Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயில் வாழும் கலைஞர் வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி

Featured Replies

நோர்வேயில் வாழும் கலைஞர் வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி

Vasugi012.jpg

திருமதி வாசுகி ஜெயயபாலன் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் கலைஞர்.

அவரது கணவரான கவிஞர் ஜெயபாலன் அவர்களது கவிதை வரிகளில் பாலை எனும் குறும் இசைத்தட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பாடல்களுக்கு இசையாத்திருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த யூ.தியாகராஜன்

பாலை குறும் இசைத்தட்டை உருவாக்கி பாடியுள்ள திருமதி வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி இந்நிகழ்வில் முதன்மை பெறுகிறது. தவிரவும் புலம்பெயர் நாடுகளின் இசைபயிற்சி குறித்தும் அவர் பேசுகிறார்......

கேட்பதற்கு அழுத்துங்கள்:

http://www.radio.ajeevan.com/

அல்லது

http://www.zshare.net/audio/52427630f98a0b40/

நன்றி

Edited by AJeevan

மேல நீங்கள் இணைச்ச இந்தப்படத்தில கவிஞர் ஜெயபாலன் அண்ணா இருக்கிறாரா?

  • தொடங்கியவர்

மேல நீங்கள் இணைச்ச இந்தப்படத்தில கவிஞர் ஜெயபாலன் அண்ணா இருக்கிறாரா?

மேலே உள்ள படத்தில் இல்லை.

jayabalanrs2.jpg

இப்படத்தில் வலது பக்கத்தில் தாடியுடன் இருப்பவர் கவிஞர் ஜெயபாலன் அண்ணா.( சுவிசுக்கு வந்திருந்த போது.......)

ஏனைவர்கள் தரிசனம் தொலைக்காட்சியில் பணிபுரிந்த சிலர்....ஒருவர் ஆணிவேர் தயாரிப்பாளர் பிரபா. (இடமிருந்து வலமாக இரண்டாவது)

Edited by AJeevan

நன்றி அஜீவன் அண்ணா. பேட்டியை கேட்டுப்போட்டு எப்படி இருக்கிது எண்டு சொல்லிறன்.

முயல் பின்வாங்கி சிங்கத்தை கிணறுவை முன்னகர வைத்து எட்டிப்பாக்க வைத்த பின்...

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி

வணக்கம்,

பேட்டியை முழுமையாக கேட்டன். நல்லாய் இருந்திச்சிது. சூப்பர்..! A+ :) அதில வாற ஹய் ஹய் எண்டுற குழந்தைகளிண்ட பாடல் கேட்க மிகவும் நல்லாய் இருந்திச்சிது. ஜெயபாலன் அண்ணா எழுதின வேறு சில அழகிய பாடல்களையும் கேட்கக்கூடியதாக இருந்திச்சிது.

வழமையா சங்கீதம் நல்லா படிச்ச ஆக்களிட்ட குறை ஒண்டும் இல்லை மறைமூர்த்தி கண்ணா எண்டுற பாடலை பாடிக்காட்டுமாறு கேட்கிறது வழமயாப் போச்சிது. நானும் எனது அக்காமாரோட தொலைபேசிக்கால கதைக்கேக்க அந்தப்பாடலை சிலது பாடச்சொலி கேட்கிறது. நல்லாய் இருக்கும்.

வாசுகி அக்காவிண்ட பாடல்கள் கேட்க சூப்பராய் நல்லாய் இருக்கிது. குறிப்பாக..

“கள்ளென கொட்டுதடி வள்ளி..!

காலை வெளியினில் போதைநிலா...

அள்ளுது வா வா என..!

அழைத்திடும் பூங்குயில் கவிமனசை...!”

இந்த பாட்டு சூப்பரோ சூப்பர். அதை நான் மூண்டு நாலு தரம் திருப்பித்திருப்பி கேட்டது. இந்த “கள்ளென கொட்டுதடி வள்ளி..!” பாடலை குறுந்தட்டாக வாங்கலாமோ அஜீவன் அண்ணா?

