Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தன்பலம் அறிந்த யானை எம்.ஜி.ஆர்

Featured Replies

அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர் ஒருவர் ஒரு கூட்டத்தில் பேசும் போது கூறினார். "எம்.ஜி.ஆர் தான் ஒன்று நாங்கள் எல்லோரும் சைபர்கள். இந்தச் சைபர்கள் ஒன்றுக்கு முன்னாலா, பின்னாலா இடம்பெறுகின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் பெறுமதியும் அமையும். ஓன்றுக்கும் முன்னால் இடம்பெற்றால் அதற்கு எவ்வித பெறுமதியும் இல்லை. பின்னால் இடம் பெற்றால் தான் அதற்குப் பெறுமதி உண்டாகின்றது"மிகவும் பொருத்தமான கூற்று இது.

தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதி வாக்காளர்களும் அங்கு போட்டியிடும் வேட்பாளர் யார் எனப் பார்க்காமல் எம்.ஜி.ஆருக்கே வாக்களிப்பதாக எண்ணிக் கொண்டனர். அதனால் தான் எம்.ஜி.ஆர் மறையும் வரை அவரது ஆட்சியை மாற்ற முடியவில்லை. ஒருதடவை அவரது ஆட்சி யைப் பிரதமர் இந்திராகாந்தி கலைத்தார். தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் முன்னர் இருந்ததை விடக்கூடுதல் ஆசனங்களைப் பெற்று மீண்டும் முதல்வரானார். எம்.ஜி.ஆர் ஒவ்வொரு சட்ட சபைத் தேர்தல் களிலும் அவர்களது கட்சிக்குக் கிடைத்த ஆசனங்களின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே இருந்ததேயொழிய இறங்கவில்லை. யானை தன் பலம் அறியாதது எனக் கூறுவர். ஆனால் எம்.ஜி.ஆரோ தனது பலத்தை(மக்கள் பலம்) சரியாகவே கணக்கிட்டார்.

இதனால் தான் தி.மு.கவில் இருந்து வெளியேற்றப்பட்ட போதும் சரி, இந்திராகாந்தியால் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது சரி அவர் வெலவெலத்துப் போகவில்லை. தனது ஆட்சி கலைக்கபட்டு விடுமோ என்ற பயத்துடன் அவர் கட்சி நடத்தவில்லை. இதேவேளை தனது தவறுகளை ஒப்புக் கொள்ளும் பக்குவமும் அவரில் இருக்கிறது. ஒருமுறை ஒரு ஆனந்த விகடனில் வெளிவந்த மதன் வரைந்த கேலிச் சித்திரம் தொடர்பாக அதன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் சிறையிலடை க்கப்பட்டார். தமிழக சட்டசபையில் எழுந்த சலசலப்புக்குப் பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டது. ஆயினும் தனது தவறை உணர்ந்த எம்.ஜி. ஆர் உடனடியாக ஆனந்தவிகடன் ஆசிரியரை விடுதலை செய்தார். தான் சய்த தவறை நியாயம் எனக்காட்ட அவர் முயலவில்லை. தவறை ஒப்புக்கொள்ளும் மனநிலை தான் ஒருமனிதனின் மிகப் பெரிய பலம். அது அவரிடம் இருந்ததால் தான் தமிழகத்தை ஆட்சி புரிந்தோரில் அவர் தனித்துவமாகத் திகழ்ந்தார்.

எம்.ஜி.ஆர் குறித்து பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மனம் நெகிழ்ந்து ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். முதன் முதலாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தைத் தனது சொந்தப் படமான அடிமைப் பெண்ணில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா பாடலைப் பாட ஏற்பாடு செய்திருந்தார். எம்.ஜி.ஆர் ஆயினும் பாடல் ஒலிப்பதிவு செய்யவிருந்த நாளில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நோய்வாய்ப்பட்டார். குறித்த நாளில் இப்படத்திற்கான காட்சிகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்கப்பட வேண்டியிருந்தது. அதனால் வேறொருவரைக் கொண்டு இப்பாடலை ஒலிப்பதிவு செய்யலாம் என சிலர் கூறிய போதும் எம்.ஜி.ஆர் அதனை மறுத்து விட்டார். அந்தப் பையனே பாடட்டும் என்று கூறிவிட்டார். குறிப்பிட்ட நாளில் தான் நோய்வாய்பட நேர்ந்தமை குறித்து எஸ்.பியிற்க்கு கவலை. அருமையான சந்தர்ப்பத்தை இழந்து விட்டேன் என்று கலங்கினார். ஆனால் அவர் பூரண குணமாகியும் எம்.ஜி.ஆர் அவரை அழைத்தார். "நீ எனக்காக பாட்டுப்பாடப் போகிறாய் எனது உனது நண்பர்களிடம் கூறி மகிழ்ந்திருந்தாய், உனது மகிழ்ச்சியை நான் கெடுக்கவில்லை. அதற்காகத்தான் நீ சுகமாகி வந்ததும் இதன் ஒலிப்பதிவை வைக்கலாம் எனக் கூறியிருந்தேன்" எனக் கூறினார். எம்.ஜி.ஆர் மனித மனங்களை எவ்வாறு புரிந்து வைத்திருந்து அதற்கேற்றவாறு அவர் நடந்து கொண்டார். என்பதற்கு இது ஒரு உதாரணம். ஆயிரம் நிலவே பாடல் தான் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அவரது கொடை மிகப் பிரபல்யமானது.

