது சடலம் பின்னர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அண்மைக் காலமாக கிழக்கில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது.

தூக்கத்தை குழப்பியதற்காக சிறுமி பொல்லால் தாக்கப்பட்டு மரணம்

[25 - November - 2008]

தூக்கத்தில் இருந்த 16வயது சிறுவன் தூக்கத்தை குழப்பியதாக கூறி 3 வயது சிறுமியை பொல்லால் அடித்ததில் சிறுமி மரணமானார்.

இச்சம்பவத்தில் சாந்தினி ஜெயராம்(வயது3) என்ற சிறுமியே மரணமடைந்துள்ளார்.

மொறவக்க பொலிஸ் பிரிவில் உள்ள பாணகல ஹோப்பத்த என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் 23 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சிறுமியின் பெற்றோர் இருவரும் வெளிநாடொன்றில் வேலைக்காக சென்றுள்ளதாகவும் குழந்தையை அவர்களது மாமா,மாமி ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டு சென்றதாகவும் மொறவக்க பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த அன்று மாமனும் மாமியும் உடுகமவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றதாகவும் சந்தேக நபரான சிறுவன் தூக்கத்தில் இருந்த சமயம் சிறுமி அவரை தூக்கத்தில் இடையூறு செய்ததாகக் கூறி பொல்லால் தாக்கியதில் சிறுமி மரணமானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனை மொறவக்க நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர் செய்த சமயம் அவரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கணவன், மனைவி உட்பட நால்வர் படுகொலை

[25 - November - 2008]

அஹுங்கலை பலப்பிட்டிய பகுதியில் வர்த்தகரொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, பிலியந்தலை சித்தமுலப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு கணவனும் மனைவியும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜாஎல, ஏக்கல ரஜமாவத்தை பகுதியிலும் வர்த்தகரொருவர் தனது வர்த்தக நிலையத்தை மூடுவதற்கு நேற்று முன்தினம் இரவு தயாரானபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.

அங்கு வந்த சிலரினால் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்மலானை பகுதியில் பிரபல வர்த்தகர் உட்பட மூவர் படுகொலை; பழுதான நிலையில் சடலங்கள்

[25 - November - 2008]

இரத்மலானை பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவர் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இரத்மலானை படோவிற்ற பகுதியில் நேற்றுக்காலை இந்த வர்த்தகரின் வீட்டிலிருந்து அவரது சடலமும் அவரது மைத்துனரதும் உதவியாளரதும் சடலங்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

மேற்படி வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அயலவர்கள் இது குறித்து கல்கிசை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அங்கு வந்த பொலிஸார், வீட்டினுள் எவரும் இல்லையென்பதை உறுதிப்படுத்திய பின்னர் வீட்டுக்கதவை உடைத்துத் துறந்து உள்ளே சென்று பார்த்த போது மூன்று சடலங்கள் சற்று பழுதடைந்த நிலையில் கிடந்துள்ளன.

மூன்று சடலங்களிலும் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன் வீட்டினுள் பொருட்கள் சிதறியும் கிடந்துள்ளன.

ஆரம்ப விசாரணைகளின் படி பிரபல ஹாட்வெயர் வர்த்தகரும் அவரது மைத்துனர் மற்றும் உதவியாளருமே கொல்லப்பட்டுள்ளனர்.

சடலங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்படுவதுடன் சடலங்கள் பழுதடைந்திருப்பதால் மூன்று நாட்களுக்கு முன்னரே இந்த மூவரும் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் கருதுகின்றனர்.

வீட்டினுள்ளேயே கொலைகள் நடத்திருப்பதாகக் கருதும் பொலிஸார் இது தொடர்பாக அயலவர்களிடம் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

கொல்லப்பட்ட மூவரும் சிங்களவர்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.