ஜெயபாலன் அண்ணா அண்மையில யாழில தனது பாடல்களை இணைச்சு பிறகு அதால நட்டப்பட்டு போனதாய் வேதனைப்பட்டு சொல்லி இருந்தார். நான் இவ்வளவு இனிமையான பாடல்களாக இருந்து இருக்கும் எண்டு நினைச்சு இருக்க இல்லை. இதால அவற்றை கேட்க இல்லை. ஆனால் விரைவில அவற்றை ஒன்லைன் மூலம் பெறக்கூடியதாக வசதி இருந்தால் பெற்றுவிட்டு அதற்குரிய காசை/அன்பளிப்பை விரைவில அனுப்பி வைக்கிறன்.

எனது ஒரு அக்காவுக்கும் பெயர் வாசுகிதான். வாசுகி எண்டுற பெயர் உள்ள ஆக்கள் நல்லாய் பாடுவீனம் போல. அவவுக்கும் நல்ல குரல்வளம். அவவும் இராமநாதன் நுண்கலை, தமிழ்நாட்டில இசை படிச்சவ.

மற்றது, குழந்தைகளுக்காக ஆக்கங்கள் வாறது நல்லாய் குறைஞ்சு போட்டிது எண்டுறது உண்மைதான். இப்ப குழந்தைகள் எல்லாம் பெரிய ஆக்களிண்ட விசயங்களைதான் பெரிய ஆக்களோட சேர்ந்து பார்கிதுகள். இணையத்திலையும் இதுதான் நடக்கிது. இதால அதுகள் பிஞ்சில முத்திப்போய் இருக்கிதுகள். குழந்தைகள் சிறுவயதிலேயே நாசமாய் போறதுக்கு இதுவும் ஒரு காரணம். முந்தி எண்டால் குழந்தைகள் பார்க்கக்கூடிய சினிமா படங்கள் எண்டு இருக்கும். இப்ப தணிக்கைகள் ஒண்டும் இல்லாமல் எல்லாத்தையும் அதுகள் பார்க்கிதுகள். சீரியல் சாப்பிடிற குழந்தைகள் தொலைக்காட்சியில சீரியல்கள் பார்க்கிதுகள்.

ஜெயபாலன் அண்ணா போல அவரது துணைவியாரும் தனது துறையில சிறந்து விளங்குகின்றார். வாழ்த்துகள்! வாசுகி அக்கா தனது எதிர்கால விருப்பங்கள் எண்டு சொல்கின்ற விசயங்களும் கைகூட பிரார்த்தனைகள்! அஜீவன் அண்ணாவுக்கும் வாழ்த்துகள்! நாங்கள் அறியாத மிகுந்த ஆற்றல் படைச்ச ஒரு கலைஞரைப்பற்றி அறியத்தந்தீங்கள். மிகவும் பயனுள்ள பேட்டி. நன்றிகள்!

மேலும்... நேரம் தற்போது இரவு ஏதோ பத்துமணி சொச்சம் எண்டு சொல்லுறீங்கள். உங்கட வானொலி இரவிலையோ போறது அஜீவன் அண்ணா? :) அடுத்த நிகழ்ச்சியை ப்துவருடத்தில கொடுக்கிறதாய் சொல்லி இருக்கிறீங்கள். அதையும் ஒரு கலக்கு கலக்கிவிடுங்கோ.

கடைசியாக, கு.போ அண்ணா முயலும், சிங்கமும் காணொளியை இணைச்சு கிணத்துக்க சிங்கத்தை விழுத்துற கதை எல்லாம் சொல்லி இருகிறார். அதற்கும் நன்றிகள்! என்னமோ புலியை முயலாக மாத்தி உவமிச்சு கதைக்கிறது கிண்டல் பண்ணுறமாதிரி இருக்கிது. அப்பிடி எண்டால் சிங்கத்தையும் யானை எண்டு மாத்தி இருக்கலாம். யானையை முயல் பொறிக்கிடங்கில விழுத்துறமாதிரி கதையை சொல்லி இருக்கலாம். :(