அதனால் மக்கள் மனதில் அவர் எவ்வளவு தூரம் ஊடுருவியிருந்தார் என்பதற்கு ஒரு உதாரணம் உண்டு. எம்.ஜி.ஆர் சுகவீனமுற்று அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் போது எல்லோரும் அவர் பூரண குணம் பெறவேண்டும் என தந்தியடித்தனர். இதனைக் கேள்வியுற்ற ஒரு றிக்ஸாக்காரர் ஒரு அஞ்சலகத்துக்குச் சென்று இவ்வாறு தந்தியனுப்ப எவ்வளவு செயவாகும் என அஞ்சல திபரிடம் கேட்டார். அதன் தொகையை அஞ்சலதிபர் குறிப்பிட்டதும் எத்தனை மணிவரை அஞ்சலகம் திறந்திருக்கும் எனக் கேட்டார். றிக்ஸாக்காரர் பின்னர் "எனக்கு ஒருசவாரி இருக்கிறது. போய்விட்டு அதற்கிடையில் வருகிறேன்" எனக் கூறிச் சென்றார். அவ்வாறே குறிப்பிட்ட நேரத்திற்குள் தேவையான பணத்துடன் வந்து தந்தியனுப்பினார். இதனைக் கண்டு நெகிழ்ச்சியுற்ற அஞ்சலதிபர் அவரது வருமானம் பற்றியெல்லாம் விசாரித்து விட்டு "ஒருநாள் வருமானம் முழுவதையும் இதற்குச் செலவழித்தால் உனது குடும்பம் இன்று பட்டினி கிடக்க நேருமே" எனக்கேட்டார். அதற்கு அந்த றிக்ஸாக்காரர் "இந்த வாழ்வே எம்.ஜி.ஆர் தந்தது. அவருக்காக ஒருநாள் எனது பட்டினி கிடப்பது பெரியதல்ல" எனப்பதிலளித்தார்.

ஒரு நடிகனாக, அரசியல் வாதியாக, முதல்வராக என்ற வட்டங்களுக்கு அப்பால் தமிழக மக்களின் மனதில் எத்தகைய இடத்தை அவர் பிடித்திருந்தார் என்பதை இதன் மூலம் உணரக் கூடியதாக உள்ளது. இவரது இளமைக் காலத்தில் குடும்பத்தின் வறுமை காரணமாக பல நாட்கள் பட்டினி கிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் தான் இவரது கல்வியும் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலை வருங்காலச் சந்ததியினருக்கு ஏற்படக்கூடாது என முடிவெடுத்தார் இவர். இதனால் தான் இலவச மதிய உணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர் கொண்டுவந்தார். இதனை இவர் முன்மொழிந்த போது பலரும் இத்திட்டத்தை ஏற்கத் தயங்கினர். இதில் ஊழல் நடைபெறலாம் என்று கூடச் சுட்டிக் காட்டினர். அதற்கு அவர் "எல்லாம் எனக்குத் தெரியும் ஆனாலும் இது கட்டாயம் நடை முறைப்படுத்த வேண்டிய விடயம்" என வலியுறுத்தினார். அதன் விளைவாக பாடசாலை செல்லும் மாணவர் வீதம் அதிகரித்தது. படிப்படியாக தழிழகத்தில் கல்வியறிவு பெற்றோர் வீதம் கூடி இன்று பெரும் பாய்ச்சலே நிகழ்ந்திருக்கிறது. இதுபோன்று ஈழத்தமிழர் தொடர்பான விடயங்களிலும் அவரது முடிவுகள் வழுவழுப்பற்று உறுதியாக இருந்தது. ஈழத்தமிழர் விடயத்தில் தாம் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்வோருக்கும் அவருக்குமிடையே மலைக்கும் மடுவிற்குமிடையிலான வித்தியாசம் இருந்தது. குறிப்பாக எமது தேசியத் தலைவர் தொடர்பாக அவரது மனதில் ஏற்பட்ட பிடிப்பு அப்பெருமகனின் மறைவு வரை உறுதியாகவே இருந்தது.