  • தொடங்கியவர்

குழந்தைகளுக்காக ஆக்கங்கள் வாறது நல்லாய் குறைஞ்சு போட்டிது எண்டுறது உண்மைதான். இப்ப குழந்தைகள் எல்லாம் பெரிய ஆக்களிண்ட விசயங்களைதான் பெரிய ஆக்களோட சேர்ந்து பார்கிதுகள். இணையத்திலையும் இதுதான் நடக்கிது. இதால அதுகள் பிஞ்சில முத்திப்போய் இருக்கிதுகள். குழந்தைகள் சிறுவயதிலேயே நாசமாய் போறதுக்கு இதுவும் ஒரு காரணம். முந்தி எண்டால் குழந்தைகள் பார்க்கக்கூடிய சினிமா படங்கள் எண்டு இருக்கும். இப்ப தணிக்கைகள் ஒண்டும் இல்லாமல் எல்லாத்தையும் அதுகள் பார்க்கிதுகள். சீரியல் சாப்பிடிற குழந்தைகள் தொலைக்காட்சியில சீரியல்கள் பார்க்கிதுகள்.

முதற்கண் நம் கலைஞர்களை வெளிக்கொணர முடிந்ததை பாராட்டியதற்கு நன்றி முரளி.

குழந்தைகள் தொடர்பாக நமது படைப்பாளிகள் பெரிதாக ஒன்றும் செய்ய முயலவில்லை என்றே நினைக்கிறேன்.

அதை ஜெயபாலன் அண்ணாவும் வாசுகி அக்காவும் செய்திருக்கிறார்கள். அதற்கு நன்றிகள்.

நாம் நமது குழந்தைகளுக்கு எதைக் கொடுக்க முயல்கிறோம்?

நாம் குழந்தைகளோடு எதைப் பார்க்கிறோம்?

எதைக் கேட்கிறோம்?

எதை பேசுகிறோம்?

என்று சற்று சிந்தித்தால்

குழந்தைகள் கெடுவதற்கு பெரியவர்கள்தான் காரணம் என்று உணர்வீர்கள்.

குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு தொலைபேசியில் எம்மவர் பேசுவதை பாருங்கள்.

இதுபோன்ற சிறு நிகழ்வுகள் பிஞ்சுகளின் அடி மனங்களில் பதிகின்றன.

வேற்று மொழிக் குழந்தைகளுக்கு தேவையான கார்டூன்கள் மற்றும் திரைப்்படங்கள்

மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் உண்டு.

நாம் இன்னமும் தேவாரம் : ஆத்திசூடி மற்றும் திருக்குறள் போன்ற எதையாவது ஒன்றை மட்டும்

இன்னமும் குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதற்கு மேல் நம்மவருக்கு கேட்க தெரிவில்லையோ என எண்ணத் தோன்றும்?

பெரியவர்கள் குறைகளை செய்துகொண்டு

குழந்தைகள் மேல் பழி போடுவது தவறென கருதுகிறேன்.

அடுத்து நம் கலைஞர்களை நாம் வாழ்த்துவது கூட இல்லை.

அதற்குரிய மனம் நம்மவரிடம் இல்லை என்பதை அச்சமின்றி சொல்வேன்.

அப்படி ஏதாவது செய்தால் அது வேண்டிய ஒருவராகவே இருக்கும்.

அல்லது

எல்லோரும் வாழ்த்துகிறார்கள் நாமும் வாழ்த்தவேணும் என்று இருக்கும்.

அப்படியல்லாது உண்மையாக செய்வோர் வெகு அரிது.

நம் தோட்டத்து மல்லிகை நமக்கு மணப்பதில்லை என தொடர்ந்து

பேசுவதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மாயா போன்ற கலைஞர்களை

ஆரம்பத்தில்

நாம் ஏற்றுக்கொள்ளாததால்

நம்மைவிட்டு ஆங்கில மொழி பாடல்களை பாடி

உலக தரத்தை எட்டியிருக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் அவர் குறித்த நம்மவர் விமர்சனங்களும்

உலக விருதுக்கான பரிந்துரைக்கு பின் நான் காணும் விமர்சனங்களும்

என்னை வியக்க வைக்கவில்லை?

நாம் ஏற்றுக்கொண்டிருந்தால்

அவர் ஒரு தமிழ் பாடலையாவது பாடியிருப்பார்?

இதுவே எதிர்காலத்தில் புலம்பெயர் நாடுகளில் வாழும்

குழந்தைகளிடம் இடம்பெற்று தொடரப்போகிறது.

இதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை.

அனைவரிடமும் அனைத்து திறமைகளும் இருப்பதில்லை.

ஒவ்வொருவரிடம் ஏதோ ஒரு திறமை இருக்கும்.

அதை அவரவர் வளர்த்துக் கொள்ள முனையவேண்டும்.

அது வெற்றிக்கு வழி வகுக்கும்.

வாசுகி அக்கா பேட்டியில் கூறியது போல x செய்வது போல y யும் செய்ய முற்படுவது

போன்ற நிலைகளே நம் கண்முன் நடப்பவையாக இருக்கின்றன.

தம் குழந்தைகளிடம் என்ன திறன் உண்டு என புரிந்து

அதை வளர்க்க பெற்றோர் அவர்களுக்்கு உறுதுணை புரிய வேண்டும்.

அதைவிடுத்து பெற்றோர் விருப்பங்கள் எதையும் திணிக்க முற்படலாகாது.

அது தொடராது.

அடுத்து பாலை தொடர்பாக வாசுகி அக்காவை 15 - 20 நிமிடம் பேட்டியை எடுப்பதென்று தொடங்கினேன்.

ஆனால் அது முழு நிகழ்சியையும் ஆக்கிரமிக்க வைத்ததற்கு காரணம்

அவரிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு கிடைத்த விடைகளும்

அவர் மனம் சலிக்காது கொடுத்த பதில்களும் அணுகுமுறையுமே.

அவரோடு எனக்கு பெரிதாக நட்போ அல்லது

பெரிதாய் அவர் குறித்தோ அறிந்திருக்கவில்லை.

எனவே நான் அவரிடம் என்ன கேட்பதென்று யோசித்து வைத்திருக்கவுமில்லை.

எனது தயார்படுத்தல் போதாது என நான் கருதுகிறேன்.

இருந்தாலும் சுவிசில் நிகழ்சியை கேட்ட பலர்

நன்றாக இருந்தது என சொன்னதும்

வாசுகி அக்கா நல்லா கேள்வி கேட்டு

தேவையானதை வாங்கத் தெரிகிறது எனக் கூறியதும்

மகிழ்வாய் இருந்தது. முரளியின் பாராட்டிலும் அதையே உணர்கிறேன்.

வாசுகி அக்காவின் தொலைபேசி இலக்கத்தையும் மின்அஞ்சல் முகவரியையும் தருகிறேன்

தொடர்பு கொண்டு பாட்டு சீடியை பெறலாம்.

+4722162235 அல்லது +4798403067

vasukijaya@yahoo.com

நன்றி

ஏனைய கலைஞர்கள்

அல்லது

ஏதாவது ஒரு துறைசார்ந்த வல்லுனர்கள்

விரும்பினால்

எம்மோடு தொடர்பு கொள்ளலாம்.

உலகத்தில் எங்கு இருந்தாலும்

எதிர்காலத்தில் வானோலி வாயிலாக

அவர்கள் குறித்த தகவல்கள் மற்றும்

பேட்டிகளை கொண்டு வர முயல்வோம்.

உங்களைப்பற்றியும்

உங்கள் தகமைகள் பற்றியும் அறியத்தாருங்கள்.

மின்அஞ்சல் : info@ajeevan.com

எமது தொடர்புகளுக்கு : +41792091249

Edited by AJeevan

  • 3 weeks later...

குழந்தைகளுக்கான ஆக்கங்கள் வருவது குறையவில்லை . புலம் பெயர் நாடுகளில் எத்தனையோ அழகிய தமிழ் பாடல்கள் மக்களின் உணர்வுடன் வருகின்றன.