இது தொடர்பான விடயங்களை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் விரிவாகவே எழுத்தில் வடித்துள்ளார். எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக தனது சொந்தப் பணத்திலிருந்து கோடிக்கணக்கான பணத்தைப் பெட்டி பெட்டியாக வாரி இறைத்தமை இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை மேற்கொள்ள முன்னர் ராஜிவ்காந்தி எமது தேசியத் தலைவருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எம்.ஜி.ஆரை டில்லிக்கு அழைத்த போது "நீ உனக்கு சரி எனப்பட்டதைச் செய்" என்று எமது தேசியத் தலைவருக்கு தன்னம்பிக்கை ஊட்டியமை வரைக்கும் விளக்கமாகவே குறிப்பிட்டுள்ளார். அவரது ஆட்சிக்காலத்தில் மத்தியரசின் தீர்மானத்தின்படி தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், சட்டத்தரணி சத்தியேந்திரா, போன்றோர் நாடு கடத்தப்பட்டமை, எமது தொலைத் தொடர்புக் கருவிகளை பறிமுதல் செய்யப்பட்டமை, முதலான விடயங்களில் மத்தியரசு பின்வாங்கியமைக்கு எம்.ஜி.ஆரே காரணம். அவரின் விருப்பத்திற்கு மாறாக முடிவெடுக்குமாறு நடந்தால் அதன் விளைவுகள் என்னாகும். என்பதை மத்தியரசு புரிந்தேயிருந்தது.

துரதிஷ்டமாக அவ்வாறான நிலை இப்போது இல்லை. இந்திய இராணுவத்துடனான போர் தொடங்கிய பின்னரும் அவர் தனது நிலையிலிருந்து மாறவில்லை. நிதி உட்பட தேவையான உதவிகளைச் செய்தே வந்தார். மத்தியரசின் முடிவின் படி மூத்ததளபதி கிட்டு உட்பட தமிழகத்தில் இருந்த போராளிகள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றைப் பதிவு செய்து வைத்திருத்தல் காலத்தின் தேவை. ஒருநாள் கிட்டு எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். ஒருகாலை இழந்திருந்த கிட்டுவின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்த அவர் கிட்டுவிற்கு செயற்கைக் கால் பொருத்துவது முதலான விடயங்களுக்கான பிரபல வைத்தியசாலை ஒன்றில் தான் ஏற்பாடுகள் செய்வதாகவும் அடுத்தநாள் அங்கு சென்று தேவையான விடயங்களை பூர்த்திசெய்யுமாறும் கூறினார். அடுத்த நாள் காலை ஆறுதலாகக் குளித்து, உடைமாற்றி சாவகாசமாக குறித்த வைத்தியசாலையை சென்றடைந்தார் கிட்டு. அந்த வைத்தியசாலையின் வாசலை கிட்டுவின் கார் சென்றடைந்த போது வைத்தயசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள் முதல் முக்கியமான அனைவருமே வாசலில் நின்றிருந்தனர். பதைபதைப்புடன் காணப்பட்ட அவர்கள் "என்ன சார் நீங்க வந்திட்டீங்களா? நீங்க வந்திட்டீங்களான்னு எத்தனை தடைவ சீ.எம்.ஆபிசில் இருந்து போன் வந்தது. வாங்க சார்" என்று கூறியபடி கிட்டுவை அழைத்துச் சென்றனர் அவர்கள்.

ஒருமாநிலத்தை ஆழும் முதல்வர் தனக்குள்ள வேலைப்பளு பலவீனமான உடல்நிலை என்பவற்றுக்குள்ளும் இவ்வளவு அக்கறையாக செயற்பட்டிருக்கின்றார் என்றால் அவர் மனதில் விடுதலைப் போராட்டம் குறித்து அவரது மனதை எமது தேசியத் தலைவர் எவ்வளவு தூரம் ஆகர்ஷித்திருந்தார். என்பது குறித்தும் உணர முடியும். ஈழத்தமிழரின் துரதிஸ்டம், சாவு மிக விரைவில் அவரை ஆட்கொண்டு விட்டது. அதனால் தான் தமிழகத்து நிலைமைகள் தலைகீழாகி போய் விட்டன. விரும்பத்தகாத நிகழ்வுகள் தமிழக அரசியலில் நடைபெற்று விட்டன. ஆயினும் நீறுபூத்த நெருப்பாக இருந்த ஈழத்தமிழருக்கு ஆதரவான உணர்வு மீண்டும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது சற்று ஆறுதலான விடயம் எவ்வாறெனினும் எம்.ஜி.ஆரின் வெற்றிடம் நிரப்பப்பட முடியாததொன்றாகவே உள்ளது.

- நெடுங்கிள்ளி -

- தமிழ்க்கதிர் -

தமிழ்த்தேசியம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.