யார் அதை வாங்கி கேட்கிறார்கள்? யார் ஆதரவு கொடுக்கிறார்கள்? எந்த வீடியோ கடையிலாவது போய் கேளுங்கள் ஈழதமிழரின் பாடல் இசைத்தட்டு இருக்கா என்று இல்லை என்பார்கள் , அல்லது சிரிப்பார்கள் . இதுதான் ஈழத்தமிழரின் ஆக்கங்களின் நிலமை.

தமிழர் பாடசாலைகளில் கலையை வளர்க்கிறோம் என்று வியாபாரம் நடத்தும் கலை ஆசிரியர்கள் ஒரு ஈழத்தமிழரின் ஆக்கத்தில் வெளிவந்த இசையை அல்லது பாட்டை பாடுகிறார்களா நடனம் ஆட பயன்படுத்டுகிறார்களா என்றால் இல்லை.

எல்லாரும் எங்கோயோ உக்கி போன இராமன் சீதை, கண்ணன் போன்ற எங்களுக்கு இன்று தேவை இல்லாதவற்றையே வைத்து பிழைப்பை நடாத்தி கொண்டு இருக்கிறார்கள்.

பிறகு எப்படி எங்கள் ஆக்கங்கள் முன் வரும்.? அதன் பயன்பாடுதான் எங்கே?

Edited by நேசன்

  • தொடங்கியவர்

குழந்தைகளுக்கான ஆக்கங்கள் வருவது குறையவில்லை . புலம் பெயர் நாடுகளில் எத்தனையோ அழகிய தமிழ் பாடல்கள் மக்களின் உணர்வுடன் வருகின்றன.

யார் அதை வாங்கி கேட்கிறார்கள்? யார் ஆதரவு கொடுக்கிறார்கள்? எந்த வீடியோ கடையிலாவது போய் கேளுங்கள் ஈழதமிழரின் பாடல் இசைத்தட்டு இருக்கா என்று இல்லை என்பார்கள் , அல்லது சிரிப்பார்கள் . இதுதான் ஈழத்தமிழரின் ஆக்கங்களின் நிலமை.

தமிழர் பாடசாலைகளில் கலையை வளர்க்கிறோம் என்று வியாபாரம் நடத்தும் கலை ஆசிரியர்கள் ஒரு ஈழத்தமிழரின் ஆக்கத்தில் வெளிவந்த இசையை அல்லது பாட்டை பாடுகிறார்களா நடனம் ஆட பயன்படுத்டுகிறார்களா என்றால் இல்லை.

எல்லாரும் எங்கோயோ உக்கி போன இராமன் சீதை, கண்ணன் போன்ற எங்களுக்கு இன்று தேவை இல்லாதவற்றையே வைத்து பிழைப்பை நடாத்தி கொண்டு இருக்கிறார்கள்.

பிறகு எப்படி எங்கள் ஆக்கங்கள் முன் வரும்.? அதன் பயன்பாடுதான் எங்கே?

உங்கள் கருத்தில் சற்று உடன்பாடு உண்டு.

ஆனால் முழுதாக இல்லை நேசன்.

புலம்பெயர் நாடுகளில் பல கலைஞர்களது பாடல்கள் உண்டு.

ஆனால் அவற்றுக்கு ஆதரவளிக்க பலர் விரும்புவதில்லை.

அதற்கு காரணம்

புலத்தில் நாம் அனைவரும் ஒன்று

இவன் என்ன

என்னை விட மேலே போறது

எனும் மனப்பான்மை.

அந்த கலைஞனை மட்டம் தட்டுவதற்கு உள்ள உணர்வில்

ஒரு சத வீதமாவது அவனை பாராட்ட அல்லது

அவனுக்கு ஆதரவளிக்க முன் வருவதில்லை.

இதில் ரிஷி மூலம் நதி மூலம் தேடுவோர்தான் அதிகம்.

புலத்தில் உள்ள ஒரு படைப்புக்கு ஆதரவு கொடுக்கலாமே என்றால்

இவனை வளர விடக்கூடாது எனும் மனப்போக்கிலேயே பலர் இருக்கிறார்கள்.

தன்னால் முடியாவிட்டாலும்

தன் இனத்தவனை வளர விடக்கூடாது எனும் மனநிலையையே காண முடிகிறது.

ஒரு படைப்பாளியையோ கலைஞனையோ அல்லது ஒரு விஞ்ஞானியையோ

அதிகமாக வளர்த்து பிரயோசனப்படுத்த

வளர்ந்த நாடுகள் அவர்களது ரிஷி மூலம் நதி மூலத்தை தேடுவதில்லை.

தமிழகத்தில் கூட திறமையானவர்களை தேடி

திறமை கொண்ட ஒருவனை அவர்கள் பாவிக்கவே முற்படுகிறார்கள்.

அதனால் அவனும் உயர்கிறான்.

அந்த சமூகமும் உயர்கிறது.

அமெரிக்கா

யாராவது திறமையானவனாக இருந்தால்

அவனை அரவணைத்து

அவனது திறமையை பாவித்து

அந்த நாட்டை பொருமைப்பட வைத்துக் கொள்கிறது.

இதில் சுயநலம் இருந்தாலும்

அந்த திறமைசாலி

அந்த வாய்ப்பால் அவனையும் வளர்த்துக் கொள்கிறான்.

என்றும் அமெரிக்கா உலகில் முதன்மையாக பேசப்படுவதற்கு இதுவே காரணம்.

இஸ்ரேலியரை போல திறமையானவர்கள் ஈழத் தமிழர்கள் எனச் சொல்கிறோம்.

ஆனால் உண்மை என்ன?

நம் கலைஞர்களில் ஒரு உதாரணத்துக்கு இவரை எடுத்துக்கொள்ளலாம்.

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் பாடகியின் பெயர் ஜெர்மனிய இசை விருதிற்காக பரிந்துரை

2mhy7m0.jpg

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சர்ச்சைக்குரிய ரெப் பாடகி மாதங்கி அருள் பிரகாசத்தின் பெயர் ஜெர்மனிய இசை விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எம்.ஐ.ஏ. பிரபல்யமாக அழைக்கப்படும் குறித்த பாடகியின் பேபர் பிலேன் என்ற பாடல் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிலிடிங் லவ், ப்ளீஸ் ரீட் த லெட்டர், விவ லா விடா மற்றும் சேசிங் பேமன்ட் ஆகிய பாடல்களும் இந்த விருது வழங்கல் விழாவிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச விருது வழங்கும் விழாவொன்றில் இலங்கைத் தமிழ் யுவதியொருவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக இசை ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் போன்ற பலர்

பலவித திறமைகளோடு புலத்தில் இருக்கிறார்கள்.

நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

தவிரவும் அவர் போன்றவர்களை நாம் வளர்பதை விட்டு

அழிக்கவே முனைப்பாக ஆரம்பத்தில் நின்றோம்.

இப்போது உலகம் ஏற்றுக்கொண்ட போது

நாமும் ஏதோ செய்தி போடுகிறோம்.

அவ்வளவுதான்.

ஆதரவளிப்பதை விட அவதூறு சொல்வதற்கே நேரத்தை எடுத்துக்கொள்கிறோம்.

என்று

நம் தமிழ் சமூகம்

நம் கலைஞரது ரிஷி மூலம் நதி மூலத்தை தவிர்த்து

திறமைகளை மட்டும் பார்க்குமோ?

அன்றுதான் அதிக கலைஞர்கள்

புலத்தில் கூட உருவாக வாய்ப்பு ஏற்படும்?.

அல்லாவிடில்

சில ஜால்ராக்கள் மட்டும்

மின்மினிப்பூச்சுகள் போல் வந்து மடியும்.

வேதனைதான்

இருந்தாலும்

சொல்லவேண்டியதை சொல்லாமல் இருத்தல் ஆகாது.

Edited by AJeevan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.